Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 16 MAY, 2024 | 01:40 AM முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அவரக்ளினால் குறித்த குடிநீர் திட்டத்திற்கான பெயர்பலகை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், சம நேரத்தில் ஏனைய அதிதிகளினாலும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது நிகழ்வில் வடமாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர்,அமைச்சின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்த…

  2. தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.…

  3. சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர். அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆ…

  4. 15 MAY, 2024 | 04:43 PM சிறியஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இராணுவம் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகுறித்து இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம் ஆனால் சிறிய அளவில் என தெரிவித…

  5. (எம்.மனோசித்ரா) ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு 011 240 1146 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. …

  6. 15 MAY, 2024 | 02:11 PM நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த "உப்புக் கடலை உரசிய நினைவுகள்" என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சிவகுரு ஆதீன முத…

  7. Published By: DIGITAL DESK 7 15 MAY, 2024 | 09:34 AM யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார். இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர், ப…

  8. Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 11:27 AM அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனுராதபுரம் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த கபிலகுமார டிசில்வா கடத்தப்பட்டு இரகசியமறைவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையை மிக நீண்டகாலமாக பாதித்துவரும் பலவந்த காணாமல் போகச்செய்தல் மீண்டும் தலைதூக்குகின்றது என்ற அச்சத்தின் மத்தியில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்…

  9. பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறு சுமந்திரனை கேட்கவேயில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் May 15, 2024 “ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய். அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – “இன்று ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சுமந்திரனிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியிருக்கின்றா…

  10. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! Vhg மே 15, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது. எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின…

  11. Published By: VISHNU 14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…

  12. த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒ…

  13. யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்த…

  14. இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக மு…

  15. Published By: DIGITAL DESK 7 14 MAY, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

  16. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:02 PM இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வ…

    • 1 reply
    • 213 views
  17. ஆர்.ராம் தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…

  18. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து,…

  19. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:44 PM திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமி…

  20. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:34 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள…

  21. இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்…

  22. நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301557

  23. யாழ்ப்பாணம் சென்ற உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் adminMay 14, 2024 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக யாழ் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத…

  24. Published By: VISHNU 14 MAY, 2024 | 02:42 AM மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம் திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர்…

  25. 13 MAY, 2024 | 08:08 PM மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மொழிவுகள் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று (13) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.