ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். மனித உரிமைகள் தினத் தன்று யாழ். திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற நிகழ்வில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்னும் தலைப்பில் கைதும் தடுத்துவைத்தலும் மற்றும் சித்திரவதை எனும் விடயம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கைக்கு வழங்கப்பட்ட…
-
- 2 replies
- 619 views
-
-
யாழ். வடமராட்சி - வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த இரு முன்னாள் போராளிகளும் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு முன்னால் உரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் பிடிக்குள் அகப்பட்டு அரசின் புனர்வாழ்வு பெற்று 6 மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டனர் என்றும், இருவரும் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த சண்முகம் நகுலன் (வயது - 26), கோவிந்தன் சுதர்ஷன் (வயது - 28) ஆகிய இருவருமே க…
-
- 2 replies
- 763 views
-
-
சமூக, அரசியல் ரீதியான பாகுபாடுகளும், தொடர்ச்சியான அழுத்தங்களும், முரண்பாடுகளை வன்முறைகளாக மாற்றுவதாக முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது.. பயங்கரவாதம் நாட்டின் மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு, முரண்பாடுகளை தீர்க்கும் செயற்பாடே முக்கியமானதாக உள்ளது. ராணுவ தளபாடங்களை விட, முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக, ஜனநாயக, ராஜதந்திரம், புரிந்துணர்வு போன்ற ஆயுதங்களை ஏந்தி செயற்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ளவும், முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள…
-
- 1 reply
- 656 views
-
-
பொலன்நறுவை மாவட்டத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்த பெருமளவான நாய்கள் இறைந்துள்ளன! - அதிர்ச்சியில் மக்கள் [sunday, 2012-12-16 09:48:20] இலங்கையின் பொலன்நறுவை மாவட்டத்தில் திமுலாகல பிரதேசத்தில் உள்ள பல பாகங்களிலும் எந்தவித நோய்த் தொற்றும் இன்றி பெருந்தொகையான நாய்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாட்களாக மனப்பிட்டிய பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழையில் நனைந்ததாக கருதப்படும் நாய்களே மரணித்தள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் நாய்கள் இறந்தமை தொடர்பில் தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என பிரதேச வைத்தியர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=72119&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 1k views
-
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை இலங்கை வருகின்றார். இவர் வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள முக்கிய இராணுவத் தளங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2109
-
- 0 replies
- 464 views
-
-
வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவகர் என தெரிவிக்கப்படும் வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது. சோபாய புளியங்குள தமிழ் மக்கள் அறிய வேண்டியது முஸ்லிம் மக்களின் (சாம்பைக் குளம்) காணிகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது. வெளியேறாத பட்சத்தில் வன்முறைய…
-
- 0 replies
- 523 views
-
-
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த இலங்கையின் நாணயக் கொள்கையினை தளர்த்தி விட மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது. இதன் மூலம் தற்போது நிலவும் உயர் வட்டி வீதங்களைக் குறைத்து, பணவீக்கத்தினை கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியினை தூண்ட எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளிற்காக மத்திய வங்கி விதித்து வரும் மீள் கொள்வனவு (7.5%) மற்றும் நேர் மாற்று மீள் கொள்வனவு (9.5%) வீதங்களை 25 புள்ளிகள் அடிப்படையில் குறைப்பதன் மூலம் நாணயக் கொள்கையினை தளர்த்தி வட்டி வீதங்களைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, சாதாரன வைப்புக்கள் (9.8%), நிலையான வைப்புக்கள் (12.78%) மற்றும் கடன்களிற்கான (15.38%) வணிக வ…
-
- 5 replies
- 944 views
-
-
கார்பந்தயத்திற்கான வாகன இறக்குமதியில் அரசாங்கத்திற்கு நட்டம் 16 டிசம்பர் 2012 கார்பந்தயத்திற்கான வாகன இறக்குமதியில் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. இரவு நேர கார்பந்தயப் போட்டிகளுக்காக கார்ல்டன் மோட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 19 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிச் சலுகை அடிப்படையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 200 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் வெறும் துறைமுகக் கட்டணங்களை மட்டும் செலுத்தி இந்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதேவேளை, கா…
