ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
-
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் தகாத நடத்தையில் அதிருப்தி தெரிவித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருக்கு வியாழக்கிழமை மகஜரொன்றைக் கையளித்துள்ளனர். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த வைத்திய அதிகாரி ஆஸ்பத்திரி பெண் தாதியர்களுடனும் பெண் ஊழியர்களுடனும் தவறாக நடந்துகொள்ள முற்படுவதாக நீண்ட நாளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது இவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் இளம் பெண்களிடமும் இதுபோல் தவறாக நடந்துகொள்ள முற்படுவதுடன் அங்கச் சேஷ்டைகளிலும் ஈடுபடுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த டாக்டர் ஆஸ்பத்திரி பொறுப்பதிகாரி என்பதால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நேற…
-
- 0 replies
- 489 views
-
-
யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாதது மக்களின் பலத்த எதிர்ப்பை மீறி சிறிலங்கா படையினர் பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வட்டுவாகல் பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி திறக்கப்பட்டது. இதற்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் தற்போது, வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த விகார…
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக…
-
- 4 replies
- 843 views
-
-
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 13 replies
- 2.2k views
-
-
தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம். ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்…
-
- 12 replies
- 1.5k views
-
-
திரு.சுமந்திரனின் கருத்தும் திரு.பொன் பாலராஜனின் கருத்தும்
-
- 0 replies
- 963 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது …
-
- 1 reply
- 1.4k views
-
-
பிடிஎப் font to unicode தமிழுக்கு சுராத தளம் மூலம் மாற்றியதால் கீழ்க்காணும் கட்டுரையில் எழுத்துப்பிழைகள் வந்துள்ளன. தெளிவாக படிக்க இணைக்கப்பட்டுள்ள pdf file காணவும். இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 1 இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்கசக்திகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்துநிற்க, பார்ப்பனர் அல்லாத இனத் துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த நாம் தமிழர் ஆவணம். 31.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த நாம் தமிழ…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு! உங்களாலும் பார்க்க முடியும் சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை இலங்கை மக்கள் 6ஆம் திகதி காலை 7 மணியளவில் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம். புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன. எனவே இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர இயலும். வெள்ளியின் சூரிய …
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கைப்பிரச்சனை விவகாரங்களில் எல்லை மீறிச் செயற்படும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கோ பிரித்தானியாவிற்கோ கிடையாது. வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்தவொரு நாட்டின் பிரதிநிதியும் இலங்கைக்குள் நுழையக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக தெரிவித்தார். வெள்ளமுள்ளி வாய்க்கால் தொடர்பாக போலியான பிரசாரங்களை பிரித்தானியாவே முன்னின்று முன்னெடுத்தது. எனவே பிரித்தானியாவின் நோக்கங்களை உள்நாட்டில் ஈடு செய்து கொள்ள இடமளிக்கப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தான் ஒரு அதிகாரி என்பதனையும் தனக்குள்ள பொறுப்பையும் மறந்து செயற்படக்கூடாது. இலங்கையில் வீர தீர செயல்களை அரங்கேற்றுவதால் எவ்விதம…
-
- 0 replies
- 467 views
-
-
மானிடத்திற்கெதிரான மாபெரும் படுகொலையினை அரங்கேற்றிய சிறிலங்கா சனாதிபதி இனப்படுகொலையாளி மகிந்த இராசபக்ச முக்கிய உரை ஒன்றினை பொதுநலவாயநாடுகளின் அழைப்பின்பேரில் யூன் 6ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆற்றுகின்றார். பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து பெருந்த…
-
- 0 replies
- 902 views
-
-
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 40 தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் நாடுகடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் லண்டனில் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் இவர்களின் நாடு கடத்தல் உத்தரவை நிராகரித்தமையை அடுத்து நாடு கடத்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. PVT 030 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவிருந்தனர். இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. இந்த சட்டநடவடிக்கையின்போது இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றவர்கள் அங்கு கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர் என்று சர்வதேச மனித உரிமைக…
-
- 1 reply
- 820 views
-
-
