Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்பின் பிரகாரம் நூற்றுக்கு 100 வீதம் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எவரும் தலையிடமுடியாது என்று அரசாங்கம் அறிவித்தது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார் . முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா உள்ளிட்ட குழுவினருக்கு விஸா நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்மைப்பில் வெளி…

    • 0 replies
    • 395 views
  2. சிரானிக்கு உயர் பதவி ஒன்றை வழங்கத் துடிக்கும் மகிந்த பிப் 7, 2013 பதவி நீக்கப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு மகிந்த உயர் பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி நீக்கப்பட்ட நாள் முதல் ஷிரானி பண்டாரநாயக்காவுடன் தொடர்புகொள்ள அரசு தரப்பு முற்பட்டபோதிலும், அவர் அதனை விரும்பவில்லையெனவும், பின்னர் மகிந்த நேரடியாக தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு வரி இல்லாத பெறுமதியான புதிய வாகனம் ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளதெனவும், விரைவில் புதிய பதவி வழங்கப்படுமெனவும் கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு ஆதரவாக தாமும் மக்களும் நடத்திய போராட்டங்களை ஷிரானி பண்டாரநாயக்கா மறந்து செயற்படுவதாக மூ…

  3. இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கி இருப்பதுவே நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவரில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மூல காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டுமென்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நோக்கும் குறுகிய பார்வை அகற்றப்பட வேண்டுமென்றும் கூறினார். ஜேர்மன் சமஷ்டி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஜார்ஜன் மொர்ஹார்ட், நீதியமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நீதியமைச்சில் இன்று வியாழக்கிழமை (07) முற்பகல் இடம்பெற்ற போது, தூதுவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்…

  4. கடந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவுஸ்திரேலய எதிர்க்கட்சி தலைவி ஜீலியா பிஷோப் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஸ்கொட் மார்சன் கெனன் மற்றும் நான் கடந்த வாரம் இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாபாக கண்காணிக்க மக்களை சந்திக்க, இலங்கையில் சரியான முறையில் கொள்கைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பன தொடர்பாக ஆராய்வதற்கே அங்கு விஜயம் செய்தோம். இவ் விஜயமானது மூன்று பகுதிகளாக ஒழுங்குச்செய்யப்பட்டிருந்தது. முதலாவது பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நாங்கள் மக்களை சந்திப்பதையே பெரிதும் விரும்பினர். அத்துடன் எங்களை மக்களிடம் அழைத்துச்சென்றனர். இலங்கை தேசமானது …

  5. புயலாக வீசும் வடக்கின் வசந்தம் - யாழ் ஏழாலையைச் சேர்ந்த இளைஞரைக் காணவில்லை- உறவினர் முறைப்பாடு 07 பெப்ரவரி 2013 வடக்கில் இலங்கை அரசு கூறிக்கொள்ளும் வடக்கின் வசந்தம் புயலாக வீசிக்கொண்டிருக்கும் நிலையினில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மனிதஉரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணாமல் போன இளைஞரது குடும்பத்தவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கை சேர்ந்த குறித்த இளைஞரான 25 வயதுடைய வரதராஜா ஜெகதிஸ் என்பவரே காணாமல்போயுள்ளதாக இவரது குடும்பத்தவர்களினால்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் திருநெல்வேலி கலட்டி வீதியில் உள்ள வாகன திருத்தகத்தில் வேலைபார்த்து வந்த நிலையிலேயே நேற்று புதன…

  6. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய போரி…

  7. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …

    • 0 replies
    • 425 views
  8. அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரணில் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வதந்திகளின் அடிப்படையில் முரண்பாடுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், சிங்கள மக்கள் அழிவடைந்து வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்த்தகேயர் காலத்தில் பின்னரே முஸ்லிம்கள் நாட்டுக்கள் பிரவேசித்ததாகக் குறிப்பிடப்படுவதாகவும், போர்த்துகேயரை நாட்டக்குள் அனுமதிக்க வேண்டாம் என 8ம் பராக்…

  9. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடம்மாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத…

  10. புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58439-2013-02-07-06-41-05.html

  11. இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம். 2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½ ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன. நாகர…

  12. அதிகரித்துள்ள வாழ்க்கை செலவை கண்டித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம், லேக் ஹவுஸ் சுற்றவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. http://tamil.dailymirror.lk/--main/58417-2013-02-06-14-25-02.html

    • 2 replies
    • 371 views
  13. பொதுநலவாய நடுகளின் கொள்கைகளை இலங்கை பின்பற்றாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என சர்வதேச மனிதவுரிமைகள் கண்ணகாணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நியதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ் விடயம் குறித்து, மனித உரிமை கண்காணிப்பகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவருக்கு, கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் காத்திரமான மேம்பாட்டை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்தக் கூடாது என அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட …

  14. தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு சிறிலங்காவும் உதவி! February 7, 2013, 1:14 am|views: 290 2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவும் உதவி செய்ததாக Open Society Foundations எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங்கால் தயாரிக்கப்பட்டு இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு சிறிலங்காவ…

  15. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது கணவனை பார்வையிட்டுத்திரும்பிய பெண் ஒருவர் தான் எதிர்நோக்கிய சிரமங்களை இவ்வாறு விவரிக்கிறார். கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் எனது கணவரும் கைது செய்யப்பட்டார். நாங்கள் வன்னியில் இருந்து வந்ததைத் தவிர நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. எந்த ஒரு அறிவித்தலும் இல்லாது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட…

