ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வொசிங்டனில் வரும் 18ம் நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காகச் செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில், சிறிலங்காவின் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்கா செல்லும் குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜின் வாஸ் குணவர்த்தன, நாமல் ராஜபக்ச மற்றும் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் இடம்பெறுவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வொசிங்டனில் சிறிலங்கா க…
-
- 0 replies
- 559 views
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [தவமணி, வசந்தராணி மற்றும் சாரதா ஆகிய மூன்று பெண்கள் குழு கலந்துரையாடல் ஒன்றின் மூலம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.] தவமணி: யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது, எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்ததால் நாங்கள் அனைவரும் வெளியில் நடமாட முடியாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஏ.பி.சி ஊடக வலையமைப்பு தனது முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையான ஹிரு டி.வியின் ஒளிப்பரப்புகளை இன்று ஆரம்பித்துள்ளது. தொலைக்காட்சி சேவைக்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு அதிக கூடிய முதலீடு இதுவாகும். இந்திய வர்த்தக தொலைக்காட்சிகளை போன்ற புதிய வர்ணஜாலங்களுடன் இந்த தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 95 வீதமான பிரதேசங்களில் துல்லியமாக தெரியக் கூடிய வகையில் ஒளிப்பரப்பை செய்யும் முதலாவது தொலைக்காட்சி ஹிரு டி.வியாகும். தற்போது நாட்டின் பத்து இடங்களில் இருந்து பரீட்சார்த்த ஒளிப்பரப்புகள் நடத்தப்பட்டு வருகிறன. இந்த தொலைக்காட்சியை யு.எச்.எப் அலைவரிசை ஊடாக நாடு முழுதுவம் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டி, டிஜிட்டல் ரீடி தொழிற்நுட்பத்தில் ஆரம்பிக்கப…
-
- 0 replies
- 713 views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் தோல்வியடைந்ததன் காரணமாக மீண்டும் தன்னை லத்தீன் அமெரிக்காவுக்கு அனுப்ப அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தான் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அது குறித்தான் தான் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு விபரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் குறுகிய காலத்தில் அறிவித்து, ஜெனிவாவில் இருந்து செல்ல தயாராகுமாறு அமைச்சர் பீரிஸ், தமரா குணநாயகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். கடந்த 28 ஆம் திகதி குணநாயகத்தை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ள அமைச்சர், விரும்பினால், கியூபா அல்லது பிரேசில் நாட்டில் தூதுவராக நியமிக்கலாம் என குறி…
-
- 0 replies
- 503 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமிகள் இருவரைக் கடத்தியதாக தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அதன் நடத்துநரும் சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது: பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவர் துணைக்கு தனது நண்பியையும் அழைத்துக்கொண்டு மாங்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வவுனியா செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார். சிறுமிகள் இருவரும் மாங்குளம் பஸ் நிலையத்தை வந்தடைந்த போதும், தாம் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினர். இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த பஸ்ஸின் சாரத…
-
- 0 replies
- 508 views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளை உடனே கைது செய்து தம்மிடன் தருமாறு சிறீலங்கா அரசு சர்வதேச பொலீஸான இன்ரபோலிடம் கோரியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு. நாடு கடந்து செயற்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களைக் கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு சர்வதேச பொலிஸான இன்ரபோலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நாடு கடந்து செயற்படும் புலி உறுப்பினர்கள் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே இலங்கை அரசு இந்த அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது விடயம் குறித்தான கடிதத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சு சர்வதேச பொலிஸ் தலைமையகத்துக்கு …
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் உள்ள தடைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று அடுத்த வாரம் இந்தியா பயணமாகிறது.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் குழு அங்கு செல்கிறது. இந்தக் குழுவினர் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது உள்ள தடைகள், இலங்கை அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள், இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் என்பன உட்பட பல விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் பிரதிநிதி…
-
- 0 replies
- 611 views
-
-
அரியாலை கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப் பட்டாலும் அவர்கள் அமைத்த சிறிய புத்த விகாரை மாத்திரம் நிலைத்து நிற்கிறது. மண்ணும் கற்களும் வைத்துக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை யாழ்நகரில் வதியும் பிக்குகள் மேற்ப்பார்வை இடுகின்றனர். இந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப் படுத்தக் கூடாதென்று பொது மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இராணுவத்தினரின் வழமையான செயற்பாடு. முகாம் சூழலில் ஒரு விகாரையை அமைப்பார்கள் அல்லது ஒரு புத்தர் சிலையை நிறுத்துவார்கள். அவை அமைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி இராணுவத்தினர் கவலைப் படுவதில்லை. இராணுவம் பிற இடத்திற்கு நகர்ந்தாலும் முன்பு அமைக்கப்பட்ட விகாரையும…
