ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
லலித்தும் குகனும் கடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு கடக்கிறது! - [sunday, 2012-12-09 11:22:35] லலித், மற்றும் குகன் காணமல் போய் இன்று ஒரு வருட மாகி விட்டது . எத்தனையோ கடத்தல்கள், காணமல் போதல்கள் நிறைந்த எம் மண்ணில் தான், இவர்களின் கடத்தலும் காணமற் போதலும் நடந்து இருக்கின்றது. ஆனால் இந்தக் கடத்தல் வித்தியசமானது. அந்த வகையில் கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களுக்காக போராடியதால், தோழர்கள் லலித்தும் குகனும் காணாமல் போனார்கள். அதுவும் சர்வதேச மனிதவுரிமை தினத்தன்று கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடுவதற்காக முயன்ற போது, அவர்கள் இருவரும் காணமல் போனார்கள். காணாமல் போன தமிழர்க்காக போராடிய சிங்களவரும் தமிழரும் சேர்ந்தே காணாமல் போய் இருக்கின்றன…
-
- 1 reply
- 295 views
-
-
ஐ.நா உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் 09 டிசம்பர் 2012 ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் இந்த விசேட பிரதிநிதிகள் குழு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான், நைஜீரியா, ரொமானியா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நிரந்தர பிரதிநிதிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் இத்தாலி, பிரேசில், தென் ஆபிரிக்க உள்ளிட்ட ராஜதந்தி…
-
- 3 replies
- 561 views
-
-
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? - இதயச்சந்திரன் [saturday, 2012-12-08 13:18:24] அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது. அண்மையில் மேற்குலக கருத்துருவாக்கிகளின் மையமான, சர்வதேச நெருக்கடிக்களுக்கான குழுவின் [international Crisis Group] அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து கூட்டமைப்போடு அமெரிக்கா விவாதிக்குமென நம்ப…
-
- 3 replies
- 738 views
-
-
உடற்பாகங்கள் தோண்டியெடுப்பு... ஞாயிற்றுக்கிழமை, 09 டிசெம்பர் 2012 11:46 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை பூநகரி கௌதாமுனை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (ரொமேஷ் மதுசங்க) http://tamil.dailymirror.lk/--main/54408-2012-12-09-06-18-26.html
-
- 1 reply
- 295 views
-
-
நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் விதிவிடப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வந்தது. ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்ன குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஜப்பான், பங்களாதேஷ், ருமேனிய…
-
- 0 replies
- 648 views
-
-
சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படுவது ஏற்கனவே ஒரு ஆண்டு தாமதமாகியுள்ள நிலையில், சில முக்கிய மதிப்பீடுகளை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்கா மின்சாரசபை இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தைக் கோரியுள்ளது. இதனால், புதுடெல்லியில் சிறிலங்கா மின்சாரசபை அதிகாரிகளுக்கும், இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்த பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவின மதிப்பீட்டைக் குறைக்குமாறு இந்திய தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்திடம் சிறிலங்கா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் செலவினத்தை சிறிலங்கா மின்சாரசபையே பொறுப்பேற்க வேண்டியுள்ளதால், குறைந்தளவு நிலக்க…
-
- 0 replies
- 437 views
-
-
ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் - இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள் [sunday, 2012-12-09 11:09:58] கடந்த சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரில் புகுந்து 25க்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. மாவீரர் நாள் கடைப்பிடிக்க முயற்சித்தார்…
-
- 0 replies
- 365 views
-
-
மன்னாரில் நேற்று குண்டு வெடிப்பு காவல்துறையினன் உள்ளிட்ட மூவர் காயம்! டிச 9, 2012 மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் 16ஆம் கட்டைப் பகுதியில் நேற்று குண்டு வெடித்துள்ளது இதில் இரண்டு பொதுமக்களும் ஒரு காவல்துறையினரும் காயமடைந்துள்ளார்கள். யாமடைந்தவர்கள் தற்போது மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் வெடிபொருளைச் சோதிக்க முயன்ற போது அது தவறுதலாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. முருங்கனைச் சேர்ந்த தாரணிபாணி பவானந்தன் (வயது42) மாரிமுத்து காளி முத்து (வயது53) ஆகியோரும் முருங்கன் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த டி.எஸ்.பண்டார (வயது41) என்பவரும் சம்பவத்தில் காயமடைந்தனர்.காயமடைந்த மூவரும் முருங்கன் வைத…
-
- 0 replies
- 517 views
-
-
புதுக்கடை புலியும் யாழ்ப்பாணப் புலியும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய:- 09 டிசம்பர் 2012 நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டித்த மாவீரர் தினம் வடக்கில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சிவில் சவாலாகும் .. புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் அழைத்து வரப்பட்ட ராஜபக்ஷ கோஷகாரர்களின் கைகளில் அருமையான வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகள் இருந்தன. அதுதான் நாட்டை பிளவுப்படுத்தும் நீதிமன்றம் எமக்கு வேண்டாம் என்ற வாசகமாகும். இந்த ஆர்ப்பாட்டம் ராஜபக்ஷவின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் பிரதம நீதியரசருக்கு எதிராகவும் என்பதால், இந்த வாசகத்தின் மூலம் பிரதம நீதியரசர் நாட்டை பிளவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். இந்த வாசகங்கள் அடங்கிய பல …
