Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கை கபளீகரம் செய்ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம் வெள்ளிக்கிழமை, 10 மே 2013 13:54 வடக்கு மாகாண சபையை எப்படியாவது கைப்பற்றுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசாங்கம் வடக்கிற்கு வெளியே, தென்னிலங்கையிலுள்ள சிங்கள, முஸ்லிம் மக்களைக் வடக்கிற்கு அழைத்து வந்து வாக்களிப்பதற்கு வசதியாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அதாவது, பூர்வீக நிலங்களில் குடியிருந்தவர்கள் வாக்களிப்பதற்கு “வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள்” என்று விசேட சட்டமூலமொன்றைக் கொண்டு வந்துள்ளது. யுத்த சூழ்நிலைகளில் தத்தமது இடங்களிலிருந்து வெளியேறியவர்கள் முன்னர் எந்த இடங்களில் வசித்தார்களோ அந்த இடங்களிற்கு வந்து வாக்கள…

  2. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் குழுவொன்றுடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம்களை ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு அணிதிரட்ட முயன்றதாலேயே, முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அசாத் சாலிக்கு எதிரான ஆதாரங்களை புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதற்கான காரணங்களை சரியாமல் தெரியாமல் பேசியுள்ளார் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். வெளியக அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க தாம் எப்போதும் விழிப்புடன் இருப்பேன் என்றும் அவர் கூறி…

  3. தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் சற்று முன்னர் விடுதலை செய்துள்ளனர். அசாத் சாலி தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த மூன்றாம் திகதி அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்திருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைவாகவே அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாத் சாலியை, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணை செய்…

  4. நாளை தொடக்கம் காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு May 10, 2013 04:52 pm http://www.adaderana.lk/tamil/news.php?nid=38808 மே 11 தொடக்கம் 18ம் திகதிவரை யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதால் கொழும்பு காலி முகத்திடல் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரையான வீதி நாளை காலை 7 மணி தொடக்கம் நிகழ்வு முடியும்வரை மூடப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

  5. மக்களின் எதிர்ப்புதான் அசாத் சாலியின் விடுதலைக்கு காரணம May 10, 2013 08:32 pm மக்களின் எதிர்ப்பு காரணமாகவே அசாத் சாலியை விடுதலை செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றுவரை தீவிரவாதியாக நடத்தப்பட்ட அசாத் சாலி இன்று மக்கள் எதிர்ப்பால் விடுதலையானார் என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலையின் பின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அசாத் சாலியை பார்வையிடச் சென்ற வேளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசியல்வாதிகளை அழிக்க அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் மக்கள் ஒன்றுதிரண்டால் இதனை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இங்கு கருத்து தெரிவித்த…

  6. விமல் வீரவங்சவுக்கு பிரிவினைவாதம் என்ன என்பது தெரியாது கிணற்று தவளைகளின் பேச்சுக்களை கவனிக்கத் தேவையில்லை நாடுகள் பிளவுப்படாதிருப்பதற்கு தீர்வு அதிகார பரவலாக்கம் எனவும் அதிகாரங்களை பகிர்வதன் மூலம் நாடுகள் பிளவுப்படும் எனக் கூறுவது கேலிக்குரியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். விமல் வீரவங்சவுக்கு பிரிவினைவாதம் என்ன என்பது தெரியாது எனவும் உலக நிலைமைகளை அறியாத கிணற்று தவளைகளின் பேச்சுக்களை கவனத்தில் எடுத்து கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கி, மாகாண சபையை போஷிக்க வேண்டும் எனவும் தேர்தலில் எந்த தரப்பு வெற்றிப் பெற்றாலும் அது அரசாங்கத்திற்கு பிரச்சினையில்லை எனவும் ராஜித கூறியுள்ளார்…

  7. கூட்டமைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைத்துக்கொள்ள வேண்டும்-கலையரசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கஜேந்திரகுமார் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மட்டு அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திரு.கலையரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அவர், நாளை மன்னார் ஆயர் அவர்களின் தலமையில் நடைபெறவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைப்பதற்கு ஆயர் அவர்கள் முயற்சிக்க வேண்டும். கடந்த 2001ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசியக் க…

