ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
30 Oct, 2025 | 05:52 PM ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை நீதிபதிகள் பெயரிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார். விரைவில் அந்தப் பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்க…
-
- 0 replies
- 104 views
-
-
30 Oct, 2025 | 05:07 PM ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றைய தினம் (30) குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 94 views
-
-
30 Oct, 2025 | 06:01 PM (எம்.மனோசித்ரா) 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன…
-
- 3 replies
- 177 views
- 1 follower
-
-
NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..? Thursday, October 30, 2025 கட்டுரை - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஆக்டொபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000 முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் 1990 ஜூலை 12 அன்று குருக்கள்மடம் ஊடாக சென்ற 72 ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது, 1990 ஆகஸ்ட் 3 அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147 பேரை படுகொலை செய்தது , 1990 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி காலை வரை ஏறாவூர் கிரா…
-
- 0 replies
- 83 views
-
-
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உய…
-
- 2 replies
- 205 views
-
-
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்…
-
- 2 replies
- 169 views
-
-
சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதா…
-
- 0 replies
- 95 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி! அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்…
-
- 0 replies
- 79 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை சந்தித்து கலந்துரையாடினார், நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்…
-
- 0 replies
- 92 views
-
-
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது adminOctober 29, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் ,…
-
- 0 replies
- 88 views
-
-
கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து, சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன. 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம்…
-
-
- 37 replies
- 1.8k views
-
-
29 Oct, 2025 | 06:48 PM (நா.தனுஜா) சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து 'புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது' எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 1949ஆம் ஆண்டு மக்கள் சீனக்குடியரசு ஸ்த…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
Oct 29, 2025 - 05:20 PM - எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும…
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
29 Oct, 2025 | 05:25 PM (நா.தனுஜா) இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். இலங்கை - சுவிற்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொ…
-
-
- 6 replies
- 269 views
- 1 follower
-
-
காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம். தனிப்பட்ட குரோதங்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான்.…
-
- 0 replies
- 151 views
-
-
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்ல…
-
-
- 2 replies
- 240 views
-
-
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்! October 28, 2025 கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. https://www.errimalai.com/?p=105889
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார். பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
- 0 replies
- 116 views
-
-
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று! 29 Oct, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிப…
-
- 0 replies
- 87 views
-
-
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457
-
- 0 replies
- 96 views
-
-
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி! கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்…
-
- 0 replies
- 76 views
-
-
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை! நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட…
-
- 0 replies
- 90 views
-
-
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்! adminOctober 29, 2025 வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை …
-
- 0 replies
- 143 views
-
-
Published By: Vishnu 29 Oct, 2025 | 12:43 AM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின…
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
Oct 28, 2025 - 04:46 PM தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmhah1vfo0198o29nqvhg69fd
-
- 0 replies
- 186 views
- 1 follower
-