ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார்.வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப்புடன் நெல்சிப் திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலியில் சந்தைக் கட்டிடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டிடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் அனுமதி பெறப்பட்டது.அத்துடன், வலி. கிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்…
-
- 0 replies
- 394 views
-
-
மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இறுதித் தீர்மானம் எடுப்பார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். 2002ம் ஆண்டு முதல் இதுவரையில் மரண மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 200ற…
-
- 0 replies
- 287 views
-
-
நாட்டில் 99 சதவீதமானோருக்கு ௭திரான பொருளாதாரக் கொள்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ௭ஞ்சிய ஒரு சதவீதமானவர்களின் தேவைக்காக அனைத்தும் வழங்கப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. ௭னவே, ௭திர்வரும் வரவு செலவுத் திட்டத்திலேனும் நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து மக்களும் இன்றே வீதியிலிறங்கிப் போராட வேண்டும் ௭ன்று ௭திர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தால் இனி ஒரு போதும் முன்னோக்கி நகரவோ, ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கவோ இந்த நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள். 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மையப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். …
-
- 4 replies
- 328 views
-
-
[size=2][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவ ஹெலிகொப்டரில் வந்திறங்கிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார். இதனையடுத்து, யாழ். ஒல்லாந்தர் கோட்டையை அமைச்சர் சுற்றிப் பார்வையிட்டார். அத்துடன், யாழ். பொதுநூலகத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள பழமை வாய்ந்த ஜலன்ட் பத்திரிகையையும்; பார்வையிட்ட பின்னர் நூலகத்திலுள்ள விருந்தினர் கையேட்டில் தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுதினார். கொழும்புத்துறை மீள்குடியேற்ற பகுதி மற்றும் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்தை அமைச்சர் பார்வையிட சென்றுள்ளார்…
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்கும் சக்தியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரச தரப்பினரும் அதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகமும் முன்னிலைப்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது.[/size] [size=4]இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தமிழர் தரப்புக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தருமா? என்ற வினாவுக்கு சிறைக்குள் இருந்து ஒரு கைதியின் எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்தக்கட்டுரை அமைகிறது.[/size] [size=4]இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் போது,[/size] [size=4]வரையப்படும் திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைமுறைச் சாத்தியமானதாகவும் உலக ஒழுங்குக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்…
-
- 0 replies
- 348 views
-
-
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை! ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறி…
-
- 0 replies
- 692 views
-
-
[size=2][size=4](த.சுமித்தி, எஸ்,கே.பிரசாத்)[/size][/size] 'யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது' என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். [size=2][size=4]யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையில் யாழ். மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளில் முன்னிலையில் இருந்தது. கடந்த 30 வருட யுத்த காலத்தின் பின்னர…
-
- 3 replies
- 552 views
-
-
மக்கள் அனைவரும் அழைத்து வந்து காட்டில் விடப்படடுள்ளனர். மெனிக்பார் முகாம் மூடப்பட்டு அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கூறுங்கள். இது இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்த கதை. இது மலையை தோண்டி எலியை பிடித்ததை விட மிகவும் மோசமானது. இது கைகளை தரையில் அடித்து கொண்டதற்கு ஒப்பானது. குற்றங்கள் நிறைந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதீத நம்பிக்கையான எந்த தவறையும் செய்து தப்பித்து கொள்ளலாம் என பயங்கரமான அகங்கார போக்கை மீண்டும் மேடையேற்றி சம்பவம் இதுவாகும். எனினும் இந்த முறை அது தவறியது. அதீத நம்பிக்கை அதபாதளமாக மாறியது. இவர்கள் கொத்தி இருப்பது வாழை மரத்தில். சொண்டை மீண்டும் வெளியில் இழுப்பது சிரமமானது. வன்னியில் பெரும் காட்டு…
-
- 1 reply
- 826 views
-
-
மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும் பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற…
-
- 0 replies
- 436 views
-
-
சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய திட்டங்களைக் குழப்பும் டக்ளஸ் வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப் படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார். வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப் புடன் "நெல்சிப்" திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலி யில் சந்தைக் கட்டடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின…
-
- 0 replies
- 440 views
-
-
சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் - விக்கிலீக்ஸ் 11 அக்டோபர் 2012 தமிழில் குளோபல்தமிழ்ச்செய்திகள் சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம…
-
- 10 replies
- 945 views
-
-
இரணைதீவுக் கடலில் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் பயணிகள் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை கண்டுபிடித்துள்ளது. 1998ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம் நாள் 56 பயணிகளுடன் இரணைதீவுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, அன்ரனோவ் - 26 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் வீழ்ந்த இடம் தொடர்பாக, விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த 2ம் நாள் சிறிலங்கா கடற்படைச் சுழியோடிகள் குழுவொன்று இரணைதீவு கடற்பரப்பில் விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளது. இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் சிதைவுகள் சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்க…
-
- 3 replies
- 494 views
-
-
சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நியுயோர்க்கில், பார்க் அவென்யூவில் உள்ள ஆசிய சமூகத்தில் (AsiaSociety) வரும் டிசம்பர் 4ம் நாள் காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா, நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் ஸ்டீபன் ஜே ராப், நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் ஜி. அல்ஸ்டன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பார்வ…
-
- 0 replies
- 336 views
-
-
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட…
-
- 0 replies
- 382 views
-
-
சிறிலங்கா உட்பட பல்வேறு நாடுகள் தொடர்பில் இந்தியாவில் இரகசியமாகப் பாதுக்கப்பட்டு வந்த சுமார் 220,000 ஆவணங்களைத் தொடர்ந்தும் இரகசியப் பேணல் நிலையில் வைத்திருப்பதில்லை என இந்தியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது ராஜதந்திரங்களுக்குப் பொறுப்பான விசேட செயலாளர் பினக் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பங்களாதேஷ், புட்டான், ஈரான், சிறிலங்கா, கிழக்காசியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இரகசியத் தகவல் அடங்கிய ஆவணங்களே இரகசியப் பேணல் நிலையிலிருநது அகற்றப்படுகின்றன. இதற்கு முன்னரும் இந்தியா பல்வேறு நாடுகளின் தகவல்கள் கொண்ட 70,000 ஆவணங்களை இரகசியப் பேணல் நிலையிலிருநது அகற்றியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் http://thaaitamil.com/?p=34990
-
- 0 replies
- 506 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகு தாவுத் தனது பிரதியமைச்சர் பதவியை அவர் இராஜினாமாச் செய்திருந்த போதும் அவரது ராஜினாமாக் கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதுவரை எற்றுக் கொள்ளப்படாமை தொடர்பில் தற்போது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளதாக தெரிய வருகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற காலத்தில் தனது பிரதியமைச்சர் பதவியை பஷீர் ஷேகு தாவுத் இராஜினாமாச் செய்திருந்தார். ஆனால் இவரது ராஜினாமா கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஆசன வரிசையிலேயே அமர்ந்து வருகிறார். அத்துடன் பிரதியமைச்சருக்கான (இவரது) பணியாளர…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகம் கொண்ட மாவட்டமாக மன்னார்(99.2%) காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா (95.8%), யாழ்ப்பாணம் (95.7%), கிளிநொச்சி (95%) மற்றும் முல்லைத் தீவு (94.3%) ஆகியன மிகவும் முன்னிலையில் காணப்படுகின்றன. எனினும் இலங்கையின் தேசிய சராசரி (92.2%)ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதுடன், இலங்கையில் ஆகக் குறைந்த எழுத்தறிவு வீதும் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு (82.3%) உள்ளதாக 2011 – ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆன்களையே (ஆன் – 59.7%, பெண் – 16.7%)அதிகம் நம்பி வாழும் நிலையில் யாழ்.குடாநாடு தற்போது மாறியுள்ளது. அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள…
-
- 0 replies
- 3.3k views
-
-
[size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது. நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரைச் சந்தித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.[/size] [size=4]http://www.puthinapp...?20121012107125[/size]
-
- 0 replies
- 313 views
-
-
வட மாகாணத்தின் உண்மையான முன்னுரிமை விருப்புக்களை ஆளுநரால் வெளியிட முடியாது வட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 154 ஜீ (3) ஷரத்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் அனுப்ப வேண்டுமென கூறுகின்றது. இந்த சட்டவாக்க செயல்முறையில் மாகாண ஆளுநருக்கு வகிபங்கு ஏதும் இல்லை என மாவை சேனாதிராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த திவிநெகும சட்டமூலம் பற்றி தனது கருத்தை ஆளுநர் தெரிவித்தமை நிர்வாகத்…
-
- 1 reply
- 420 views
-
-
இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார். கடந்த இரு நாட்களாக இலங்கையில் நடந்த நீதித்துறை போராட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமான்கள் கவுன்சில் இலங்கையின் நீதித்துறையின் நிலை குறித்து விடுத்த அறிக்கையின் பின்னணியில், இலங்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அளவுக்கு, சுயாதீனத் தன்மையுடன் நீதித்துறை செயல்பட முடிகிறதா என்று கேட்டதற்கு, 1977 ஆண்டுக்கு முன்னர் சுதந்திரமாக செயல்பட்ட நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, 1978 ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்டது முதல் தனது சுதந்திரத்…
-
- 0 replies
- 437 views
-
-
சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லை : ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் இங்கே மார்ட்டே டோர்கெல்சன். நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று 10ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள…
-
- 2 replies
- 565 views
-
-
நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் தாக்குதலின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே செயற்பட்டுள்ளதாக ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் இனவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டுகின்றார். அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், ஜானக பெரேரா கொல்லப்பட்ட போதும் அரசின் மீது பழிபோடப்பட்டதாகவும்இ பின்னர் புலிகளே அவர்களைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதபோல் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார்? செயற்பட்டார்கள் என்பதும் எதிர்காலத்தில் நிரூபணமாக…
-
- 2 replies
- 428 views
-
-
பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2012 ஆம் ஆண்டில் 6 தசம் 7 சதவீதமென சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி குறைவானது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு 8 தசம் 3 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்த்த போதிலும் 6 தசம் எட்டு சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் பணவீக்கம் இந்த வருட இறுதியில் 10 தசம் ஒரு சதவீதத்தினால் அதிக…
-
- 0 replies
- 345 views
-
-
'தமிழர்களின் வரலாற்றை, விடுதலைப் போராட்டத்தை யூதர்களுடன் ஒப்பிடும்போது யூதர்கள் பாலஸ் தீன மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் எப்படி தங்களு க்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோன்றே தமிழீழப் போராட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள், முரண்பாடான கருத்துக்கள் என்ற வரலாற்றைப் பார்க்கின்றபோது 1891ம் ஆண்டு ஜியோ னிசம் என்று ஆரம்பிக்கப்பட்டு யூதர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது. 1948ம் ஆண்டு அவர்களுக்கு பல்வேறு காலகட்டத்தில் எதிர்கொண்ட தோல்விகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் துளிர்த்தெழுந்து இறுதியில் சுதந்திரம் பெற்று இஸ்ரேல் என்ற நாட்டை பெற வைத்தது. அதுபோ ன்றே தமிழர்களுக்கு என ஒரு நாடு வேண்டும் எ…
-
- 1 reply
- 771 views
-