Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் ஈழ விடுதலைக்காக, தீக்குளித்து உயிரை அர்ப்பணித்த வீரத்தியாகி மணி வைகோ உருக்கம் ! கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மணி அவர்கள், இளம் வயதில் இருந்தே நாட்டு நலனுக்காகவும் அநீதியை எதிர்த்தும் போராளியாகவே வாழ்ந்து உள்ளார். வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் பணியாற்றி உள்ளார். மனிதநேயம் மிக்கவராகவே வாழ்ந்து, 26 முறை குருதிக்கொடை அளித்து உள்ளார். சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்தார். ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்து மனம் உடைந்தவராக பல கட்டங்களில் தன் வேதனையைப் புலப்படுத்தி உள்ளார். இளந்தளிர் பாலச்சந்திரன் படுகொலை, அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாக …

  2. கோயம்புத்தூரில் சிங்களவரின் தளபாட நிலையம் மீதுதாக்கதல்! மார் 5, 2013 கோயம்புத்தூரில் உள்ள சிங்களவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தமிழீழ ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையில் உள்ள லங்கா தளபாட நிலையம் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த நிலையம் மீது கல் மற்றும் முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 சட்டத்தரணிகள் வரை கைது செய்யப்பட்டனர்.தமிழீழ ஆதரவு நாளை முன்னிட்டு இன்று தென்னிந்தியாவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் பணிநிறுத்தப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/27634/64//d,ful…

  3. நவனீதம்பிள்ளையுடனான சந்திப்பை, மஹிந்த சமரசிங்க தவிர்த்துக் கொண்டார் : 05 மார்ச் 2013 சர்வதேசத்தை விட இலங்கைக்கு அதிகளவில் அழுத்தங்களை கொடுப்பது இலங்கையை சேர்ந்த அமைப்புகளும் குழுக்களுமே : ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையுடனான சந்திப்பை, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பு ஒன்றுக்காக நவனீதம்பிள்ளை இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக அமைச்சர் இந்த சந்திப்பை தவிர்த்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அரசாங்கம் இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப…

  4. ஜெனிவாவில் இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாக இலங்கை - அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை? 05 மார்ச் 2013 ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க முன்வைக்க யோசனை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏசியன் ட்ரிப்யூன் இணையளத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையில் இருந்து பிரதிநிதி ஒருவர் வொஷிங்டன் சென்றுள்ளார். இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவின் யோசனை ஒரளவுக்கு தளர்த்தப்பட உள்ளதுடன், வாக்கெடுப்பின்றி இலங்கை அதனை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு இணக…

  5. இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ் தெரிவித்தார். இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு மருத…

    • 1 reply
    • 560 views
  6. தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன் பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையும் சர்வதேசத்திற்கு ஆதாரபூர்வமாகச் சனல் 4 வெளிக்கொணர்ந்துள்ளது. -இனப்படுகொலை மேற்கொண்ட சிங்கள இனவெறி ராஜபக்ச அரசைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும். -சிறிலங்கா அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தவும் -போர்க்குற்ற விசாரணை முடியும்வரை சிறிலங்காவைத் தனிமைப்படுத்தி அதன்மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் -தமிழீழ ம…

    • 1 reply
    • 391 views
  7. TNAயின் நடவடிக்கைகள் LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகள் உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடை ஏற்படுத்தி வருகின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், சில பரிந்துரைகளை அமுல்படுத்துவத…

    • 2 replies
    • 453 views
  8. ஜெனீவாவில் 15 ஆம் திகதி சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்:கோத்தா ஏற்பாடு திங்கட்கிழமை, மார்ச் 4, 2013 ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல மேற்கத்தைய நாடுகள் செயற்படுவதனை ஆட்சேபித்தும் அதனைக் கண்டித்தும் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஐராப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் (சிங்களவர்கள்) எதிர்வரும் 15 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெறவுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இத்தாலியிருந்து 15 பஸ்களில் இலங்கையர்கள் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர். மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் செற்பாட்டுக்கும் இந்த…

    • 2 replies
    • 685 views
  9. கம்பஹா மஹர பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பலாங்கொட, ஓப்பநாயக்க பள்ளிவாசல்மீதும் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக நாட்டின் பலப்பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. http://www.virakesari.lk/article/local.php?vid=3307

    • 6 replies
    • 736 views
  10. இலங்கையின் கடன் கோரிக்கையை சீனா நிராகரிப்பு 04 மார்ச் 2013 இலங்கையின் கடன் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. இலங்கையினால் விடுக்கப்பட்ட கடன் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியிருந்தது.எனினும், இந்தக் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.அபிவிருத்தி செயற் திட்டங்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா மிக முக்கியமான இடத்தை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மத்தள விமான…

    • 1 reply
    • 856 views
  11. LLRC பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது – நவநீதம்பிள்ளை 04 மார்ச் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் தேசிய செயற்திட்டத்தினை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரிரு விடயங்கள் மட்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்ட…

  12. ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணியளவில் திடீரென்று ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சிசிச்சை பெற்றுள்ளார். எனினும், இன்று திங்கட்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அலுவலகத்திற்கு இவர் சென்று விட்டதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கம…

    • 7 replies
    • 882 views
  13. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவுக்கு சிறிலங்கா வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்ட…

  14. ஒரு நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் குடும்ப ஆட்சியாளர்கள் அல்ல - பொதுமக்களே! [Monday, 2013-03-04 15:41:06] நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் பொதுமக்களே ஆவர். ஆனால் இலங்கையை பொறுத்த மட்டில் குடும்ப ஆட்சியொன்றே இடம்பெற்று வருகின்றது. இந்த ஆட்சியால் பயன் ஏற்படப்போவதில்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதுளை, ஹாலி எலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இன்று எதேச்சதிகார செயற்பாடுகளும் ஊழல் மிக்க ஆட்சியுமே நான் எதிர்க்கட்சியிலிருக்க காரணமாகும். தேர்தலின் போது இவ்வாட்சிக்கு எதிராக வாக்களி…

