Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீற தீர்மானித்துள்ளேன்’ - Published by News on January 5, 2013 | Comments Off அலரி மாளிகையில் தனது அமைச்சரவையை நேற்று மாலை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீற தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்த தெரிவுக்குழுவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வழங்கிய தீர்ப்பை அவ்வாறே முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் சட்டரீதியானது அல்ல எனவும் உயர்நீதிமன்றம்…

  2. தடுப்பிலுள்ள மாணவர் விடுதலை குறித்து கருத்துக் கூறமாட்டேன்! – இறுமாப்புடன் பதிலளித்துள்ளார் வசந்தி Published on January 6, 2013-7:19 am · “யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எப்போது ஆரம்பாகும் என்பதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது. பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் மீண்டும் ஒரு தடவை கலந்துரையாடிய பின்னர்தான் இது குறித்துக் கூறமுடியும்.” - இவ்வாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். அத்துடன் தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலை குறித்து கருத்து எதனையும் கூறமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் ச…

  3. By General 2013-01-06 10:08:45 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டில் வலுப் பெற்றிருந்த காலநிலை தாழமுக்கமாக மாறியுள்ளதால் மாத்தறை ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மீன்பிடித்தல் மற்றும் பயணம் செய்தல் என்பவற்றினை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வடமத்திய, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் தென்மாகாணம் போன்ற பாகங்களிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நேற்றுக் காலை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தற்போது வலுவடைந்து அமுக்கமாக மாறியுள்ளதுடன் நாட்டில் தென்கிழக்கில் நிலை கொண்டுள்ள இந்த தாழமுக்கம் நாட்டிலும் கடற்தரப்பிலும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களு…

  4. அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் மத்தல அனைத்துலக விமான நிலையப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு சீனாவிடம் மேலும் 72 மில்லியன் டொலரை கடனானக் கோர சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அரசு மத்தால விமான நிலையப் பணிகளுக்காக ஏற்கனவே, 209 மில்லியன் டொலரை (26.6 பில்லியன் ரூபா) செலவிட்டுள்ளது. இதில் 190 மில்லியன் டொலர் (24.2 பில்லியன் ரூபா) சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றுள்ளது. இந்தநிலையில், சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள பத்திரம் ஒன்றில், மேலும் இரண்டு தேவைகளுக்காக மேலதிக நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக வேலைகளுக்கான செலவுக்கு 45.5 மி…

  5. 'சுசுனாமி' 'கிரிசேமி' கொழும்பை வந்தடைந்தன ஞாயிற்றுக்கிழமை, 06 ஜனவரி 2013 10:17 0 COMMENTS ஜப்பானின் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத் வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல்கள் இரண்டும் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை வந்தடைந்துள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். 'சுசுனாமி' மற்றும் 'கிரிசேமி' ஆகிய இந்த இரண்டு கப்பல்களுமே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன இந்த இரண்டு கப்பல்களும் ஜப்பான் கடற்படையினரிடம் உள்ள அதி நவீன கப்பல்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 151 மீற்றர் நீளமான இரண்டு யுத்த கப்பல்களில் 'சுச…

  6. யாழ். மாவட்டத்தில் செயற்பட்டு வந்த ஐ.நா. முகவர் அமைப்புக்கள் தமது பணிகளை இந்த வருட ஆரம்பத்திலிருந்து குறைக்க எண்ணியுள்ளதுடன், இந்தவருட இறுதியுடன் தமது பிராந்திய அலுவலகங்களை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது. ஐ.நா. முகவர் அமைப்புக்களின் தேவைகள் யாழ். மாவட்டத்தில் குறைவடைந்துள்ள மையாலேயே மேற்படி அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஐ.நா. முகவர் அமைப்புக்களுக்கு நிதி இல்லாமையே அவை அலுவலகங்களை மூடுவதற்குப் பிரதான காரணம் என்று ஐ.நா. முகவர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாகப் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தனர். அத்துடன் பல பிரதேசங்களில் மக்கள் தமது சொந்த இடங்களில்…

  7. எங்கே செல்கிறது கலியுகம்: யாழில் ஒரே வாரத்தில் 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் வடக்கே யாழ் குடாநாட்டில் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐந்து முறைப்பாடுகள் பொலிசாருக்குக் கிடைத்திருப்பதாகவும், இவற்றில் ஒரு சம்பவம் தொடர்பில் மாத்திரமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மண்டைதீவு பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த 4 வயது சிறுமியொருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். தந்தை முறையான உறவுடைய ஒருவர் இரண்டு சிறுமியர்களை பாலியல…

