ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாக உள்ள நிலையில், தனக்கு முழு அளவில் அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்டதொரு வெளிநாட்டு ஊடகவியலாளர் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைக்குழுவில் சில்வாவை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுக்கள் சிலவற்றால் அவருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. இலங்கைக்கெதிராக குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளர் எப்போதுமே தரக்குறைவான நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சில்வா அரச வானொலிக்கு…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்! சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நகர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்பனிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென்னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தென்னாசியாவில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா மாறியது. எல்லா நாடுகளும் இந்தியா நமது தொப்புள் கொடி உறவு, இந்தியாவை பகைத்து எதுவுமே செய்ய முடியாது என்று பேசியபடியே இரகசியமாக சீனாவுடன் கை கோர்த்துவிட்டன. இந்தியாவுக்கு ஆதரவாக இ…
-
- 7 replies
- 1.5k views
-
-
மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க கடந்த 13ஆம் தேதி செந்தமிழன் சீமான் பரப்புரை செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியிலும், சயான் கோல்லிவாடாவிலும் சீமான் பேசினார். அப்போது ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசுக்குத் துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தமிழர்கள் அனைவரும் காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக மீனவர்கள் சி…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் செனட்டர்களிற்குமென நடாத்திய மாநாட்டில் மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட மேற்படி செனட்டரின் உரை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்ததுடன் அனைவருமே அவரது உரையின் சிறப்பை அவரிடம் தெரிவித்து பாராட்டினர். http://youtu.be/cZXHpm2PIcg இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல தடவைகள் விஜயம் செய்த மொபினா ஜபார் அவர்கள் கலநிலைமைகளை தெளிவுபட எடுத்துக் கூறி…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். சில ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்ர், இதன்போது 15 பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கண்ணீர்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் சிதறி நாலாபுறமும் ஓடியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 944 views
-
-
'இராணுவ நீதிமன்றம் வெறும் கண்துடைப்பு! - சர்வதேச மன்னிப்புச் சபையும், கூட்டமைப்பும் குற்றச்சாட்டு!! உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அவதானிப்புகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனிதவுரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்ச் சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைப்பதாக சிறிலங்கா படைத்துறை அறிவித்திருப்பது சர்வதேச அழுத்தங்களைப் புறந்தள்ளுவதற்கான காலத்தைக் கடத்தும் ஓர் உபாயமே என மனிதவுரிமைகள் க…
-
- 1 reply
- 572 views
-
-
பல ஆணைக்குழுக்கள் தோன்றலாம்; தீர்வு ஒருபோதும் கிடைக்காது; த.தே.கூ இரு தேசங்களாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டன் தான். எனவே தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு. இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் கொமன்வெல்த் நாடாளுமன்றத் தலைவருமான சேர்.அலன் ஹார்சல் துறூஸ்ட்டிடம் சுட்டிக்காட்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. யாழ். வந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று மாலை 6 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிலேயே கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது. கூட்டமைப்புச்சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், முன்னாள் மாநகர ஆணையாளர…
-
- 2 replies
- 415 views
-
-
மக்களின் மேலாண்மைக்கு சவால்விடும் நாடுகளுக்கு ரணில் துணைபோயுள்ளார்! - ரணிலின் அறிக்கைக்கு நிமால் சிறிபால டி சில்வா பதிலடி!! 'பலம்வாய்ந்த நாடுகள் சிறிய நாடுகளின் மக்களின் மேலாண்மைக்கு சாவல்விடுகின்றன. இந்நிலையில் அவ்வாறான நாடுகளுக்கு உற்சாகமளிப்பதாகவே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்திருக்கின்றது' என சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கின்றார். உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்களையிட்டு அரசாங்கம் கவலையடைந்திருக்கின்றது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால …
-
- 0 replies
- 584 views
-
-
இந்த Newsletter ஐ உங்களுக்குத் தெரிந்த அனைத்து மனிதவுரிமைகள் அமைப்புகளுக்கும் அனுப்பி வையுங்கள். இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமைகள் இந்த Newsletter இல் எழுதப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வை காக்க உதவுங்கள். இந்த இணைப்பில் வடிவிலான கடிதம் உள்ளது. http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/fotos/Prisoners_EN.pdf