  8. சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் - தயான் ஜயதிலக்க 10 May 2013 சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படக் கூடுமென பிரான்ஸிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் சிரேஸ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையற்ற வகையில் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தினை வழிநடத்தும் கொள்கைகளை யார் வகுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமை மிகப் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் யுத்த நிறைவின் மூலம் நிலையான…

  9. 'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது [Monday, 2013-05-06 18:43:43] இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில்…

    • 11 replies
    • 812 views
  10. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நாளாந்தம் 8 மணி நேரம் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் ஆணைக்குழுவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்து, செல்லும் விமானங்கள் அனைத்தையும் ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையைப் புறந்தள்ளி தெற்கில் விமான நிலையமொன்றை அவசரமாக அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த மத்தல விமான நிலையத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்…

  11. இந்தப் பூமிப் பந்தில் மனித இனம் தோற்றம் பெற்று பலகோடி ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழர்கள் என்ற இனமும் இங்கே வசிக்கின்றதென்ற கருப்பொருள் உருவாகிய காலம் 1972 ஆம் ஆண்டுதான். ஏனெனில் அதுவரை அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் பெருமையை நிலைநாட்ட வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு சிறுவன் அன்றுதான் முகிழ்த்தெழுந்தான். தமிழர்களின் வரலாற்றை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் மாற்றியெழுதியவன் அந்தச் சிறுவன்தான். அவனின் பெயரை ஓரம்கட்டிவிட்டு தமிழர்களின் வரலாற்றை எழுதிவிட முடியாதளவிற்கு இன்று அந்தச் சிறுவன் வளர்ச்சி பெற்றுவிட்டான். அவனுக்கு பின்னர் தான் தமிழர் என்ற ஓர் இனம் இந்தப் பூமியில் வாழ்ந்தது, வாழ்கிறது என்று சர்வதேசம் உணர்ந்து கொண்டது. இன்று தமிழர்களின் பிரச்சினை…

  12. யுத்த காலத்தில் இலங்கையில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை துரிதகதியில் அகற்ற போதியளவு நிதி ஒதுக்கீடு அவசியம் என பிரித்தானிய இளவரசர் ஹரி வலியுறுத்தியுள்ளார். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுமையாக அகழ முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். போதியளவு நிதி ஒதுக்கீடு இருந்தால் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் உள்ள ஹலோ ட்ரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இளவரசர் ஹரி உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=82385&category=TamilNews&language=tamil

  13. யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் , சமயத்தலைவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தடை உட்பட மூன்று தீர்மானங்களை மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்டப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத் முடியும். அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது. என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைத் தலைவி தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமிக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழினிக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை என புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் வவுனியா முகாம் ஒன்றில் வைத்து கைது செய்திருந்தனர். அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் தமிழினியை கைது செய்து நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போது விசா…

  15. வடக்குத் தேர்தலில் ஏற்படும் படுதோல்வியை மூடிமறைப்பதற்காகவே மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களை வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு முனைப்புக் காட்டிவருகின்றது என்று ஐ.தே.கவின் நாடாளு மன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தி வைப்பதுபோல மக்களை அரசு அடக்கி வைத்துள்ளது. இது இனியும் நீடிக்காது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியை மக்களே ஆட்சியில் இருத்துவர். இதற்கான அரசியல் பின்னணியும் எமக்கு அதிக மாகவே உள்ளது. எனவே, 2014ஆம் ஆண்டு, அரசுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்…

  16. அமெரிக்காவின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக சில நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சில நாடுகள் வாக்களித்ததாகவும், அவை வேறும் உள்நோக்கங்களுக்காக இவ்வாறு வாக்களித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் நிலைமைகளை கருத்திற் கொண்டு குறித்த நாடுகள் வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவிடமிருந்து பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பல…

