ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
(கைதுசெய்யப்பட்டவர்கள் படையினரிடம் சரணடையாத விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்று காவல்துறை கூறுகிறது.) இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 558 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்படுமானால் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்…
-
- 1 reply
- 685 views
-
-
(எஸ்.கே.பிரசாத்) முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 2 replies
- 498 views
-
-
எமது மக்கள் எப்பொழுது புலம்பெயரத் தொடங்கினார்களோ அன்றிலிருந்தே கூட்டுக் குடும்ப வாழ்வு குலைந்து தனிக்குடும்ப வாழ்வுக்குத் தள்ளப்பட்டு விட்டனர். அது மட்டுமன்றி எமது மக்கள், எமது கலாசாரத்தில் இருந்து விலகிச் செல்வதையும் காண முடிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார். உதயன் பரிசுக் கொண்டாட்ட நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு உதயன் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது மக்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தனர். அவர்க…
-
- 0 replies
- 644 views
-
-
வலம்புரி ஆசிரியா் தலையங்கத்திற்கு யாழ். கட்டளைத் தளபதி பதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள்,ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் போது அக்குற்றத்தை அரசாங்கத்தின் அல் லது பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்துவது கடப்பாடல்ல என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். ‘யாழ்.கட்ளைத் தளபதிக்கு ஓர் அவசர மடல்’ என்ற தலைப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பல்கலைக்கழக மாணவர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றை நாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்! வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களான வி.பவானந்தன், ப.தர்ஷானந்த், க.ஜெனமேஜெயந், எஸ்.சொலமன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த மாத முற்பகுதியில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்துக்கு முரண…
-
- 2 replies
- 520 views
-
-
சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்? [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Policy Research Institute - FPRI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள Mark J. Gabrielson, Joan Johnson-Freese ஆகிய இருவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அந்…
-
- 1 reply
- 603 views
-
-
சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி December 25, 2012, 10:41 am|views: 748 சிறிலங்காவின் கல்வி நடவடிக்கைகளில் பாலியலும் இடம்பிடிக்கவுள்ளது. பாலியில் நோய்களிலிருந்து இளைஞர் சமூதாயத்தை பாதுகாக்கும் நோக்கில் பாலியல் தொடர்பான விசேட கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். பாலியல் தொடர்பான தகவல்களை உரிய முறையில் பெற்றுக் கொள்வது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் சகல அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இவ்வாறு பாலியல் கல்வி தொடர்பான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் பாலியல், ஜனன முறைமை தொடர்பான கல்வி மற்றும் கொள்கை வகுப்பு நடவடிக்கைகள் மிகவும் …
-
- 7 replies
- 895 views
-
-
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலமாக அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையானது ஆண்டொன்றுக்கு சுமார் 700 கோடி வருவாய் ஈட்டிக்கொள்வதாக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இவ்வருவாயை ஜம் இயத்துல் உலமா சபையானது பள்ளிவாசல்கள், ஷரியா சட்டத்திற்கான மத்திய நிலையம் மற்றும் ஜிகாத் போன்றவற்றிற்கான நிதிமார்க்கமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சகோதரர்களுடன் எங்களுக்கு பிரச்சினையில்லை. ஜம் இயத்துல் உலமா சபையுடனேயே பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சிங்கள மக்கள் பெருமளவில் சுரண்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…
-
- 5 replies
- 531 views
-
-
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர் ஆனால் அதில் உண்மையில்லை. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்…
-
- 2 replies
- 567 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இன்று மாலை மலேசியா பயணமாகியது. மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கலந்துகொள்ள, தமது கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று பயணமாகியதாக த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரே இக்குழுவில் அடங்குகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55625-2012-12-26-13-28-25.html
-
- 0 replies
- 588 views
-
-
எத்தகைய இடர்களில் இருந்தும் மீண்டெழும் வல்லமை தமிழருக்கு உண்டு! - கூட்டமைப்பு உறுப்பினர் ரதன் உரை!! 'காலத்திற்குக் காலம் எமது வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எமது தமிழினம் சந்தித்த போதிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவையும், 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் மறக்கத் தயாரில்லை. இவ்வாறான இடர்களிலிருந்து மீண்டெழும் வல்லமை படைத்த இனமே தமிழினம்.' - இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த மக்களின் எட்டாம் ஆண்டு நிகழ்வு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் இன்ற…
-
- 1 reply
- 471 views
-
-
"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. "பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்…
-
- 6 replies
- 740 views
-
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முஸ்லிம் மக்க…
-
- 3 replies
- 682 views
-
-