-
- 0 replies
- 774 views
-
-
எங்கள் பிள்ளைகளின் பாதுகாருங்கள் - தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள் Published on Thursday, 16 February 2012 09:05 2012தை மாதம் 24ம் திகதி புதியமகசீன் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் சிங்களக் கைதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் புதிய மகசீன் சிறைச்சாலையிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி களுத்துறைச் சிறைச்சாலைக்கு 199 தமிழ் அரசியல் கைதிகள் இடம் மாற்றப்பட்டனர். அதன் பின்னர் இடநெருக்கடி காரணமாக கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் இருந்து 2 தொகுதிகளாக 65 பேர் கழுத்துறைச் சிறைச்சாலைக்கு இடம்மாற்றப்பட்டனர். இவ்வாறு இடம்மாற்றப்பட்ட 265 பேர் கழுத்துறைச் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் 13-02-2012 , 14-02-2012 இல் இரண்டு தொகுதிக…
-
- 1 reply
- 734 views
-
-
http://naathamnews.com/?p=3337 ஜேர்மன் வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பரிந்துரைத்தவாறு சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமொறி ஒன்றினை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டுவருவதற்கு ஜேர்மனிய அரசாங்கம் வலியுறுத்தும் வகையிலேயே இந்த மக்கள் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிமை (20-02-2012) ஜேர்மனிய வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் AUSWAERTIGES AMT WERDERSCHER MARKT 110117 BERLIN மதியம் 14:00 முதல் 17:00 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைதிவழி மக்கள் போராட்டத்தில் ஜேர்மன் வாழ் த…
-
- 2 replies
- 596 views
-
-
இந்தியாவின் பொருளாதாரத்தை நிலை குலையவைப்பதற்க்காக நீண்ட நாட்களுக்கு முன்னரே இந்தியாவின் கரன்சி நோட்டுக்களை இஸ்லாமாபாத்தில் அச்சிட்டு முதலில் வாகா எல்லை வழியாக பஞ்சாபில் சப்ளை செய்தது. பின்னர் அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்படவே,காஷ்மீர் வழியாகவும் அதன் பின்னர் நேபாளம் மற்றும் வங்கதேசம் வழியாக சிக்கிம் மற்றும் நாகாலாந்து,மணிபூர், அசாம் எல்லைகளில் ஊடாக கள்ளநோட்டுக்களை விநியோகித்து வந்த பாகிஸ்தானின் உளவுத்துறையின் கைவரிசை இப்போது மகிந்த ராஜபக்சேவின் பூரண ஆதரவுகளுடன் சிறிலங்காவை தளமாக வைத்து மிகவும் உற்சாகமாக இந்தியாவுக்கு எதிரான பொருளாதார யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறது பாகிஸ்தான். தனது உள்நாட்டு அரசியல் நெருக்கடி மற்றும் அழ்கெய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் அபோதாபாத்தில் …
-
- 1 reply
- 860 views
-
-
மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தப்பாடுபடுவேன் என்று பேசினார். மும்பை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி, சயான் கோல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து 13ஆம் தேதி மாலை சீமான் பரப்புரை செய்தார். தாராவியில் 90 அடிச் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், காங்கிரஸூக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய அவச…
-
- 1 reply
- 631 views
-
-
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டணை விதித்துள்ளது. 813.3 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாகவும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் குறித்த சாரதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபட்ட பஸ் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய போது அவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டமை வழங்கு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. http://www.saritham.com/?p=50822
-
- 2 replies
- 698 views
-
-
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் உலகின் முன்னணி அரசாங்கங்கள் சில கருத்தில் கொண்டு கருமமாற்றுவதென்பது, சிறிலங்காவில் நடந்தேறிய போர்க்குற்றங்கள், மனிதாபிமானக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற முறைகேடுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய ரீதியில் நீதிகேட்டு வேகம் கொள்ளும் அனைத்துலக அபிப்பிராயத்தை திசைதிருப்பும் முயற்சியென்றே கருதுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆகவேண்டுமென இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் கருதினால், 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை கருத்திலெடுக்கும் அதே சமயம்…
-
- 1 reply
- 427 views
-
-
தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்தனர். இநத தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றுள்ளது. நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன். கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைக…
-
- 5 replies
- 1k views
-
-
