Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 02 JUL, 2024 | 06:00 PM பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம் குறித்து பேசும் ஜனாதிபதி இந்த சபையில் பூநகரி திட்டம் குறித்து பேசினார். 700 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு, இறுதியில் வேறு நாட்டில் உள்ள சோலார் பேனல் விநியோகஸ்தரிடம் வழங்கி அந்த உரிமப்பத்திரத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 50…

  2. 02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…

  3. 02 JUL, 2024 | 12:46 PM யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://ww…

  4. Published By: DIGITAL DESK 7 02 JUL, 2024 | 12:05 PM யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இதன்போது, கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்றார். அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார். இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதைய…

  5. எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305051

  6. 02 JUL, 2024 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மா…

  7. யாழில் இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதா? - அதிகாரிகள் விசாரணை Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 11:26 AM யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுக…

  8. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டொலர் பலதரப்புக் கடன்களும், 12.5 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களும் அடங்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.l…

  9. மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட மருந்தின் அளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதே இந்த விலை நிர்ணய முறையின் நோக்கமாகும் என்று வர்த்தமானி அறிவிப்பு கூறுகிறது. இரு வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் விலை, தகவல்கள் மற்றும் ஆதாரங்களையே பயன்படுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305009

  10. ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304990

  11. முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி! முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரி…

  12. மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்…

  13. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 03:21 PM திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்பொன்று இன்று திங்கட்கிழமை (01) திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். திருக்கோணேஸ்வர ஆலயத்தை அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரி…

  14. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 02:59 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நண்பகல் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்து எரிந்துள்ளது. சமையலில் ஈடுபட்டவர் குடும்பப்பெண் மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததை அவதானித்து ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கியுள்ளார். இதன்பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற போதும் வீடு முற்றாக…

  15. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின. இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன…

  16. திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார். https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/

  17. நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது! adminJuly 1, 2024 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (01.07.24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2…

  18. நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்! adminJuly 1, 2024 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில், ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் சில தரப்பினர் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ…

  19. கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார்

  20. Published By: RAJEEBAN 30 JUN, 2024 | 12:57 PM கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளது. கோபல்ட் கனிமங்களை Cobalt deposit அகழ்வதற்கான நடவடிக்கையில் தாய்வானை சேர்ந்த உமிகோர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் செயற்படவுள்ளது என இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை. இது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இட…

  21. Published By: DIGITAL DESK 7 30 JUN, 2024 | 11:44 AM சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாகவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொலிஸ்மா அதிபர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வன்முறையான மோதல்களின் எழுச்சி மோதல் வலயங்களில் பொதுமக்களின் அவலநிலை, சைபர் கிரைம், ஆயுதமயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்ற …

  22. இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவன், அவனது சகோதரன் உட்பட நால்வர் சென்றுள்ளனர். நேற்று (29) காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் குறித்த சிவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போனது.…

  23. கச்சதீவு பிரச்சினை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இல்லை! adminJune 30, 2024 பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்…

  24. தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்! நேற்று 29 ஆம் திகதி வவுனியா விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைக்கப்படும் மக்கள் அமைப்பு சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. இதில் தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் தமிழ் தேசிய கட்சிகள் 7 வருகை தந்தன. கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையில் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எழுதுவது மேற்படி சந்திப்பின் நோக்கம். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நடந்த சந்திப்பின் முடிவில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பாலும் எழுதப்பட்டு,ஏற்றுக் கொள்ளப்பட்டது.அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்…

  25. யாழில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் - சிறீதரன் கேள்வி 29 JUN, 2024 | 08:17 PM யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள், பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், இல்லத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.