ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து சாவகச்சேரிக்கு விஜயம் செய்யும் அவர், அரசாங்க மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள கட்டிடத் தொகுதியையும் திறந்து வைப்பார். இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிடவுள்ளார். ஜனாதிபதியின் மேற்படி விஜயத்தி…
-
- 1 reply
- 683 views
-
-
இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம் ப்ருசெல்ஸ் (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் "நீதிக்கான நடைப்பயணம்" (Walk for Justice) ஆரம்பமானது. இவ் நடைப்பயணத்தை ஆரம்பித்த வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா (Velupillai Mahendrarajah), லோகநாதன் மருதையா (Loganathan Maruthaiah) , மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் (Jacomuthu Gracian) ஆகிய மூவரும் எப்படியான காலநிலை சீர்கேடு உருவானாலும் இவ் நீதிக்கான நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதிமொழியுடன் எமது அனைத்து தமிழ் மக்களும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என்று கேட்பதோடு, ஒன்றுசேர்ந்து வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். http://youtu.be/iMFhu-nUcMs தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 795 views
-
-
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை இலங்கை அரசாங்கம்; அங்கீகரிக்கவேண்டும் என்று ஆர்.சம்பந்தன் கோரியுள்ளார். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம என்பதை இலங்கை அரசாங்கம்; அங்கீகரிக்கவேண்டும் என்று ஆர்.சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கையின் 64வது சுதந்திர நாள் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழர்கள் ஒரு தேசிய இனத்தினர் என்பதை புரிந்து அங்கீகரிக்க வேண்டும். மேலும் அதனடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கையரசு முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் இலங்கையில் ஒரு தேசிய இனத்தினர். அவர்களுக்கென்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.கண்கள் மற்றும் முகத்தினை மூடி மோட்டார் சைக்கிளில் இராணுவத்தினர் சுற்றி வீதிகளில் சுற்றி வளைத்து திரிகின்றதாகவும், இதன் காரணமாக யாழ். நகரை அண்டிய – மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரியை அண்டிய பகுதிகளில் வழமையான சன நடமாட்டம் குறைந்து போயுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் சிவில் உடைகளில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். http://www.tamilthai...newsite/?p=4373
-
- 1 reply
- 794 views
-
-
இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான நேற்று லண்டனில் கடுமையான காலநிலைக்குள்ளும் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர். நேற்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford Circus, Oxford Street, Tottenham Court Road, Piccadilly Circus, ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கு முன்பாகவும், வீதிகளிலும் நின்று இலங்கைத் தீவில் நடைபெறும் தமிழின அழிப்பு, மற்ரும் மனித உரிமை மீறல்கள் போன்ர விடையங்கை எடுத்து விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். அத்தோடு மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிரித்தானியப் பிரதமர் இல்லம் முன்பாக அமைந்திருக்கும் Downing Street பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை …
-
- 1 reply
- 836 views
-
-
முதலில் அரசாங்கத்துள் இணக்கப்பாட்டை ஏற்படுத்த தெரிவுக் குழு தேவை தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக் குழு அமைப்பதற்கு முதல் அரசாங்கத்தின் தெளிவான நிலையை அறிந்துகொள்ள தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசுடன் இணைந்துள்ள சில கட்சிகள் தேசிய பிரச்சினை விடயத்தில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துகொள்ளும் நிலையை காண முடிவதாகவும் விக்ரமபாகு குறிப்…
-
- 3 replies
- 901 views
-
-
ராஜபக்சேவுக்கு என்னாச்சு?… சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக விரைகிறார்! February 5, 2012 ராஜபக்சே சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்றும், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனா செய்து வருகிறார். ராஜபக்சேவுடன் செல்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸு்ககு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் செய்து கொடுக்கிறாராம். முதலில் ராஜபக்சே அமெரிக்காவில் தான் சிகிச்சை பெறுவதாக இருந்தது. ஆனால் போர்க்குற்றம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எதற்கு வம்பு என்று நினைத்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொடுமையான இலங்கை அரசிற்கு சர்வதேச் உதவி கிடைத்தது சிங்கள அரசியலாளர்களின்தொடாச்சியான் இராஜதந்திரமே இலங்கையானது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டபின் (சுதந்திரம் என்ற வார்த்தை பாவிக்கமுடியாது. ஏனெனில் எல்லா மக்களும் சுதந்திரத்துடன் வாழவில்லை) சிங்கள மக்களின் மேலாண்மை அதிகாரத்தால் தமிழ்பேசும் மக்களிள் அடிப்படை உரிமைகள் சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டது. அரசியலமைப்பு அதிகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. பண்டாரநாயக்கவினால் சிங்களம் மட்டும் அரசமொழி என்ற சட்டம் அமூல்படுத்தப்பட்டது. 1957 களில் தமிழ் அரசியலாளர்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது தாக்கப்பட்டும், அவர்கள் வாய்களில் சிறுநீர் கழித்தும், பின்னர் கொழும்பு வாழ் தமிழர்கள் அடித்தும் நொருக்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