-
- 0 replies
- 730 views
-
-
தமது உறவினர்களை பார்க்க வருவதாக் கூறி தமிழ் டயஸ்போராக்கள் (புலம்பெயர் தமிழர்கள்) 23000 பேர் கடந்த 12 மாதங்களுக்குள் இலங்கை வந்துள்ளனர் எனத் தெரிய வருவதாக திவய்ன பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானனோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணுவோரின் ஆதரவாளர்களாவர் என்கிறது. இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கனடாவில் வாழ்பவர்களாவர். இலங்கை அரசாங்கம் தங்களைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறி 29 வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றவர்களே இவர்களாவர். கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் இலங்கை வந்து செல்வதை கனேடிய அதிகாரிகளும் அவதானித்து வருகின்றனர் எனவும் திவய்ன தனது இன்று கண்டுபிடித்துள்ளது. http://www.seit…
-
- 0 replies
- 680 views
-
-
சிறிலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடையாள சின்னமாகும். தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அடையாள சின்னமான சிங்க கொடியை எரித்ததற்காக எத்தனை இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எத்தனை இளைஞர்கள் சிறை சென்றனர். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை கொன்றொழித்த சிங்கள இராணுவம் எந்த சிங்க கொடியை வெற்றிக்கழிப்போடு ஏற்றி வைத்ததோ அதே சிங்கள பேரினவாத சிங்க கொடியை இன்று ரணில் விக்கிரசிங்காவுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உயர்த்தி பிடித்திருப்பது கண்டு சிறிலங்காவில் அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களும், கல்லறைகளில் வாழும் மாவீரர்களும் கண்ணீர் வடித்திருப்பா…
-
- 47 replies
- 5.6k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால் இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்டமிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார்கள்! இவ்வாறு தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விகளுக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம் விகடன் மேடையில் கேட்கப்பட்ட இலங்கை தொடர்பான கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு: கேள்வி: நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது பொலிஸ் உறவினர் ஒருவர்… அப்படியா? நீங்கள் அதை எ…
-
- 1 reply
- 619 views
-
-
கோதாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரிடையே இருந்துவந்த பனிப்போர் தற்போது மோதலாக வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதென மிகவும் நம்பகரமான தகவல் மூலம் தெரியவந்துள்ளது. பசில் ராஜபக்ஷ அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பகிரங்க ஆதரவு வழங்கி வரும் நிலையில், கோதாபய ராஜபக்ஷ அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக களனி பிரதேச சபை உறுப்பினர்களை பாதுகாப்புச் செயலாளர் பயன்படுத்தி வருகிறார். இந்தப் பனிப் போர் தற்போது ராஜபக்ஷ சகோதரரிடையே மோதலாக வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. களனி தொகுதி அமைப்பாளராக அமைச்சர் மேர்வின் சில்வாவைத் தவிர வேறொவரையும் நியமிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் பசில் ராஜபக்ஷ உறுதியாக இருந்து வருகிறார். கடந்த வாரம்…
-
- 0 replies
- 707 views
-
-
இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானம் சர்வதேச அளவில் ராஜபக்சே அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மசூதி இடிப்பு சம்பவம் ராஜபக்சேவின் இனவெறி முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. சிங்கள இனவெறியர்களின் இந்த செயலைக் கண்டித்தும், அதற்குத் துணை நிற்கும் ராஜபக்சே அரசைக் கண்டித்தும் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார். இதன்படி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திருமாவளவன் உள்பட 150 ப…
-
- 1 reply
- 542 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்ப…
-
- 6 replies
- 625 views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழீழம் அமைதல் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. கூறுவதை ஆதரிக்க தி.மு.க.வுடன் கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை நடவடிக்கைகளாகும் என அவர் கூறினார். தமிழீழ ஆதரவு நிறுவனத்துக்கு புத்துயிரளிக்கும் தி.மு.க.வின் செயல் அதன் காங்கிரஸுடனான உறவைப் பாதிக்குமா எனக் கேட்டபோது, வாசன் நேரடியாகப் பதில் கூறாது காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகக் கூடியளவில் உதவியது எனவும் மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானத்தை ஆதரித்தது எனவும் கூறினார். http://ww…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாட்டைப் பிரிக்கும் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் சதித் திட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் அவதானத்துடன் இராஜதந்திர காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சரத்பொன்சேகாவை ஐ.தே.க. வின் தலைமைத்துவத் திற்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி நிரலையும் அமெரிக்கா தயாரித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், இந்திய விஜயம் மற்றும் எமது நாட்டுக்கு எதிரான அறிக்கை என்பவற்றைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவையனைத்து…
