ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, ´நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது´ என்றார். அங்கு அவர் மேலும் இலங்க…
-
- 0 replies
- 536 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. தாம் ஜெனிவா கூட்டத்தி…
-
- 4 replies
- 3.8k views
-
-
-அழகன் கனகராஜ் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக தடைச்செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன் பிரகாம் காணி கட்டளைச்சட்டத்தில் இன்னும் சில ஒழுங்கு விதிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன என்று அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருகின்றன. இராஜதந…
-
- 1 reply
- 457 views
-
-
ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள்மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம்சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பெண்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போயுள்ளர்கள். 12 வயதுப் பாலகனான பாலச்சந்திரனது படுகொலையும், அது நடாத்தப்பட்ட விதமும் மனி…
-
- 1 reply
- 355 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சிறிலங்கா இந்தக் கூட்டத்தொடருக்கு முக்கியத்துவமளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவோ, பரப்புரைகளை முறியடிக்கவோ முடியாது என்று உணர்ந்த நிலையில், வெறும் 10 அதிகாரிகளைக் கொண்ட குழுவை மட்டும் ஜெனிவாவுக்கு அனுப்ப சிறிலங்கா முடிவு செய்துள்ளது. அதுவும், ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே இம்முறை சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்கவுள்ளார். கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க, அமைச்சர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோரை ஜெனிவாவுக…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன்போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் துவக்கினர். பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். திமுக, அதிமுக எம்.பிக்களை அமைச…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாண நபரை காணவில்லை; யாழ்.பொலிஸில் முறைப்பாடு பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போனவராவார். லண்டனில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்த இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் லண்டனுக்குச் செல்வதற்காக கொழும்பு சென்றார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியிலிருந்து அவரது தொடர்பு எதுவும் கிட…
-
- 1 reply
- 653 views
-
-
இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, "ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆ…
-
- 2 replies
- 463 views
-
-
-ஹேமந்த் போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகள் மற்றும் பதுங்கு குழிகளை அகற்றுவதற்கு 14 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவியாக படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. போரின்போது கிளிநொச்சி மாவட்டத்;தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளை அகற்றுவது பற்றி ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. போரின்போது ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளும் பதுங்கு அகழிகளும் நீர் வாடிகாலமைப்பையும் நில அமைப்பையும் பாழாக்கியுள்ளன. இதனால் மழையினால் ஏற்படும் வெள்ளம் ப…
-
- 0 replies
- 279 views
-
-
நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தாக்கப்பட்டதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளையில் 23 - 2 சரத்தின் பிரகாரம் நாடாளுமன்றில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா மேலும் பேசுகையில், 1…
-
- 0 replies
- 215 views
-
-
சிறிலங்கா கடற்படைக்கு கொச்சியில் பயிற்சி? இலங்கை கடற்படையினருக்கு தென்னிந்தியாவில் பயிற்சி அளிக்கப்படாது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்த போதிலும், பாதுகாப்பு அமைச்சரது சொந்த மாநிலமான கேரளாவில் இலங்கைக் கடற்படை அதிகாரிக்குப் பயிற்சி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சியில் ‘கருடா‘ என்ற இந்தியக் கடற்படைத் தளத்தில் உள்ள வான் தந்திரோபாயங்கள் தொடர்பான அவதானிப்பாளர் பாடசாலையிலேயே இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொச்சி கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், சிறிலங்கா கடற்படை அதிகாரி உள்ளிட்ட 17 அதிகாரிகள் பயிற்சியை முடித்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்களில் 11பேர் இந்திய கடற்படையையும், 4 பேர் இந்திய கடலோரக்காவல் படையையும், ஒருவர…
-
- 2 replies
- 404 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கோரப் போவதாக சிறிலங்கா கூறியுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தகவல் வெளியிடுகையில், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை, முதலில் பார்க்க வேண்டியுள்ளது. அதன்பின்னர், சிறிலங்காவுக்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவதற்காக, அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொள்வர். எம்முடன் பலமான உறவுகளை வைத்துக் கொண்டுள்ள சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளினதும் ஆதரவு எமக்குத் தேவை. எனினும் நாம் முதலில் தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மேற்குலக நாடுகள் சிறிலங்காவு…
-
- 0 replies
- 574 views
-
-
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…
-
- 18 replies
- 1.9k views
-
-
திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏழு இடங்களில் மீள்குடியேற்றத் திட்டம். [Thursday, 2013-02-21 08:54:34] திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதெற்கென ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக திருமலை மாவட்டச் செயலாளர் டி.டி.ஆர். தசில்வா தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தின் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகள் பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதையடுத்து அப்பகுதிகளில் வசித்து வந்த 1086 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 464 பேரும் மேற்படி இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்துள்ளவர்கள் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே மீளக்குடியமர்த்தப்படும் வகையிலேயே அதற்கான நடவட…
-
- 0 replies
- 195 views
-
-
ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல, அரசுக்கு எதிரானதே: லக்ஷ்மன் கிரியெல்ல 20/02/2013 at 5:26 pm | no comments எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் போது முன்வைக்கப்படவுள்ள யோசனை இலங்கை அரசாங்கத்துக்கே எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யோசனை நாட்டுக்கு எதிரானது என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் இது உண்மையில் நாட்டுக்கு எதிரானது அன்று அரசாங்கத்துக்கு எதிராகவே முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கவே இவ்வாறான யோசனை ஒன்றை கொண்டு வரும் அளவுக்கு தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். http://ta…
-
- 0 replies
- 421 views
-
-
முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் உணவு - கோத்தபாயவுடனான சந்திப்பின் பின் முடிவு! [Wednesday, 2013-02-20 19:45:59] இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு காணப்பட்டதாக முஸ்லிம் அமைப்புக்கள் கூறியுள்ளன. இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குற…
-
- 0 replies
- 470 views
-
-
செப்டெம்பர் 7 இல் வட மாகாணசபைத் தேர்தல் - சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசு திட்டம்! சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் அழுத…
-
- 1 reply
- 537 views
-
-
'பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் படையினர் ஆகியோரே முழுப்பொறுப்பாகும். எனவே, பாலச்சந்திரன் உட்பட தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உலகத் தமிழினம் எதிர்பார்த்து நிற்கின்றது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவுத் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனி…
-
- 1 reply
- 578 views
-
-
தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் …
-
- 2 replies
- 696 views
-
-
தமிழீழத்தின் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தகாலப்பகுதியில் எடுத்த படங்கள்...இந்த நேரத்தில் அவற்றை இங்கு போடுவதன்மூலம் அவை யாருக்காவது ஏதாவது செயல்பாட்டிற்கு உதவலாம் என்பதால்..இங்கு போடுகிறேன்...நன்றி.. வியட்னாம் யுத்தத்தின்போது உலகை உலுக்கிய அம்மணமாக ஓடிவந்த சிறுமியின் படத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப்படம்.. தலையில் காயமுற்ற தன்குழந்தையை காப்பாற்ற என்னசெய்வது என்று தெரியாமல் ஓடிவரும் தந்தை..அவர் பின்னே கதறியபடி வரும் அக்குழந்தையின் தய்..அடுத்த படத்தில் மருத்துவவசதி இன்றி அக்குழந்தை இறந்துகிடக்கிறது.. பாய்களுக்குள் சுற்றப்பட்டிருக்கும் சடலங்களுக்கு நடுவே..தன்குழந்தையை இனங்காணும் தந்தை.. தலையில் காயமுற்று இறந்துகிடக்கும் குழந்தை..கழுத்தில…
-
- 0 replies
- 2.1k views
-
-
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி! இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு, எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும் அவர்கள் வாழ்ந்த தடையங்களையும் முற்றாகத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது உலக நாடுகளின் கண்டனங்களை சற்றும் பொருட்படுத்தாது தமிழ் இன அழிப்பில் அது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறீலங்கா அரசின் இந்த தமிழ் இனப்படுகொலை மொழ…
-
- 3 replies
- 821 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கான மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், நேற்று மன்மோகன் சிங்கை சந்திதத போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=76488&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 525 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை இன்று சந்தித்த போதே ரஸ்ய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாவிட்டாலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஸ்யா வழங்கும். அத்துடன் மேற்குலக நாடுகளின் அழுத்தம் குறித்து தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி வருவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஸ்யா மத்தியஸ்த்தராக செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76496&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 723 views
-
-
லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற பாலகனை இலங்கை இராணுவம் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த செயல் மிக கொடூரமானது மிருகத்தனமானது.இந்த புகைப்படம் உண்மையானது என நிபுணர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போரில் இலங்கை செய்த போற்…
-
- 0 replies
- 471 views
-
-
-எஸ்.கே.பிரசாத் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளது. வடக்கில் வாழும் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவை தெளிவுபடுத்த கூட்டமைப்பின் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 'வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து 22 வருடங்களுக்கு மேல் மக்கள் வெளியேற்றப்பட்டு தற்போதும் தனியார் நிலங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிந்து நான்கு வருடங்களைக் கடந்…
-
- 0 replies
- 340 views
-