Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி கடந்த 08 ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு சென்ற பேருந்தில், விடுமுறைக்கு சென்று வந்த இராணுவத்தினர் பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து பயணத்திற்கு இடையூறு விளைவித்த வண்ணம் வந்துள்ளனர். இதனை அவதானித்த இப்பேரூந்தில் பயணம் செய்த இளைஞர்கள் சிலர் தடுக்க முயன்றுள்ளதுடன் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் சிவில் உடையில் குடிபோதையில் இருந்த இராணுவத்தினர் தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருந்தமையினால், குறிப்பிட்ட இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. அவ்வேளையில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆனைவிழுந்தானை பேரூந…

    • 0 replies
    • 784 views
  2. மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜோசப் இராயப்பு ஆண்டகை இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜெனீவா விவகாரம் சூடுபிடித்திருந்த காலப்பகுதியினில் வட-கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் வெளியிடப்பட்ட அமைப்புக்களது அறிக்கைகள் தொடர்பினிலேயே இவ்விசாரணைகள் நடந்திருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய் நேரடியாக ஆயர் இல்லததிற்கு நேரில் விஜயம் செய்த சிறீலங்கா குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இருவரே விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இதனிடையே கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜோசப் இராயப்பு ஆண்டகை அழைக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளிவ…

  3. இலங்கையின் வடக்கில்கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது. போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார். பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பா…

  4. ஒரு போராளியாக தலைவருடனும், அவர் எண்ணங்களுடனும் வாழ்ந்தவன், வாழ்ந்து வருபவபன் என்ற முறையில் தற்போதைய விடயங்கள் சில எனக்கு கவலை தருகின்றன. அண்ணை போராட்டத்தை அமைதியாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையளித்த போது போராட்டத்தை தொடர்ந்தும் உலக மயப்படுத்தி வலுச்சேர்ப்பீர்கள் என்றே எதிர்பார்த்தோம். முள்ளிவாய்க்கால் என்பது பேரவலம். இனப்படுகொலை. சிங்களம் சர்வதேச விதிகளை மீறிப்புரிந்த போர்குற்றங்கள். தமிழர் எம்மைப் பொறுத்தவரை ஆறாதவடு. எமது விடிவை நோக்கி எம்மை நாளும் உத்துவேகம் கொள்ள வைக்கும் இயங்குசக்தி. எமது நீண்ட விடுதலை வரலாற்றில் நாம் சந்தித்த இழப்புகள் நீங்கள் அறியாதவையல்ல. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் அந்த இழப்பின் சுவடு இருக்கிறது. ஒவ்வொரு முறை நாம் விழுந்தபோ…

  5. ‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’- மீனா. (தீராநதி) போரிலே வெற்றி பெற்றவர் மகிந்த ராஜபக்ஷ. போரிலே வெற்றியீட்டிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம். போரின் வெற்றிக்காக உழைத்த முக்கியமானவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. 2009 மே மாதத்தில் வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தவர்கள் இவர்கள் அனைவரும். ஆனால் இன்று? இன்று அதிகமதிகம் நிம்மதியிழந்தவர்களாக, பதற்றத்துக்குள்ளாகியுள்ளவர்களாக இருப்பது மேற்குறிப்பிட்டோரே. ஒ…

  6. இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமின்றி, மிகப் பகிரங்…

  7. 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறீலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜய…

    • 0 replies
    • 446 views
  8. தமிழக அரசியல் கட்சிகள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை …

    • 0 replies
    • 583 views
  9. முல்லை மாவடம் விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளி நொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் விசா ரணை நடத்திவரும் பொலிஸார், சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவத்தினர் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றி டம் நேற்று அனுமதி கோரினர். அதற்கு அனுமதி வழங்கிய கிளிநொச்சி நீதிமன்றம், இராணுவத்தினர் மூவரதும் துப்பாக்கிகளையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி அந்தப்பகுதிஇராணுவப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த அன்றே விசாரணை நடத்தச் சென்ற சமயம், இது இராணுவத்தினர் தொடர்புபட்டது என்ற காரணத்தால் இராணுவ…

