Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2036ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தும் காரணியாக முதுமை அமைந்திருக்குமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இக்கால கட்டத்தில் சுமார் 100 வயது வந்தவர்களில் 61 பேர் பிறரில் தங்கியிருப்பவராக காணப்படுவர் என அறிவித்துள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 22 வீதத்துக்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாக காணப்படுவர் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள், விதிமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில், பெருமளவான குடும்ப அங்கத்தவர்களை பராமரிப்பதற்கான பொறுப்பை குறித்த ஒரு நபர் அல்லது இருவர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது குடும்ப சூழ்நிலைக்கும், அரசுக்கும் பெரும் நெருக்கடியாக அமையும் என உலக வங்கி அ…

    • 0 replies
    • 356 views
  2. விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட சிறிலங்காவுக்கு இடம்கொடுக்கக்கூடாது என தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்பைச் சேர்ந்த சுஜன் செல்வன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கோடைகால கிரிக்கற் சுற்றுலா வந்துள்ள சிறிலங்கா கிரிக்கற் அணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் சுஜன் குறிப்பிட்டார். இம்முறை சிட்னியில் நடக்க இருக்கின்ற கிரிக்கற் போட்டிகளில் சிறிலங்கா ஆதரவாளர்களுக்கு தனிப் பகுதி ஒதுக்குவதுபோல் அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவான தமிழர்களுக்கும் தனிப் பகுதி …

    • 2 replies
    • 733 views
  3. கைதான மாணவர்களை உடன் விடுதலை செய்க; கருணாநிதி கோரிக்கை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவர்களின் விடுதலையினையும் வலியுறுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இந்திய மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களில் சிலரை கைது செய்துள்ளனர் அதற்கு தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சியினர்…

    • 6 replies
    • 669 views
  4. யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க புலம்பெயர் தேசங்களில் அணிதிரள்வோம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறைகூவல். [Monday, 2012-12-03 20:06:33] யாழ். பல்கலைக்கழக சமூக்தின் மீது சிங்களப் பேரினாவாதத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சாத்வீக வழியிலான எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு நா.க.த.அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. இவ்வேளை புலம்பெயர் நாடுகளிலும…

  5. ஈழத்தமிழகம் அமையாதது ஏ‌ன்? ‌விள‌க்கு‌ம் கருணாநி திங்கள், 3 டிசம்பர் 2012( 11:09 IST ) ''தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததால் ஈழத் தமிழகம் அமையவில்லை'' என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில், இளமை காலத்தில் நானும், வீரமணியும் பெரியாரின் கொள்கைகளை பரப்ப தமிழகம் முழுவதும் பகல் இரவு பார்க்காமல் நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது. திராவிட கழகத்தில் சின்னஞ்சிறு பிள்ளையாக வீரமணி இணைந்த போது, ஒரு திருஞானசம்பந்தர் கிடைத்திருக்கிறார் என்று அண்ணா அறிவித்தார். பெரியாருக்கு பின்னர் அவரது சொத்துகளையும், கொள்கைகளையும் வீரமணி சிறப்பாக பாதுகாத்து வருகிறார். இந்த செயலை என்னால் கூட செய்ய…

  6. குடாநாட்டிலுள்ள 179 இடங்களை படைக்கு தாரைவார்க்கும் டக்ளஸ்; இரகசியமாக நடந்தது நேற்றுக் கூட்டம் யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. க…

    • 19 replies
    • 870 views
  7. இலங்கையின் முகத்திரை கிழிகிறது! உண்மைகள் தொடர்கிறது! - வரவேற்கும் கனடிய தமிழர் பேரவை முன்னாள் இலங்கை ராணுவ வீரரின் இறுதிப் போர் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் இலங்கையின் முகத்திரையை கிழித்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடூர வன்முறை குறித்தான அவர் கூறியுள்ள உண்மைகளை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து தொடர்ந்து உண்மைத் தகவல்கள்வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. போரின் போது இலங்கையில் நடந்த அட்டூழியங்களைக் குறித்து ஐநாவின் உள் அமைப்பு செய்த விசாரணையில் இலங்கை போர்க்குற்றங்களை அங்கிருந்த ஐநா பிரதிநிதிகள் தடுக்கத் தவறியிருக்கிறார்கள் என்று சென்ற மாதம் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை கூறியது. தற்போது இந்த ராணுவ அ…

