Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீ…

    • 0 replies
    • 581 views
  2. சிறீலங்காவினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்பு இனஅழிப்பு போரினைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்னும் பிம்பம் ஒன்றை ஏற்படுத்தும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தற்போது தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதில் சிறீலங்கா அரசு திட்டமிட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தலிகளில் சிங்களத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக்கி அதை காலப்போக்கில் காணாமல் போகச் செய்ய, சிறுபான்மையிலும் சிறுபான்மயானவர்களே உபயோகிக்கும் மொழி என்னும் விழிப்புக்குள் கொண்டுவந்துவிட இன்னோரன்ன நகர்வுகள் மேற்கொள்ளப்…

    • 0 replies
    • 597 views
  3. ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார். இந்தநிலையில் அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் தொடர்ந்து பணியாற்ற தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் பிறேசில் அல்லது கியூபாவுக்கான தூதுவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்…

    • 4 replies
    • 889 views
  4. நல்லிணக்க அறிக்கை : ஆராயும் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கட்சியின் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சிறிலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய மெத்திவ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த குழுவினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு பரிந்து…

    • 0 replies
    • 429 views
  5. புதுக்குடியிருப்பு கோம்பாவில் 4ம் வட்டாரம் அரசடிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள வீடொன்றில் குப்பை எரித்த போது குண்டு வெடித்து பெண் ஒருவர் படுகாயமடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்கடியிருப்பு கோம்பாவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 37 அகவையுடைய அசோக்குமார் மனோரஞ்சிதம் என்ற தாயாரே படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேற்படி இப் பிரதேசத்தை ராணுவமே துப்பரவு செய்து மக்களுக்கு ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலதிக விசாரணைகளை …

  6. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் கோரி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பும் காணாமல் போனோரை தேடியறியும் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்குபற்றின. (படங்கள்: சமந்த பெரேரா) http://www.tamilmirr...9-12-11-11.html

  7. 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகள் கிடைக்காது என்பதை உலக சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும்' ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய …

    • 0 replies
    • 634 views
  8. சீனாவின் Union Pay வங்கி அட்டை நிறுவனம் சிறிலங்காவின் வங்கி அட்டைப் பாவனைக்குள் நுழைந்துள்ளது. சீனாவின் Union Pay வங்கி அட்டைகளை சிறிலங்காவில் உள்ள 500க்கும் மேற்பட்ட வங்கி அட்டை இயங்கிகளில் பாவனைகளில் பாவனைக்கு உட்டபடுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு சீனப் உல்லாச் பயணிகளை மேலும் உள்வாங்கும் நோக்கிலேயே சீன வங்கி அட்டைப் பாவனையினை ஊக்குவித்துள்ளதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவின் உட்கட்டுமானப்பணிகளில் மட்டுமல்ல தற்போது சிறிலங்காவின் உள்ளக குடியியல் கட்டுமானங்களுக்குள்ளும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வதையே இது காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.(News TGTE) http://www.eeladhesa...chten&Itemid=50

  9. தவறிழைத்திருந்தால் என் மகனுக்கு தண்டனைக் கொடுங்கள் - ஆனால் என் மகனை ஒரு தடவையேனும் பார்க்க விடுங்கள் எனது பிள்ளை எங்கிருக்கிறார் என்று தெரியாது தவிக்கின்றேன். எனவே எனது மகன் எங்கிருக்கிறான் என அறிவியுங்கள். ஒரு தடவையேனும் நான் எனது மகனை பார்க்க அனுமதியுங்கள் இவ்வாறு இன்று இடம்பெற்ற அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓர் அவலத்தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓர் தாய் கண்ணீர் மல்க இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். அத்த…

    • 0 replies
    • 571 views
  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி தாய்லாந்து பிரதமர் யின்லக் சினவத்ரா அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஜனாதிபதியை கெளரவிக்கும் முகமாக பிரதமர் சினவத்ரா பகல் போசன விருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி அவர்களின் தாய்லாந்துக்கான இவ்விஜயத்தின் போது இருதரப்பு அரசியல் ஆலோசனை தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்கின்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமான சட்ட உதவிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கை தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்ச…

