ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
சிங்கள நாட்டின் பாதுகாப்பு செலவு நாட்டின் மொத்த செலவீனத்தில் 20 வீதம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 9, 2012 AT 21:38 2012 ஆம் ஆண்டில் சிங்களத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவீனத்தில் பாதுகாப்பு துறைக்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்துறை, பாதுகாப்புத்துறை உட்பட மொத்த செலவீனத்தில் மஹிந்த குடும்பத்திற்கு நாட்டின் மொத்த செலவீனத்தில் 40 விழுக்காடு போய்ச்சேர்கின்றது. அதாவது நாட்டின் மொத்த செலவீனத்தை செலவழிக்கும் மனிதர்களாக மஹிந்த சகோதரர்கள் இருக்கப்போகின்றார்கள். மொத்த செலவீனத்தில் பாதுகாப்பு செலவீனம் 28,950 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவாகும். 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் 5825 …
-
- 2 replies
- 507 views
-
-
விடுதலைப் புலிகள் எவருமே இப்போது போராடத் தயாராக இல்லை: - பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் [Tuesday, 2012-10-09 21:43:35] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றதன் மூலம் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், அவர்களின் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டன என்று பிபிசியின் முன்னாள் கொழும்பு முகவரான பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றதன் மூலம் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், அவர்களின் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டன என்ற…
-
- 0 replies
- 809 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் விஷேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கடுமையான வாதப் பிதிவாதங்களுடன் இடம்பெற்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலேயே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.[/size] [size=4]இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று நாளை புதன்கிழமை புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. தமது இந்திய வி[/size]ஜயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்ப…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட பாராளுமன்றத் தூதுக்குழு நாளை புதன்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பொன் செல்வராசா, ௭ம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவே புதுடில்லி செல்லவுள்ளது. புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கூடி தமது விஜயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று புதுடில்ல…
-
- 3 replies
- 621 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான நடைமுறைகள் எதற்காக கையாளப்படுகின்றன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த காலத்தில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால் பலாலி பகுதியில் 500 மீற்றர் வரையான பகுதியே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கு அப்பால் பொதுமக்களே வசித்து வந்தனர். அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு வலையங்களை பெருப்பிக்க வே…
-
- 4 replies
- 886 views
-
-
பாராளுமன்றிற்கு எந்தவொரு தரப்பும் சவால் விடுக்க முடியாத என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவம் செய்யும் அதி உச்ச நிறுவனமாக பாராளுமன்றம் திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [size=3][size=4]எனவே நாட்டின் வேறு எந்த அரச நிறுவனமும் பாராளுமன்றிற்கு சவால் விடுக்க முடியாத என அவர் தெரிவித்துள்ளார். திவிநெகுமு சட்டம் தொடர்பிலான சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளருக்கு நேரடியாக அனுப்பி வைத்திருந்தது.[/size] [size=4]குறித்த சட்ட விளக்க அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பாது, பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைத்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலகமாக நீதித்துறை, நிறைவேற்று அத…
-
- 0 replies
- 395 views
-
-
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்திற்கு காணிகள் வழங்க முடியாது என ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. படையினருக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் வழங்கப்படக் கூடாது. அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எனவே இந்தக் காணிக சுவீகரிப்பு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படையினருக்குக் காணிகள் வழங்கப்படக் கூடாது …
-
- 2 replies
- 551 views
-
-
[size=2][/size] [size=2][size=4]இலங்கையர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்வதற்கான பயண எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. [/size][/size] [size=2][size=4]தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைப் பயணிகளுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாட்டு அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்திருப்பதாக அறிவித்தது. இந்திய அரசாங்கம், தொடர்புடைய மாநில அரசாங்கங்களுடன் ஆலோசி…
-
- 1 reply
- 529 views
-
-