-
- 0 replies
- 408 views
-
-
பிரான்ஸ் நாட்டின் இலங்கை தூதுவரின் சர்ச்சைக்குரிய கடைசி பேச்சு தயான் ஜெயதிலக்கா பிரான்சில் உள்ள இலங்கைக்கான தூதுவர். இவரின் பதவி அடுத்த மாதத்துடன் முடிகின்றது. அவர் தனது பேச்சில், " எனது பாரியாரும் நானும் இலங்கை நாட்டை பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். இது ஒரு மதிப்பிற்குரிய வேலை.நாங்கள் வெளிப்படையாக சிறுபான்மை மக்கள், மொழி; மதம்; இனம், பாகுபாடு காட்டும் எமது சமூகத்தினரை எதிர்க்கின்றோம். இப்படியான ஒரு இலங்கை அல்ல உண்மையான இலங்கை. நான் இன்று பிரதிநித்துவப்படுத்தும் நாடு தனது விம்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அளவுக்கதிமாக அக்கறையாக உள்ளது. யாராவது இவ்வாறு செயல்பட்டு இருப்பின் அது பிரான்ஸ் மக்களுக்கும் அரசிற்கும் சொல்லப்பட்ட தவறான செய்தியாகு…
-
- 1 reply
- 592 views
-
-
By Kavinthan Shanmugarajah 2012-12-08 14:40:05 சுற்றுலாப்பயணிகள் விசா இன்றி பீஜிங் நகரில் தங்கும் சலுகையை அறிவித்துள்ளது சீனா. சுற்றுலா மூலமான வருவாயைஅதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விசா இன்றி பீஜிங் நகரில் தங்கலாம் என அறிவித்துள்ளது. இதன்படி சீனா வழியாக செல்பவர்கள் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கலாம் எனவும் அவர்களுக்கு விசா தேவை இல்லையெனவும் சீனா அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் அடுத்து செல்ல வேண்டிய நாட்டுக்கான விமான டிக்கெட்டை இதற்கென காண்பிக்க வேண்டும் என்பதுடன் அடுத்த 72 மணி நேரத்துக்குள் அவர்கள் சீனாவை விட்டு வெளியேறி விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீஜிங்கில் இருந்து வேறு எந்த சீனாவ…
-
- 1 reply
- 854 views
-
-
By Lambert 2012-12-08 17:04:33 மன்னார் பிரதேச நிள அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது. மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த மன்னார் பிரதேச நிள அளவை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு முன்பாக உள்ள தனியார் ஒருவருடைய வீட்டில் அந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தங்கியுள்ளனர். குறித்த வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சக ஊழியர்கள் விடுமுறைக்காக தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர் . ஆனால் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32)என்ற இளைஞரும் மேலும் சில ஊழியர்களும் குறித்த வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்…
-
- 1 reply
- 463 views
-
-
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தமிழினத் துரோக கும்பலான ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நெடுந்தீவுக்கு ஜ.சி.ஆர்.சி யினால் சுமார் 140 வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வீடுகள் எவையும் உண்மையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. அவை அனைத்தும் தமிழினத் துரோக கும்பலான ஈ.பி.டி.பி யினரால் முழுமையாக தமக்குள்ளேயே பகிரப்பட்டிருக்கின்றது. குறிப்பாக தமிழினத் துரோக கும்பலான ஈ.பி.டி.பி யினரின் ஆட்சியிலிருக்கும் பிரதேச சபை உறுப்பினர்க…
-
- 1 reply
- 792 views
-
-
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மதுரையில் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் தமிழர்கள், தங்கள் முன்னோர்களின் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவற்றின் அடிப்படையைக் கற்பிக…
-
- 0 replies
- 650 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் புலிக்கொடியை பறக்கவிட்ட நபர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாகவும் அப்பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரே வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை பறக்கவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதியே தனியார் தொலைத்தொடர்பு நிலையக் கோபுரத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 618 views
-
-
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கை பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்களை தாக்கும் நோக்கில் மேர்வின் சில்வா சபைக்கு நடுவே ஓடினார். இதன்போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. விரைந்து செயற்பட்ட படைக்கல சேவிதர்கள் அவரை எதிரணியின் பக்கமாக செல்லவிடாமல் தடுத்தனர். தெரிவுக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க மற்றும் விஜித்த ஹேரத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டபோதே இந்த கூச்…
-
- 0 replies
- 490 views
-
-
சிறிலங்கா அரசின் பயங்கரவாத (விசாரணைப்) பிரிவு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு 18 வயது இளைஞனையும், மற்றொரு 24 வயது இளைஞனையும் கடத்திச் சென்றுள்ளது. இந்த இருவரில் 24 வயதுடையவர் முந்நாள் புலி உறுப்பினர். இருவரும் குறிப்பிட்ட பிரிவினரின் விசாரணையில் உள்ளனர். அதே வேளை கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை யாழ் பல்கலை மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரிவின் இந்த நடவடிக்கையானது மாணவர்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாத செயல்பாடுகளின் முழுவீச்சே என்று கருதப்படுகிறது. கடத்தப்பட்ட இருவரின் பெற்றோரும் சிறிலங்கா மனித உரிமைக் கமிசனில் புகாரளித்திருக்கின்றனர். கடத்தப்பட்ட இருவரைப் பற்றி பயங்கரவாத பிரிவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழை…