    • 0 replies
    • 346 views
  8. மண்டைதீவில் குணராசா சுடரினி என்ற சிறுமியை கடந்த வாரம் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியினரே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியை சேர்ந்த 31வயதுடைய நபர் ஒருவரை புலனாய்வு பொலிஸார் கைது செய்திருந்த போதிலும் அரசியல் செல்வாக்கு காரணமாக இவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. இந்த கொலையை மூடி மறைப்பதற்காகவே நேற்று ஈ.பி.டி.பியினர் மண்டைதீவில் பொதுமக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி இருந்தனர். இது போன்றே நெடுந்தீவிலும் 03.03.2012 அன்று ஈ.பி.டி.பியினர் லக்சனா என்ற 12வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருந்தனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் நடந்த இப்படுகொலை தொடர்…

  9. தெரிவுக்குழு அறிக்கை தொடர்பில் விவாதிப்பது சட்டவிரோதமாகும்: சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் நிலையியல் கட்டளை தொடர்பில் உயர்நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளமையினால் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது சட்ட விரோதமாகும். இந்த செயற்பாடானது உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கருணாரதேரத் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தையும் மீறி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். பாகிஸ்தானில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அந்நாட்டு பிரதமருக்கு …

  10. ஐம்பாதாயிரத்திற்கும் அதிகம் மாத வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு! By General 2013-01-05 11:55:33 நாட்டில் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய விதிகளுக்கமைவாக மாதாந்தம் 50 ஆயிரம் முதல் 1 இலட்சம் ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. எனினும் 50 ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்யப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2395

    • 3 replies
    • 708 views
  11. வைகோ நெடுமாறன் சீமானுக்கு குறியா..? தமிழகத்திற்கே சவாலா...? - வெளியான தகவலால் பரபரப்பு! [saturday, 2013-01-05 13:58:32] இலங்கையிலிருந்து தமிழகத்தினுள் ஊடுருவியுள்ள மூவர் கொண்ட புலனாய்வாளா்களால் தமிழகத்தில் இன்று பரபரப்பு ஏற்ப்பட்டள்ளது. "அஹமது, பண்டாரா, ரோகித் என்ற மூவர் தலைமையில் உளவுப்படைத் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாகவும் ஈழதேசிய செயல்பாடுகளை உடைய தலைவர்களை இந்தப் படை கண்காணிக்கிறதாகவும் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளதால் தமிழகம் மரண்டு போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பல்லாவரத்தில் உள்ள தமிழ்தேசிய செயற்பாட்டாளர் ஒரவரது அலுவலகத்தையும் மாடம்பாக்கத்தில் உள்ள ஒரவரது வீட்டையும் ஒருவர் புகைப்படம் எடுத்து இருக்கிறார். மற்ற தலைவர்களின் அலுவலகங்களும் வீடுகளும் நோட்…

    • 7 replies
    • 746 views
  12. பிரதம நீதியரசரைக் குற்றவாளியாக்கி தண்டிக்கும் அதிகாரம் ஏதும் தெரிவுக்குழுவுக்கு இல்லை; மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு பிரதம நீதியரசரைக் குற்றவாளி என அறிவித்து அவரைத் தண்டிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை என்ற உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நேற்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரின் "ரிட்' மனுவை எதிர்வரும் 15ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. தமக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை அமுலாக்கத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த "ரிட்' மனு நேற்று மீண்டும் விசாரணைக்…

    • 2 replies
    • 843 views
  13. இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கல்வி நிலையங்களை இராணுவமயமாக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இந்தப் பயிற்சி என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது. பல்கலைக்கழக மாணவர்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி பி. ரிச்சர்ட் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130105_studentstraining.shtml

  14. உலகத் தமிழர்களின் பாதுகாப்பிற்கு குரல் எழுப்ப உலகில் தமிழர்களுக்கு என்று ஓர் அரசு இல்லை என்ற நிலையில் உலகத் தமிழர்களாகிய நாம் மக்களாக ஒன்றிணைந்தே நமது மக்களின் பாதுகாப்பிற்கு குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்று முடிந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் இணையவழி காணொளியூடாக உரையாற்றும் பொழுதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தாயகத் தமிழர்களை பிரதநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள…

  15. செங்கல்பட்டு சிறையில் உண்ணாவிரமிருந்த ஈழத்தமிழர்களின் நிலமை மோசமடைந்து செல்கின்றது! ஜன 5, 2013 தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள் இதில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு தமிழர்கள் 36 பேரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரும் உள்ளனர். தங்கள் மீது உள்ள குற்றவழக்குகளை உடனே முடித்து சொந்த நாட்டுக்கு அனுப்பக்கோரியும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தங்களை சிறையில் அடைக்கக்கோரியும் கடந்த 23ம் திகதி 7 பேர் உண்ணாவிரதம் தொடங்கினர். உண்ணாவிரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 27 ஆக உயர்ந்தது. இ…

