Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்கும் சிங்களவர்களுக்கு பரிசில்கள்! [Wednesday, 2012-12-05 10:58:56] இலங்கையில் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட உள்ளதாக பிரான்ஸ் மஹாநாயக்கர் பரவாஹர சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார். சிங்களக் குடும்பங்களில் பிள்ளைகளை பெற்றெடுக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்கும் சகல குடும்பங்களுக்கும் நிதி உதவிகளை வழங்கப்படும். சிங்களக் குடும்பங்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்காத காரணத்தினால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இதன் மூலம் பௌத்த பிக்குகளை உருவாக்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிங்களக் குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாத காரணத்தின…

  2. தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார் அமைச்சரின் தம்பி தாயனந்தா. தீவக மக்களின் வாக்குகளோடு யாழ். மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக இன்று வரை விளங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பியான தயானந்தாவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்ட வ…

  3. சீனாவுக்காக வளையும் சிறிலங்காவின் சட்டங்கள் – சீனர்கள் கைதானாலும் உடனடி விடுதலை சிறீலங்கா | ADMIN | DECEMBER 5, 2012 AT 09:05 சிறிலங்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்களை கைதுசெய்வதற்காக நடத்தப்பட்ட தேடுதல்களின்போது. கைது செய்யப்பட்ட 20 சீனர்களும், சீனத் தூதரகத்தின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டவர்களைக் குறிவைத்து சிறிலங்கா காவல்துறை கொழும்பில் இந்த தேடுதலை மேற்கொண்டது. இதன்போது உரிய ஆவணங்கள் இன்றி, காலாவதியான நுழைவிசைவுடன் இருந்த 20 சீனர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்க்ள கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனர்கள் மட்டும் நேற்றுக்காலைக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர். சம்பவத்தைக் கேள்வியுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா காவ…

  4. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோ~மிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். “வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற கோ~ங்களை எழுப்பினர். http://www.virakesari.lk/article/local.php?vid=1963

    • 0 replies
    • 664 views
  5. பூந்தமல்லி சிறப்பு முகாமில் பட்டினிப் போராட்டம் நடத்தும் பகீரதன் மயக்கம்: - தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? [Wednesday, 2012-12-05 11:16:10] வழக்கு விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் பகீரதன் சிகிச்சை எதுவும் இன்றி மயங்கிய நிலையில் இருக்கிறார். இவர் கடந்த 5.3.2007 இலங்கைக்கு பொருட்கள் கடத்தியவர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 8 மாதம் திருச்சி சிறையில் இருந்தார். பிணையில் வெளிவந்த இவரை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவினர் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இவர் உட்பட பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி 2.2.2…

  6. இலங்கையில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட கூடாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பெற்ரிக் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் சுதந்திரமான ஒன்றுகூடல் போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும். நவம்பர் மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை, தேடுதல் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் தேடப்பட்டு விசாரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்திற்கு தடையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்பட்டமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்…

    • 0 replies
    • 321 views
  7. சட்டத்தின் ஆட்சி மற்றும் தனியாள் சுதந்திரம் ஆகியன தொடர்பான விடயங்களில் அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விசனமுற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு மற்றும் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவராலயங்களின் தலைமை அதிகாரிகளின் உடன்பாட்டுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதுடன் வெலிக்கடை சிறைச்சாலை இடம்பெற்ற பெருமளவான மரணங்களை விரைவாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவித தடையுமின்றி மாணவர்கள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக சகல பிரஜைகளும் தமது அட…

  8. அரசாங்கத்துடன் ரெலோ கட்சி தனியாக பேச்சுவார்த்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தனித்து பேச்சுவார்த்தை நடாத்த ரெலோ தீர்மானித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற ரொலோ பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, ரெலோ ஏற்றுக்கொள்ளவில்லை. ரெலோ கட்சி தொடர்ந்தும் ஈழக்கோரிக்கையை கைவிடவில்லை என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=71412&category=TamilNews&language=tamil

  9. சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த முயற்சி மீண்டுமொருமுறை தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியாக சிறீலங்கா தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருவதை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வொசிங்டனில் உ…

