ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
11 JUL, 2024 | 11:37 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.ஏ.பி.சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றது. வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.லக்மல…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 02:59 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து இருந்தேன். அதன் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்பட…
-
-
- 6 replies
- 501 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUL, 2024 | 10:56 PM தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார். காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய - ஆரியவன்ச சத்தம…
-
-
- 3 replies
- 321 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 02:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. நான் முகநூல் வீரனல்ல,செயல் வீரன்.முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 04:03 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்மொழிவுக்கு அமைய நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய இந்த பெண்நோயியல் வைத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை கட்டட தொகுதியானது போதிய ஆளணி வளம் இன்மையால் தொ…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 01:00 PM கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்திலுள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188116
-
-
- 10 replies
- 819 views
- 1 follower
-
-
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன் என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில், இந்துக்கல்லூரி ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள எனது வதிவிட இல்லத்திற்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி கருப்புத்துணியால் …
-
- 2 replies
- 404 views
-
-
நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மற்றுமொரு ‘அறகலய’வின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், பாராளுமன்ற வளாகத்தை எரிப்பதில் முடிவடையக்கூடிய நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் தொடக்கமாக இருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார். “வேலைநிறுத்தம் செய்பவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் ஊதிய உயர்வைச் சந்திக்க நிதியை உருவாக்க, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன…
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல், இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அதிபர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்க…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 02:16 PM சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவ…
-
- 7 replies
- 559 views
- 1 follower
-
-
08 JUL, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் (08) நாளையும் (09) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால், விவசாய ஒழுங்குமுறை, நில அளவையாளர், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பல்வேறு அரச துறையினர் வேலை நிறுத்தப் போட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Virakesari.lk
-
- 5 replies
- 546 views
- 1 follower
-
-
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமை…
-
-
- 11 replies
- 1.1k views
-
-
10 JUL, 2024 | 03:40 PM தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தைச் செலுத்தாத கம்பனிகளுடன் அரசு செய்துள்ள குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188131
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 03:35 PM திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்டார். இதனை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
1990 சுவசெரிய அறக்கட்டளை 95 புதிய ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் TATA Sons (Pvt) Ltd இலிருந்து பெறப்பட்ட 297 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி “1990 Suva Sariya Foundation” தொடங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது இச்செவைக்கு 450 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 பேக்-அப் ஆம்புலன்ஸ்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் TATA Sons (Pvt) Ltd நிறுவனம் 50 ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகவும், Asia Development Bank 45 ஆம்புலன்ஸ…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும் முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தலை நடத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்தும் காலப் பகுதி தொடர்பாக இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழ…
-
- 2 replies
- 360 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUL, 2024 | 02:58 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தேன். அங்கே வடக்கு மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தங்களின் பிரச்சினைகளை முன்வை…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 10 JUL, 2024 | 09:32 AM 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்திற்கு பின்னர் எக்கா…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 03:39 PM ரொய்ட்டர்ஸ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணைமுறிபத்திர உரிமையாளர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளை அடுத்த சில வாரங்களில் இலங்கை பூர்த்தி செய்யும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளான இந்தியா, சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவில் தங்களுக்குள் போட்டியிடும் இரு பெரும் நாடுகளும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளதுடன் முக்கிய முதலீட்டாளர்களாக காணப்படுகின்றநிலையில், இலங்கையில் புவிசார் அர…
-
-
- 3 replies
- 344 views
- 2 followers
-
-
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு maheshJuly 10, 2024 வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள் புடைசூழ மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவே…
-
- 0 replies
- 271 views
-
-
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் - பாதை திறந்த முதல் நாளில் சுமார் 7000 பேர் பயணம் PrashahiniJuly 10, 2024 வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை (11) மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது. அதேவேளை களுதாவளையிலிருந்து ஒருநாள் பாதை திறப்பை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. …
-
- 0 replies
- 158 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் படுகொலைகள்; 29ஆவது நினைவேந்தல் நேற்று உணர்வுபூர்வம்! நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின், 29ஆவது ஆண்டு நினைவுதினம் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை நினைவுகூரப்பட்டது. பங்குதந்தை சந்திரபோஸ் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவாலயத்தின் அருகில் அமைக்கபட்டுள்ள நினைவுதூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பகீரதன், ஜெயந்தன், றமணன், அனுசன் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் ந…
-
- 0 replies
- 315 views
-
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார். https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
-
- 9 replies
- 984 views
- 2 followers
-