ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதித் தூதுவருக்கு இந்தியா நுழைவிசைவு வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தில் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட சப்ருல்லா கான், தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இராஜதந்திர நுழைவிசைவு கோரி விண்ணப்பித்தார். அவருக்கு இன்னமும் இந்தியா நுழைவிசைவு வழங்காமல் இழுத்தடித்த வருவதால், அவரால் தனது பணிகளைப் பொறுப்பேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதித் தூதுவர் சப்ருல்லா கானின் நிமனத்தை இந்திய அரசாங்கம் இன்னமும் அங்கீகரிக்காததாலேயே அவருக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து…
-
- 2 replies
- 464 views
-
-
தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம் நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டது சிங்களம். அன்றைய காலகட்டத்தில் பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்ட முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை கொன்றுகுவித்தனர். சிங்களத்துடன், இணைந்து ஊர்காவல் படை என்ற போர்வையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் படுகொலைகளையும் மேற்கொண்டனர். 1985 ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியென்பது, தமிழர்களை கொலை செய்வதும், …
-
- 1 reply
- 892 views
-
-
சவூதி அரேபியாவில் இலங்கை பெண்கள் அனுபவிக்கும் துயரம் (வீடியோ) http://youtu.be/JxJRNatFBzk (NF) சவூதி அரேபியாவின் தமாம் பகுதியிலுள்ள பணிப் பெண்கள் தங்குமிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துன்பகரமான சம்பவமொன்றை இலங்கையர் ஒருவர் பதிவுசெய்துள்ளார். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் இந்த காட்சிகளை நியூஸ்பெஸ்டுக்கு வழங்கினார். சவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (இது சக்தி தொலைக்காட்…
-
- 1 reply
- 998 views
-
-
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடாது என மத்திய சுற்றாடல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதனால் தமிழ் மக்களின் உணர்வுகள் உதாசீனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விஜயமானது அப்பாவி இலங்கைத் தமிழர்களை காயப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் இந்த விஜயத்தில் பங்கேற்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…
-
- 2 replies
- 697 views
-
-
இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று சென்னை மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அந்த அமைப்பின் செய்திக் குறிப்பு தெரிவித்தாவது, தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட், இனிப்புகள், பழங்கள், இறைச்சி, பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு இ இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால், இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வா…
-
- 0 replies
- 614 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழ்முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியமாகும். இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலம் தொட்டு அண்ணன் தம்பி உற வையே பேணி வந்துள்ளார். இரு சமூகத்தினரும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அந்த மொழியிலேயே சிந்தித்து, செயற்படுபவர்கள். தமிழர்களுக்காக முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக தமிழர்களும் உதவியும்…
-
- 5 replies
- 648 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். "இலங்கையில் போர் முடிவுற்றமை அங்கு அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய நிலையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது'' எனத் தன்னைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. "உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கான இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு முன்னேற வேண்டும்'' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனா…
-
- 16 replies
- 927 views
-
-
கொட்டிகாவத்த மகாபுத்துகமுவ பகுதியில் ஐவேளை தொழுகை நடைபெற்றுவரும் இஸ்லாமிய நிலையத்தை அடித்துநொறுக்கப் பேவதாக பௌத்தசிங்கள இனவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். குறித்த இஸ்லாமிய நிலையத்தில் தொழுகை நடாத்தும் மொஹமட் பாசில் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் தொலைபேசி மூலமாக வழங்கிய தகவல்கள் வருமாறு, இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி ளுஹர் தொழுகை நடைபெறுவதற்கு சற்றுநேரத்திற்கு முன்னர் வருகைதந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த சிலர் தொழுகை நடைபெறும் இஸ்லாமிய நிலையத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் இந்த இஸ்லாமிய நிலையத்தை அங்கிருந்து அகற்றிவிட வேண்டுமெனவும், தொழுகை நடாத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தனர். தமது எச்சரிக்கையை கவனத்திற்கொள்ளவில்லையாயின் …
