ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
சர்வதேச பிடிக்குள் இலங்கையை சிக்கவைக்க கூட்டமைப்பு சூழ்ச்சி ஜெனீவா மாநாட்டின் போது இலங்கையை சர்வதேசப் பிடிக்குள் சிக்கவைப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக வகுத்து வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. எனவே, இனியும் அரசு மௌனம் காத்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியவை வருமாறு: ஆபிரிக்க …
-
- 0 replies
- 723 views
-
-
கிளிசறியா (சீமைக்கிழுவை) இலை மற்றும் தண்டுகளில் இருந்து பெறப்படும் சக்தியூடாக மின்சாரத்தினை பெறும் திட்டம் சீன நிறுவனம் ஒன்றின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் 2002 அம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ் பேராசிரியரே சிறிலங்காவில் அறிமுகப்படுத்தினார். கிளிசறியா, வைக்கோல் 70 வீதமும் 30 வீதம் டீசலும் பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அவர் முன்வைத்தார். இந்த திட்டத்தினை அவர் பாகிஸ்தானில் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் பரீட்சார்த்தமாக செய்தும் காட்டி இருந்ததாக கூறினார். சுமார் 3 தொடக்கம் 20 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தினை அப்போது ரணில் அரசிடமும், விடுதலைப்புலிகளி…
-
- 2 replies
- 1.7k views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் சுவிஸ் நாட்டுத் தலைநகர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்று நம்பப்படுவதாக இங்கு டர்பனில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கும் அவை ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து, ஜெனிவா கூட்டத் தொடரில் மேற்கு நாடுகளால் இலங்கக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்ற நம்பிக்கையே இங்கு நிலவுகின்றது. ஆபிரிக்க …
-
- 0 replies
- 1.1k views
-
-
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்ட குறிப்பிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர் உட்பட்டவர்களை தனித்தனியாகச் சந்தித்ததுடன் குடாநாட்டின் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர். அதேவேளை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சில பகுதிகளையும் நேரில் சென்று ஆராய்ந்திருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.saritham.com/?p=47133
-
- 0 replies
- 1.3k views
-
-
காணாமற் போனவர்களின் விபரங்களை நேரில் திரட்டுகிறது கூட்டமைப்பு கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை தற்பொழுது மக்களிடமிருந்தே நேரடியாக திரட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்குப் பலவழிகளில் முயன்றும் அவை கிடைக்கப்பெறாததை அடுத்தே, இந்த நடவடிக்கைகயை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் காணாமல்போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் இந்த விடயத்தி…
-
- 2 replies
- 978 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவினர் சுமார் 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரிவிக்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், இலங்கையில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அந்தஸ்து, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் குறித…
-
- 3 replies
- 657 views
-
-
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி அதிகாரிகள் குழு சிறிலங்கா அரசதரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்துவர் எனவும், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17, 18, 19ம் நாட்களில் கூட்டமைப்பினருடன் அடுத்த சுற்றுப் பேச்சக்களை நடத்தலாம் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுக்களில் தாம் நிச்சயமாக கலந்து கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் தெரிவித்த…
-
- 1 reply
- 653 views
-
-
இன்றைய தினம் காலை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விசேட அபிடேகங்கள் நடை பெற்று அதனை தொடர்ந்து கந்தசுவாமி சித்திர தேரில் அடியார்கள் வடம் பிடித்து இழுக்க வீதியுளா வரும் நிகழ்வு நடை பெற்றது. http://newjaffna.com
-
- 2 replies
- 1k views
-
-
A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவி சாதனை (படம் இணைப்பு) க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில 3 ஏ பெற்று முதலிடம் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்…
-
- 9 replies
- 1.4k views
-
-
திருகோணமலை பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்த சிறிய புத்தர் சிலைக்கு அருகில் பெரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு பெரும்பான்மையின மக்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலைலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த சிலைக்கு அருகில் பெரிய கொன்கிறீட் தளத்தை பெரும்பாண்மை இன மக்கள் அமைத்து பெரிய புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் உடனடியாக அப்பகுதி மக்கள் காவற்றுறையில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் புத்தர் நிறுவும் நடவடிக்கையை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிறிய புத்தர் சிலை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டது என…
-
- 2 replies
- 713 views
-
-
தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது. டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப…
-
- 5 replies
- 804 views
-
-
உலகத் தமிழர்களின் ஒரு பகுதியாக பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட றெயூனியன் தீவுத் தமிழர்கள் புத்தாண்டுப் பெருவிழாவை வழமைபோல் ‘காளிப் பெருவிழாவாக’ கொண்டாடியுள்ளனர். http://naathamnews.com/2012/01/02/tamil-diaspora/
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் பொலிஸில் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே படகில் தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். சில காலமாக இல்லாமல் இருந்த இந்தப் பதிவு நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். பதிவு நடவடிக்கைகளால் பெரும் நேரவிரயம் ஏற்படுவதால் , இன்று நெடுந்தீவில் இருந்து படகு தாமதமாகவே புறப்பட்டுள்ளது.இதனால் பலரும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை இடையூறுகளுக்குள் தள்ளும் இந்தப் பதிவு நடைமுறையைப் பொலிஸார் கைவிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர். http://www.saritham.com/?p=47089
-
- 1 reply
- 578 views
-
-
மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு! மக்கள் நிச்சயம் ஏற்பர்: இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள் தீய சக்திகளை அடக்க இதுவே வழி விடாப்பிடி, விட்டுக்கொடுக்காமை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே? முழுநாட்டு மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று முஸ்லிம் மக்களின் பெரும்பான் மையான ஆதரவைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து நாட்டில் முப்பது வருட காலமாக புரை யோடிப்போயுள்ள இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுடன் இது அவர்கள் முன்பாக வுள்ள பாரிய பொ…
