Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யில் உருவாகிய உட்பூசலைத் தொடர்ந்து தனியான அணியை உருவாக்கிய பிரேம்குமார் குணரட்ணம் சனிக்கிழமை அதிகாலை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். அதிகாலையில் வாகனம் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்று அவர் தங்கியிருந்த வீட்டை உடைத்து அவரைத் தூக்கிச் சென்றிருக்கின்றது. அவருடன் கட்சியின் மகளீர் அணிக்குப் பொறுப்பான திமுது என்பவரும் மற்றொரு இடத்தில் வைத்துக் கடத்தப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவங்கள் பிரேம்குமாரின் பக்கம் அனைவருடைய கவனத்தையும் மீண்டும் ஒருமுறை திருப்பியிருக்கின்றது. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்டக்குழுவினர் அமைத்த புதிய கட்சியின் ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை …

    • 1 reply
    • 1.3k views
  2. பாதுகாப்புக் கடமையில் நின்றுகொண்டு இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் அருகில் இருந்த மரம் ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இரவு கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சிப்பாயினது சடலம் இன்று காலை மரத்திலிலுள்ள கொப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் 7 பற்றாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சாந்த (வயது47) என்ற அம்பாறை மாவட்ட சிங்களப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். எனினும் மேற்படிச் சிப்பாயின் மரணம் தொடர்பாக இராணுவத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் தற்போது சடலம் கிளிநொச…

  3. சிறிலங்கா அரசுடன் நடத்தும் பேச்சுக்களுக்கு மூன்றாம்தரப்பு நடுநிலை தேவை என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பேச்சுக்களில் மூன்றாம்தரப்பு நடுநிலை வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல. நாம் மூன்றாம்தரப்பின் நடுநிலையைக் கோரப் போவதில்லை. பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படுவதென்பது சிறிலங்கா அரசின் கைகளில் தான் உள்ளது“ என்றும் அவர் கூறிய…

  4. பர்மிய ராணுவ ஆட்சியாளர்களிடம் இலங்கை பாடம் படிக்க வேண்டும்..! மனோ கணேசன் சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி. அவர் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று இலங்கையில் இருக்கிறார்கள். இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்மிய ராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து,இலங்கையின் ஜனநாயக ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டில் எப்படி உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில், இலங்கை ஜனாதிபதி பர்மிய ராணுவ ஆட்சியாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பிலான மக்கள் இயக்க கூட்டம் களுத்துறை நகரசபை மண்டபத்த…

    • 0 replies
    • 398 views
  5. அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித்தமை …

    • 1 reply
    • 529 views
  6. தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம் தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவா போகவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விடயங்கள் உள்ளமையால் இந்த தூதுக் குழுவில் அங்கு போய் பல விடயங்களை கதைக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டார். ஜெனீவா தீர்மானம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், …

  7. லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும். இந்த நடவடிக்கை…

  8. நல்லிணக்க ஆணைக்குழுவின் மும்மொழிவுகள் எல்லை மீறியதாக அமைந்துள்ளதாக சிறீலங்கா அரசாங்க தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தநிலைகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையானது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. இலங்கையின் தேசிய விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென்றுதெரிவித்தே நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் சிறீலங்கா அரசாங்கம் …

  9. பேச்சுக்களின் போது முன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இலங்கையின் பிரச்சினை தொடர்பில் தெரியாது. உள் நாட்டிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும்.இவ்வாறு அரச தரப்புப் பேச்சுக் குழுவில் அங்கம் வகிப்பவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேய சிங்க தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரச தரப்புடனான பேச்சின் போது மூன்றாந் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்று தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு: ஜனாதிபதி மஹி…

  10. வடக்கில் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டி, அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைக ளுக்கு மகிந்த அரசு தீர்வை வழங்கினால் தமிழ்மக்கள் தனிஈழத்தைக் கோரமாட்டார்கள் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், தீர்வு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கைவிடவே மகிந்த அரசு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம், நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகை ஆகியவை குறித்து கருத்து வெளியிடும் போதே ஜே.வி.பியின் பொதுச் செயலாளர…

  11. தமிழர் பகுதிகளில் ஆய்வு: இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம் தமிழர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக இந்திய எம்.பி.க்கள் குழு மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா வருகிற 16 ம் தேதியன்று பத்து நாள் பயணமாகஇலங்கை செல்கிறது. இலங்கையில் கடந்த 2009 ல் நிகழ்ந்த இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் தமிழர்களின் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. போர் ஓய்ந்ததும் ஈழத்தில் சீரமைப்புப் பணிகளை வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை செய்து வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை, அதை ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தாமல் ஈழத்தை சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய் அரசின் கவனத்திற்…