  17. பிராந்திய வலயத்தில் அமெரிக்க தலையீடுகளை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தின் பல்வேறு விடயங்களில் அமெரிக்கா தலையீடு செய்து வருவதாகவும், இதனை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாலைதீவில் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் அமெரிக்க வானொலிச் சேவையொன்றை நடாத்துவதற்கு கடந்த காலங்களில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது எனவும், தற்போதைய இந்திய தலைவர்கள் அதிகாரமற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹலரி கிளின்ரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே …

  18. வெளிநாட்டவர்கள் சொத்துக்களை பேணுவது தொடர்பில் இதுவரை காலமும் நிலவி வந்த சட்டங்களைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் இவ்வாறு சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளது. பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக நாட்டில் முதலீடு செய்வோருக்கு சொத்துக்களை உரிமை கோரும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் முழுமையாக சொத்துக்களுக்கு உரிமை கோருவதில் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டன. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும்போது 40 வீதத்தை மட்டுமே உரிமை கோர முடியும…

  19. தற்போது அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களுடன் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் மறுதினமே காணி அதிகாரம் உயிர்ப்பிக்கப்பட்டு அங்குள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படக்கூடும் என ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். எனினும், மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் சிலவற்றை நீக்கிவிட்டு வடக்கில் தேர்தலை நடத்துவதில் தமது கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், முழுமையான அதிகாரிகளுடன் இதுவரை மாகாண சபைகள் இயங்கியதில்லை. எனினும், தற்போது மாகாண சபைகளுக்கு …

    • 1 reply
    • 726 views
  20. இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்கின்றோம் : ஜாதிக ஹெல உறுமய இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்து…

    • 4 replies
    • 782 views
  21. சட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்காததே விடுதலைப் புலிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பாரபட்சமான முறையில் சட்டத்தை முன்னெடுப்பதானது மிகவும் ஆபத்தான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சரத் பொன்சேக்கா, ஆட்களை சிறைவைக்கின்றனர். இவ்வாறான அழுத்தங்களினாலேயே விடுதலைப் புலிகள் இறுதியாக இருந்த நிலைக்கு வந்தது. இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஏன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வதாகக் கூறி பாதுகாப்புச்…

    • 1 reply
    • 486 views
  22. அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி தேசிய கரிநாளாக பிரகடனப்படுத்தி, ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அனைத்து இலங்கை தொழிற்சங்கங்களும் நேற்று (9) ஒருமனதாக தீர்மானித்துள்ளன. தொழிற்சங்களை ஒன்றிணைப்பது குறித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேசிய தொழிற்சங்க சம்மேளனம், அனைத்து இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த…

    • 0 replies
    • 398 views
  23. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அசாத் சாலியை சந்தித்து பேச்சுவார்த்தை பயங்கரவாத சட்டத்தின் கைது செய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபை மேயர் அசாத் சாலியை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹானாம ஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் ஆறு பேர் இந்த சந்திப்பில் ஈடுபட்டனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அசாத் சாலி சிசிச்சை பெற்று வரும் நிலையிலேயே மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை சந்தித்துள்ளனர். எனினும் தன்னுடைய தந்தை சட்டவிரோதமான முறையிலேயே கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலியின் மகள் மனித உரிமை ஆ…

  24. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை; லக்ஸ்மன் கிரியல்ல அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய அளவிற்குக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஏற்றுமதித் துறையில் நாடு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. பல மாவட்டங்களிலும் காணப்பட்ட ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரியளவில் ஆடைக் கைத்தெழிற்சாகைலள் மூடப்பட்டுள்ளதுடன் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய அளவிற்குக் கூட அரசாங்கத்த…

  25. தமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த காணி தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைக்காக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்டு அவரினால் குறித்த காணியில் கட்டடப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி சதீஸ்குமார் விஜய ராணியின் உதவியுடன் ஆலய நிர்வாகம் வழக்குத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதவான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.