  15. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு புத்தளம், கல்பிட்டி கடல் பிரதேசத்தின் வடக்கு திசையில் நேற்று அதிகாலை இலங்கை கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக மீன்பிடிக்க முயற்சித்த 16 இந்திய மீனவர்களை இம்மாதம்; 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்பிட்டி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்பிட்டி கடல் பிரதேசத்தில் 3 படகுகளில் அத்துமீறி உட்புகுந்த 16 இந்திய மீனவர்களையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு கல்பிட்டி நீதவான் தம்மிகா இளங்க சிறி உத்தரவு பிறப்பித்துள்ளார். TN/12/MSB/289, TN/12/MSB/429, TN/12/MSB/431 ஆகிய இலக்கங்களை கொண்ட படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றிதுடன், அவற்றையும் கல்பி…

  16. ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது அலுவலக அதிகாரிகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலக உயர்மட்ட அதிகாரிகளான ஆசிய,பசுபிக், மத்திய கிழக்கு, வடஆபிரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் திரு. ஹனி மெகலி மற்றும் தென் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான திரு றோறி மொங்கோவன் ஆகியோரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத் தமிழர்களது ஆதரவாளருமான ஜிம்கனிபியானிஸ் மற்றும் சிலர் சென்று சந்தித்தனர். சந்திப்பின்போது இலங்…

  17. அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது. சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலசந்திரனது ஒளிப்படங்களை தாங்கியதாக வெளிவந்துள்ள இத்தாபால் அட்டையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை - ஐ.நா உள்ளக மீளாய்வு அறிக்கை ஆகியனவற்றின் அடிப்படையில் அனைத்த…

  18. இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். பிபிசி தமிழோசியிடம் பேசிய இரா.சம்பந்தன், இந்த மாதிரி நடவடிக்கை எடுக்காததன் விளைவுகள் மீண்டும் இப்போது நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். இந்த விஷயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை "வேண்டிய இடங்களுக்கு" தெரிவித்திருப்பத…

    • 0 replies
    • 644 views
  19. இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள். எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்று இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார். திறந்துவைக்கப்பட்ட இரணைமடு ராணுவ நலன்புரி கடைத்தொகுதி வரவிருக்கின்ற சித்திரை மாதத்து தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டி, இராணுவத் தளபதி படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் இலங்கை மரபுக்கமைய இன்று அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றினார். …

  20. இலங்கை அரசாங்கம் புதுடில்லியுடன் கொண்டுள்ள தொடர்பை விட, தமிழகத்துடன் மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர உறவு முக்கியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸதானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நேரடி இராஜதந்திர தொடர்புகளை பேணுகின்ற போதும், தமிழகத்தை தாண்டியே அது புதுடில்லியை அடைய வேண்டும். இலங்கை தமிழகத்தின் ஊடாக மத்திய அரசாங்கத்திடம் செல்வதாலேயே பல்வேறு பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை. அத்துடன் தமது இராஜாங்க செயற்பாடுகளை இலங்கை புதுடில்லியுடனே மட்டுப்…

  21. நான்கு நகரங்களுக்கு இடையில் நடக்கும் இராஜதந்திரப் போர் புதுடெல்லியோ இந்த அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக எந்த இறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்கத் தீர்மானத்தை அது பெரிதாக வரவேற்கவில்லை என்பது மட்டும் உண்மை. அதாவது சர்வதேச விசாரணையைக் கோரும் எத்தகைய தீர்மானத்தையும் புதுடெல்லி விரும்பாது. இதற்கிடையே, புதுடெல்லியுடன் முன்னைய நெருக்கத்தைக் கொண்டிருக்காது போனாலும், ஜெனிவா தீர்மானத்தின் அழுத்தத்தில் இருந்து, தம்மை இந்தியா, கைவிடாமல் காப்பாற்றும் என்று இலங்கை நம்புவதாகத் தெரிகிறது. தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது போனாலும், அதன் கடுந்தன்மையைக் கடந்தமுறை போலக் குறைப்பதற்கு, இந்தியாவின் உதவியை இலங்கை நாடியதாகத் தெரிகிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிரா…

  22. ததேகூ வடக்கு மக்களுக்காக ஒரு கல்லையாவது பெற்றுக் கொடுத்தார்களா ? பஷில் ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லை கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியுமா என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று அமைச்சர் சூளுரைத்தார். மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட…

    • 4 replies
    • 389 views
  23. உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசாங்த்திற்கு எதிராக நடத்திய கூட்டத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் வழங்கப்பட்டமையை இலங்கை கண்டித்துள்ளது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இது தொடர்பில் தமது கண்டனத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அதன்பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற உலகத் தமிழர் கூட்டத்தில் பிரித்தானிய உதவிப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். http://www.hirunews.lk/tamil/54537

  24. இராணுவமயமாகும் வன்னி - இராணுவத்திற்கான நலன்புரி நிலையங்கள் புதிய அலுவலகங்கள் திறப்பு:- 04 மார்ச் 2013 இராணுவத்தளபதி லெப் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று 04.03.2013 காலை இரணைமடுப் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு வந்திறங்கிய அவர், அங்கே இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், மரநடுகை நிகழ்விலும் கலந்து கொண்டார். இதனையடுத்து, இரணைமடுச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நலன்புரி விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து மீண்டும் இரணைமடுத் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கே இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்ட இராணுவத்தினருடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார். இ…

  25. ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தர தன்னால்தான் முடியும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள். மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.