    • 11 replies
    • 910 views
  12. சிறிலங்கா எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்கவுள்ளார். மஹிந்த இராஜபக்‌ஷ மீதான அதிருப்தியினால் சிறிலங்கா மீதான வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறிலங்காவில் உள்ள பிரச்சினைகளை இந்தியாவுடன் இணைந்து தீர்க்க முடியும் எனவும் ரணில் கோருவார் என இராஜ தந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

    • 7 replies
    • 1k views
  13. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர். பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியைய…

    • 3 replies
    • 1.2k views
  14. எல்லையைத் தாண்டினால் கைது செய்வோம்!- இலங்கைக் கடற்படையினர் எச்சரிக்கை இராமேஸ்வரம் மீனவர்கள் அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட கடல் எல்லையைத் தாண்டி வந்தால் அவர்களை கைது செய்வோம் என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ம் திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் நள்ளிரவு கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அவர்கள் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாது அச்சத்தின் காரணத்தினால் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். இதுகுறித்த…

    • 3 replies
    • 929 views
  15. நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ந்து, அமுல்படுத்த முடியும்.முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி பூரண ஆதரவளிக்க…

    • 1 reply
    • 578 views
  16. நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ந்து, அமுல்படுத்த முடியும்.முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி பூரண ஆதரவளிக்க…

    • 0 replies
    • 559 views
  17. பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்; விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவிப்பு தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டி…

    • 8 replies
    • 1.3k views
  18. http://www.newsalai.com/2012/04/blog-post_9375.html டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! Written By Admin on சனி, 7 ஏப்ரல், 2012 | 4:59 PM டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! பிரபல Time இதழின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி ம…

  19. மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன. மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக …

  20. ஜெனிவா கூட்டத் தொடர் அடுத்தமுறையும் வரும்; அரசை எச்சரிக்கிறார் சுரேஷ் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. அடுத்த தடவையும் ஜெனிவா மாநாடு உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு அது செயற்படவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாது என்ற தொனியில் அரசு கருத்து வெளியிடுகின்றது. அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். வேறு எந்தவித உபாயங்களும் கையாளப்பட மாட்டா என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தீர…

  21. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வேறு புலம்பெயர் புலி ஆதரவுத் தமிழர்கள் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ளாது குழம்பிப் போயுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அரசாங்கம் இன்று புதுக் கதையொன்றை கூறுகிறது. அரசாங்கம் இப்பிரரச்சினையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் புலம்பெயர் தமிழர்கள் குழு வேறு அதேவேளை புலம்பெயர் புலி ஆதரவாளர் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறித்து புரிந்து கொள்ளல் வேண்டும். அதைவிடுத்து அனைத்தையும் ஒரே …

    • 2 replies
    • 656 views
  22. சிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரகசிய சரணாகதி? ஐ.நா.: ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவை பாராட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இலங்கையைப் போன்று இரகசியமான முறையில் அதிகளவுக்கு சாதகமாக செயற்படும் விடயமா? என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ தனது செய்தி ஆய்வில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது; இன்றைய ஐ.நா.வில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பங்களிப்பு பலவழிகளில், (சிலர் கூறுகின்றனர் வெட்கக் கேடான) ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தை பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார் என்று ஐ.நா.வுக்கான …

    • 0 replies
    • 1.1k views
  23. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை…

    • 5 replies
    • 1.3k views
  24. வடக்கு - கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் உள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்த விதமான உண்மையும் இல்லை என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருப்பதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த பகுதிகளின் உள்ளார்ந்த பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் படையினர் மேற்கொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தற்போது உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன. இருப்பினும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு எந்த விதமான ஆதாரங்களும…

    • 1 reply
    • 932 views
  25. வடமாகான ஆளுநரின் தலையீட்டினால் மக்களுக்கான தங்களது பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண அரச நிர்வாகத்தில் மாகாண ஆளுநர் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதால் தங்களால் பணிகளைச் சுதந்திரமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை என வடக்கு உயரதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆளுநர் தங்களை அடியாள்கள் போல நடத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தனது மாகாண சபை விடயங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் தலையீடு செய்வதாகவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் உயர்மட்ட அரச அதிகாரிகளையும் தனது கட்டளைக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என வற்புறுத்…

    • 1 reply
    • 851 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.