  11. அனோமா! சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதான் தமிழ்த்தரப்பில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம். தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் அல்லது தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களை, இனங்கண்டு அவர்களை தன்னுடையவர்களாக மாற்றி விடக்கூடிய பலம் ஜனாதி பதியிடம் உண்டு. இதற்கு வாசுதேவ நாணயக்கார, டி.யு. குண சேகர, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற அடிப்படை யில் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தன் பக்கம் இழு…

  12. யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதுடன், அவ்விடங்களுக்கு பொலிஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய துதுவர் றொபின் மூடி குழுவினரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வாதார…

  13. சிறிலங்காவில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் கூட, இவர்கள் மீண்டும் தமது வாழ்வைக் கட்டியெழுப்புவதில் மிகக் கடினமான பிறிதொரு சூழலை எதிர்கொள்கின்றனர். "நான் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கிறேன். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதில் நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்வாதார முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்" என சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதாக ர…

  14. யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் உள ஆற்றுப்படுத்தற் பயிற்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைக் கல்லூரியின் உளவியற்துறை விரிவுரையாளரான சௌமியா றாமநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். "யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவத்தினர் முதலில் உளவியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனர். இவர்களுடன் பணியாற்றுபவர் என்ற வகையில் இதனை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர்" என ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பங்கு பற்றிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய றாமநாயக்க இவ்வ…

  15. சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோருவோருக்கு வி்டுதலைப் புலிகள் நிதியுதவி செய்கின்றார்கள் என்ற சிங்களத்தின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்கின்றார் அவுஸ்திரேலியத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ஆறுமுகம். சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் புகலிடம்கோருவோருக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி செய்வதாக அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குற்றஞ்சாட்டியிருந்தார். சிறிலங்காத் தூதுவரின் குற்றச்சாட்டை மறுதலித்த தமிழ் சங்கத் தலைவர், ”தூதுவரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கின்றதா?” எனவும் கேள்வியெழுப்பினார். அண்மைக் காலங்களில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்…

  16. தமிழ் மக்கள் தமது அரசியல் குடியியல் பொருளாதார சமூக கலாசார விடயங்களை தாங்களே நிர்வகிக்கும் ஆட்சி உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அரசியல் விருப்பமானது நியாயமானதும், தர்மத்தின்பாற்பட்டதும் என்பதையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அரசியல் விருப்பத்தை எட்டுவதற்காக நாங்கள் முன்வைக்கும் தீர்வானது வேறு எந்த இனத்தினதும் இறையாண்மையையோ, ஐக்கியத்கையோ கேள்விக்குட்படுத்தும் கபட நோக்கம் எதுவுமில்லாதது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சிங்கள சமூகத்திடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழினத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அங்கீகரித்து அவர்களையும் தமது சகோதரர்களாக அரவண…

  17. வெளிநாடு சென்ற சிங்கள அமைச்சர் ஒருவர் தனது தொலைபேசி செலவு அளவிற்கு அதிகமாக சென்றிருந்தது. அதனை விடுதலைப்புலிகள் என்ற ஒரே சொல்லால் நியாயப்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்த சிங்கள அமைச்சர் தெரிவித்தமை வருமாறு..சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இயங்கும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டை விற்பனை மையங்களில் 90 வீதமானவை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானவை. ஜெனிவாவுக்கு அண்மையில் தான் சென்றிருந்த போது, இது குறித்து அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் அனைவரும் இந்த கடைகளிலேயே கையடக்க த…

  18. நாடாளுமன்றத்தின் உதவி செயலாளராக பதவியமர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சையில் நாமல் ராஜபக்‌ஷவின் நண்பியொருவர் தெரிவுசெய்யப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு 85 பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும், இவர்களில் 12 பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். எனினும், நாமல் ராஜபக்‌ஷவின் அழுத்தத்தினால் அவரது நண்பியொருவரைத் தெரிவுசெய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக நாம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தோம். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 12 பேரின் விபரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. எனினும், இந்த உதவி பொதுச் செயலாளர் பதவிக்கு நாமல் ராஜபக்‌ஷவின் நண்பியான ”ஹரிபியா ஜயசுந்தர”வைத் தெரிவுசெய்ய வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், நேர்முகப் பரீட…