    • 4 replies
    • 911 views
  10. மத்தியகிழக்கிற்கு செல்ல கொழும்பில் தங்கியிருந்த முன்னாள் போராளி சிவசம்பு பிரசாத் காணாமல் போயுள்ளாளர் 04 டிசம்பர் 2012 வெளிநாடு செல்வதற்கென கொழும்பில் தங்கியிருந்த முன்னாள் போராளியொருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முன்னாள் போராளி மிக அண்மையிலேயே புனர்வாழ்வு நிலையமொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வல்வெட்டித்துறை பகுதினை சேர்ந்த குறித்த முன்னாள் போராளியான 24 வயதுடைய சிவசம்பு பிரசாத என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த சனிக்கிழமை அரேபிய நாடொன்றிற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு அவர் சென்றிருந்ததாக சகோதரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மிக அண்மைக்காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்…

  11. மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் பிசுபிசுத்தது ஏன்? – விபரிக்கிறது கொழும்பு ஆங்கில ஊடகம். சிறீலங்கா | ADMIN | DECEMBER 5, 2012 AT 10:17 போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் மலேசிய அரசாங்கம் வலியுறுத்தத் திட்டமிட்டிருந்ததாலும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெறத்தொடங்கியதாலும் தான், மலேசியப் பயணத்தை அவர் கைவிட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜொகோர் பாருவில் நேற்று ஆரம்பமான இஸ்லாமிய பொருளாதார மன்றக் கூட்டத்தில், ‘மாற்றடையும் போக்குகளும் புதிய வாய்ப்புகளும்‘ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசிய செல்லத் திட்டமிட்டிருந்தார். ஐ.நா மனிதஉரிம…

  12. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - AI 05 டிசம்பர் 2012 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த 1ம் திகதி நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுக்ளக் சுமத்தப்பட்டுள்…

  13. [size=4]இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.[/size] [size=4]இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[…

  14. டொரொன்டோவிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் நடந்த விடயம் இன்று காலை நான் எனது உறவினருடைய ஓய்வூதியம் சம்பந்தமாக அவருடன் அங்கு சென்றிருந்தேன்.அங்கு ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர்(கனடியர்) அவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் அங்கு தான் உள்ளார்.அவரிடம் சென்று எமது தேவைகளை சொன்னோம். எங்களை அமரும்படி கூறிவிட்டு ஒரு அதிகாரி வந்தார்.அவரிடம் எங்களை அறிமுகம் செய்துவைத்தார்.அவர் உடனேயே உள்புறமாகவிருந்த அறையினுள் அழைத்து சென்று எங்களுடைய விண்ணப்பங்களையெல்லாம் சரி பார்த்துவிட்டு பெற்றுகொண்டதற்கான அத்தாட்சி கடிதம் பெறும்வரை பொறுத்திருக்குமாறு கூறினார். நாமும் அங்கிருந்த கதிரையில் அமர்ந்திருந்தோம்.அந்த அதிகாரி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.வடிவாகத்தமிழ் பேசக்கூடியவர்,…

  15. எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உணர்வுகளை ஜனநாயக ரீதியில் தமது வளாகத்துக்குள் வெளிக்காட்ட முன்வந்தனர். இதனைத் தடுத்த இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக உள்ளே புகுந்து பல்கலைக்கழக மாணர்களைத் தாக்கினர். இராணுவம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை. இவர்கள் அழ…

    • 0 replies
    • 355 views
  16. எங்களை அடித்து உதைத்தால் எதிர்த்துக் கேட்பதற்கு எவருமில்லையென்று சிங்களவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடித்து நொருக்குவது போல புலம்பெயர் தமிழ் மக்களான எமது உறவுகள் எமக்காகக் குரல்கொடுப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது. இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எங்களைத் தாக்கிய சிங்களவர்களை கண்டித்து நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எமது விடுதலையை வென்றெடுப்பதற்குரிய ஆணித்தரமான போராட்டங்களாக அமைய வேண்டுமென்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தாக்கப்பட்டமைக்கு சர்வதேசம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் இளையோரும் கொதித்தெழுந்துள்ளமை தங்களுக்கு மேலும் மேலும் வீரியத்தைத் தந்துள்ளதாகவும் தங்களுக்காக சர்வதேசம் பூராகவும் கண்டனப் போராட்டங்க…

