Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார். திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள், இணைப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் வைத்து சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ' இன்று இந்த நாட்டில் ஜனநாயகமில்லை. நாட்டில் எதை எடுத்து கொண்டாலும் ஜனாதிபதிய…

  2. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான 15 அதிகாரங்கள் திவிநெகும சட்டத்தின் மூலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன. மாகாண அதிகாரங்களை பறித்தெடுக்கின்ற இந்தச் சட்டமூலத்தின் மூலம் தமிழ் மக்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி அவர்களை அழித்துவிட அரசு திட்டம் தீட்டிவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற திவிநெகும திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குற்றம்சாட்டினார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது: அதிகூடிய அதிகாரப் பகிர்வை அளிப்போம், 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பாற்ச…

  3. உச்சக்கட்டத்தை எட்டுகிறது சிறிலங்காவின் நீதித்துறைக்கு எதிரான யுத்தம் - செய்தித்துளிகள் [ செவ்வாய்க்கிழமை, 08 சனவரி 2013, 00:10 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றவியல் பிரேரணை விவகாரத்தினால் ஏற்பட்ட நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தெரிவுக்குழு அறிக்கைக்கு நீதிமன்றம் தடை சிறிலங்கா தலைமை நீதியரசருக்கு எதிராக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு சமர்ப்பித்த அறிக்கை செல்லுபடியற்றது என்று சிறிலங்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நட…

  4. இலங்கைத்தீவில் இடம்பெற்ற இறுதிப் போரில் மக்கள் அழிக்கப்பட்டதைப் போல உங்கள் தொகுதியிலுள்ள (Witney, Carterton and Chipping Norton)மக்களிற்கு நடந்தால் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என, பிரித்தானியப் பிதமர் டேவிட் கமறூனிடம் (Siobhain McDonagh), மிச்சம்-மோர்டன் தொகுதி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Siobhain McDonagh) கேள்வி எழுப்பியிருக்கின்றார். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாடு நடைபெறவுள்ள பின்புலத்தில், அங்கு பிரித்தானியப் பிரதமர் செல்லக்கூடாது எனவும், அந்தக் கூட்டத்தை கொழும்பில் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமருக்கு நீண்ட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றார். அந்தக்…

  5. நீதியரசர்கள் தமது விருப்பத்தின் பிரகாரம் தீர்ப்புகளை கொடுத்த காலம் ஒன்று நாட்டில் இருந்தது. அந்த தீர்ப்புகளில் சில தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்றதன் பின்னர் நீதியரசர்கள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. தற்போது கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு 'களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை' என்று சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தின் பிரகாரம் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கையானது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.…

    • 5 replies
    • 685 views
  6. அரசியல் வாதிகளாலும் பிரமுகர்களாலும் கண்டு கொள்ளப்படாது சிறையில் வாடும் வைத்தியர் சிவசங்கரின் விடுதலையை வேண்டி நிற்கும் உண்மையான தமிழ் மக்களின் குரல்களில் இதுவும் ஒன்று. ஆ.ர் இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று முரண்பட்டார் எனவைத்தியர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் தடுப்புக்காவல் உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர்சங்கர் வித்தியாசமான மனிதர். அவரோடு பழகியவர்களுக்கு அவரது சிந்தனைகள் மற்றையவர்களைக் காட்டிலும் வேறானது என்பது தெரிந்திருக்கும். நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் முட்டாள் என்பார்கள். அடக்குமுறையையும் அடிமைத் தனத்தையும் ஏற்…

    • 9 replies
    • 785 views
  7. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறிச் செயற்பட்டால், அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்குஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று அதற்கேற்றவாறு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது எனக் கூறி அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56465-2013-01-08-11-37-46.html

  8. நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி நேற்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், "நந்திக்கடல் கரையோரத்தில் 2009 மே மாதம் தமது போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புதுவாழ்வு கொடுத்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், தனிஈழத் திட்டத்தின் மீது இன்னமும் நம…

    • 2 replies
    • 590 views
  9. By General 2013-01-08 14:29:47 யாழ். மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 207 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை புள்ளி விபரங்களூடாகத் தெரிய வருகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி. சிவரூபன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நாளுக்கு நாள் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. எமது விசாரணைக்குட்பட்ட முடிவுகளுக்கமைய 207 சிறுமிகள் கடந்த இரு ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனைவிட அதிகமான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. சில சம்பவங்கள் அரசியல் செல்வாக்கினால் மூடி மறைக்கப்ப…