புதுவை ரத்தினதுரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளரும், கவிஞருமான புதுவை ரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள நாளேடான திவயினவின் பாதுகாப்பு செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் புதுவை ரத்தினதுரையை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதுவை ரத்தினதுரை பிரபாகரனின் உத்தியோகபூர்வ கவிஞராகவும் கருதப்படுகின்றார். புதுவை ரத்தினதுரையை விடுதலை செய்யும் நோக்கில் இணைய மகஜர் ஒன்றை கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மே மாதம் 13…
-
- 5 replies
- 3k views
-
-
‘இலங்கையின் தேசிய தலைநகரில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையை சுட்டிக்காட்டி அரசு சார்பு சிங்கள அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். பாதுகாப்பு செயலாளர் கோட்டாய ராஜபக்ஷவும் கருத்து கூறியுள்ளார். இவர்களது கருத்துக்கள் தேசிய நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளது’ என்று என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ‘இவர்களது கருத்துக்களில் சிங்கள தேசத்தில், அதாவது கொழும்பில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பெருந்தொகையில் வாழ்வதற்கு அனுமதியளித்துள்ளோம் என்றும், அது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பாரிய சலுகை என்பதான ஒரு அர்த்தம் தொக்கி நிற்கிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படு…
-
- 0 replies
- 239 views
-
-
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட திடீர் விஜயம் மேற்கொண்டபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கிருந்து நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வா…
-
- 1 reply
- 296 views
-
-
இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்ததுபோல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவுவாங்கிய இடம்! கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. ‘சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து. நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது. ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும் யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலை…
-
- 0 replies
- 541 views
-
-
சிம்பாப்வே அணியைப் போன்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியும் அனைத்துலக போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று கோரி அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று மெல்பேர்ண் துடுப்பாட்ட மைதானத்தில் சிறிலங்கா - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே, மைதானத்துக்கு வெளியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அழுக்கைக் கழுவிக் கொள்வதற்கு இந்தத் துடுப்பாட்டப் போட்டி வாய்ப்பு வழங்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். “2007ம் ஆண்டில், அவுஸ்ரேலிய அணி சிம்பாப்பே பயணத்தை நிறுத்தியபோது, சிம்பாப்பேயின் சர்வாதிகாரி றொபேட் முகாபேக்கு து…
-
- 0 replies
- 320 views
-
-
(எஸ்.கே.பிரசாத்) யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/555…
-
- 0 replies
- 326 views
-
-
எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவிருக்கும் சிறிலங்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective எனும் அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சிறிலங்கா கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 'பல்லாயிரக்கணக்கில் வேற்றின மக்கள் கூடும் இந்த விளையாட்டு நிகழ்வில் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைச் செய்வதன்மூலம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதே எமது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்' என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர்…
-
- 4 replies
- 604 views
-
-
"தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்காணும் செயற்பாடுகள் குறித்து அரசு உரியவகையில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விடயத்தில் அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது. அத்துடன், இன ஒடுக்கல் இயந்திரத்தையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகத் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள், தமிழர் பிரச்சினைகளுக்கு 2013ஆம் ஆண்டிலும் தீர்வு கிடைக்காது என்றும், அது சங்கிலித் தொடராகவே செல்லும் தொடரும் என்பதையும் உணர்த்துகின்றன'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளரும், ஊவா மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே…
-
- 1 reply
- 463 views
-
-
எம்பிலிப்பிட்டியவில் நேற்றுமுன்தினம் குழு ஒன்றால் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த விடயத்தை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். வர்த்தக நிலையங்களையும் வர்த்தகர்களையும் தாக்கிய குழுவில் அநேக மானோர் சிங்களவர்களே என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 20 வருடங்களுக்கும் மேலாக எம்பிலிப்பிட்டிய வாராந்த சந்தையில் வர்த்தகம்செய்துவரும் இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டன…
-
- 12 replies
- 1.1k views
-
-
கிறிஸ்மஸ் தினமான இன்று இலங்கையின் பலபாகங்களிலும் 12 மணித்தியாலங்களில் 382 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் அமிலா விஜேசிங்க மெண்டிஸ் என்ற ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். அவர் பயணம் செய்த வாகனம், மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கிறிஸ்மஸ் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. http://www.thinakkathir.com/?p=45836
-
- 0 replies
- 986 views
-
-
இனவாத, மதவாத நிலைமை மீண்டும் தோற்றம் - சோமவன்ச இனவாத மற்றும் மதவாத நிலைமையொன்று மீண்டும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை அரசாங்கம் தனது ஆசிர்வாதமாகவே கருதி வருகின்றது என்று தெரிவித்த அவர், பல்வேறு விதமாக கோபதாபங்களை தோற்றுவிக்காமல் நீண்டகால நோக்குடன் செயற்படுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யார் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 502 views
-