    • 0 replies
    • 961 views
  8. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் தாம் நேரடியாக பேசப்போவதாகவும் ரெலோ அமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ரெலோவின் பொதுச் சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேராமல் தாம் தனியாக மகிந்த ராசபக்ச அரசுடன் பேசப்போவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெலோ இயக்கம் எதிர்வரும் ஜனவரி 27ஆம் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கட்சி மகாநாடு ஒன்றை நடத்த உள்ளதாகவும், அக்கூட்டத்தில் ம…

    • 9 replies
    • 949 views
  9. யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 டிசம்பர், 2012 - 10:57 ஜிஎம்டி சில தினங்களுக்கு முன்னதாக மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் எவரும் இன்று சமூமகளிக்காததனால், பல்க்லைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியிருப்பதாகப் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்கள மாணவர்களும் முன்னதாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, பல்கலைக்கழக சூழலில் பிரசன்னமாகியிருக்கின்ற படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டு, …

  10. ரோசியின் பேரழகு என்னை மயக்குகிறது. அதனால் அவரால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு வார்த்தைகள் தடுமாறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்;கையிலேயே அமைச்சர் வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார். 'இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கின்றேன். ஏனெனில் எனது 19 வருட அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பேரழகி என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அந்தப் பேரழகிக்கு பதில் அளிக்க நான் கொடுத்து வைத்தவனாக இருக்கின்;றேன். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதில் அளிக்கப் போவதில்லை…

    • 7 replies
    • 4.2k views
  11. யாழ். பல்கலை மாணவர்களை விடுதலை செய்வது குறித்து, பொலிஸ்மா அதிபருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி! [Monday, 2012-12-03 17:34:54] யாழ். பல்கலைக்கழக சமுகத்திற்கும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்புக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பது மற்றும் பல்கலைக்கழகத்தை இயல்பு நிலைக்குத் திருப்புவது தொடர்பில் இன்று காலை காங்கேசன்துறையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது. எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், பல்கலைக்கழக சுற்றாடலில் போடப்ப…

  12. நாளைய தினம் ஒருமணி நேரப் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளுமாறு, வடக்கு - கிழக்கு மக்களுக்கு கூட்டமைப்பு அழைப்பு. [Monday, 2012-12-03 21:10:31] கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாளை நடத்தவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது. நாளை பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில் வடக்கு - கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களும் தமது பணிகளைத் தத்தம் இடங்களிலேயே இடைநிறுத்தி இன்றைய சாத்வீகப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இளைஞர் அணி கேட்டுக்கொள்கிறது. …

  13. பேச்சுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு மகிந்த அவசர அழைப்பு! நாளைய தினம் சந்திப்பு? திங்கட்கிழமை, 03 டிசம்பர் 2012 05:43 பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவசர அழைப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. நாளைய தினம் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் ஆறு பேர் கொண்ட பிரதிநிதிகள் இதில் பங்குகொள்வார்கள் எனவும் தெரிகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்…

  14. மக்கள் எம்மோடு இருக்கும் வரை, சர்வதேசத்தின் சூழ்ச்சிகள் மூலம் அரசை ஒருபோதும் அசைக்க முடியாது: ஜனாதிபதி [Monday, 2012-12-03 09:39:31] மக்கள் எம்மோடு இருக்கும் வரை சர்வதேச மட்டத்திலான எத்தகைய சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நேற்றுக் கண்டியில் தெரிவித்தார். என்னையும், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாயவையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சில அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், தேசிய ரீதியில் சில சக்திகளும் டொலருக்கு சோரம்போய் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரென்றும் ஜனாதிபதி கூறினார். நேற்று கண்டி குண்டசாலையில், நெடுஞ்…

    • 2 replies
    • 286 views
  15. பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தமையும், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் நாளை யாழ். பல்நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாத்வீக ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று தெரிவித்தனர். இவ்விடயம் குறித்து இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மகஜர் ஒன்றினையும் துணைவேந்தருக்கு கையளித்துள்ளதாக அவர்கள் கூறினர். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றியுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் காவலரண்களை அகற்றுவதற்கும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்வதற்…

  16. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை இளைய சமூதாயத்தின் ஜனநாயக சிந்தனையை அடக்கும் செயல் எனவும் இவற்றை வண்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, ஒன்றியத்தின் செயலாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமாகிய பரமலிங்கம் தர்சானந் மற்றும் ஏனைய மாணவர்களினதும் கைதானது இளைய சமூதாயத்தின் ஜனநாயக சிந்தனையை அடக்கும் செயல். மூன்று தசாப்தத்திற்கு மேல் இந்த நாட்டிலே பயங்கரவாதம் எனும் பெயரில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகளும், எண்ணற்ற உயிரிழப்புக்களும், ஜனநாயக விரோதங்களும் வரைய…