முல்லைத்தீவு திருமுறிகண்டிப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருமுறிகண்டிப் பகுதிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியிலும் “போர் வீட்டுத் திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் மேற்படி வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வீட்டுத் திட்டம் அமைக்கும் பணியானது கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதேவேளை சகல வசதிக…
-
- 0 replies
- 590 views
-
-
யாழ் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ். செந்தூரன் (30 வயது) மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஊடகவியலாளர் செந்தூரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (30) பிற்பகல் மரண வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை, கோண்டாவில் புகையிரத வீதிக்கு அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள், இவர்களை வழி மறித்து பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%…
-
- 0 replies
- 571 views
-
-
மானிடத்திற்கெதிரான மாபெரும் படுகொலையினை அரங்கேற்றிய சிறிலங்கா சனாதிபதி இனப்படுகொலையாளி மகிந்த இராசபக்ச முக்கிய உரை ஒன்றினை பொதுநலவாயநாடுகளின் அழைப்பின்பேரில் யூன் 6ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆற்றுகின்றார். பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவு…
-
- 0 replies
- 614 views
-
-
பிரித்தானியாவில் புகலிடம் தேடிய டசின் கணக்கிலான தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இன்று சிறிலங்காவுக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் அகதிகளை ஏற்றிய - PTV030 என்ற இலக்கமுடைய, வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் லண்டன விமான நிலையத்தின்- வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்படவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்படவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதற்கான நம்பகமான சான்றுகள் உள்ள போதும் இந்த நாடுகடத்தல் இடம்பெறுவதாக ‘தி இன்டிபென்ட…
-
- 2 replies
- 878 views
-
-
ஒரு இனப்படுகொலையாளியை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க விடாதீர்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரித்தானிய மாகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானிய மகாராணியாரின் அழைப்பினை ஏற்று, லண்டனுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணம் தொடர்பில், பிரித்தானியா மாகாராணியாருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். தங்களின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதன் வழியே, இரத்தம் தோய்ந்த, தனது சர்வதேச போர்குற்றங்களை, மூடிமறைக்க மகிந்த ராஜபக்சவிற்கு வாய்பளிப்பதோடு, இத்தகைய குற்றவாளிகள், எதுவித அ…
-
- 0 replies
- 581 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக் கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். http://www.nakkheera...ws.aspx?N=76706
-
- 0 replies
- 1.2k views
-
-
சங்கிரிலா கலந்துரையாடல் எனப்படும் 11வது ஆசிய பாதுகாப்பு மாநாடு நாளைமறுநாள் சிங்கப்பூரில் ஆரம்பமாகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பாதுகாப்பு மாநாட்டை அனைத்துலக மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்புச்செயலர் லியொன் பனெட்டா மற்றும் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அவர் தெற்காசியாவில் அதிகரிக்கும் பாதுக…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் எனக் கூறி நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் அநாவசியமாக தலையிட்டதாகக் கூறியே தேசிய சுதந்திர முன்னணி இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது. நாடு முழுவதும் இராணுவ முகாம்களை எங்கு ஸ்தாபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே இருக்கின்றது என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்திருந்தார். இதன்பின்னர…
-
- 7 replies
- 827 views
-
-
புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச்செயலர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும். இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்…
-
- 16 replies
- 1.6k views
-
-
தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளைனயும்ää அவர்களுக்குப் புகலிடத்தையும் வழங்கிப் பராமரிப்பதை இந்தியா கைவிடப்போவதில்லை என்பதை லலித் அத்துலத்முதலியின் இந்திய விஜயம் கொழும்புக்குத் தெளிவாக உணர்த்தியது. இந்த நிலையில்ää இந்திய உதவியுடன் வடபகுதியில் தரையிறங்கி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடிய தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியது. சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவுடன் இராணுவத்தைப் பலப்படுத்துவதுதான் இதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தன அதற்கான திட்டங்களுடன் 1984 மே, ஜூன் மாதங்களில் சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொண்டார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியிலான ஆதிக்கத்தைச் ச…
-
- 0 replies
- 751 views
-
-
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்காவுடன் அதி உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவதில் இந்தியா பாராமுகமாக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinapp...?20120531106302
-
- 2 replies
- 964 views
-