ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 10:11 AM மனித உரிமை விடயத்தில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உ…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது. இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர். உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன. அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்…
-
- 3 replies
- 576 views
- 1 follower
-
-
28 MAY, 2024 | 03:22 PM ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தருணம் என தெரிவித்துள்ள அவர், நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது, ஆனால் அதற்கு தீர்வை காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் நம்பிக்…
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
முதலீடு இல்லாத காரணத்தால் இலங்கை ரயில்வே மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ரயில் சேவைகள் இரத்து மற்றும் புகையிரத பயணிகள் அனுபவிக்கும் தாமதங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கை ரயில்வே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. திறமையான ரயில்வே சேவையை முன்னெடுக்க, முதலீடு தேவை. கடலோர ரயில் பாதைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அத்துடன் பயணிகள் பெட்டிகள், ஸ்லீப்பர்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி தேவை‘ என்று அமைச்சர் விள…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 MAY, 2024 | 01:07 AM முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்று பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரச…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 MAY, 2024 | 08:59 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233
-
-
- 4 replies
- 519 views
-
-
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், "யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவ…
-
- 8 replies
- 964 views
- 1 follower
-
-
இஞ்சி விலை உச்சம்! (ஆதவன்) யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இஞ்சியின் விலை உச்ச நிலையில் காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் தற்போது ஒரு கிலோ இஞ்சி 4 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு தொடர் விலை அதிகரிப்புக்கு, இஞ்சி வரத்துக் குறைந்தமையே காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கடும் விலை அதிகரிப்புக் காரணமாக வழமையாக இஞ்சி விற்பனையில் ஈடுபடும் பல வர்த்தக நிலையங்களில் தற்போது இஞ்சி விற்பனையைக் காண முடியவில்லை. சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ இஞ்சி 5 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ச) இஞ்சி விலை உச்சம்!…
-
- 2 replies
- 522 views
-
-
28 MAY, 2024 | 09:51 PM யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது . ஊர்காவற்துறையில் பிரபல்யமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவனத்திற்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் இந்த பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றது. இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
28 MAY, 2024 | 09:52 PM யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (28) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது. இதேவேளை கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி திறக்கப…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:12 PM ஜே.வி.பி இரண்டு முறை ஆயுதம் ஏந்தி போராடியதன் விளைவாக 1971 ஆம் ஆண்டில் 12,000 பேரும், 1988-1989 ஆண்டுகளில் 77,000 பேரும் உயிரிழந்ததாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30 வருடகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தில் சுமார் 70 ஆயிரம் உயிரிழந்துள்ளதாகவும், இந்த நாடு சிறியதாக இருந்தாலும் பலபடுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்ட நல்லிணக்கக்குழுவிற்கான காரியாலயமொன்றை திறந்துவைக்கும் முகமாக மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
28 MAY, 2024 | 02:55 PM மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயதினையுடைய 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பாகவும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சா…
-
- 0 replies
- 182 views
-
-
28 MAY, 2024 | 04:41 PM தமிழ் பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை யாழ். வர்த்தக சங்கத்தினர் முன்வைத்துள்ளனர். தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட மு…
-
- 0 replies
- 340 views
-
-
28 MAY, 2024 | 04:28 PM பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம். ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். என ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நட…
-
- 0 replies
- 149 views
-
-
Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 05:16 PM தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியப…
-
- 0 replies
- 133 views
-
-
Published By: VISHNU 28 MAY, 2024 | 07:22 PM கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான…
-
- 0 replies
- 142 views
-
-
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்! (ஆதவன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், மாவை சேனாதிராஜாவும் வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக அரசதலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம். ஆனால், மீதமுள்ள 4 பேரும் இரு த…
-
-
- 3 replies
- 316 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு! இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 201 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 10:16 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184648
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 06:31 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போக…
-
- 3 replies
- 246 views
- 1 follower
-
-
பலஸ்தீனத்தை தனிநாடாக ஏற்று அங்கீகரிப்பதாக அறிவித்திருக்கின்றது நோர்வே. கூடவே ஸ்பெய்ன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கில் - அதிலும் குறிப்பாக காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ் தீனம் என்ற ‘இரு நாட்டுக் கொள்கையே ஒரே தீர்வு' என்பதே இந்த நாடுகளின் கருத்தாக அமைந்துள்ளது. பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் அதன் இராணுவக் கொள்கைகள் தொடர்பில் இந்த நாடுகள் தெளிவாகத் தெரிவிக்கவில்லையாயினும் தனி நாடு என்பதில் ஒன்றித்திருக்கின்றன. நல்லது! பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முறையான அங்கீகாரம் ஒன்று இப்போதைக்குக் கிடைக்கச் சாத்தியமே யில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வீட்டோ அதி காரம் பலஸ்தீனர்களின் வேணவாக்க…
-
- 0 replies
- 383 views
-
-
விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை! ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்விரு விவாதங்களில் முதலில்…
-
- 0 replies
- 147 views
-
-
Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 11:36 AM சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவில் தியோநகர் மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக மீனவர்கள் மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட போது வீதியானது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தியோநகர் மக்கள் ஒன்று …
-
- 1 reply
- 489 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 28 MAY, 2024 | 10:18 AM பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்;டியுள்ளனர். சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார். செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆ…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-