ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி வருவாய் அதிகரித்த போதும், நவம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 6.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் நவம்பர் மாத ஆடை ஏற்றுமதி வருவாய், 4.6 வீதத்தினால் (360 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், ஏற்றுமதி வருவாய் 6.6 வீதத்தினால் (827.6 மல்லியன் டொலர்) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி சிறியளவிலேயே, (0.6 வீதம்- 126 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், ஒட்டுமொத்த விவசாயப் பொருள் ஏற்றுமதி 8 வீதத்தினால் (190.2 மில்லியன் டொலர்)…
-
- 3 replies
- 388 views
-
-
கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை திடீரென 164 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தகவல் ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிலங்கா வந்த சீனர்களின் எண்ணிக்கை, 164 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டு 3353 சீனர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். அதேவேளை, இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 46 சதவீத அதிகரிப்பாகும். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் அல்ல என்றும் கூறப்படுகிறது. சிறிலங்காவில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற…
-
- 2 replies
- 461 views
-
-
நீதித்துறையை காரணங்காட்டி இலங்கையை சீர்குலைக்க தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக சதி முயற்சிகளின் வெற்றியளிக்காமல் போய்விட்டன என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55804-2012-12-29-11-09-41.html
-
- 0 replies
- 302 views
-
-
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெங்கு பரவும் வகையிலும் சூழல் மாசடையும் வகையிலும் செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு பொது இடத்தில் இடையூறு வி…
-
- 0 replies
- 211 views
-
-
இரட்டை குடியுரிமை வழங்கும் போது அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படும் - கோத்தபாய 29 டிசம்பர் 2012 வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்காக பல்கலைக்கழக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் மூலம் ஏற்கனவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இரட்;டை குடியுரிமையை வழ…
-
- 0 replies
- 463 views
-
-
நிறுவனங்களின் இரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்க வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணத்திற்கு 9 கோடியே 28 லட்சம் டொலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார். தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெலிக்கடை சிறையில் பலாத்கார கையெழுத்து வேட்டை! நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசின் ஆராஜகம் மீண்டும் தலைவிரித்தாடியுள்ளது. அங்குள்ள சகல கைதிகளிடமும் வெறும் வெள்ளை வெற்றுத்தாள்களில், பலாத்காரமாக கையெழுத்தும், கைநாட்டும் கொழும்பு குற்றவியல் பிரிவும், புலனாய்வுத்துறையும், சிறை அதிகாரிகளும் இணைந்து பொற்றுள்ளனர். முன்னறிவித்தல்கள் எதுவுமின்றிய இந்நடவடிக்கையால் சிறைக்கைதிகள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஏன் இப்படி எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி பலாத்காரமாக வெற்றுத்தாளில் கையெழுத்து வேண்டுகின்றீர்கள் எனக் கேட்டபொழுது, உங்கள் விடுதலைக்காகவும், எதிர்கால நன்மைகளுக்காகவுமே எனக் கூறி நாசூக்காக கையெழுத்துக்களை வேண்டியுள்ளனர். இதை நம்ப மறுத்து பல கைதிகள்…
-
- 1 reply
- 720 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் தி…
-
- 2 replies
- 628 views
-
-
பாடசாலைகளின் இணைப்பை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!! கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேச மூன்று பாடசாலைகளின் இணைப்பை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்: கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேசத்தின் மூன்று பாடசாலைகளை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நுகவெல பெண்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுகவெல கனிஷ்ட வித்தியாலயம் - நுகவெல மத்தியமகா வித்தியாலயம் ஆகிய இரண்டையும் நுகவெல பெண்கள் பாடசாலையுடன் ஒன்றாக இணைக்க அரச கல்வித் திணைக்களம் முடிவெடுத்திருந்தது. ஆயினும் பெற்றோருக்குப் பிடிக்காத இந்த இணைப்புத் திட்டத்தினை முழுமையாக எதிர்த்து நுகவெல பெண்கள் பாடசாலையில் கல்வ…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கைப் பாதுகாப்பு தரப்பும் புலனாய்வுப் பிரிவும் சிறீதரனுக்கும் வலை வீச்சு - சிக்குவாரா? 28 டிசம்பர் 2012 நெடியவன் குழுவினர் TNA யின் தலைவராக்க முயற்சி என்கிறது சிங்கள இணையம்:- விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி பிரசாரம் செய்து, போரின் மூலமே இலங்கையின் தனிநாட்டை உருவாக்கலாம் என சர்வதேச ரீதியில் கொள்கைளை பரப்பி வரும், நெடியவன் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து, இரா. சம்பந்தனை நீக்கி விட்டு, சிறிதரனை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரையை அடுத்த நெடியவன…