  10. 'கண்ணிவெடிகள் அகற்றப்படாததால்தான் இதுவரை வடக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தபடவில்லை என்று அரசாங்கம் வெட்கமில்லாமல் பொய் சொல்கிறது. கண்ணிவெடி காரணமாகத்தான் தேர்தல் நடத்தாமல் இருக்கின்றோம் என்று உலகத்தை நம்பவைக்க அரசாங்கம் நடத்தும் நல்ல நகைச்சுவை நாடகம் இதுவாகும். இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவருக்கு ஒஸ்கார் விருதையே வழங்கலாம்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அற…

  11. சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியா சிறிலங்காவுடன் இன்னமும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக ஜெனீவா வாக்கெடுப்பை பயன்படுத்தலாம் என ராஜபக்ச நம்பியிருந்தார். இவ்வாறு நேப்பால் நாட்டை தளமாகக் கொண்ட Himal Southasian என்னும் ஊடகத்தில் Ajaz Ashraf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியா மீது அதிருப்தி கொண்டுள்ளதுடன், இவ்வாறான சதித் திட்டத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் சிறிலங்கா மத்திய அ…

  12. சிறிலங்காவில் தமிழர்கள் ‘இனப்படுகொலை‘ செய்யப்பட்ட போது அதை மத்திய அரசோ, அதன் மாநிலக் கூட்டாளியான திமுகவோ தடுப்பதற்கு முன்வரவில்லை என்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று ஆரம்பமான பாஜகவின் மாநில மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய அவர், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு சிறிலங்கா முக்கியமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நான் கொழும்பிடம் கூறியுள்ளேன். சுஸ்மா சுவராஜின் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றில் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.“ என்றும் குறிப்பிட்…

  13. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்தான் தமிழ் ஈழம் கோருகிறார்களே தவிர,இலங்கை தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவியுமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,”தமிழர் பிரச்னைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, இலங்கையைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை. சமீபத்தில் எனது தலைமையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலை குறித்து அறிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் குழு ஒன்று சென்றது.இலங்கை செல்வதற்கு ம…

  14. ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான தாமரா குணநாயகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் அடுத்த கூட்டத் தொடரைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த அவசர இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும், ஒரு தமிழர் என்ற காரணத்தினால் தாமரா குணநாயகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் பழிவாங்கப்பட்டிருப்பதாக வேறு சில இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! இராஜதந்திரப் பதவி நிலையைப் பொறுத்தவரையில் தாமரா குணநாயகம் மிகவும் உயர்ந்…

  15. விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு, புலனாய்வு பிரிவின் முன்னாள் மேஜர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ஜீவன் என அழைக்கப்படும் 28 வயதான சுப்பையா கிருஷ்ணகுமார் என்ற நபரே கைதாகியுள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் சந்தேகிக்கும் வகையில் நடமாடிய நபரை கைதுசெய்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த நபர் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ள தகவல் இதன்போது தெரியவந்துள்ளது. தான் புலிகளின் பிஸ்டல் குழுவில் இருந்த போது, மூன்று இராணுவ அதிகாரிகளையும், மூன்று பொலிஸ் அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றதாக வாக்குமூலமளித்துள்ளார். தனது உத்தரவின் பேரில் நந்திக்கடல் பகுதியில் பெருந்தொகையான ஆயூதங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். கைதுசெய…

    • 1 reply
    • 745 views
  16. மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாஜகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர். இதுகுறித்து தகவல் வெளியிட்ட பாஜகவின் தேசிய செயலர் முரளிதரராவ், இலங்கை தமிழர் விவகாரம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜும் விளக்கிக் கூறவுள்ளனர் என்று தெரிவித்தார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கட்சியின் மூத்ததலைவர் அத்வானி ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எ…

    • 5 replies
    • 1.2k views
  17. தம்புள்ளை சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மகிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று அடாவடித்தனம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு மகிந்தர் உத்தரவி…

