ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
வலஸ்முல்ல தெற்கு கனுமுல்தெனியவில் மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தேசிய வானியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது கனுமுல்தெனிய கஹடேல்லகெட எனுமிடத்தில் பலாமரத்தின் மீதே இந்த 'மர்மப்பொருள்' விழுந்துள்ளதாகவும் அந்த மர்மப்பொருள் விழுந்ததையடுத்து குறித்த மரம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வானத்திலிருந்து பாரிய வெளிச்சத்துடன் பூமியை நோக்கி நேற்றிரவு 9 மணியளவில் மிகவேகமாக வந்த அந்த மர்மப்பொருள் பலாமரத்தில் சுமார் 25 அடி உயரத்தில் விழுந்து சாம்பலாகியுள்ளது. அந்த மரமும் 25 அடி உயரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். திம்புலாகல மற்றும் கம்பஹா பிரதேசங்களிலும் இவ்வாறான மர்மப்பொருட்கள் கடந்த வியாழக்கிழம…
-
- 0 replies
- 559 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் நேற்று வெள்ளிக்கிழமை மிகவும் எழுச்சிகரமாக 10, டவுணிங் ஸ்ரீட்டில் (10 Downing Street) உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர், சமூக ஆவலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இலங்கையில் தொடர்ந்துவரும் அரச பயங்கரவாதத்தினை உலகறியச் செய்வதற்கு காலநிலையையும் பொருட்படுத்தாது நேற்று மாலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்குபற்றியிருந்தனர். http://www.youtube.com/watch?feature=player_embedded&list=UU_fqwLmmDRD8FMFYXAXWqaw&v=bUA6RuJmH4I[/xml] …
-
- 0 replies
- 239 views
-
-
இரு தமிழர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா. சிறீலங்கா | ADMIN | DECEMBER 15, 2012 AT 12:37 தமது நாட்டில் வசிக்கும் இரு தமிழர்களை ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்த கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஈழத்தில் பிறந்து கனடாவில் வசித்துவரும் பிரதீபன் நடராஜா, மற்றும் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். கனடாவின் இத்திட்டத்திற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ள இரு தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=40991
-
- 0 replies
- 380 views
-
-
யாழ். பல்கலை மாணவர்களை விடுதலை செய்யமுடியாது :துணை வேந்தரிடம் கோத்தபாய தெரிவிப்பு! [saturday, 2012-12-15 09:23:10] பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினரிடம் நேரில் தெரிவித்துவிட்டார். என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் "சில நாட்கள் வைத்து உளவளத்துணை (counselling ) கொடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்று பல்கலை…
-
- 0 replies
- 266 views
-
-
தமிழர்களின் காணியை அடாத்தாக பறித்து அதில் தென்பகுதி சிங்களவர் தொழிற்சாலை கட்டி, அந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் தமிழ் மொழியை கேவலப்படுத்தி யாழ் குடா நாட்டில் ஒரு விழா நடந்தது. அதற்கு அரச ஒட்டுண்ணி டக்ளஸ் உபயகாரர். கடற்றொழில் அமைச்சர் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தமிழ் கொலைகள் அதிகமாக காணப்படுவதை படத்தில் காணலாம். இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இலங்கைக் கடற்றொழில் கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமாக காணியில் தனிநபர் ஒருவரினால் கட்டப்பட்ட ஐஸ் தொழிற்சாலையினை அமைச்சர் ராஜித சேனாரட்ன திறந்து வைத்தார். அதன் நிகழ்வுகளை முக்கியப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டிருந்த வரவேற்பு பணர்கள் அனைத்திலும் தமிழ் எழுத்துக்கள் பிழையாக அச்சிடப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. இந்த பண…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கையின் மத்திய மாகாணத்தில் பலர் கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடம்போல தோன்றும் ஒரு இடத்திலிருந்து இதுவரை சுமார் 60 சடலங்களின் எஞ்சியிருக்கும் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மாத்தளை மருத்துவமனை அமைந்திருக்கும் இந்த இடத்தில் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்கு முன்னர் இலங்கையில் பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய ஒரு கிளர்ச்சியில் பங்கேற்ற சிங்கள கொரில்லாக்களின் உடல்கள் இவை என்று சில குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதேவேளை, இந்த உடல்கள் அரசியல் அல்லாத வேறு சூழ்நிலைகளில் இறந்தவர்களின் உடல்கள் என்றும் வேறு சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மாத்தளை நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் புதிய கட்டிடம் ஒன்றை…
-
- 0 replies
- 421 views
-
-
சிறிலங்காவில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதைத் தடுப்பதற்கு, கூட்டுச் செயலணிக் குழுவொன்றை அமைக்க சிறிலங்காவும், அவுஸ்ரேலியாவும் முடிவு செய்துள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களச் செயலர் மார்ட்டின் பொவ்லெஸ் ஆகியோர் இந்தச் செயலணிக் குழுவுக்குத் தலைமை தாங்குவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா, அவுஸ்ரேலிய விவகார அமைச்சர்கள் இந்த செயலணிக்குழுவை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சட்டவிரோத குடியேற்றங்கள், ஆட்கடத்தல்களைத் தடுப்பது குறித்த நடப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கே இந்தச் செயலணிக்குழு உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவுக்கு பயணம் மேற…
-
- 0 replies
- 275 views
-
-
பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் அவர்கள் அனைத்து நகரக் காவற்துறையின் மாவட்ட நிர்வாகத்துறைத் தலைமை மையங்களிற்கும் (Prteéfecture) ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருவோரைக் கௌரவமாகவும் தகுதியுடனும் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி இந்தச் சுற்றறிக்கை அமைந்துள்ளது. அதன் பிரதி ஒன்றை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது. முதன்முறையாக பிரான்ஸ் அரசாங்கம் 10 தொடக்கம் 12 வீதம் வரையான நிர்வாகத் தலைமை மையங்களில் ‘பெரும் சிக்கல்கள்’ உள்ளது என்பதைக் கணக்கெடுத்துள்ளது. முக்கியமாக முதல் நாள் இரவே சென்று வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயங்களும் சில நிலையங்களில் அவை திறப்பதற்கு முன்னர் மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் நிற்கவேண்டிய கட…
-
- 0 replies
- 403 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களைவிடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினரிடம் நேரில் தெரிவித்துவிட்டார் என்று நம்பகரமான வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தன. எனினும் "சில நாள்கள் வைத்து உளவளத்துணை (கவுன்ஸிலிங்) கொடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள்'' என்று பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று முகாமைத்துவ மற்றும் வணிக பீடாதிபதி க.வேல்நம…
-
- 0 replies
- 443 views
-
-
பெற்றோரை வற்புறுத்தி பொய் வாக்குமூலங்களை பெறும் இனவழிப்பு இராணுவம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடம் இருந்து " எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இராணுவத்தில் உள்ளார்" "எமது பிள்ளைகள் மகிழ்வாக உள்ளனர்" "அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" இவை அனைத்தும் ஒரு மாத காலத்திகுள்ளேயே நடக்கின்றது. தமிழ் பெண்களின் பெயர்களும் சிங்களமாக மாற்றப்பட்டு எழுதப்படுகின்றது : "முறுகல் பிள்ளை பிரதீபா" சோம ரத்தினம் சுனேத்திரா" . பெற்றோரின் படங்களுக்கும் அவர்களின் ' கருத்துக்களுக்கும்' சிங்கள இராணுவ தள மூலம்: http://defence.lk/new.asp?fname=The_future_of_our_children_is_secure_Parents_of_Tamil_woman_soldiers_20121214_02 Sri Lanka Defence co…
-
- 2 replies
- 801 views
-
-
பிரபாகரனுக்காக குரல் கொடுக்கும் தரப்பினரே, பிரதம நீதியரசருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் :பியசிறி விஜேநாயக்க [Friday, 2012-12-14 08:56:32] புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக குரல் கொடுக்கும் தரப்பினரே குற்றப் பிரேணைக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். அன்று புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை தடுக்க முயற்சித்த உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளே இன்று பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை தடுப்பதற்கு ஒன்றிணைந்துள்ளன. போரின் போது படையினரை பலவீனப்படுத்த முயற்சித்த தரப்பினரே இவ்வாறு இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராடுகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்திற்காக குரல் கொடுக்கும…
-
- 1 reply
- 457 views
-
-
தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடை; யாழில் நீரியல் வளத்துறை அமைச்சர் தெரிவிப்பு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு மக்கள் எந்தக் காலப்பகுதியிலிரும் தெற்குடன் இணைந்தே இருப்பவர்கள் வட மாகாணத்தில் வீதி, குளம், வீடுகள் மற்றும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கலாம் ஆனால் அங்கு வாழும் மக்கள் எதிர் பார்க்கும் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். …
-
- 0 replies
- 590 views
-
-
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார். இது குறித்து தெரியவருவதாவது: சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ். அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்க…
-
- 20 replies
- 1.3k views
-
-
வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் 20 சதவீதமானோர் மட்டுமே தமது சொந்த இடங்களில் தற்போது மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அங்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படவேண்டும். இயன்றளவு விரைவில் வடமாகாண சபை நிறுவப்படல் வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் கூறியிருந்தன. அதேபோல தமிழ்த்தேசியக்கூட்டமை…
-
- 2 replies
- 533 views
-
-
ஒரு நாட்டின் எல்லையை மீறிப்போய் மீன் பிடித்தல், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு கேடாகவும், கடற்றொழில் செய்யும் சமூகத்தினரிடையே பதற்றத்தை தோற்றுவிப்பதாகவும் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தென்னிந்தியாவிலிருந்து பெருந்தொகையான மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடலில் மீன்பிடிக்க வருவது, இலங்கை - இந்திய அரசாங்கங்கள் எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்சினையான உள்ளது எனவும் அவர் கூட்டிக்காட்டினார். மூன்றாவது காலி சம்பாஷனையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், இன்னும் இந்…
-
- 0 replies
- 508 views
-
-
தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்ற முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் மாறவேண்டும் என்று கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதலமைச்சர் செயலகத்துக்கான குழுநிலை விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது: கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் ஏராளமான திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் கீழ் இவ்வளவு திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாக ஒரு த…