-
- 3 replies
- 643 views
-
-
பிரதம நீதியரசர் வெளிநடப்பு மக்கள் ஆணைக்கு எதிரான செயல்: ஜனாதிபதி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தமை பாராளுமன்ற கௌரவம், மக்கள் ஆணை, மற்றும் இறையாண்மைக்கு எதிரான செயாகுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவுக்குழு மீது நம்பிக்கை வைத்து அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று அலரிமாளிகைக்கு அராசங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் திடீரென அழைத்து அவசர சந்திப்பொன்றை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இதன்போதே மேற்கொண்டவாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள…
-
- 2 replies
- 442 views
-
-
வடபகுதியிலிருந்து படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமேன்றோ விலக்கிக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும். அந்த வரையறைகளை அவர்கள் மீறி நடக்கக்கூடாது. இதற்காக வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என நான் ஒருபோதும் கூறியதில்லை. இருப்பவர்கள் அவர்களின் நிலையுணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தமிழ் மக்களை அங்குள்ள இராணுவம் அடக்கி ஆள்வதை, தாம் இந்த நாட்டில் சமமான பிரஜைகள் அல்ல என நினைக்க செய்வதை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் சுயமரியாத…
-
- 17 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதப் புலனாய்வுப் காவல்துறையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சிறிலங்கா அரசுத்தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அரசியல் பிரச்சினைகளை அதிகாரகரம் கொண்டு நசுக்க படைஅதிகாரிகள் முனைகிறார்கள் என்றும், பொய்யான காரணங்களைக் காட்டி ஆட்களைக் கைதுசெய்கின்றனர் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இக்கடித்தத்தில் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களின் உணர்வுரீதியான தலைமையகமாக விளங்கும் யாழ்ப்பாணத்திலே அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று முறையிடுவதாக யாழ். பல்கலைக்கிழக ஆசிரியர்கள் 125 கைய…
-
- 0 replies
- 848 views
-
-
இன்னும் ஈழத்தை அழிப்பது ஏன்? தீபச்செல்வன் இன்றைய ஈழத்தைப் பொறுத்தவரை நாங்கள் எப்படியான அடக்குமுறையில் வாழ்கிறோம்? முடியாத நிலைமையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தத் தருணத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பலரும் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விமர்சிக்கிறார்கள் என்பதை வைத்தே ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு விடுதலைப் புலிகளை நிராகரிப்பதன்மூலம் ஈழத்தையும் அதற்கான போராட்டத்தையும் பலர் நிராகரிக்கிறார்கள். இதுவே இத்தனையாண்டு விடுதலைக்காக மிகப் பெரும் போராட்டத்தை நடத்திய இனத்தையும் ஈழத்தையும் அழிக்கும் அரசியலைச் செய்கிறது. …
-
- 1 reply
- 543 views
-
-
யாழ் பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்து யேர்மனியில் இளையோர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மனுக்கையளித்தலும். [saturday, 2012-12-08 10:02:37] யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றுக்கு முன்பாக இன்று யேர்மனியில் உள்ள இளையோர்களால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது. இன்று காலை பத்துமணியளவில் யேர்மனிய இளையேர் அமைப்பும் மக்களவையும் இணைந்து டுசில்டோர்ப்பில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் வெளிவிவகார அரசியலுக்கு பொறுப்பான அதிகாரியிடம் மனுவொன்றைக் கையளித்தனர். அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது சம்பந்தமாகவும் அவர்களின் விடுதலைக்கு இலங்கை அரசிற்கு அனைத்துலக அழுத்த…
-
- 1 reply
- 276 views
-
-
யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்படவில்லை என ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளது நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்…
-
- 0 replies
- 447 views
-
-
ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் 180 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா, சீனா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இந்த தடை நீடிப்பு விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான தடையுத்தரவினை புதுப்பிக்கும் நடவடிக்கையில் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஜப்பான் உள்ளிட்ட 10…
-
- 0 replies
- 242 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர். 2006 முதல் 2008 வரையான காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வகை தொகையற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பல இளைஞர்கள் யுவதிகள் தமது உயிரை காத்துக்கொள்ள இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்திருந்தனர். அத்தகைய சூழல் திரும்பியிருப்பதான மனோ நிலை யாழில் திரும்பியுள்ளமையே இச்சரணடைதல் மூலம் வெளிப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலக இணைப்பதிகாரி கனகராஜ் இவ்வாறு…
-
- 0 replies
- 375 views
-