-
- 1 reply
- 689 views
-
-
மேலும் இரு சன் சீ கப்பல் அகதிகளை நாடு கடத்துமாறு உத்தரவு 492 இலங்கையர்களை ஏற்றியவாறு பிரிட்டிஷ் கொலம்பியா வழியாக கனடாவைச் சென்றடைந்த எம் வி சன் சீ கப்பலில் இருந்து மேலும் இருவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஒருவரையும் புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதான குற்றத்தில் மற்றுமொருவரையும் நாடு கடத்துமாறு கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சன் சீ கப்பலில் சென்ற 19 பேர் இதுவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=24980
-
- 0 replies
- 479 views
-
-
மேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூ…
-
- 5 replies
- 1.5k views
-
-
வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தினையடுத்து பொதுமக்கள் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டு இளைஞர்கள் ஊர்தியினை சேதப்படுத்தியதினை தொடர்ந்து படையினர்குவிக்கப்பட்டு இளைஞர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இன்று மட்டக்களப்புக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்துக்காக சென்றுள்ளனர்.இந்த நிலையில் வந்தாறுமூலை அம்பலத்தடிக் கருகில் வீதியைக் கடக்க முனைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள் மீது அந்த தொடரணியில் வந்த ஐக்கிய நா…
-
- 1 reply
- 689 views
-
-
யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/40246-2012-05…
-
- 21 replies
- 1.9k views
-
-
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவொன்று இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. ஜீன் லம்பட் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் , மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பி மலை கிராமத்திற்கு சென்று ஐரோப்பிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர். அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் குடும்பிமலை குளத்தையும் பார்வையிட்ட இக்குழுவினர் , குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர். இதையடுத்து இன்று மாலை ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு …
-
- 0 replies
- 680 views
-
-
இலத்திரனியல் பொருட்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டு கிறீஸ் நாட்டிலிருந்து கொழும்புக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான இரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகைகளை சுங்கத் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கூடாக இன்டர்போல் அதிகாரிகள் வழங்கிய தகவல் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டன. பல மில்லியன் ரூபா பெறுமதியான தங்க மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் இரத்தினங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. கிறீஸில் பணியாற்றிய இலங்கைத் தம்பதியொன்றினால் இவை அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவனும் மனைவியும் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கணவர் கிறீஸ் தலைநகர் ஏதென்ஸில் நகையகமொன்றில் பல வருடங்கள் பணியாற்றியவராவ…
-
- 0 replies
- 1k views
-
-
மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று மே-03 ம் திகதி யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் மே-03 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் மறைந்த ஓவியர் பயஸின் காலக்கிறுக்கல்கள் எனும் கேலிச்சித்திரங்களின் தொகுப்பு நூலாக வெளியிட்டு வைக்கப்பட்டவுள்ளது. நமது ஈழநாட்டின் ஆஸ்தான ஓவியராக பணியாற்றிய பயஸ் வன்னி பேரவலத்தினின் கடைசி கணம் வரை தப்பித்த போதும் சித்திரவதைகளால் பலவீனப்பட்டுப்போன பயஸின் உடல் நிலை கடைசி கணங்களில் ஈடுகொடுக்க முடியாது அகால மரணத்தை தழுவி கொண்டார். அவரை கௌரவிக்கும் வகையிலேயே நிமலராஜன் ஞாப…
-
- 0 replies
- 473 views
-
-
ஹட்டன் நகரை அண்மித்து வாழும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து இன்று காலை ஹட்டன் நகரில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் ஒன்று கூடிய பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மாடுகளை அழைத்துவந்து லொறியில் பாலையும் கொண்டுவந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து மில்கோ அரச நிறுவனம் உள்ளிட்ட ஏனைய சில தனியார் நிறுவனங்களும் பாலை கொள்வனவு செய்து வந்தனர். எனினும் கடந்த சில வாரங்களாக குறித்த நிறுவனங்கள் பால் கொள்வனவு செய்ய மறுத்து வருவதாகவும் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட பால் போதியளவு இருப்பில் இருப்பதாகக் கூறி வருவதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாட்டிற்கு முதலிடம் என்ற தொனிப் பொருளில் ஆளும் கட்சி மே தினக் கூட்டத்தை நடத்திய போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணிக்கே மே தினத்தில் முதலிடம் வழங்கப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இதற்கு ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்தர் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தினர். ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னணியில் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியே பயணித்துள்ளது. இதுவரை காலமும் ஆளும் கட்சி மே தினப் பேரணியில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பதாகையுடன் கூட்டமைப்பின் தலைவர்களும், அதனையடுத்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதாதையுடன் அந்தக் கட…
-
- 0 replies
- 913 views
-