  17. யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டம் பதற்றம் அதிகரித்து வருவதன் அறிகுறி – ஏஎவ்பி [ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 01:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், நூற்றுக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டத்தை நடத்தியுள்ளது, பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா அரசுக்கும் எதிராக யாழ் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ளூர் அரசியல்வாதிகள் நேற்று போராட்டத்தை நடத்தியுள்ளனர். இது 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசுக்கு எதிராக இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  18. நிலத்திலும் புலத்திலும் உரிமைக்கான போராட்டம் - யேர்மனியில் வெளிவிவகார அமைச்சு முன்றலில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து யேர்மனியின் வெளிவிவகார அமைச்சு முன்றலில் இன்று கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது . சிங்கள பயங்கரவாத அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்பு தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருப்பதற்கான சாட்சியாக மாணவர்கள் மீதான இத் தாக்குதல் அமைக்கின்றது .அதை தொடர்ந்து மண்ணுக்காய் மரணித்த மாவீரகளுக்கு தமது வணக்கத்தை செலுத்தும் முகமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான ஓங்கி ஒலிக்கும் குரலாக இந்த கண்டன கவனயீர்ப்பு அமைந்திருந்தது . இக் கண்டன கவனயீர்ப…

    • 0 replies
    • 538 views
  19. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இலங்கை சிங்களப் பேரினவாத அரசின் வன்முறைத் தாக்குதலை பன்னாட்டுச் சமூகங்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டுமென நோர்வே தமிழ் இளையோர் நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை வரலாற்றில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத முனைப்புப் பெற்றதற்கான முதன்மைக் காரணிகளில் ஒன்று மாணவர் மீதான அடக்குமுறையும் அவர் கல்வி மீதான புறக்கணிப்புமே ஆகும். இலங்கையில் போர் முடிவடைந்ததாகவும் பொருளாதார நிலையில் இலங்கை முன்னேறி வருவதாகவும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் புனர்நிர்மாணம் மீள் குடியேற்றம் மற்றும் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள், வயோதிபர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகவும் இயல்பு வாழ்வுக்குள் மக்கள் திரும்பி உள்ளதாகவும் கூறி உல…

    • 0 replies
    • 307 views
  20. இலங்கையில் அரசுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரச தரப்புக்கு ஆதரவாகவும், நீதித்துறையில் அரசின் தலையீட்டை எதிர்த்து தலைமை நீதிபதிக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் இன்று-செவ்வாய்கிழமை(4.12.12) கொழும்பில் நடைபெற்றன. தம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து வரும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னர் தலைமை நீதிபதி இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார். அடுத்த விசாரணை இம்மாதம் நாளை மறுதினம்(6.12.12) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று கூறி, அவர் மீது அரச தரப்பு 14 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. தன்மீதான குற்றச்சாட…

  21. பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை ஒரு முக்கியமான விஷயம், ஆனால் அதை பக்கசார்பற்ற முறையில் கையாளக் கூடிய ஒழுங்குகள் தற்போது நாட்டில் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஷிராணி பண்டாரநாயக்க மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் இடையே இவ்விதமான ஒரு சச்சரவு, ஒரு மோதல், ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்ட…

    • 0 replies
    • 357 views
  22. கனடா நாட்டு அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்த இக்குழுவினர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து குடாநாட்டு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். குடாநாட்டின் போருக்குப் பின்னரான தற்போதைய நிலைமையை அரசாங்க அதிபர் பிரிவு ரீதியாக 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக புள்ளிவிபரங்களுடன் விளக்கமளித்தார். மீள்குடியேற்றம் விவசாயம், மீன்பிடி மற்றும் வீதி அபிவிருத்திகள் போன்ற பல்வேறுதுறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய நாட்டுத் தூதுவரின் முதலாவது செயலாளர் எஸ்தர் வனஸ் மற்றும் அதிகாரி மேகன் பாஸ்ரர் ஆகியோர் …

  23. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலின் பின்னர் மாணவர் ஒன்றியச் செயலாளர் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரி குடாநாட்டில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தை பொது அமைப்புகளும் தெற்கைச் சேர்ந்த கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ளன. யாழ்.நகரில், பஸ் நிலையம் முன்பாக, முற்பகல் 11 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இன்று நடைபெற…

  24. பிரதம நீதியரசருக்கு எதிராக கூச்சலிடவும் கோசங்களை எழுப்பவும் போதைப்பொருள் கஞ்சாவுக்கு அடிமையானவர்களே அழைத்து வரப்பட்டனர் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. இவ்வாறு வருகைத்தந்தவர்களுக்கு ரூபா 500 ரூபா வீதம் வழங்கப்படுவதை பாருங்கள் என கூறி சபையில் ஒரு புகைப்படத்தையும் காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய உரிமை இன்று பாரிய பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சர் பொது பல சேன என்ற அமைப்பிற்கு அடிப்பணிந்துள்ளார். பௌத்த தேரர்கள் இன்று வீதியில் இறங்கி அமைச…

    • 0 replies
    • 493 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.