    • 0 replies
    • 274 views
  16. சாதிப்பதற்கு ஊனம் ஒருபோதும் தடையல்ல; 3ஏ சித்தி பெற்ற வாழ்வக மாணவன் தர்மதன் ஊனமென்பது எதற்கும் தடையில்லை எதையும் முயற்சித்தால் நாம் சாதித்து காட்ட முடியும். கலைப்பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்து சாதித்த சுன்னாகம் வாழ்வக மாணவன் சொர்ணலிங்கம் தர்மதன் கூறுகின்றார். தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுடனும் கற்றேனென உதயனுக்கு வழங்கிய செவ்வியில் மிகவும் உருக்கமாக தெரிவித்தார் அவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: யாழ். மாவட்டத்தில் என்னைப் போன்ற விசேட திறமையுள்ள மாணவர்களுக்கு கற்றலை தொடர்வதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சாதாரண மாணவர்களுடன்…

  17. தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58422-2013-02-07-01-44-39.html

    • 5 replies
    • 588 views
  18. படையினரின் எறிகணைத்தாக்கதலில் கைகளை இழந்த தமிழ்பெண் கால்களால் கணணிகற்றுக்கொடுக்கம் ஆசானாக திகழ்கின்றார் சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையின் போது தனது இரண்டு கைகளையும் இழந்த செபஸ்ரியான் செல்வநாயகி என்ற பெண் கால்களால் கணணியினை இயக்கி பலருக்க ஆசானாக திகழ்கின்றார்! வெற்றிலைக்கேணி முள்ளியானை சொந்த இடமாக கொண்ட இவர் சிறீலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் எனது இரு கைகளையும் இழந்துள்ளேன். 14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன். பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான் இன்றும் அவர்கள் மூலம்…

  19. விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து 6 பேர் மூதூர் பகுதியில் கைது பிப் 7, 2013 விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வு பெறாதவர்கள் என இனங்காணப்பட்ட 6 பேர் செவ்வாயன்று மூதூர் காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விஷேட குழுவொன்று குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டுக்கு பல நாட்களாகச் சென்று தகவல்களை பெற்று வந்ததாகவும், பின்னர் செவ்வாயன்று இவர்கள் அனைவரும் மூதூர் பிரதான காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பேரூந்து மூலம் கொண்டு செல்லப்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மூதூர் கிழக்கு, மூதூர் தெற்குப் பிரதேசங்களில் இருந்தே இவர்கள் அழைத்து செல்லப…

  20. ம.தி.மு.க வினால் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம் திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 21:51 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவினால் இலங்கைக்கு எதிராக 'சுதந்திரத் ஈழம் – பொது வாக்கெடுப்பு' மற்றும் 'தமிழக மீனவர்களைக் காக்கத் தவறும்-மத்திய அரசுக்குக் கண்டனம் 'ஆகிய இரண்டு தீர்மானங்களும் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் இன்று திங்கட் கிழமை காலை தொடங்கி மாலைவரை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதன்போது 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டு தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதுடன் ஈழத்தமிழ் சிறப்பு அகதிகள் முகாம்களை மூடுக! என்ற தீர்மான…

    • 4 replies
    • 593 views
  21. ஏப் 21, 2010 மணி தமிழீழம் மே 18 - போர்க்குற்ற நாள் தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம் மே 18 நாளை போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்துகிறது. அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே, மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்... மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் …

  22. வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. கொலைக் களங்கள், சாட்சியங்கள் இல்லாத போர் என்ற தலைப்பில், ஏற்கனவே 2 ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தற்போது நோ ஃபயர் சூன்(யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணத்தை வெளியிடவுள்ளது. இதில் குறிப்பாக இதுவரை வெளிவராத ஒரு போர் குற்ற ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்கள் தெரிவித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. http://www.dailymotion.com/video/xx9zm7_c4-preview_news#.URDrdh37Lcx

    • 15 replies
    • 1.6k views
  23. இலங்கை அகதிகளை திருப்பியனுப்பமாட்டோம்: இந்தியா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்பும்மாறு கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இந்திய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று, இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையோ, கடி…

  24. எரிமலையின் குமுறலோடும், அக்கினியாய் சிவந்த விழிகளோடும் ஈழத் தமிழினம் இன்னொரு பெப்ரவரி நான்கை எதிர்கொள்ளுகின்றது. அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கள நரிகளிடம் எம் இனத் தலைவர்கள் ஏமாந்த தினத்தை சிங்கள தேசம் தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாட, ஈழத் தமிழர்கள் தமது இறைமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று ஏதிலிகளாக, நாடற்ற இனமாக வாழ்விழந்து நிற்கின்றது. 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி, சிங்கள தேசத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் இறைமையைக் கையளித்தபோது, தமிழ் மக்களும் வெள்ளையர் ஆக்கிரமிப்பிலிருந்து தாங்கள் விடுபடு வதாகவே மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, சிங்களக் கொடூரங்கள் தம்மை இரைகொள்ளப் போகின்றது என்று ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை…

    • 20 replies
    • 3k views
  25. ஷிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடைமுறை தொடர்பிலும் ஏனைய சட்டம் மற்றும் நீதித்துறைசார் விடயங்களையும் ஆராய்வதற்காக இலங்கை செல்லவிருந்த சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இப்போது வருவதற்கான 'தகைமைகள்' சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கான வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா பிபிசி தமிழோசையிடம் கூறினார். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130202_inbarassovisa.shtml

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.