ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143450 topics in this forum
-
இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுவரும் இம் மாநாட்டில் தமிழ் தொழில்நுட்ப பயன்பாடுகள், இணைய மற்றும் தகவல் பாதுகாப்பு சவால்களும் தீர்வுகளும், கையடக்க சாதனங்களில் தமிழ், தமிழ் இணையத்தள முகவரிகள், சமூக வலைத்தளப் பாதிப்புக்கள், தீர்ப்புகள் மற்றும் மின் வணிகம் உட்பட பல்வேறு தலைப் புகளில் மூன்று அமர்வுகளாக கருத்துரைகள் இடம் பெறவுள்ளன. இந்த மாநாட்டில் "இலங்கையில் தகவல் தொழில்நுட்ப தொழிற்றுறை யாழ்ப்பாணத்தின் வகிபாகம்' என்னும் தலைப்பில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், இலங்கை ஆள்கள் பெயர் பதிவு நிறுவனத் தல…
-
- 0 replies
- 273 views
-
-
அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவது இல்லை என ஆசிய பசிபிக் வர்த்தக சபை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஆசிய பசிபிக் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷித் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், "எந்த நாட்டு விவகாரத்திலும் உலக போலீ…
-
- 2 replies
- 578 views
-
-
இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21,000 பேர் வரையில் சாவடைவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாகவும், சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன்புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.onlineuthayan.com/News_More.php?id=834951887109570886
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும். இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சனத்தொகையின் ஐந்து மடங்காகும். தமிழர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தமிழ் மக்கள் தென்னிந்தியா, மலேசியா, சிறிலங்கா, கனடா மற்றும் ஏனைய பல உலக நாடுகளில் வாழ்ந்து …
-
- 0 replies
- 625 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீடத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டு வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்களினால் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (08) இரவு ஏழு மணியளவில் வளாகத்தில் உள்ள தனது விடுதியில் இருந்து கடைக்கு சாப்பாடு எடுக்கச்சென்ற மாணவன் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. நான்கு பெரும்பான்மையின மாணவர்கள் சேர்ந்து குறித்த மாணவனை தாக்கிவிட்டு பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று ஒழிந்து கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்கப்பட்டவர் வர்த்தக பீடத்தில் 01ஆம் ஆண்டு கல்வி பயிலும் ந.சஞ்ஜீவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட மாணவன் ச…
-
- 2 replies
- 309 views
-
-
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. . செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, தாளையடி றோ.க. தமிழ்க் கலவன் பாடசாலை, மாமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகள் பயன்படுத்தும் காணிகள் மற்றும் 55 ஆவது படைப் பிரிவுத் தலைமை அலுவலகம் அமைப்பதற்காகக் கோரப்பட்ட காணிக்குள் உள்ள அரச காணியையும் பராதீனப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை பிரதேச செயலர் இந்தக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். . மக்கள் குடியிருப்புக்கு அருகில் படையினருக்கு காணி வழங்க முடியாது என்று கூறி …
-
- 0 replies
- 279 views
-
-
யுத்தக் குற்றச் செயல்; விசாரணை நடாத்துமாறு கொரி இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதல் இதுவரையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணையை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் பிடியிலிருந்த போது பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது சமாதானத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த தமிழகத் தமிழர் ஒருவர் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடாத்தப்பட வ…
-
- 0 replies
- 358 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா விரைவில் பேச்சுவார்த்தை By General 2013-03-09 13:44:13 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கிலேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகின்றது. முதல் கட்டப் பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் குருணாகளில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்து வருவதாகத் த…
-
- 0 replies
- 230 views
-
-