-
- 0 replies
- 544 views
-
-
கனடாவில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை [ வெள்ளிக்கிழமை, 24 டிசெம்பர் 2010, 11:27 GMT ] [ கனடா செய்தியாளர் ] கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடுமையாகப் போராடிவந்த, பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராசா பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 2004-2006 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக இவர் பணிசெய்தார் என நியூயோர்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வோட்டலூவில் பணிபுரிந்த இவர் தான் நாடுகடத்தப்படுவதை இடைநிறுத்தவேண்டும் எனக்கோரித் தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது தீர்ப்பு சுரேஸ் சிறிஸ்கந்தராசாவிற்கு எதிராகவே அமைந்த…
-
- 20 replies
- 2.3k views
-
-
நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முறுகலை தவிர்ப்பதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன் [Friday, 2012-12-28 08:33:03] நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலம் தற்போது நாட்டில் எழுந்துள்ள நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முறுகலை தவிர்க்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற கலைப்பு யோசனையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியூ குணசேகர ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தனர். எனினும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், அது பிரதம நீத…
-
- 0 replies
- 413 views
-
-
சூடு பிடிக்கிறது குற்றப்பிரேரணை விவகாரம்; அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது. தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையிலேயே இந்த விவாதம் நடைபெறவிருக்கின்றது. பகிரங்க விவாதம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளி…
-
- 3 replies
- 580 views
-
-
அமைச்சுப் பதவி குறித்து கட்சியின் அதி உயர்பீடமே தீர்மானிக்கும்! – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பிரேரணை? அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் யாப்பை மீறி தனித்தனியாகச் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியைத் தடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் யாப்பின்படி அமைச்சுப் பதவிகளை யாருக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் அதியுயர் பீடத்துக்கு மாத்திரமே இருக்கின்ற நிலையில், இந்த அதிகாரத்தை யாப்பில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான விசேட பிரேரணையொன்று அதியுயர் பீட உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்படவுள்ளது. கட்சியின் அதியுயர் பீடக் கூ…
-
- 0 replies
- 503 views
-
-
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க கோருவோருக்கு ஜே.வி.பி. உறுப்பினர் கூறும் ஆலோசனை பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க கோருவோர் அதனை தமது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென ஜே.வி.பி. யின் தென்மாகாண சபை உறுப்பினரான கலின் ஹேவகே தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மாகாண சபை உறுப்பினரொருவர் முன்வைத்த இவ்விடயம் தொடர்பான கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் படி வேண்டுகோள் விடுக்கின்றனர். இதுவா நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி என்று நாம் கேட்கின்றோம். இது சரியென்று நினைத்தால் பரவாயில்லை அதை நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து ஆரம்பியுங்…
-
- 0 replies
- 491 views
-
-
நீதி அமைச்சர் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறார்; சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சட்டக்கல்லூரி அனுமதிக்கான மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரம்சீ பாச்சா குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள உக்கிர குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட அரசியல் நோக்கங்களையும், இனவாதத்தையும் தூண்டும் வகையில் ஹக்கீம் செயற்பட்டு வருகின்றார். 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நம்ப முடியாத அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளனர். …
-
- 0 replies
- 389 views
-
-
டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் அல்லது குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் வாழும் 27குடும்பங்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் 27.12.2012 அன்று கரடியன்குளம் குசேலன்மலை பாலர் பாடசாலை வளாகத்தில் வழங்கப்பட்டது. இக்கிராமத்துக்கான நிவாரண உதவி 3வகையான பொதிகளாக வழங்கப்பட்டிருந்தது. டென்மார்க் அன்னை அறக்கட்டளையின் நிதியுதவியில் வழங்கப்பட்ட பாலர்பொதியில் பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவர் ஆடைகள் குழந்தைகளுக்கான பனடோல் ஆகியவை வழங்கப்பட்டது. மற்றும் Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவினரால் மாணவர்களுக்கான மாணவர்பொத…