உதயன் பத்திரிகை நிலையத்திற்கு ஈ.பி.டி.பி.யும் கடற்படையுமே தீ வைத்தன!-பசில் ராஜபக்ஷ! யாழ் உதயன் செய்திதாள் நிறுவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும்; கடற்படையினரும் இணைந்தே தீ வைத்திருக்கலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்க ராஜாங்க செயலகத்துக்கு அறிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச, 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி தம்மை சந்தித்த போது இந்த தகவல் வெளியிடப்பட்டதாக ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம், தமிழ் ஆயுதக்குழுக்களான ஈப…
-
- 2 replies
- 736 views
-
-
சரத் பொன்சேகா துரோகி என்றால் பசில் ராஜபக்சவும் துரோகியா ? சண்டேலீடர்! இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக குழு ஒன்றை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள இந்தநிலையில் யார் துரோகி என்ற தலைப்பில் சண்டே லீடர் செய்திதாள் இன்று செய்தி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனின் அழைப்பை ஏற்றுள்ள அரசாங்கம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸுடன் குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள இந்தநிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் அமைச்சர் டியூ குணசேகர கேள்வி எழுப…
-
- 3 replies
- 728 views
-
-
தமிழ்தேசிய மக்கள்முன்னணியின் செயலாளரான கஜேந்திரனின் சில கருத்துகளுடன் உடன் படுகின்றபோதும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு ஏற்புடையதாகவும், குந்தகம் விளைவிக்காத வகையிலும் நடந்து கொள்ளும்போது இந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்துவிடும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு இனிமேலாவது 13,13 பிளஸ் என்ற வார்த்தை ஜாலங்களை விடுத்து சுயநிர்ணய உரிமைப்பாதையை கூட்டமைப்பு தெரிவு செய்யவேண்டும். இக் கருத்து ஏற்றுகொள்ள கூடியதாக இருப்பினும் “முதல் பொத்தி வரமுன்னரே தேங்காய் விழவேண்டும்” என்ற கஜேந்திரகுமாரின் அறியாமையா இது. இந்தியா தனது நலன்கள் சார்ந்தே வடக்கில் தனது ஆழக்காலை ஊன்ற முன்படுகின்றது என்பது வெட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகல போர் குற்றங்களும் தனக்கு தெரியும் எனவும் அவற்றை தான் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளின் இந்த போர் குற்றங்களுடன் தொடர்புடைய தலைவர்கள் பல நாடுகளில் உள்ளனர். எனினும் எந்த நாடுகளும் அவர்களை கைதுசெய்வதில்லை. சம்பந்தன் போன்றவர்கள் யார் என்பது பற்றி அறியாதவன் அல்ல. அவர்கள் புலிககளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். ஆனால் தற்போது எதுவும் தெரியாதவர்கள் போன்று செயற்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் முழு தம…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொருந்திய முத்திரையும், தமிழீழ தேசிய பறவையான செண்பகம், தேசிய மிருகம் சிறுத்தை, தேசியக் கொடி, தேசிய மலரான கார்த்திகைப்பூ, தமிழீழம் ஆகியவற்றை முத்திரையாக்கி வெளியாகியுள்ளது. இது போன்று கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான முத்திரைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=4326
-
- 3 replies
- 988 views
-
-
மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலத்தில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், கொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் சடலத்தை வீசியிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/35471-2012-02-05-0…
-
- 0 replies
- 591 views
-
-
இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்துக்கட்சி கூட்டம் அவசியமற்றது!-வாசுதேவ நாணயக்கார! இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் ஆராய அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை அழைக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார். இந்தநிலையில், ஏற்கனவே அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. எனவே இனப்பிரச்சினை தீர்வில் ஜனாதிபதிக்கு அக்கறையிருந்தால், அவர், அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் இறுதியறிக்கையை மையமாகக்கொண்டு தீர்வு ஒன்றை காணமுடியும்…
-
- 2 replies
