ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143481 topics in this forum
-
விமர்சகர்களையும் அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும், சிறையில் அடைப்பதாகவும் குற்றம்சாட்டி சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னஸ்டி இன்டர்நேஷனல்) அறிக்கை ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மேம்படாத வரையில் காமன்வெல்த் அமைப்பு நாடுகளுடைய உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை அவ்வமைப்பு தவிர்க்க வேண்டும் என இந்த ஆர்வலர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தற்போதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக…
-
- 1 reply
- 509 views
-
-
செங்கல்பட்டு அகதிமுகாமில் சசிகரனை சித்ரவதை செய்து தற்கொலைக்கு தூண்டிய கியூ பிரிவு போலீசாரை கைது செய்!, சிறப்பு அகதிமுகாம் எனும் சித்திரவதைக் கூடாரத்தை இழுத்து மூடு!, ஈழத்தமிழ் அகதிகள் அனைவரையும் விடுதலை செய்! என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை சென்னை பனகல் மாளிகை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக்கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98285
-
- 1 reply
- 574 views
-
-
இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்! நேர்கண்டவர் - சி.அ. யோதிலிங்கம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகும் பின்னணியிலும் 13வது திருத்தச்சட்டம் குறித்த விவாதங்கள் தமிழர் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் இடம்பெற்றுவருகின்ற சூழ்நிலையிலும் இவை குறித்தும் ஜெனிவா தீர்மானங்களின் பின்னான அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் உரையாடினோம். தாயகத்தில் அரச வன்முறைகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணியில் செயற்பட்டுவரும் திரு கஜேந்திரகுமார், அரசியல் ரீதியான விவாதங்களிலும்கூட தனது ஆழமான கருத்…
-
- 1 reply
- 700 views
-
-
தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்! [Tuesday, 2013-04-30 08:40:19] மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார். இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை…
-
- 4 replies
- 714 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக இலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை மீன்வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, சர்வதேச மீன்பிடிச் சட்டங்;களுக்கு அமைவாக இலங்கையில் மீன்பிடிக்கப்படுவதாக இலங்கை மீன்பிடி வள அமைச்சு தெரிவித்து…
-
- 0 replies
- 420 views
-
-
நாசமாய் போங்கள் மண்; அள்ளித் தூற்றிய தாய் "நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர். வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார். "நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிர…
-
- 1 reply
- 2.6k views
-
-
இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர். ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சட்டவிரோதமான, கட்டுப்பாடில்லாத வகையில் களவாக மீன்பிடித்தல் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இலங்கைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித…
-
- 4 replies
- 698 views
-
-
வீட்டுரிமையாளருக்கு உரித்தான 400 ஏக்கர் காணியை அபகரித்து அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபரம் கிராம வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 400 வருகின்றன. இக்காணிகள் 1995ஆம் ஆண்டு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 400 தமிழ்குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைக்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் 400 ஏக்கர் காணிகள் காணி அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டவை. இக்காணிகளில் உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயல்படுவதோடுஇ இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள்த…
-
- 0 replies
- 536 views
-
-
சம்மாந்துறை காளி கோயிலின் முகப்புக் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத நபர்களினால் நேற்று திங்கட்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த கோபுரத்தில் முன்னர் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் விக்கிரகமொன்று கடந்த மார்ச் 08ஆம் திகதி நள்ளிரவு வேளையில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையே நேற்று நள்ளிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற கட்டிடத்துக்கு அருகாமையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dail…
-
- 0 replies
- 519 views
-
-
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும். எனவே இதன் பின்னணியில் யார்? எந்த அமைப்பு உள்ளது என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால் சிங்கள இனத்தை அழிக்கும் சதித்திட்டம் வெற்றி பெற்று விடுமென்று அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுபலசேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில், இக்கிழங்குக் கொள்கலன்களை பாகிஸ்தானியர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார். அதற்குள்ளேயே 30000 கருத்தடை ஊசி மருந்துகள் கொண்டு வரப்பட்டமையை சுங்கத் திணைக்களம் கண்டு…
-
- 0 replies
- 398 views
-
-
கொழும்பில் இன மதவாதத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள், அரசு-தனியார்துறை தொழிற்சங்கள், வெகுஜன அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து தலைநகரில் மேதின ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடத்த உள்ளன. இந்த ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகிய கட்சி தலைவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எம். ஏ. சுமந்திரன் எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை மக்கள் பிரதிநிதிகளும், மூன்று கட்சிகளின…
-
- 0 replies
- 280 views
-
-
சீனாவிலிருந்து விலங்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் அச்சம் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விலங்கு உணவாகப் பயன்படுத்தப்படும், சோயா பீன் உணவுப் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. உயிருடனோ அல்லது குளிர்சாதனத்தில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி வகைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. சீனா மற்றும் அதனை அண்டிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பறவைக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/9125…
-
- 0 replies
- 299 views
-
-