ஸ்ரீலங்கா ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கும் கலைஞர்! [saturday, 2013-03-09 12:47:42] இலங்கையில் சிங்களப் பேரினவாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சவால் நடத்தப்பட்டதெல்லாம் தமிழினப் படுகொலையே அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மனசாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறிய தெல்லாம் மனித உரிமைகளையே எனவே அவரைச் சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும். இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்…
-
- 0 replies
- 235 views
-
-
ஜெனிவாவில் தமிழர் மாநாட்டின் தொகுப்பு
-
- 2 replies
- 299 views
-
-
பேரணியில் கலந்துகொள்வதற்கு கொழும்பு நோக்கி பயணித்த காணாமற்போனோரின் உறவினர்கள் பொலிசாரால் தடுத்து வைப்பு! [Tuesday, 2013-03-05 21:35:57] கொழும்பில் புதன் கிழமை நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமட் எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் கொழும்பு செல்வதற்காக இன்று மாலை வவுனியாவில் வந்து கூடியிருந்தனர். இங்கிருந்து 11 பஸ் வண்ட…
-
- 17 replies
- 2.4k views
-
-
கடைசிநேரம் வரை தன்னைச் சுற்றிப் பரப்பரப்பு சூழ்ந்திருப்பதை விரும்பும் இந்தியா! கடைசிநேரம் வரை தன்னைச் சுற்றிப் பரப்பரப்பு சூழ்ந்திருப்பதை விரும்பும் இந்தியா! தீர்மானம் தொடர்பாக அமெரிக்க நிலைப்பாடு, இந்திய நிலைப்பாடு, இலங்கையின் நிலைப்பாடு என்பன ஒரே புள்ளியில் சந்திக்க முடியுமா என்ற கேள்வியை ஏற்படுத்தி விட்டுள்ளார் இந்திய வெளிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக இந்தியா இன்னமும் தமது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. கடந்த முறையைப்போன்றே இம்முறையும் இந்தியா தீர்மான வரைபின் இறுதி வரைபு வரை பொறுத்திருக்க முடிவு செய்துள்ளது. அதாவது கடைசிநேரம் வரை தன்னைச் …
-
- 1 reply
- 753 views
-
-
முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்குச் சரியான நீதி வழங்க வேண்டுமெனவும், சிறிலங்கா அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டனை வழங்க வேண்டுமெனவும், தமிழீழத் தனியரசை அமைத்துத் தர வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்தைக் கோரி எமது தொப்புள்க்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் வண்ணம் தீக்குளித்துத் தனது இன்னுயிரை ஈகம் செய்த கடலூர் மாவட்டம், நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த வீரத்தமிழ்மகன் இல.மணிக்குத் தமிழீழ மக்கள் சார்பிலும் எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழீழ மக்களுக்கெனத் தனியரசு அமைய வேண்டியும். தமிழீழத்திற் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கே…
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தமிழ்த் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பதில் அளித்து பேசியபோதே மன்மோகன்சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரம் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ்வதை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்டாமல் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை. தமிழ் மக்களின் தலைவர்க…
-
- 6 replies
- 647 views
-
-
வவுனியாவில் காவல்துறையினரால் தடுக்கப்பட்ட - காணாமல்போனோர், கடத்தப்பட்டோர் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உறவினர்களின் சங்க உறுப்பினர்களை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடுவார்கள். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் இன்று காலை வவுனியா சென்றுள்ளதாகவும் அவர்கள் வவுனியாவில் தங்கியிருக்கும் சங்க உறுப்பினர்களை சந்தித்து விபரங்களை அறிந்துகொள்வார்களெனவும் அமெரிக்க தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் கிறிஸ்தோபர் தெரிவித்தார். அருட்தந்தை செபமாலை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோரையும் தூதரக அதிகாரிகள் சந்திப்பார்களெனவும், வவுனியாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழ…
-
- 0 replies
- 482 views
-
-
அமெரிக்காவுடன் பேசவே மாட்டோம்; பிரேரணை குறித்து கெஹலிய ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசமாட்டோம். அதற்கான அதிகாரமும் இல்லையென சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனிவா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதே அமைச்சர் இப்படிக் கூறினார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டிலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று …
-
- 2 replies
