ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். …
-
- 0 replies
- 207 views
-
-
10 APR, 2024 | 05:13 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகளை விமானங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப் பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்களை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வளாகத்தில் இன்று புதன்கிழமை (10) நடைபெற்றது. சுமார் 5 வருடங்களாக முக்கிய தேவையாக இருந்த பஸ்கள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் சீனாவின் சைனா இன்டர்நேஷனல் மரைன் கொள்கலன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி விமானப் பயணிகள் தங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இந்த பஸ்களில் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
10 APR, 2024 | 03:57 PM தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவ்வரு…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 APR, 2024 | 06:44 PM ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180935 நியாயம் இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை.
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 10 APR, 2024 | 03:50 PM யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப்படவில்லை இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை. கடந்த காலங்களில் ஜனாதி…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 02:06 PM தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். …
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 04:22 PM இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில் உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிசார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிசார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொ…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்களுக்க…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
10 APR, 2024 | 12:52 PM யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி, மன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான விசாரணைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180899
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த ஆண்டு 15,693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் நீர்ப்பாசன குளங்களின் முறைமைகளே இம்முறை கிளிநொச்சியிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/298632
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்” கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று பொது தமிழ் வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்து உரையாடபடுகிறது. இதன் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்புகளில் கவனமாக ஆராய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 2 replies
- 394 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 09:27 AM காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (09) காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். …
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க யானை சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதானியுமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற இருக்கும் தேர்த…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 05:33 PM (எம்.மனோசித்ரா) 'அனைவருக்கும் ஆங்கிலம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுகிறது. பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிதாக அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் இனி ரூ. 2.6 மில்லியன் செலுத்த வேண்டும். அதேபோல், சுயேச்சை வேட்பாளர்கள் ரூ. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 3.1 மில்லியன் செலுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து குறித்த சட்டவிதிகளை திருத்துவதற்கான பிரேரணையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/298613
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
09 APR, 2024 | 04:33 PM (எம்.மனோசித்ரா) அரசுக்கு உரித்தான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் குறித்த வங்கிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன. எனவே அவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய பல மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி …
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 APR, 2024 | 06:24 PM இந்திய மீனவர்களின் அத்து மீறிய தொழில் முறையால் நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 257 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாராலும் நடவடிக்கையில்லை கடற்தொழில் அமைச்சாலும் நடவடிக்கையில்லை இது தொடர்பில் அனைத்து துறைசார்ந்த தரப்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்தகைய நிலையில் புதன்கிழமை (10) நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த ஒருங்கிணைப்பு குழூ கூட்டத்திலாவது பாதிக்கப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க கடற்தொழில் அமைச்சர் நடவட…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
09 APR, 2024 | 04:41 PM 2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (10) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 24 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இது பொருந்தும். https://www.virakesari.lk/article/180837
-
-
- 3 replies
- 509 views
- 1 follower
-
-
நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் 779 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு குறித்த 779 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. https://tamilwin.com/article/many-prisoners-were-released-1712671291
-
-
- 4 replies
- 293 views
- 1 follower
-
-
போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்! இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அதன்படி சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் ஏனைய சேவைகள் என பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை நிவாரணம் வழங்கும் வேலைத…
-
- 0 replies
- 207 views
-
-
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 09:37 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும். புற்றுநோயைப் பொறுத்தவரையில் நிற மூர்த்தம் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் சமூகத்தில் வயதானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போது புற்றுநோயின் தாக்கம் வேகமாக உணரப்படும். யாழ்ப்பாணம் போதன…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்களுக்கு காசநோய் எப்படி பரவியது என தெரியாதாம்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறைசார்ந்த மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவனுக்கு காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய சில மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். குறித்த மாணவர்களுக்கும் கா…
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” ”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான். ஐக்கிய மக்கள் சக்தி…
-
- 0 replies
- 264 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் …
-
-
- 18 replies
- 1.5k views
-
-
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 10:23 AM மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார். பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக …
-
- 0 replies
- 296 views
- 1 follower
-