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற சிறிலங்கா அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவருக்கு, வெனிசுலா தலைநகர் கராகஸ் செல்லும் படி கொழும்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. வெனிசுலா அதிபராக நிக்கலஸ் மடுரோ பதவியேற்கும் நிகழ்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக பங்கேற்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். வெனிசுலா அதிபர் சாவேசின் மரணத்தை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் இவர் அதிபராகத் தெரிவாகியிருந்தார். கோர்ட், ரையுடன் சிறிலங்கா அமைச்சர் விமானத்தைப் பிடிக்க மியாமி அனைத்துலக விமான நிலைய…
-
- 3 replies
- 502 views
-
-
Published on April 26, 2013-10:24 am · No Comments நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அதனை தொடர்ந்து ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி…
-
- 1 reply
- 622 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் 30 ஏப்ரல் 2013 அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், எச்சரிக்கைகள், தடுத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. 'மாற்றுக்கருத்துக்கள் மீதான தாக்குதல'; என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்…
-
- 0 replies
- 355 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அறிவிப்பு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் கீ இதனை உறுதி செய்துள்ளார். பிரித்தானியா மஹாராணி அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்பார் எனவும், இந்த அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 356 views
-
-
நைஜீரிய கடற் கொள்ளையர்கள், இலங்கையர்களை கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யா, மியன்மார் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களே இந்தக் கப்பலில் பயணித்துள்ளனர். 14 கடற் கொள்ளையர்கள் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கொள்கலன் கப்பல் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91237/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 614 views
-
-
29 ஏப்ரல் 2013 இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், இப்போதும் அங்கு தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நாளை (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து தலைநகர லண்டனில் வெளியிடவுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த அறிக்கையை இந்திய நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணிக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுடப்பட்ட புகைப்படங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆதாரத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் உலகத்தின் பார்வையே இலங்கை மீது விழுந்தது. இதைத் தொடர்ந…
-
- 0 replies
- 470 views
-
-
யாழில் இன்றும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது, புதிது புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது, சிங்கள வர்த்தகர்கள் இங்கு வந்து தமிழ் வியாபாரிகளின் வளங்களைச் சுறண்டி வியாபாரம் செய்கின்றார்கள் தமிழ்மக்கள் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்று செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் இன அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்தான் நினைத்தவற்றை வடமாகாணத்தில் உள்ள படையினரின் உதவியுடன் தங்கு தடையின்றி செய்து வருகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். காலகாலமாக ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கம் இதைத்தான் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. போரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரா…
-
- 1 reply
- 510 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறும் கட்சியின் உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார். முஸ்லிகளுக்கெதிராக அண்மைக்காலகமாக பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகளுக்கெதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பாரிய குற்றச்சாட்டு அந்தக் கட்சியி…
-
- 1 reply
- 580 views
-
-
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள். பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள். அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச…
-
- 3 replies
- 778 views
-
-
யுத்தம் இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்தகாலத்தில் இருந்ததைப் போலவே காட்சியளிக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்த காலத்தில் இருந்தவை போன்றே தற்போதும் காட்சியளிக்கின்றன. வடக்கின் வசந்தம் மற்றும் அபிவிருத்தி என்றெல்லாம் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கு எந்தவிதம…
-
- 1 reply
- 458 views
-
-
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத்தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்.தாவடிப் பகுதியில் பொதுமக்களையும், முன்னாள் போராளிகளையும் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி இருந்தார். குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதியில் நிற்பதைக் அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்…
-
- 1 reply
- 552 views
-
-
வடிவேல் சக்திவேல் 'இலங்கையில் தற்போது ஒன்பதினாயிரம் பாடசாலைகள் உள்ளன. அவற்றுள் 224 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளில் 50 சதவீதமானவை வட மாகாணத்தினைச் சேர்ந்தவை. அத்துடன், மட்டக்களப்பிலும் 11 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். 'தற்போதைய கல்வி நிலையினைப் பார்க்கின்றபோது போட்டித்தன்மை காணப்படுகின்றது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இந்நாட்டில் போட்டி நிலைக்குரிய கல்வி என்பது சரிவராத ஒன்றாகும்' என்றம் செல்வராசா எம்.பி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லறு கிராமத்தில் அமைந்துள்ள ச…
-
- 1 reply
- 638 views
-
-
சிறிலங்கா விவகாரத்தைத் திசைதிருப்பிய கமலேஸ் சர்மா [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 10:59 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக லண்டனில் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வட்டமேசை மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக லண்டனில் உள்ள உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும், சிறிலங்காவில் இருந்து மாநாட்டை இடமாற்றம் செய்யும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே, கொமன்வெல்த் செயலர் க…
-
- 0 replies
- 831 views
-