-
- 0 replies
- 755 views
-
-
மட்டக்களப்பு ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்கேத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் உதவியாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) மட்டக்களப்புப் பொலிஸார், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை பெண்களுக்கான விளக்கமறியலும் ஏனைய இருவருக்கும் பிணையும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலை பொலிஸார் முற்றுகையிட்ட போது மூன்று இனங்களையும் சேர்ந்த மூன்று பெண்களும் இராணுவ முக்கிய பதவி வகிக்கும் இரண்டு அதிகாரிகளும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் ஹேட்டல் உரிமையாளர், உதவியாளர் கைது செய்யப்பட்டிருந்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த இராணுவத…
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கையின் வட கடலில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறப்படும் 26 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்.குடா கடற்பரப்பினுள் நுழைந்து ரோலர் படகுகள்மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களை வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளதுடன், அதிகாலை 3 மணிக்கு அவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்ததாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். எனினும், இந்த மீனவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற காரணத்தினால் தங்களால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதெனத் தெரிவித்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் 26 இந்திய மீனவர்களையும் படையினரிடமே திருப்பி ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து , இவர்களைப் பொறுப்பேற்றுள்ள ஊர்காவற்துறை பொ…
-
- 0 replies
- 409 views
-
-
கொலன்னாவை மீதொட்டுமுல்லை பகுதியில் குப்பைமேட்டில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளினால் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. குப்பைமேட்டுக்கு முன்பாக காலை ஒன்றுகூடிய பிரதேசவாசிகள் இங்கு குப்பை போடுவதை நிறுத்து, இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் இந்தக் குப்பையால் குழந்தைகள் தினமும் நோய்வாய்ப்படுவதாகவும் , கொழும்பு மாநகரத்தின் குப்பையை எங்களிடத்தில் கொட்டி கொழும்பு மாநகரத்தை பூங்காவாக மாற்றி எங்களைக் குப்பை தொட்டிக்குள் தள்ளுவது ஏன்? கொழும்புக் குப்பைகளை இங்கே கொட்ட விடமாட்டோம், குப்பை லொறி வருமாயின் தீயிட்டுக் கொளுத்துவோம் என கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 554 views
-
-
யாழ் நகர்ப் பகுதியில் 4 வயதுச் சிறுமியை கடத்த முற்பட்ட இளைஞனை, நகர்ப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது; அச்சுவேலியில் இருக்கும் தங்கள் உறவினரைச் சந்திப்பதற்காக கொழும்பிலிருந்து இந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். பஸ்ஸிலிருந்து தமது இரு பெண் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு பஸ்ஸிற்குள் இருந்த பொருட்களை எடுக்கச் சென்ற வேளை பஸ்ஸிற்கு அருகில் நின்ற சிறுமியை இளைஞர் ஒருவர் தந்திரமாக பஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள கடைத்தொகுதியூடாக கூட்டிச் செல்ல முற்பட்ட வேளை பஸ்ஸிலிருந்து பொருட்களு…
-
- 0 replies
- 590 views
-
-
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு…
-
- 3 replies
- 589 views
-
-
“உலக தமிழ் மக்களின் தீராத தாகமான தமிழீழத்தாகத்தை தீர்த்து வைப்பதற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து எமது போராட்டத்தை வழிநடத்த உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்… “பறவைகளின் தாகம் தமிழீழ தாயகம்” தமிழகத்தின் பணம் படைத்த ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பணம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் தமிழ்லீடர் ஆசிரியர் பீடத்திற்கு கிடைத்திருக்கின்றன. அறுபது ஆண்டுகால இனவிடுதலைக்கான போராட்ட நீட்சி 2009 மே 18 உடன் முடிவுக்கு வந்ததாக தோற்றங்காட்டினாலும் அது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றது என்பதே உண்மையாகும். எமது இனத்திற்கான விடுதலையின் தேவையை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் வகையில் இனவாத அரசு நடந்த…
-
- 0 replies
- 860 views
-
-
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் [sunday, 2013-04-07 09:05:46] இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. 19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த 19 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அங்கீகரித்துள…
-
- 0 replies
- 460 views
-
-
காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா. 07 ஏப்ரல் 2013 பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு கோரியுள்ளது. கடத்தல் காணாமல் போதல்கள் n;தாடர்பிலான 5676 முறைப்பாடுகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல் தொடர்பில் நான்கு முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக குறித்த ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது, முறைப்பாடுகள் தொட…
-
- 0 replies
- 539 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி அலரி மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தாம் தலைமைதாங்கும் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு தருகிறோம். கூட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த, கட்சித் தலைவர்களை நோக்கி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது எல்லோரும் அமைதியாக இருந்துள்ளனர். இதன்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முதலில் முஸ்லிம்கள் விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இதையடுத்து ஏனைய முஸ்லிம் அமைச்சர்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் மனிதவுரிமை மீறல்களை பட்டியல் இடுகிறது சிறிலங்கா! - டில்லியை கையாள கொழும்பின் திட்டம்! இலங்கையில் இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து நம்பகமான - சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள. நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையில் இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் க…
-
- 2 replies
- 860 views
-
-
இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்த, பொருட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ள விசேட சட்டக் கோவைக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் அது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தமது எதிர்ப்பையும் மீறி அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தாம் கடுமையான தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3856
-
- 1 reply
- 561 views
-
-
ஹலால் உணர்ச்சியோடு தொடர்பான பிரச்சினையாகி விட்டது! உள்நாட்டு உற்பத்திகளிலிருந்து ஹலால் சான்று இலச்சினைகளை அகற்றும் நகர் நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் உலக முஸ்லிம் சுற்றுலா பயணிகளிடமிருந்து கிடைக்கும் கணிசமான வருவாயை இழக்கும் அபாயத்துக்கு இலங்கை முகம்கொடுத்துள்ளது என சிங்கப்பூரின் சுற்றுலாபயண நிபுணர் பஸல் பஹர்தீன் தெரிவித்தார். ‘ஹலால் சான்றுப்படுத்தல் இலங்கையில் உணர்ச்சியோடு தொடர்பான பிரச்சினையாகிவிட்டது என நான் அறிந்துகொண்டுள்ளேன்’ இது மிகவும் துரதிஷ்டமான விடயமாகும். சர்வதேச ரீதியில் குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நாடுகள், முஸ்லிம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு மும்முரமாக போட்டியிடும் இந்த தருணத்தில் இப்பிரச்சினை ஏற்பட்டது துரதிஷ்டமானதாகும் என்றும் அவர் கூறி…
-
- 2 replies
- 598 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கூறப்படும் கருத்துக்கள் தவறானவை. அத்துடன் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் வாசனை நேற்று முன் தினம் சந்தித்த ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் குறித்தும் வாசனிடம் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்…
-
- 1 reply
- 575 views
-
-
யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதன்போது விடுதிகளில் நடைபெறும் கலாச்சார சீரழிவு தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விடுதிகள் முற்றுகையிடப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். …
-
- 14 replies
- 1.7k views
-
-
சிங்கத்தை சீண்டிப்பார்க்கவேண்டாம் – தமிழகத்துக்கு மேர்வின் மிரட்டல்! சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம் என தமிழகத்தை எச்சரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அமைச்சர் விமர்சனம செய்துள்ளார். மெய்யான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமென …
-
- 7 replies
- 1.3k views
-
-
அண்மைச்செய்தி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது: இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்::: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.... www.puthiyathalaimurai.tv
-
- 60 replies
- 3.9k views
-
-
பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சிறிலங்காவும் பாகிஸ்தானும் இணைக்கப்பாட்டை எட்டியுள்ளன. தீவிரவாத முறியடிப்பு, நாடுகடந்த குற்றங்கள், பாதுகாப்புத் தரப்பினருக்கான பயிற்சிகள் போன்றவற்றில் இருதரப்பும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலருக்கும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவுக்கும் இடையில், நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று அரசியல் கலந்துரையாடலிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் அதிகர…
-
- 1 reply
- 237 views
-