- 544 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பில் இலங்கை கடைப்பிடிக்கும் தவறான அணுகுமுறை காரணமாக அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மனித உரிமைகள் பேரவைக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலேயே மோசமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ராஜகிரியவில் உள்ள இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஜெனீவா மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://…
-
- 0 replies
- 622 views
-
-
-றிப்தி அலி மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது "மீள்குடியேற்றமே' தவிர 'மீள்குடியமர்த்தல்" அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார். "இதில் முதற் கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்ப…
-
- 4 replies
- 568 views
-
-
குமரன் பத்மநாதனுக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் 08 மார்ச் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின சர்வதேச வலையமைப்பு முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச காவல்துறையினரின் தேடப்பட்டு வருவோரின் சிகப்புப் பட்டியலில் குமரன் பத்மநாதனின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், குமரன் பத்மநாதனை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக சர்வதேச காவல்துறை அறிவித்துள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்தியதாக குமரன் பத்மநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குமரன் பத்மநாத…
-
- 2 replies
- 469 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார். தமிழ்நாட்டைச்சேந்தவர்கள் 12 லட்சம் பேர் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இரண்டுலட்சம் பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்னமும் தொடருவதாக…
-
- 0 replies
- 319 views
-
-
வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை – ஐ.நா வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013 12:36 | கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் வடக்கு மக்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளையில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கு வேறும் பல்வேறு வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில், கடத்தப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டிருந்தனர…
-
- 4 replies
- 695 views
-
-
பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர். வடக்கில் 42 நலன்புரி நிலையங்கள் உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாஸவும், தெல்லிப்பழையில் சிறிய உயர் பாதுகாப்பு வலயம் காணப்படுவதாக, வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்னவும் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பி…
-
- 0 replies
- 338 views
-
-
தெல்லிப்பழை ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்தது உண்மை; ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எம். மகிந்த எக்கநாயக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போதே ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் எங்களிடம் …
-
- 0 replies
- 322 views
-
-
இந்த நேரத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் நடக்க கூடாது: கோட்டபாய ! Mar 8, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. மிகவும் இக்கட்டமாக இருக்கும் இவ்வேளையில் வட கிழக்கில் எந்த ஒரு மக்கள் ஆர்ப்பாட்டமும் நடக்கக்கூடாது என்று கோட்டபாய கொழும்பில் இருந்து அறிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வன்னிப் பகுதியில் மக்கள் போராட்டங்கள் ஒன்றும் நடக்கக்கூட்டது என்றும், அவ்வாறு நடைபெறாமல் படையினர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சு ஊடாக கோட்டபாய யாழ் மற்றும் வன்னி கட்டளைத் தளபதிகளுக்கு பிரத்தியேகமாக அறிவித்துள்ளாராம். இதன் காரணமாகவே சமீபத்தில் காணமல் போனவர்களின் பெற்றோர் நடத்தவிருந்த போராட்டத்தை இலங்கை இராணுவத்தினர் கடுமையாக எதிர்கொண்டு தடுத்து ந…
-
- 1 reply
- 398 views
-
-
முள்ளிவாய்க்காலில் விட்டதை மாலியில் பிடிக்கும் ஐ.நா ! சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் நடைபெற்று வரும் ஆயுதமோதல்களை கண்காணிக்க ஐ.நா பிரத்தியேக அதிகாரிகளை நியமித்திருக்கிறது என ஐ.நா பொதுச்சபை செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை இனவழிப்பினை தடுப்பதற்கான சிறப்பு குழுவொன்றினை நியமிக்கும பொருட்டு The International Criminal Tribunal for Rwanda (ICTR) ல் Mr DENG பங்காற்றியிருந்த அவர்களை நியமித்து இருப்பதாகவும் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார். அனைத்துலகில் ஐ.நா எதிர்கொள்ளும் சவால்களும் பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் அமைப்பினால் அமெரிக்க…
-
- 1 reply
- 323 views
-