  10. கடந்த புதன்கிழமையிலிருந்து சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், திருகோணமலையின் கரையோரம் அருகில் ஐந்து இளைஞர்கள் கலந்துரையாடுவதற்காக கூடியிருந்தனர். இந்த இளைய மாணவர்கள் இருந்த இடத்தில் வெடிகுண்டொன்று வெடித்தது. இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மக்கள் சிலர் காயமடைந்தனர். காயமடைந்து பின்னர் இறந்த இந்த ஐந்து இளைஞர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன. இந்தச் சம்பவமானது திருகோணமலையை மட்டுமல்லாது முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்தது. இந்த மாணவர்களின் உடலங்களில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தின் கவனத…

  11. இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இலங்கை அரசு அழைப்பாணை விடுத்துள்ள பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்விமிபதில் வடிவிலான அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை ஆதரிப்பதாகச்சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று இலங்கை அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் …

  12. தமிழர் தேசிய தைப்பொங்கல் விழாவிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவதற்காக இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம் பெறவுள்ளது. தொடர்ந்து அன்று மாலை, யாழ். மாவட்ட செயலக முகாமைத்துவ மற்றும் திறன் விருத்தி பயிற்சி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும். யாழ். பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளது. மறுநாள் 15 ஆம் திகதி காலை செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.மாவட்ட ஒருகிணைப்புக் குழுக்கூட்டம் ஜனாதிபத…

  13. By General 2013-01-08 14:15:31 சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு மரண தண்டனையே சிறந்ததாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். மரண தண்டனை நடைமுறையிலில்லாதவிடத்து அதிகபட்ச கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுவதுடன் பொதுமன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமளிக்கக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2445

  14. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் கொடுமைகளைத் தவிர்க்க ஐ.நா தவறியது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனா இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றரை மணிநேர விவாதத்துக்கு அனுமதியைப் பெற்றுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களைப் பாதுக்க ஐ.நா தவறிவிட்டதாக அண்மையில் வெளியான சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையிலும், இன்று சிறிலங்கா தொடர்பான விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின…

  15. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி இன்னமும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அமரர் லசந்த படுகொலை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லசந்த உயிரிழந்தார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத அரசியல் காலாச்சாரம் நாட்டில் நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.ஊடக அடக்முறைக் கலாச்சாரம் தொடர்ந்து நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.அரசாங்க அணுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான குற்றச் ச…

  16. இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானி வகுப்புக்கான விரிவுரைகள் மாத்திரமே இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் ஏனைய வகுப்புகளுக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து, சில மணிநேரங்களின் பின்னர் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளி…

  17. தொடர்ந்தும் அமுலில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய அரசின் அறிவுரை சிங்கள வெளிவிவகார அரசின் எதிர்ப்பையும் மீறி பிரித்தானிய அரசு இலங்கை செல்லும் பிரயாணிகள் பற்றிய அறிவுறுத்தலை அகற்றவில்லை. கடந்த கார்த்திகை மாதம் மீளவும் அறிவிக்கப்பட்ட இந்த அறிவுறுத்தலில் தமிழர்கள் கைதாகலாம் என கூறப்பட்டுள்ளது. UK Maintains Travel Advice On Sri Lanka The British Foreign Ministry has not removed the travel advice on Sri Lanka which states that the end of the military conflict in May 2009 has seen an upsurge of nationalism in Sri Lanka. Last year the External Affairs Ministry in Sri Lanka had raised objections to the advice and urged the British government to amend the conte…

  18. 2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது. கிடைத்த உதவி :- டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா மொத்தம் கிடைத்த உதவி :-213783.45ரூபா மொத்தச்செலவு – 211155.00ரூபா மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார். இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினைத் தந்துதவியவர…

    • 5 replies
    • 708 views
  19. மலையேறிய ஜனாதிபதியின் புத்திரர்கள் By Farhan 2013-01-08 11:58:01 சிவனொளிபாத மலைக்கு ஜனாதிபதியின் இரு மகன்களான நாமல் மற்றும் யோசித்த ஆகியோர் யாத்திரையை மேற்கொண்டனர். கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தின்; இளம் உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் யோசனைக்கு இணங்க சிவனொளிபாத மலைக்கு யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர். இதேவேளை இவர்கள் அனைவரும் ஒருவார காலம் மாமிச உணவுகள் எதனையும் உட்கொள்ளாது துறவிகளாக இருந்த பின்னரே யாத்திரையில் பங்கேற்றனர். கடந்த திங்களன்று சகல இளம் உறுப்பினர்களும் இரவு 11 மணியளவில் நல்லதண்ணியில் இருந்து தமது யாத்திரையை மேற்கொள்ளவிருந்தனர். இருந்தும் அவ்விடத்திற்கு யோசித்த வர தமதமாகியதால் அதிகாலை 1.20 மணிக்கே யாத்திரையை மேற்கொள்ள நேரிட்டது. சாதாரண குழுவின…