- 743 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ‘மவுண்ட் எலிசபெத்’ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபருடன் செல்லும் குழுவினருக்கான தங்குமிட வசதிகளை செய்யும் பொறுப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசுக்கு நெருக்கமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவே திட்டமிட்டிருந்த போதிலும் அங்குள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டே சிங்கப்பூர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மகிந்த…
-
- 2 replies
- 963 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கிடையில் மூன்று உயர்மட்டத் தூதுவர்களைக் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் மேரி ஒரேரோ, மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் தலைவர்களுக்கு ஜெனிவா தீர்மானத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விக்கமளிக்கவுள்ளனர். ஆனால் இத்தகைய நகர்வை எந்தவொரு அரசாங்கமும் தடுக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன…
-
- 5 replies
- 791 views
-
-
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் மனதை உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் மட்டுமல்ல எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் நமது மக்களை வெற்றி கொள்ள முடியாது. நமது மக்களின் மனங…
-
- 6 replies
- 926 views
-
-
இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது. இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ<!--more--> இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவத்தில் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களின் மூலம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது என்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றின் மூலமே இனப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வொன்றை முன்வைக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ஷ …
-
- 7 replies
- 967 views
-
-
இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக சுயாதீன சர்வதேச பொறி முறை ஒன்றினை அமைக்கும்படி இலண்டனில் இயங்கி வரும் சமாதானம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகளுக்கான இலங்கை இயக்கத்தின் தலைவர் எட்வர்ட் மோடைமர் (Edward Mortimer) ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைத்துள்ள திறந்த கடிதமொன்றில் கேட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முகவயிடப்பட்டு கடந்த இரண்டாம் திகதி வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அத்த கைய பொறிமுறையின் அதிகாரங்களில் பின்வரும் மூன்று உடன் நிகழ்வு விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. * குறிக்கப்பட்ட அத்து மீறல்கள் குறித்து உண்மைய…
-
- 0 replies
- 456 views
-
-
தமிழ் மக்களது ஆணைக்கும் அவர்களது அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடைபெற்ற கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை அரசு தெரிவுக்குழுவிற்கு வருமாறு பல தடவைகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. அவர்கள் அழைப்பதற்காக நாங்கள் தெரிவுக்குழுவிற்கு சென்றுவிடமுடியாது. எம்முடனான பே…
-
- 0 replies
- 386 views
-
-
எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஓஷன் லேடி கப்பல் விற்பனைக்கு 76 பேரை ஏற்றிக்கொண்டுவந்த கப்பலை கனேடிய அரசு விற்பனைக்கு விட்டுள்ளது. விலையை குறிப்பிடவில்லை. ஆனால் இதன் பெறுமதி 500K-800K க்குள் இடைப்பட்டதாக செய்தி கூறுகின்றது. மேலும் இந்தக்கப்பலை பதிவு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆனால், பதிவு செய்த இடத்திற்கு கனேடிய அரசு ஐந்து மில்லியன்களை கேட்டிருந்ததாகவும் இந்த செய்தி கூறுகின்றது. Tamil migrant ship MV Ocean Lady for sale The border agency demanded a cash security deposit of $5-million, $243,200 in administration fees ($3,200 for each of the 76 migrants), and reimbursement of $2.24-million spent on storage, care and preservation of the vessel. Last spri…
-
- 7 replies
- 1.4k views
-
-
நாடுகடத்தப்பட இருந்து இந்திய ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தினார் கோத்தபாய! - இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கபபடுமாம்!! இலங்கைக்குச் சென்றிருந்த இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவரை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் இரு ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர். இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறித்து குற்றப்புலனாய்வுப் பொலிஸார் சிறிலங்கா படை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இலங்கையின் 64ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: 5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த நகரில் (அநுராதபுரம்) நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உ…
-
- 4 replies
- 825 views
-