-
- 5 replies
- 1.3k views
-
-
இராணுவப்புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. இதில் எஸ்.கரன் என்ற வர்த்தகரே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வர்த்தகரும், இன்னும் சிலரும் வாகனத்தில் பரந்தன் சந்தியை அண்மித்ததாக பயணம் செய்து கொண்டிருந்தபோது இவர்களை பின் தொடர்ந்து வந்த வாகனத்தினர் முன்செல்ல அனுமதி கேட்டுள்ளனர். எனினும் இதற்கு அவர்கள் வாகனத்திற்கு வழிவிட சிறிது நேரம் எடுத்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சற்றுத் தூரத்தில் இவர்களை முந்திக் கொண்டு சென்று தமது வாகனத்தை குறுக்கே நிறுத்தி வாகனத்தை நிறுத்தி வாய்த்தர்க்கம் புரிந்துள்ளனர். …
-
- 0 replies
- 822 views
-
-
வடக்கில் தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமரப் படையினர் இன்னும் முழுமையாக அனுமதி வழங்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஆகக் குறைந்தது 650 ஏக்கர் காணியை முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தி இருக்கிறது. இவை அனைத்தும் அரச காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலாக பொதுமக்களுக்குச் சொந்தமான 260 ஏக்கர் காணிகளைப் பலவந்தமாகப் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.துணுக்காய் அமைதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் சுமார் 200 ஏக்கர் அரச காணி கொமாண்டோ ரெஜிமன்ட் படைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென்னியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 46 ஏக்கர் அரச காணி படையினரின்…
-
- 0 replies
- 480 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களின் மீள்திருத்தத்திற்கு ஏற்கெனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்மீள்திருத்த விண்ணப்பத்திற்கான கால எல்லை ஜனவரி 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து. கடந்த வருடம் இப் பரீட்சைக்குத் தோற்றிய 294,800 பேரில் 142,000 பேர் தற்போது 3 பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். இம்மீள்திருத்திற்கு டிசெம்பர் 29 முதல் ஜனவரி 9 ஆம் திகதிவரை விண்ணப்பிக்;கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்க வசதியாக ஜனவரி 17 ஆம் திகதிவரை இக்கால எல்லை நீடிக்கப்பட்டது. இம்மீள் திருத்தத்திற்கான கட்டணம் …
-
- 0 replies
- 803 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டே இருக்கும் அரியநேத்திரன் எம். பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது, உண்மையாக இருக்கின்றது எமது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கும். தவறுகளைக் கூறுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்துவிட முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ; எந்த அமைச்சராக இருந்தாலும…
-
- 0 replies
- 298 views
-
-
நல்லூர்ச் சிவன் கோவிலில் நடைபெற்ற திருவாதிரை உற்சவக் காட்சிகளின் தொகுப்பு thx http://newjaffna.com
-
- 0 replies
- 684 views
-
-
நல்லூர் முருகப் பெருமானின் திருவாதிரை உற்சவம் இன்று காலை நடைபெற்றது. முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை 7.15 மணியளவிலவ் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார் thx http://newjaffna.com
-
- 0 replies
- 774 views
-
-
கேபிள் தொலைக்காட்சி இணைப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஆறுகால் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவருடைய வீட்டிருள் புகுந்த ஆயுததாரிகள் நேற்றிரவு இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பிரஸ்தாப நபருடைய வீட்டுக் கதவினைத் தள்ளிக் கொண்டு உள்புகுந்த ஆயுததாரிகள் கைத்துப்பாக்கியை நெஞ்சில் வைத்து கேபிள் ரிவி யை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை சுட்டு விடுவதாக கூறி மிரட்டி வீட்டின் யன்னல்களை உடைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இது பற்றி அலெக்ஸ் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த 10 வருடங்களாக கேபிள் ரிவி நடத்தி வருகின்றேன் கடந்த சில வாரங்களாக தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும் அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் இயங…
-
- 0 replies
- 1k views
-
-
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்றுள்ள கிளர்ச்சிக் குழுவினர் பிரான்ஸில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக வருகின்றனர். இதன் ஒரு கட்டமே அண்மையில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஆகும். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கடத்தல், காணாமல் போக்குதல் போன்ற சம்பவங்களுக்க எதிராக இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை அண்மையில் நடத்தியிருந்தனர். வர்ண டீப்த ராஜபக்ஷ என்பவர் தலைமையில் செயற்படும் இந்தக் குழுவினர் இலங்கை அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைத் தமிழிலும் வெளியிட்டு பிரான்ஸின் பல இடங்களிலும் விநியோகித்தும் வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 992 views
-
-
30 லட்சம் தெரு நாய்களைக் கொல்ல சுகாதாரத்துறை முடிவு மக்களை நாய்க்கடியிலிருந்து, ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும் காப்பாற்றும் முயற்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\ "நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் " சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன தெரு நாய்களுக்கு ரேபீஸ் கிருமித் தொற்று வராமல் தடுக்க அரசு எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போய்விட்டது என இலங்கை சுகாதார அமைச்ச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாய்கள் மனிதர்களைக் கடிப்பது என்பது பொரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்றும் நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையி…
-
- 0 replies
- 782 views
-
-
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை நிகழ்வுகளில் இன்று ரதோற்சவ நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வை சமகாலத்தில் நேரடி ஒலிபரப்பாக எடுத்து வந்திருந்தோம். இந்த இரண்டரை மணி நேர நிகழ்வின் சில பகுதி thx http://www.newjaffna.com/fullview.php?id=ODgxMA==
-
- 3 replies
- 1k views
-
-
நாடு தன்னுடையது என்ற திமிரே துரியோதனன் தோற்கக்காரணம் பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது. எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு. யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்…
-
- 1 reply
- 1.2k views
-