[size=4]யாழ் மாவட்டத்தின் 2012ஆம் ஆண்டுடின் யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை 9.30 மணி யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இங்கு தற்போது நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், தெங்கு உற்பத்தி, பனை அபிவிருத்தி, காணி, மீள்குடியேற்றம், மீன்பிடி, நீர்ப்பாசனம், மற்றும் சிவில் பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்பத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வரவேற்புரையினை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிகழ்ச்சி நிரல் மற்றும் கடந்த ஆண்டுக்கான கூட்ட அறிக்கைகள் கிடைக்க…
-
- 2 replies
- 798 views
-
-
முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல்; மக்களும் திருப்பி தாக்கினர். சிறீலங்கா | ADMIN | OCTOBER 9, 2012 AT 10:12 முள்ளிவய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் பொதுமக்கள் தம்மால் புதைத்துவைத்த, கைவிடப்பட்ட பொருட்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பழைய இரும்புகளும் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் சிங்களப்படையினர் பளைய இரும்புகளை சிங்கள வியாபாரிகளுக்கு எடுத்து வீற்பனை செய்யும் பொருட்டு அவற்றை பொதுமக்கள் எடுக்கவிடாமல் தடுத்தும் தாக்கியும் வருகின்றனர். இது விடயத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் வீதிக்கு தென்முனையில் சிங்களப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்த முறுகல் நிலை முற்றவே, தாம் கொண்டுவந்த தடிகள், பொல்லுகள் என்பவற்றால் ப…
-
- 3 replies
- 459 views
-
-
பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவில் இணைத்துக்கொள்ள 18 குதிரைகளைக் கொள்வனவு செய்ய தீர்மானிகெ்கப்பட்டுள்ளது. இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், அதற்காக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. கொள்வனவு செய்யப்படவுள்ள விசேட ரகத்தைச் சேர்ந்த குதிரைகளுக்காக தலா 2.7 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் குதிரைப்படைப் பிரிவானது நாட்டின் மிகவும் மரியாதைமிக்க விழாப் படையணியாகத் திகழ்கின்றது. இந்நிலையில், தற்போது மேற்படி பிரிவில் 40 குதிரைகள் காணப்படுகின்ற போதிலும் அவை தீவிரமாக கடமையாற்றும் வயதைக் கடந்துள்ளன. இவை அதிகளவான மக்கள் கூட்டத்தைக…
-
- 3 replies
- 365 views
-
-
[size=3][size=4]குடும்பமாக இந்தியா சென்றபோது அங்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திரும்பிச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு இலங்கைப் பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டுமாயின் தத்தமது பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட மேலதிக பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் உரிய படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் தாய், தந்தையரின் பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலப் பிரதிகள், குழந்தை பிறந்த வேளையில் பெற்றோர் இலங்கைப் பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்தும் பிரகடனப்படிவ…
-
- 0 replies
- 499 views
-
-
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவரை தாம் பின்வாங்கப்போவதில்லை என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து நாளையதினம்(10.10.2012) வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்குமெனவும் கூறியுள்ளது. இதேவேளை, இன்னமும் இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படாத நிலையில், நடைபெறும் பேச்சுவார்த்தையில் திருப்தியான முடிவு கிடைக்குமாயின் மட்டுமே தாம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் தேவசிறி கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தில் முக்கிய கோரிக்கைகளில…
-
- 0 replies
- 363 views
-
-
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது. ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் வெளியிட்ட அ…
-
- 4 replies
- 880 views
-
-
இளைஞர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ 09 அக்டோபர் 2012 இளைஞர் யுவதிகளுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் தன் நம்பிக்கையை பலப்படுத்த தலைமைத்துவ பயிற்சி முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர்களுக்கு கேணல் பட்டங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளம் சமூகத்தினர் தீர்மானங்களை சுயமாக எடுக்கக் கூடிய வகையில் பயிற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தன் நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே நான்கு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி…
-
- 0 replies
- 427 views
-
-
சிறிலங்காவின் அடாவடி அமைச்சர்களில் ஒருவரான மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவின் தாக்குதலுக்கு இலக்கான இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் சுசென என்பவர் குற்றவாளி என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த இராணுவ மேஜர்,கைத்துப்பாக்கி மற்றும் பரிமாற்ற உபகரணங்களுடன் கெசினோ புள்ளியான வர்த்தகர் நளின் பொன்சோகவின் மெய்ப்பாதுகாவலராக நீண்ட காலமாகக் கடமையாற்றியமை விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது இந்த இரா…
-
- 0 replies
- 362 views
-
-
நீதிதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் போலிக் குற்றவாளிகளைச் தேடிப்பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற கல்கிஸ்ஸ பகுதியில் கடந்த இரவு முதல் அதிகாலை வரை பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருள் பாவனையாளர்களும் போதைப் பொருள் விற்பனையாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நால்வரைத் தெரிவு செய்து இந்த நால்வருமே மஞ்சுள திலகரத்னவைத் தாக்கியவர்கள் என்று காட்ட முயற்சிப்பதாகவும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இந்த நால்வர் ஊடாகவும் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதல் கொள்ளையடிக்கும் நோக்குடன…
-
- 0 replies
- 427 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாத்தறை – கொழும்பு வீதிப் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு துடுப்பாட்டப் போட்டியை பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞர்களுக்கும் மீரிஸ்ஸவில் உள்ள சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மதுபோதைகயில் இருந்த கடலோரக் காவல்படையினர் சுமார் 30 பேர் பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். மீரிஸ்ஸ பிரதேசசபைத் தலைவர் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்ற போது …
-
- 0 replies
- 472 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றத் தயார் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறவில்லை. அதை அரசியல் தீர்வாக அவர்கள் முன்னிறுத்தவும் இல்லை. மாகாணசபைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவி நெகும சட்டமூலம் கொண்டு வரப்பட…
-
- 1 reply
- 771 views
-
-
செப்டம்பர் 11 எப்படி ஏற்பட்டது? செப்டம்பர் 11 எப்படி ஏற்பட்டது? நீங்களே முடிவு செய்யுங்கள்.இங்கு ஒரு ஆதாரம் விமானம் புகுந்து கட்டிடம் ஒரேயடியாக தரைமட்டமாகாது. நடக்கும் ஆனால் ஓரிரு நாட்கள் எடுக்கும்.ஆகவே கட்டிட கலை நிபுணர்களின் கருத்துப்படி கீழே நான்கு மூலையிலும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.இதோ நீங்களேபார்த்து முடிவு செய்யுங்கள்.தாக்குதல் நடந்த செய்திகள் ஜோர்ச் புஸ்ஸின் காதுகளில் சொல்லும் போது அவரின் முகபாவனை எப்படியிருக்கும்.....அமெரிக்கா ஆப்கான் மற்றும் ஈராக்கில் தரையிறங்குவதற்காக என்னவெல்லாம் செய்யும்..... இதில் கூடுதலான இழப்பை சந்தித்தவர்கள் யூதர்கள் தான் விமானங்கள் கூட தானியங்கியாக இயங்குமல்லவா?
-
- 1 reply
- 598 views
-
-
[size=5]கிழக்கு மாகாணசபை - தமிழர்களின் இருப்பை அச்சுறுத்துமா?[/size] சிவகுமாரன் நடராஜா கிழக்கு மாகாண சபை விவகாரம் அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து நிர்வாகத்தினை அமைத்துக் கொண்டமையும், மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, நான்கு அமைச்சர் பதவிகள், சபைத் தவிசாளர் பதவி, பிரதி தவிசாளர் பதவி ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டமையும் கிழக்குத் தமிழர்களிடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எதிரானதொரு மனப்பாங்கினைத் தோற்றுவித்திருக்கிறது. கிழக்கு வாழ் முஸ்லிம்களின் அரசியலானது வட, கிழக்குத் தமிழர்களின் அரசியலுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதை எழுதப்படாத அரசியல் விதி…
-
- 2 replies
- 809 views
-
-
கடந்த ஆறாம் திகதியிலிருந்து காணாமற் போயிருந்த இளைஞன் - தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! [Monday, 2012-10-08 17:29:05] மாத்தறை, ஹிந்தட்டிய பிரதேசத்தில் தலை மற்றும் கைகள் இரண்டும் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 26 வயதுடைய இளைஞர் ஒருவரது என மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டுள்ள இளைஞர் கடந்த ஆறாம் திகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக அவரது தாயாரால் மாத்தறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை களுத்துறை வடக்கு களுகங்கையில் மிதந்த பெண் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப…
-
- 1 reply
- 571 views
-
-
[size=4]இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வடகிழக்கு நிலைமைகளை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் மனித சபையின் குழுவினர் -அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பதில்ப் பேச்சாளர் ரவீனா சம்பசானி இதனை உறுதிப் படுத்தியுள்ளார். இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையைச் சேர்ந்த குழுவினர்- வடகிழக்கிலுள்ள மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வருமாறு இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்புக் குறித்து எவ்வித கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size] ht…
-
- 0 replies
- 685 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) 'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். தவறும் பட்சத்தில் உங்கள் ஒலிவாங்கியை முடக்குவேன்' என்று என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மாவை எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ், 'நான் தான் இந்த குழுவின் தலைவர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்தைக் …
-
- 1 reply
- 678 views
-
-
நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்! 07 அக்டோபர் 2012 நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ சென்.தோமஸ் வித்தியாலத்திற்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குண்டர் கும்பல், மஞ்ஜுல திலகரத்னவைத் தாக்கிவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்னர். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த நாட்களில் அரசாங்க உயர்மட்டத் தரப்பினரின் பலத்த விமர்சனங்களுக்கு உ…
-
- 5 replies
- 511 views
-