-
- 1 reply
- 663 views
-
-
ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Friday, 2012-12-28 18:58:44] அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது. நாடு கடத்தப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் தலா ஐந்து லட்ச ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாத்தறை, காலி,…
-
- 0 replies
- 389 views
-
-
பிரித்தானிய பக்கிங்கம் பல்கலைகழத்தில், பரிசோதனை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்து எடுத்து சென்ற சிவப்பு மழையின் மாதரிகளில் உயிரியல் துகல்கள் காணப்படுகின்றமை மீண்டும் உறுதியாகியுள்ளன. சிவப்பு மழை தொடர்பான தகவல்கள் கடந்த நொவம்பர் மாதம் 14 ஆம் திகதி பதிவானது. செவனகல பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையின் மாதிரியே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . இதனிடையே, சிவப்பு மழை தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, செவனல மாத்திரமின்றி தனமல்வில, மனம்பிட்டிய, ஹிங்குரக்கொட, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் சிவப்பு மழை பெய்திருந்தது. இதனிடையே, இன்றைய தினம் இரண்டு இடங்களில் மஞ்சள் மழை பெய்துள்ளது. பொலன்னறுவ - வெலிகந்…
-
- 1 reply
- 933 views
-
-
வடக்கில் இன்னமும் பெரும் தொகையான விடுதலைப் புலிகள் மறைந்துள்ளனர். இவர்களினால் நாட்டுக்கு என்றும் ஆபத்து ஏற்படும். எனவே மறைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையினை பாதுகாப்புத் தரப்பினர் கைவிடக் கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் களத்தில் இருந்த புலிகளே போரின்போது கொல்லப்பட்டனர். ஆனால் தப்பித்துப் போனவர்களை தேடவோ கைது செய்யவோ போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை வடக்கில் தீவிரமாக முன்னெடுக்க…
-
- 1 reply
- 397 views
-
-
யாழ். நகரப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தமிழ் வர்த்தகர்களின் வயிற்றிலடிக்கும் செயலினை யாழ். மாநகர முதல்வர் மேற்கொண்டிருப்பதாக தமிழ் வர்த்தகர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பெருமளவு சிங்கள வர்த்தகர்கள் யாழ்.குடாநாட்டுக்கு படையெடுக்கின்றனர். இவர்கள் அனைவரிடமும் சட்டத்திற்கும், யாழ். மாநகரசபையின் ஒழுங்குகளுக்கும் முரணாக கையூட்டலைப் பெற்றுக்கொண்டு அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. இதனால் காலம் காலமாக இங்குள்ள தொழிலை நம்பியிருக்கும் பெருமளவு தமிழ் வர்த்தகர்களுக்கு ஏற்படும் நஸ்டம் வணக்கிட ப்பட முடியாதளவாகும். இந்நிலையில் எதிர்வரும் புத்தாண்டை குறிவைத்து …
-
- 0 replies
- 527 views
-
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கைது தொடர்பாக பான் கீ மூனுக்கு கனடிய நகரசபை உறுப்பினர் அவசர கடிதம். [Friday, 2012-12-28 12:20:01] யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் பலர் அண்மையில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொடிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் மேற்படி மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவில் தனது நகரசபை வட்டாரத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் கவலைகொண்டிருப்பது குறித்தும் கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தன்னோடு மிக நெருங்கிய நட்புக்கொண்டவர் என்ற வகையில் செயலாளர் நாயகம் திர…
-
- 3 replies
- 674 views
-
-
மார்கழி 28, 2012 மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார் மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர் புதிய குடியேற்றங்கள் குறித்து கோத்தா ஆலோசனை அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கோத்தப…
-
- 0 replies
- 744 views
-
-
புலிகள் எதிரித்திரியாவை மாதிரியாகக் கொண்டு செயற்பட்டது என்கிறது US– தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் 27 டிசம்பர் 2012 விக்கிலீக்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட எரித்திரியாவை முன்மாதிரியாகக் கொண்ட செயற்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அண்மையில் சுதந்திரம் பெற்றுக்கொண்ட எதிரித்திரியாi முன் மாதிரிக் கொண்டு செயற்பட உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரிய…
-
- 0 replies
- 633 views
-
-
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே புலிகளுக்கான வானொலி கருவிகளை இறக்குமதி செய்தது – விக்கிலீக்ஸ் 28 டிசம்பர் 2012 இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி கருவிகளை இறக்குமதி செய்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி இந்தக் குறிப்ப வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க சமாதான செயலகத்தின் கோரிக்கைக்கு அமையவே நோர்வே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி தொடர்பாடல் சாதனக் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது. அப்போதைய இலங்கைக்கான…
-
- 0 replies
- 637 views
-