  16. அக்ரஹரா திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாக தமிழ் அரச சேவையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அரச ஊழியர்கள் தாம் அல்லது குடும்ப அங்கத்தவர்களுக்கு தனிப்பட்ட வைத்தியசாலையில் நோய்க்கு சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் அவர் குறிப்பிட்ட நோய் சார்பில் செலவு செய்த பணத்துக்கான கோரிக்கையை அக்ரஹரா நிறுவனத்துக்கு அனுப்ப முடியும். இவ்வாறான கோரிக்கைகள் தொடர்பில் விண்ணப்பங்கள் பூரணமற்றதாக இருக்கும் நிலையில் அது தொடர்பாக அக்ரஹரா நிறுவனம் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பும் கடிதங்களை இவ்வாறு சிங்கள மொழியில் அனுப்புகின்றது. தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்கு சிங்கள மொழியுடன் தமிழ் மொழி மூலமும் கடிதங்கள் அனுப்பப்படல் வேண்…

  17. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள் அடங்கிய இரு வீடியோ தொகுப்புக்களை இங்கிலாந்தின் செனல் - 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செனல் - 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்ற வீடியோக்களால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்நிலையில் மேற்படி தொலைக்காட்சி மேலும் இரு வீடியோக்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற முன்னாள் போராளிகள் 8 பேர் வழங்கிய இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்க…

  18. அரசின் பொருளாதார இலக்கில் வீழ்ச்சி - கடன் தரும்படி கையேந்தும் சிறிலங்கா [ சனிக்கிழமை, 05 சனவரி 2013, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] முன்னர் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான வெளிநாட்டு முதலீடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்காக மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தருமாறு சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக நாணய நிதியத்திடம் கேட்கவுள்ளதாக உயர் அதிகார வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களின் முன்னர் அனைத்துலக நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ள நிலையில் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான பேச்சுக்களில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக திறைசே…

    • 2 replies
    • 698 views
  19. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் மற்றுமொரு தொகை கடனைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியதத்திடம் கோரியுள்ளது. யுத்த வலயத்தில் கீழ்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்தப் பணம் தேவைப்படுவதாக திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த கீழ்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்னதாக இலங்கை அ…

    • 2 replies
    • 533 views
  20. கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இது நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள, இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசையே அப்பட்டமாக மீறுகிறது. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை உடனடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யூனேஸ்கோ (UNESCO) என்ற ஐநா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடன…

  21. இராணுவ சீருடை அணிந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கறிபிக்கத் தொடங்கியுள்ளனர் எனும் குற்றச்சாட்டை இராணுவம் நேற்று மறுத்துள்ளது. 'கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்கக்கூடியவர்களை இனங்கண்டார். இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்…

    • 2 replies
    • 541 views
  22. யாழ்.மாவட்டத்தில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்தில் மட்டும் 5 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு சிறுமி படுöகாலை செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 சிறுமிகள் அவர்களது தந்தையாலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றுக் காலை யாழ்.பொலிஸ் தலைமை அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். கடந்த …

  23. அலரி மாளிகையில் தனது அமைச்சரவையை நேற்று மாலை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீற தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்த தெரிவுக்குழுவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வழங்கிய தீர்ப்பை அவ்வாறே முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் சட்டரீதியானது அல்ல எனவும் உயர்நீதிமன்றம் தனது அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வியாக்கினப்படுத்தலில் கூறியிருந்தது. அதேவேளை சரியான சட்டரீதியான நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, நம்பிக்கையில்லாத த…

  24. விடுதலை புலிகளின் தலைவர் மீது மட்டும் குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை! - டலஸ் அழப்பெரும [saturday, 2013-01-05 11:27:31] பாடசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கியமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை மட்டும் குற்றம் சுமத்துவது நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் கல்விமுறைமையிலேயே பிரிவினைவாதம் புறையோடியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், தமிழ், சிங்களம், ஆண், பெண், கலவன் என பல்வேறு வழிகளில் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாத்தன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் …

  25. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன் [Friday, 2013-01-04 11:47:38] "நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக வரம்பிற்குள்ளேதான் நடைபெறுகின்றன. அத்துடன் நமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒத்த பல அமைப்புக்கள் ஆரோக்கியமான முறையில் இயங்கிவருகின்றன. எனவே நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அறிதலுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். எனினும் இலங்கை அரசாங்கத்தோடு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நாட்டிற்குள் நின்று செயற்ப…

    • 11 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.