    • 0 replies
    • 701 views
  19. வெனிசுவெலா – கேராகஸ் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு மாத காலமாக வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். விசா எதுவும் இன்றி வெனிசுவெலா சென்ற குறித்த இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அதற்குக் காரணம் வெனிசுவெலாவில் இலங்கை தூதரகமோ அலுவலகமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரன் என்ற பெயருடைய குறித்த இலங்கை இளைஞன் கையில் இவ்வித ஆவணங்களும் இல்லாததால் விமான நிலைய கட்டடத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என பணிக்கப்பட்டிருந்தார். கையில் பணம் எதுவும் இல்லாமல் விமான நிலைய தொழிலாளர்களின் உதவியில் இருந்து வந்த பரமேஸ்வரன், விமான நிலைய கட்டடப் பகுதி ஒன்றில் உறங்கியதாகவும் பொது மலசலக்கூடத்தை கடந்த நான்க…

    • 0 replies
    • 495 views
  20. நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வளித்து, அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படையுங்கள். விசேட நீதிமன்றம் என்ற பழைய பல்லவியை பாடி காலத்தை இழுத்து அரசியல் செய்யாதீர்கள் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்காக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் இன்று (29) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்…

    • 0 replies
    • 199 views
  21. வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்ட பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இயங்கும் குடியரசுக் கட்டடத்துக்கு வருமாறு பிரித்தானியத் தூதுவருக்கு, அழைப்பாணை அனுப்பட்டது. நேற்று நண்பகல் அங்கு சென்ற பிரித்தானியத் தூதுவர் ரன்கின்னை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து, வடக்கில் இராணுவத் தலையீடு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். அத்துடன் சிறிலங்காவின் உள்நாட்டு கொள்கை விவகாரங்களில் தலையிட…

    • 0 replies
    • 395 views
  22. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆயுதம் தாங்கிய தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணாவின் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். பிக்கப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர்.…

    • 0 replies
    • 491 views
  23. ஆஸியில் பெண் காவலாளி முன், ஆடை களையப்பட்டு அச்சுறுத்தப்பட்ட இலங்கை அகதி! அவுஸ்திரேலிய சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை அகதி, பெண் காவலர்கள் முன் தனது உள்ளாடை களைய வேண்டும் என பணிக்கப்பட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். சுவேந்திரன் என்ற இலங்கை அகதி இது தொடர்பில் உளவுத்துறை பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். சுவேந்திரன் யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்ததுடன் மீண்டும் இலங்கைக்குச் செல்ல மறுத்து வருகிறார். இவர் கடந்த வாரம் சிட்னி குடிவரவு வீட்டுத் தொகுதியில் வைத்து பாதுகாவலரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது காற்சட்டை களையப்பட்டு தான் சோதனை செய்யப்பட்டதாக சுவேந்திரன் வில்லாவூட் முகாமில் …

    • 0 replies
    • 803 views
  24. மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகுவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது. ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது பாதுகாபப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த ஒன்றுகூடலுக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழத் தாயக …

  25. சரத்பொன்சேகா! உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால் காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். விடுதலையின் மகிழ்வை, மதிப்பை உணர்ந்த ஒரு நாள் பொழுதினை நீங்கள் கடந்திருக்கின்றீர்கள். ஆதரவாளர்கள், உறவினர்கள், அன்பு மகள்கள், மனைவி,, என அத்தனை பேரின் அன்பிலும், ஆரத் தழுவலிலும் நிச்சயம் இன்புற்றிருப்பீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்திருப்பீர்கள். விரும்பாவிட்டாலும் சிறைச்சாலை உணவை ஒப்பிட்டுப் பேசியிருப்பீர்கள். அதற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்திருப்பீர்கள். உங்கள் விடுதலைக்காய் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த, தேவைப்பட்ட இடங்களில் பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.