    • 8 replies
    • 2k views
  18. பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாக பல்கலைக்கழ ஆசிரியர் சங்கப் பேச்சாளர் மகின் மென்டிஸ் தெரிவித்துள்ளார். கல்வி முறைமை குறித்து கல்வி அமைச்சின் செயலாளருடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் தர்க்கம் ஏற்பட்டதால் அமைச்சிலிருந்து வலுக்கட்டாயமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட ஆசிரியர்கள் வீதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே மேற்கண்ட கருத்து தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் முன்அனுமதியைப் பெற்றிருந்தனர். எனினும், பல்கலை…

    • 0 replies
    • 611 views
  19. தங்களது வெசாக் பந்தலை மாடு உண்டதால் மாட்டின் உரிமையாளனான சிறுவனைச் சுட்ட இராணுவம் விசுவமடுவில் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அமைக்கப்பிருந்த வெசாக் சோடினைகளைல் ஒன்றை அங்கே மேந்துகொண்டிருந்த மாடு உண்டதைக் கண்ட சிங்கள ரணுவச் சிப்பாயொருவன் அந்த மாட்டின் உரிமையாளனான 17 வயது இளைஞனைச் சுட்டுக் கடுமையாக காயப்படுத்தியிருக்கிறது. Tamil boy shot by Sinhala military for cattle mangling ‘Buddhist’ decoration [TamilNet, Tuesday, 08 May 2012, 23:02 GMT] At the height of a show of ‘victor's supremacy’ in the country of Eezham Tamils, a 17-year-old Tamil boy, S. Krishnakumar of Kumaarasaami-puram village in Visuvamadu in Mullaith-theevu district, was shot an…

    • 4 replies
    • 2k views
  20. தேன்கூடு ஒரு திரைப்படம் அல்ல அது எமது விடுதலை போராட்ட வரலாறு – சீமான் (காணொளி).

    • 0 replies
    • 648 views
  21. பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டே இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? இலங்கையின் எந்தவொரு பகுதியையும் உங்களின் தாயகம் என்று கூற முடியாது.தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள். …

  22. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விதந்துரைகளை செயல்படுத்துவதில் நீதியமைச்சிற்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நோர்வே தூதுவர் ஹய்டி ஹரல்ட்ஸ்டட்டிடம். தெரிவித்தார். நோர்வே தூதுவர் ஹய்டி ஹரல்ட்ஸ்டட் நேற்று வியாழக்கிழமை (10) முற்பகல் நீதியமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் நோர்வே தூதுவரிடம் மேலும் தெரிவித்ததாவது; கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் விதந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. அது தொடர்பான கருத்துக்களை அரசிற்கு தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா மு…

  23. இலங்கையில் போருக்குப் பின்னர் வடமாகாணம் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிவருவதை அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் காட்டுகின்றன. கடந்த பரீட்சை முடிவுகளின்படி, நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் வடமாகாணம் 9 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது பலதரப்பினர் மத்தியிலும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. நாட்டில் ஒப்பீட்டளவில் வடமாகாணம் கல்வியில் முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது. எனினும் இந்த பரீட்சை பெறுபேற்றின் மூலம் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கு 56.26 வீதமான மாணவர்களே இம்முறை வடமாகாணத்தில் தகுதி பெற்றிருக்கின்றார்கள். முதலிடத்தைப் பெற்றுள்ள மேல் மாகாணத்தில் 66.56 வீதமான மாணவர்கள் உயர்தர…

  24. மார்கழி,21 .2012 என்ன தான் நடக்கும்........... http://www.youtube.com/watch?v=K5nE1HVuyvA&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=Aj-UWZOQ2QU&feature=player_embedded http://www.youtube.com/watch?v=SaOqTlxpQTM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=YJlAMcMmDMk&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=GZ723ZjeTds&feature=player_embedded http://www.youtube.com/watch?v=c56E_4Fim08&feature=player_embedded http://www.youtube.com/watch?v=zNE10UL0AjI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=dyY0axISFns&feature=player_embedded http://www.youtu…

  25. பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு அரசு சார்பாக பதிலளித்து அமைச்சர் டக்ளஸ் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அரியநேத்திரன் உள்ளிட்டோர் அவருடன் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த டக்ளஸ் தேவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.