-
- 1 reply
- 381 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என பாராளு மன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்ப…
-
- 2 replies
- 977 views
-
-
வடக்கில் தேர்தலிற்கு முன்னர் 150,000 சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த திட்டம் சிறீலங்கா | ADMIN | DECEMBER 16, 2012 AT 07:53 வடக்கில் அடுத்த வருடம் இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், அங்கிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் குடியமர்த்த வேண்டும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்போது வடக்கில் இருபது சத வீதமான முஸ்லிம்கள் மட்டுமே குடியேற்றப்பட்டுள்ளனர். ஆனால், மீதியான எண்பது சத வீதமானவர்களும் அதாவது சுமார் 150,000 பேர்வரை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் குடியேற்றப்பட வேண்டும். அதேபோன்றுதான் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும். அதன் பின்னரே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். தான் தலைமை வக…
-
- 0 replies
- 676 views
-
-
யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:- 13 டிசம்பர் 2012 யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார். வலிகாமம் பகுதி விளையாட்டுத்துறை அதிகாரியொருவரது மகளான 21 வயதுடைய நடராசா கியானி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடை பகுதியினிலுள்ள அவரது வீட்டிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மரணித்தவர் படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியிருந்த வேளை அம்மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையினில் சடலமாக கிடந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான இவர் த…
-
- 8 replies
- 1.5k views
-
-
http://youtu.be/DxIsfy67Qqg
-
- 4 replies
- 677 views
-
-
அவுஸ்திரேலியாவுடன் கூட்டுச் சேரும் கோத்தபாய December 15, 2012, 6:48 am|views: 181 சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்வதைத் தடுப்பதற்கு, கூட்டுச் செயலணிக் குழுவொன்றை அமைக்க சிறிலங்காவும், அவுஸ்ரேலியாவும் இணக்கம் கண்டுள்ளன. கோத்தபாய மற்றும் அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களச் செயலர் மார்ட்டின் பொவ்லெஸ் ஆகியோர் இந்தச் செயலணிக் குழுவுக்குத் தலைமை தாங்குவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா, அவுஸ்ரேலிய விவகார அமைச்சர்கள் இந்த செயலணிக்குழுவை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சட்டவிரோத குடியேற்றங்கள், ஆட்கடத்தல்களைத் தடுப்பது குறித்த நடப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கே இந்தச் செயலணிக்குழு உருவாக்கப்படவுள்ளது. சிறிலங…
-
- 1 reply
- 386 views
-
-
தமிழ் மக்களின் சாதாரண பிரச்சினைகள் கூட இன்னும் அரசினால் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் அரசுடன் தொடர்ந்து பேசி என்னபயன் கிடைக்கப் போகிறது? எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் ஐ.நாவைச் சமாளிப்பதற் காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க அவசரப்படுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பித்துள்ளோம் என்று கூறி ஜெனிவாவில் தப்பிக்க வழிதேடுகிறது இலங்கை அரசு. இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: …
-
- 1 reply
- 343 views
-
-
-
- 3 replies
- 568 views
-
-
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வித…
-
- 24 replies
- 1.1k views
-
-
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் : சட்ட வைத்திய அதிகாரி. சிறீலங்கா | ADMIN | DECEMBER 14, 2012 AT 18:38 அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களுள் பதின்மூன்று தமிழ் யுவதிகள் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர்கள் அனைவரும் பாலியலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், அனுமதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் யுவதிகள் அனைவரும் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இல்லாமையினால், யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து குறித்த ம…
-
- 5 replies
- 794 views
-
-
''இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை; ஆனால் அவர்கள் மீடியா மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்று அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகிறார். இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டு, சுகவீனமுற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களை பார்வையிட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிவதாஸ் இவ்வாறு கூறியுள்ளார். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் உளநல சிகிச்சைக்கு உள்ளான பெண்கள் குறித்து வவுனியா மருத்துவமனையின் உள நல மருத்துவர் டாக்டர். எஸ். சிவதாஸ் செவ்வியை இங்கு கேட்கலாம்http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121215_sivadasiw.shtml
-
- 3 replies
- 764 views
-
-
பொன்சேகாவை போல் சிரானியும் எதிர்க்கட்சிகளின் சதிவலையில் சிக்கியுள்ளார்: டலஸ் அழகப்பெரும [saturday, 2012-12-15 19:43:45] பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிழையாக வழிநடத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதம நீதியரசருக்கு புகழாரம் சூட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இவ்வாறான ஓர் சதி வலையில் சிக்கியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட முக்கியமானவாகள் பலர் தற்போது அவரை கைவிட்டுள்ளதாக அமைச்சர் சு…
-
- 0 replies
- 502 views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள், யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 மோட்டார் சைக்கிள்களை வழங்கியமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை வழங்க தலையீடுகளை மேற்கொண்ட புலிகளுக்கு ஆதரவான தமிழ் அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவிகள் லண்டனில் உள்ள புலிகளின் வலையமைப்பினால், வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவீரர் தினத்திற்கு முன்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது http://www.seithy.com/breifNews.php?newsID=72092&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 552 views
-
-
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காட்சியளிக்கின்றன. குறிப்பாக பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாதைகளே இவ்வாறு கழிவு எண்ணெய் வீசப்பட்டது போல காணப்படுகின்றன. இந்த பதாகைகளுக்கு கழிவு எண்ணெய் எவ்வாறு வீசப்பட்டது என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. குறிப்பாக ஜனாதிபதியின் உருவப்படங்கள் மட்டுமே குறித்த வீதியில் கழி எண்ணெய் வீசப்பட்டவாறு காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/54816-2012-12-15-09-49-19.html
-
- 1 reply
- 677 views
-
-
எமது மத்தியில் ஒற்றுமையில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன். இன்று இங்கு பல விதமான கோசங்கள் எழுப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான கோசங்கள் இங்கு சிலருக்க புதுமையாக இருந்தாலும் இது 40 ஆண்டுகாலமாக திரும்பத்திரும்ப ஒலித்தகோசங்கள். ஆகவே 40 ஆண்டுகளாக இவ்வாறான கோசங்கள் எழுப்பப்படுவதாக இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக உள்ள பிரச்சினை. இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கடந்த இரண்டாண்டு காலமாக நான் எனது கட்சி செயற்பாடுகளை ஒதுக்கி விட்டு ஒற்றுமையாக செயற்ப…
-
- 2 replies
- 426 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் அரவிந்த் குப்தாவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=1978
-
- 4 replies
- 951 views
-
-
அநேகமாக பிரதம நீதியரசர் சிராணியை பதவியில் இருந்து மகிந்த அரசு நீக்குவது நிச்சயமாகிவிட்ட நிலையில் இரணில் இவ்வாறு கூறி உள்ளார். Sri Lanka could lose Commonwealth membership over impeachment of top judge, Opposition Leader warns Sri Lanka's main opposition United National Party (UNP) Leader Ranil Wickremasinghe warned that the country may stand to lose its membership in the Commonwealth over the impeachment process of the country's top judge if it does not follow the procedures set out by the Commonwealth. Wickremasinghe said that the Commonwealth has set out a procedure for investigating a judge and that failure to follow them in the impeachment of the Chief Ju…
-
- 2 replies
- 400 views
-
-
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில்2 ஆயிரத்து 704 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 92 பேர் ஆண்களும் 612 பேர் பெண்களுமாவர்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தற்கொலை செய்வோர் வீதம் அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. தற்கொலைச் சப்வங்களில் தூக்கில் தொங்குதல் மற்றும் விஷம் அருந்தி உயிர் நீத்தலே அதிகமாகவுள்ளது. மன அழுத்தம், சமூக தொடர்பின்மை மற்றும் அறியாமை போன்ற காரணிகளாலேயே கூடுதலான தற்கொலை தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது http://www.sarithamnews.com/?p=1196
-
- 0 replies
- 1.1k views
-