    • 0 replies
    • 449 views
  17. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, இனவாதத்தை தூண்டும் செயலாக உருவெடுக்கும் என சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரட்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். பல்கலைக் கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் சில குழுக்கள் செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.hirunews.lk/tamil/48738

    • 0 replies
    • 511 views
  18. புல்மோட்டை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது By Hafeez 2012-12-03 18:14:22 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் புல்மோட்கை;கு அண்மித்த பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=1929

  19. 2040இல் பௌத்தர்களின் எண்ணிக்கை 40 வீதமாக குறையும் என்கிறார் தவுல்தெனே ஞானிஸ்சர தேரர் 03 டிசம்பர் 2012 போத்துகேயர்கள் இலங்கைக்கு வரும் போது, இலங்கையில் 98 வீதமான பௌத்தர்கள் இருந்தனர் எனவும் தற்போது, இந்த எண்ணிக்கை 60 வீதமாக குறைந்துள்ளது எனவும் 2040 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 40 வீதமாக குறையும் எனவும் அமரபுர மா பீடத்தின் தலைவர் தவுல்தெனே ஞானிஸ்சர தேரர் தெரிவித்துள்ளார். சிறிய குடும்பம் தங்கமானது என கூறிய முட்டாள் அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற டி.ஏ. ராஜபக்ஷவின் 45வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூறுவதால்…

  20. ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனியர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் ஞாயிறன்று மேற்குக்கரைக்கு திரும்பிய பாலஸ்தீனிய அதிபர் மஹமுட் அபாஸ், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் "ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்" என உற்சாகப் பெருமிதத்துடன் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 138-9 என்ற வாக்குகளின் அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நிலை [non-member state observer status] வழங்கப்பட்ட மூன்று நாட்களின் பின்னர், "ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் மிக வரலாற்று முக்கியத்துவம் மிக்க சாதனை ஒன்றை அடைந்துள்ளது" என மேலும் அபாஸ் தனது மக்களிடம் தெரிவித்தார். "பாலஸ்தீனம் என்கின்ற தேசம் அங்கீகரிக்கப்பட வே…

  21. கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகவும்,மாணவர்களது உரிமைகளில் இராணுவம் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்துவதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார். இதன்போது ஆசியாவின் ஆச்சரியம் என்பது அடக்குமுறை தானா? அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களை தாக்கியதேன்?, மாணவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதே?, மாணவிகளின் விடுதிகளுக்கு இராணுவம் வேண்டாம் என்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  22. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங் கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், விவசாயத்துறை பீடாதிபதி பேராசிரியர் கு. மிகுந்தன், தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் அடங்கிய குழுவினர் நேற்று வவுனியாவுக்குச் சென்று சந்தித்து உரையாடினர். இச்சந்திப்பின் போது குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் உடனிருந்தனர். கடந்த நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தில் யாழ் பல்கலைக் கழகத்தில் தீபம் ஏற்றியமை மற்றும் மாவீரர் தினச் சுவர் ஒட்டிகள் ஒட்டப் பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக விடுதிக்குள் படையினர் சென்றதை ய…

    • 0 replies
    • 361 views
  23. யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரியும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் இராணுவ தலையீட்டை நிறுத்தக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'எமது நண்பர்களை விடுவியுங்கள்" என்று கோரிக்கை விடும் வகையிலான கோசங்களை எழுப்பிய மாணவர்கள் மூன்று மொழிகளிலும் பதாகைகளை ஏந்தி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=1925

  24. ஈழத்தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான நகல் இன்று இங்கிலாந்து துணைத் தூதரிடம் கையளிக்கப்பட்டது. இங்கிலாந்து துணைத் தூதரான மைக் நித் வ்ரினாகிஸ் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது டெசோ மாநாட்டு தீர்மானங்களை மைக் நித் வ்ரினாகிஸிடம் கருணாநிதி வழங்கி ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பேசினார். ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கும் வகையில் இங்கிலாந்தில் நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுக்கு இந்த குழு பங்காற்றியது. http://www.onlineuthayan.c…

  25. வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணத்தை அபகரித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களுக்குச் செல்லும் இனம் தெரியாதவர்கள் தம்மை காப்புறுதி நிறுவனங்களின் முகவர்கள் என்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்றும் கூறி பணத்தைச் சூறையாடி வருகின்றனர். அவர்கள் பல்வேறு வகையான படிவங்களை பொதுமக்களிடம் வழங்குவதுடன் கட்டுப்பணம் என்ற பெயரில் பெருந்தொகையை அபகரித்துச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிளிநொச்சி வட்டக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.