-
- 0 replies
- 414 views
-
-
(சுபுன் டயஸ்) மாத்தளை வைத்தியசாலையின் வளவிலிருந்து இதுவரையில் 49 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வெலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த பாரியளவிலான புதைகுழி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதிகாரிகள் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவை எப்போது புதைக்கப்பட்டன?, இங்கு புதைப்பதில் தொடர்பானவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு இன்றும் விடை காணப்படாமல் உள்ளது. இவர்கள், 1971ஆம் ஆண்டு பயங்கரவாதத்தின் போது கொல்லப்பட்டவர்களா அல்லது 1987 மற்றும் 1989ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைளின் போது கொல்லப்பட்டவர்களா எ…
-
- 3 replies
- 435 views
-
-
இலங்கையை தண்டிக்க முக்கிய ஆதாரங்கள்! இங்கிலாந்து பெண் சென்னையில் பேட்டி! சிறீலங்கா | ADMIN | DECEMBER 14, 2012 AT 21:04 இங்கிலாந்து பெண் பத்திரிகையாளரும், பிபிசி செய்தியாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் சென்னையில் 14.12.2012 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பிபிசி செய்தியாளராக இலங்கை, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளேன். இலங்கையில் போர் நடந்தபோது, நான்கு ஆண்டுகள் அங்கிருந்தேன். கடைசி கட்டப்போர் மிகவும்கொடூரமானது. போருக்குப் பிறகு எஞ்சிய மக்கள் மாணிக் பார்ம் என்ற முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்த பலர் ஆஸ்திரே-யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். மிக கொடுமையான இறுதிக்கட்டப்போரை நேரில் பார்த்து பல்வேறு இன்ன…
-
- 4 replies
- 804 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து பறிக்கிறது சிறிலங்கா FRIDAY, 14 DECEMBER 2012 16:24 SYDNEY HITS: 1 இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட, திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பறித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய்க்குதங்களை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மீளப்பறித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2002ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐதேக அரசாங்கத்தினால், சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்த…
-
- 1 reply
- 646 views
-
-
கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன? December 12, 2012, 11:00 pm|views: 794 இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட யுவதிகள் நள்ளிரவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இராணுவ மகளிர் பிரிவின் 6வது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ந் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த தமிழ் யுவதிகளில் 21 பேர் 11.12.2012 அன்று நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்குள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்ப…
-
- 11 replies
- 1.9k views
- 1 follower
-
-
யுத்தத்தில் இடம்பெயர்ந்தோருக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி 14 டிசம்பர் 2012 யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஹெபிடாட் நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த உதவிகளை வழங்கவுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை உருவாக்கப்பட உள்ளன. இந்த உதவிகளின் மூலம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 4000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்க்பபட உள்ளது. வீடமைப்புத் திட்டங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் ஐம்பது மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86574/langu…
-
- 0 replies
- 335 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது. முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள் அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்ப…
-
- 8 replies
- 865 views
-
-
தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தொவிக்கின்றன. தற்போது …
-
- 23 replies
- 1.7k views
-
-
Sri Lankan protest on Boxing Day Sri Lankan Socialist Party activists demonstrate in Colombo on Monday, the first anniversary of the disappearance of two of their colleagues in the northern district of Jaffna. Normalcy is yet to return to the north more than three years after the civil war ended. Photo: AFP ORGANISERS of a campaign for a boycott of Sri Lanka's cricket matches expect about 1000 people to protest outside the MCG on Boxing Day but have promised they won't disrupt the biggest day on the Australian cricket calendar. The Tamil Refugee Council says it is determined to draw attention to the Sri Lankan government's human rights record by holding …
-
- 6 replies
- 904 views
-
-
இலங்கை பொலிஸ் குதிரைப் படைக்கு 21 நெதர்லாந்துக் குதிரைகள் By Kapila 2012-12-14 16:41:55 இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப் படைப் பிரிவில் இணைப்பதற்காக நெதர்லாந்திலிருந்து 21 குதிரைகள் இன்று நண்பகல் 2.30 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொண்டுவரப்பட்ட இவையனைத்தும் தரோபிரட் இனத்தைச் சேர்ந்த ஆண் குதிரைகள் ஆகும். http://www.virakesari.lk/article/local.php?vid=2083
-
- 1 reply
- 360 views
-