  20. பிரித்தானியாவின் துணை இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்: [Tuesday, 2013-01-08 11:46:56] சிறிலங்காவில் மனித உரிமைகள் தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக பிரித்தானியாவின் துணை இராஜாங்க அமைச்சரான அலிஸ்டயார் டர்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சிறிலங்காவுக்கான விஜயம் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் மெக்டொனாவுக்கு பிரித்தானிய இராஜாங்க செயலாளர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார் என்றும் திவய்ன தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாடு நடைபெறுவதற்கு முன்னராகவே பிரித்தானியாவின் துணை இராஜாங்க அமைச்சர் வருகை தரவுள்ளார். அதேவேளை,…

  21. சிறிலங்காவில் தொடர்ந்தும் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகவும், பொறுப்புக்கூறுவதற்கோ, அரசியல்தீர்வுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜாசன் கென்னி. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மனிதஉரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது தொடர்பாக கனடா அக்கறை செலுத்தி வருகிறது. சிறிலங்கா அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். போரின்போது இரு தரப்பினராலும் இழைக்கப…

    • 7 replies
    • 777 views
  22. யாழில் தியாகி திலீபனின் நாட்காட்டிகள் January 8, 2013, 5:46 am யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனின் துயிலும் இல்லம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாட்காட்டியுடன் இதனை இணைத்து விநியோகித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனராம் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இது விடுதலைப்புலிகளின் மனநிலையை ஸ்திரப்படும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக உதவிகளை வழங்கியுள்ளமை குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என ப…

  23. உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது - இலங்கைத் தூதுவர் [sunday, 2013-01-06 19:32:07] உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் இலங்கைக்கு போதியளவு சாதூரியம் கிடையாது என பிரான்ஸ் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். எல்லா சந்தர்ப்பங்களிலும் உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் விவகாரத்தில் இலங்கை வெற்றியை அடைவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் புலம்பெயர் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார். பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என தயான் ஜயதி…

  24. இலங்கையில் தற்போது தங்கியுள்ள கனேடிய அமைச்சரின் கருத்து தவறானது மட்டுமன்றி பாரபட்சமானது, அத்துடன் சமநிலையற்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனேடிய அமைச்சர் ஜேசன் கெனீயினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ‘பக்கசார்பானது மட்டுமன்றி சமநிலையற்றதாகும்’ மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியலுக்கு பொருத்தமான வகையில் இலங்கை அரசாங்கம் தனது விவகாரங்களை முன்னெடுக்காது. என்னுடனான சந்திப்பின் போது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகள் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோர் தொடர்பில் அவர் பிரிதொரு காரணத்தை கூறினார். ‘அவரது பார்வை ஒரு சீரான பார்வை இல்லை. அர…

    • 0 replies
    • 326 views
  25. நீதானே என் பொன் வசந்தம் உண்மையில் தரமான திரைப்படம்தான் அது ஏன் வெற்றி பெறவில்லை.. காரணங்கள் சில.. முதலாவது கதையை இயல்பான வேகத்தில் சொல்லி, அற்புதமான ஜீவனை ஊட்ட முயன்றுள்ளார் கௌதம்மேனன் வெறும் மசாலாக்களில் மாந்திக்கிடக்கும் தமிழ் ரசிகர்களில் நிறையப் பேருக்கு ரசிக்கத் தெரியாது என்பதை அவர் இனியாவது புரிய வேண்டும்.. ஆகவே படம் தொடங்க முதலே ரசிப்பது எப்படியென்ற வழிகாட்டல் துண்டு பிரசுரத்தை வழங்கியிருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து இளையராஜாவை மனித சக்திக்கு மேலான உயர்த்தி வைத்துள்ளார்கள், (தகுதி உள்ளவர்தான் மறுக்கவில்லை) அதனால் அவரிடம் பாடப்போகும் பாடகர்கள் அவர் திருப்திப்பட வேண்டும் என்பதிலேயே 100 க்கு 100 வீதம் கவனம் செலுத்துகிறார்கள். பயமும் பக்தியும் இருக்கலாம் ஆனால் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.