அரசியல் தீர்வு ஒன்று கிடைத்துவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் செய்யமுடியாது என்றும் அதனால்தான் அவர்கள் தீர்வினைப் பெறுவதில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் டக்ளஸ் அவர்கள் அண்மையில் தனது கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார். மக்களை ஒன்று திரட்டி அரசியல் ரீதியாக போராடி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்தத் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றதனையும், அப்படியொரு நிலையான – நீதியான தீர்வை சிங்கள அரசு வழங்குமானால் அதன்பின்னர் கூட்டமைப்பினர் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதைனையும் டக்ளஸ் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் சென்று மக்களை ஒன்று திரட்டி, அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
கோழி வியாபாரியும் கொழும்பில் கடத்தல் தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள வியாபாரியொருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதான அமரதுங்க ஆராச்சிலாகே அஜித்குமார என்ற கோழி இறைச்சி வியாபாரியேய வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் குறிப்பிட்டனர். தெஹிவளை புகையிரத வீதியில் கோழி இறைச்சி வியாபாரம் öசூதுவரும் குறித்த நபர் நேற்று முன்தினம் தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு இரவு 8.15 மணியளவில் வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறமுற்பட்டபோது வெள்ளை வேனில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www…
-
- 5 replies
- 867 views
-
-
ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால், நீதிக்காய் ஒன்றுபடுமாறு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களுக்கு தோழர் தியாகு அவர்கள் விடுத்துள்ள அழைப்பில்.... சிங்கள அரசானது சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், சர்வதேசத்தை திசை திருப்பவே சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஏற்படுத்தியிருந்தது. http://youtu.be/xhoLz2-VCwM பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள…
-
- 0 replies
- 506 views
-
-
புதுடில்லியில் ஒடேரோ ஜெனீவா அமர்வின் போது வாஷிங்கடனின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சாத்தியம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மரியா ஒடேரோ தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு சென்றுள்ளார். கடந்த 12 ஆம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த ஒடேரோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்ட விஜயமாக இந்தியா …
-
- 3 replies
- 919 views
-
-
இலங்கைப் பணியாளர்களுக்கு கனடாவில் அதிக தொழில்வாய்ப்பு இலங்கைப் பணியாளர்களுக்கு கனடாவில் அதிக தொழில்வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. ஹோட்டல், சுற்றுலா, நிர்மாணம், கடற்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார குறிப்பிட்டார். இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக அவர் கூறினார். அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவருக்கும், நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இலங்கை பணியாளர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான இ…
-
- 1 reply
- 854 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு! சிறிலங்கா அவசரம்!! இலங்கைப் போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையிட்டு விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போரின் இறுதிப்பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், பிரித்தானிய…
-
- 13 replies
- 1.3k views
-
-
மாத்தறை, கம்புறுப்பிட்டிய பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 18 சிறீலங்கா இராணுவ சிப்பாய்கள் உட்பட 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 708 views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பெப்ரவரி 7-12ம் திகதி வரை நடைபெற்றிருக்கிறது ( Human Rights Human Wrongs Documentary Film Festival)மனித முறைகேடுகள் மனித உரிமைகள் ஆவணப்படத் திரைப்பட விழா. நோர்வேயின் Fritt Ord Foundation எனும் அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இந்த விழாவில், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட கதைக்களத்துடன் கூடிய பெரும்பாலான ஆவணத் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன. இந்த விழாவில், பெப்ரவரி 9 மற்றும் 12 ந்திகதிகளில், Silenced Voices எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. (Tales of Sri Lankan Journalists in Exile) நாடுகடந்த இலங்கை ஊடகவியலாளர்களின் ஒடுக்கப்பட்ட குரல்கள் என்ற தொனிப்பொருளில், தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் படம், விழாவில் கலந்து கொண்டிருந்த பலதரப்பட்டவர…
-
- 0 replies
- 589 views
-
-
அரசாங்கம் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யுமென தோன்றவில்லை: ரணில் வேகமாக அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் படும்பாட்டை பார்க்கும்போது இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் போலத் தெரியவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை செயற்படுத்துவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது. ஆனால் மக்களின் துன்பத்தை கருதும்போது இந்த அரசாங்கம் தொடர்ந்து பதவியிலிருக்க கட்சி ஆதரவு வழங்காது என ரணில் விக்கிரமசிங்க கூறினார். வரிகள், விலை அதிகரிப்பு, மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை கொல்லும்…
-
- 0 replies
- 919 views
-