ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
Published By: VISHNU 07 JUN, 2024 | 02:08 AM இந்தியாவின் அயல்நாடான இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை தீர்த்துவைத்து சுயகொளரவத்துடன் வாழ பாரத பிரதமர் வழிசெய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிரு முருகன் பாரத பிரதமருக்கான வாழ்த்துரையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பாரத தேசத்தின் பிரதமராக மூன்றாவது தடவையாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் தங்களை வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகின்றேன். தாங்கள் ஆற்றுகின்ற உன்னதமான சேவைக்கு மக்கள் தந்த பரிசாகக் கருதுங்கள் இதேவேளை இந்தியாவின் அயல் நாடாகிய இலங்கையில் தமிழ் பேசும் …
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இதற்கு பாரத பிரதமர் துணை நிற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார். அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின்…
-
- 2 replies
- 427 views
- 1 follower
-
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் adminJune 5, 2024 எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு இன்றைய தினம் , யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு சதுக்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் , அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தம…
-
-
- 6 replies
- 813 views
-
-
06 JUN, 2024 | 06:53 PM (எம்.நியூட்டன்) இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு வெற்றிடம் நிலவுகிறது என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமார் தெரிவித்தார். செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இன்றைய சமுதாயத்தில் தலைமைத்துவத்துக்கு பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இந்த வெற்றிடம் அ…
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 04:52 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வேலைக்கு செல்வதற்காக இன்று வியாழக்கிழமை (06) காலை, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, உலவிக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் நபரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு, கோடரியினால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை கறுத்த துணியினால் மூடிக்கட்டி இருந்தனர் என த…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 JUN, 2024 | 07:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மின்சார சபையை 12 கூறுகளா…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
06 JUN, 2024 | 04:14 PM மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகளுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கியுள்ளனர். அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
06 JUN, 2024 | 01:19 PM கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக இளைஞர் ஒருவரிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரிடம் இருந்து 31 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும், இளைஞரை கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 01:26 PM இலங்கைக்காக ஐநாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார். வடக்குக்கு விசேட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐநா வதிவிடப் பிரதிநிதி இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் மர…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்…
-
- 2 replies
- 332 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2024 | 04:40 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று இவ் ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க நாட்டிற்கு எலோன் மஸ்க் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமாவார். இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் ஞாயிற்றுக்கிழமை எலோன் மஸ்க்கைச் சந்தித்துள்ளார். இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்த…
-
-
- 3 replies
- 370 views
- 1 follower
-
-
யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது ”இதுவரை காலமும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ”ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது குறித்தும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.…
-
- 0 replies
- 251 views
-
-
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட…
-
-
- 5 replies
- 650 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்க வேண்டும். அது தொடர்பில் இந்த சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து, இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும் இந்தியாவுக்கு ஐக்…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுகள் மற்றும் 40 திணைக்களங்களில் மாற்றம்! -ஆளுநரால் புதிய வர்த்தமானி வெளியீடு ! kugenJune 6, 2024 கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாற்றியமைத்துள்ளதுடன், அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார். ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் 8,031 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2695 வேலைத்திட்டங்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடத்தில் வலுவான வேலைத்திட்டங்…
-
- 0 replies
- 188 views
-
-
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863
-
-
- 21 replies
- 1.6k views
- 1 follower
-
-
கீரிமலை அரச தலைவர் மாளிகையில் இரகசிய நில அளவை யாழ்ப்பாணம் நில அளவைப் பணிமனையிரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லையாம்! (புதியவன்) கீரிமலை அரச தலைவர் மாளிகையில் அறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக நில அளவைப்பணிகள் இடம்பெற்றுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஜே/233 கிராம அலுவலர் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான நிலம் மற்றும் சைவ அடையாளங்களை அபகரித்து மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இரகசியமாக அரச தலைவர் மாளிகை அமைக்கப்பட்டது. இந்த அரச தலைவர் மாளிகையானது கோட்டபாய ராஜபக்ஷவின் காலத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடந்த ஆண்டு தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படுவதாக 50 ஆண்டுகளுக்கு குத்தகை…
-
- 0 replies
- 480 views
-
-
”பொது வேட்பாளருக்கு தகுதியானவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம்” அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேடிவந்த வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். இலங்கை வரலாற்றில் சிங்கள தலைவர் ஒருவர் சமஸ்டியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டபோது, வாக்களிக்…
-
- 0 replies
- 252 views
-
-
“தமிழ் மக்கள் பொதுச்சபை” அங்குரார்பணம்! வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு “தமிழ் மக்கள் பொதுச்சபை” என மாற்றம்! adminJune 6, 2024 தமிழ் மக்கள் பொதுச் சபையின் அறிக்கை குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் 05.06.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் …
-
- 0 replies
- 238 views
-
-
Published By: VISHNU 05 JUN, 2024 | 08:36 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்…
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
கடந்த வருடம் போலி துவாரகா இந்த வருடம் போலி பொட்டம்மான். பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம். இது பற்றி மேலதிகமாக.... போலிகளை அம்பலப்படுத்துவோம்!
-
-
- 34 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது - தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோருகின்றனர் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 05:21 PM 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு …
-
- 1 reply
- 510 views
- 1 follower
-
-
05 JUN, 2024 | 07:17 PM ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை இன்று புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி), மாகாண காணி ஆணையாளர், யாழ். பிராந்திய பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் என பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி…
-
- 2 replies
- 203 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ பிள்ளைகளுக்கோ பயனற்றது. பொருத்தமற்ற கல்வி முறைமையினால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது : கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்க…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 08:59 PM நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/185328
-
-
- 12 replies
- 962 views
- 1 follower
-