Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 31 Oct, 2025 | 06:35 PM வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாக…

  2. 31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறத…

  3. 31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப ந…

  4. Published By: Digital Desk 3 31 Oct, 2025 | 11:42 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதனை அடுத்…

  5. 31 Oct, 2025 | 04:03 PM தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்…

  6. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…

  7. இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு! இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது. புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். எனவே பயணிகள் அக்டோபர் 15 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ht…

  8. 31 Oct, 2025 | 03:36 PM “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர…

  9. Published By: Priyatharshan 31 Oct, 2025 | 03:52 PM ( வீ.பிரியதர்சன் ) வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நட…

  10. யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்க…

  11. யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது வெள்ளி, 31 அக்டோபர் 2025 05:05 AM யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒர…

  12. பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,…

  13. கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மா…

  14. மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்…

  15. இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை 31 Oct, 2025 | 11:01 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அ…

  16. தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாத…

  17. யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது! adminOctober 31, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள் , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/…

  18. 2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது! இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும். மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக…

  19. இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல். ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் இந்தக் கோரிக்கையை…

  20. நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை! பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது. அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர…

  21. 30 Oct, 2025 | 05:06 PM போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும். https://www.virakesari.lk/article/229074

  22. யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு! இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக,…

    • 1 reply
    • 170 views
  23. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம். அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும்…

  24. இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

  25. 30 Oct, 2025 | 05:10 PM இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.