ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்து சிறீலங்கா முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில், இறுதிக் கட்ட யுத்தத்துடன் தொடர்புடைய சர்வதேச மனிதாபிமான சட்டம் பற்றிய விபரங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரிவாக தமது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தமது ஆய்வுகள் மற்றும் சிபாரிசுகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மிடம் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத…
-
- 1 reply
- 2.2k views
-
-
யுத்ததின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிகார மீறல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். உண்யைமான தரவுகளை திரட்டி மதிப்பீட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கு…
-
- 1 reply
- 740 views
-
-
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக இலங்கைப் போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலி இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது. அப்பாவி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டுவந்த இந்தப் போரில், கணிசமான பொதுமக்கள் இழப…
-
- 1 reply
- 2.2k views
-
-
மீள்குடியேற்ற நடிவடிக்கைகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் அதனை தாம் கண்டிப்பதுடன் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் மீள்குடியேறிய மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரச அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் அவர்களுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இச் செயல்களின் பின்னணியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சுக்கு சொந்தமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையிடுதல் அதிகரித்துள்ளது. அத் தலையீட்டை தாம் வ…
-
- 0 replies
- 2.1k views
-
-
வடபகுதியில் இடம்பெற்று வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அர சாங்கம் மேலதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஹலோரஸ்ட் அமைப்பின் ஊடாக 86 மில்லியன் ரூபாவை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. இது தொட ர்பான புரிந்துணர்வு ஒப் பந்தமொன்று இலங்கைக் கான ஜப்பான் தூதுவருக் கும் ஹலோரஸ்ட் அமைப் பின் பிரதிநிதிக்குமிடையில் நேற்றுக் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகிறது. 2011ஆம் ஆண்டில் மாத்திரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக ஜப்பான் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 628 views
-
-
மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கார், பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சாஜன் ஒருவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மேலும் இருவர் தற்சமயம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.saritham.com/?p=44201
-
- 0 replies
- 2.3k views
-
-
www.nesakkaram.org 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200வரையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கெட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை நேசக்கரம் ஊடாக வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி வானொலியூடாகவும் நேயர்களிடம் கொண்டு சென்றோம். ஐ.எல்.சியின் நேயர் கண்ணன் என்ற நேசக்கரத்தினை நீட்டியிருந்தனர். கணணன் வழங்கிய உதவிகளை இன்றைய தினம் 200கைதிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக …
-
- 3 replies
- 812 views
-
-
வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சம்பூ , பிஸ்கெட் ,பெண்களுக்கான மாதாந்த பிரத்தியேகப் பொருட்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியன வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை பிரித்தானியாவில் வாழும் வல்வை நண்பர்கள் இணைந்து 40ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய வல்வை நண்பர்களுக்கும் (பிரித்தானியா) கைதிகளின் துயரங்களை வெளிச்சொல்ல நேரம் தந்து உதவிகள் பெற்றுத் தந்த ஐ.எல்.சி வானொலிக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உதவிகள் பெற்ற கைதிகளின் நன்றிக்குரல்கள். குரல்களைக் கேட…
-
- 0 replies
- 833 views
-
-
Wednesday, December 14, 2011 0/0 ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார் ஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார். Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதி…
-
- 10 replies
- 1.7k views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று விநியோகிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட பிரதிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட பிரதிகளை ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வகிக்கும் உறுப்பினர் கொண்டு சென்றதாக தெரிய வந்ததையடுத்து, விசனமடைந்த இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்படவிருந்த அறிக்கையினை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 847 views
-
-
சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார். தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது, ''ஐயோ ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார். நடிகர் ஜெயராம் இவ்வாறு நடந்துகொண்டது ஏன்? கடந்த வருடம் நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சைட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. இந்த படம் தொடர்பான பேட்டி ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்ற…
-
- 1 reply
- 3.5k views
-
-
சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழ் அரசியலிலும் புலம்பெயர் தமிழர் தளத்திலும் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற நபராக மாறியிருக்கின்றார். அவரின் அரசியல் பிரவேசமும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் செலுத்திவருகின்ற அரசியல் செல்வாக்கிலும் பல பத்தாண்டுகளாக அரசியல் செய்துவருபவர்களை விஞ்சியிருக்கும் அளவிற்கு அவரது செயற்பாடுகள்(?!) அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சியின் செல்லப்பிள்ளை சிறீதரன், தலைவரை எப்படிப் பார்க்கிறார்?! சிறீதரன் அரசியலுக்கு வந்தாலும் அவரது அடுத்த பாரிய கனவாக தமிழ் மக்களின் தலைமை என்கின்ற பேரவா அவருள் ஆழ வேரூன்றியிருக்கின்றமையை ஆதாரப்படுத்த முடியும். தன்னை ஒரு குட்டி இராஜ்ஜியத்தின் இராசாவாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள முற்படுகின்ற அவர் அண்மையில் கூட்டம…
-
- 22 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர்கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்துபோராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள்கடத்தப்பட்டுள்ளர்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்யும் ராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்துவைக்கபற்றிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலியரம்புக்கெல்ல சொல்கிறார். உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் அரசாங்க சாதனை. இலங்கையில் நிலைமை வழமைக்கு திருப்பிவிட்டது என சொல்பவர்கள்தான் இதற்குபதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 2.3k views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜையான, புலோலி பருத்தித்துறை யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற குடும்பஸ்தர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானதான அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள இவர் கடந்த 03.04.2007 இல் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். மேற்படி கைதி நாள்தோறும் சிறைச்சாலையில் உள்ள கோவிலுக்கு வழிபடுவதற்காக செல்வது வழக்கம். வழமைபோல் இன்றும் அவர் கோவிலுக்கு சென்…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடுத்த மனு உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி இன்று (16.12.2011) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். “இந்திய அரசு நியமித்த தீர்ப்பாயம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை ஏற்றுக் கொண்டு வழங்கிய ஆணையை எதிர்த்து இந்த உயர் நீதிமன்றத்தில் நான் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தடை உத்தரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்…
-
- 0 replies
- 539 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாகவும் (26-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் பவலோ நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை பிரானஸ் பிரித்தானிய ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக பங்குபற்றி வருகின்றனர். ஓவ்வொரு நாள் அமர்விலும் பல நாடுகளிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு போச்சாளர்களாக அரசியல் அறிஞ்ர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிதுக் கொண்டுள்ளார்கள். தென் ஆபிரிக்காவின் சட்ட அறிஞ்ரும், சொலிடாரிற்றி அமைப்பின் மிகமுக்கிய செயற்ப்பாட்டாளருமான கௌரவ கிறீஸ்டன் கோவிந்தன், கௌர…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையினர் வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும். எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது. ஆனால் நாம் அறிந்தவரையில் இந்த விண்ணப்பத்தில் உள்ள பெயர்கள் தட்டச்சுச் செய்யப்பட்டுள்ளன. அதில் யாரும் கையெழுத்து இடவில்லை. தொழிற்சங்கம் சார்பான கையொப்பகாரர்கள் இபிடிபி கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் ஒரு தொகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வேண்டியவர்கள். குறிப்பாக முதல் பெயர் மன்னார் மறைவட்ட …
-
- 1 reply
- 2.1k views
-
-
பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது தவறுதலாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றதனை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படையினர் வேண்டுமென்றே பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூன்ய வலயங்களின் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கை அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புலிகளி…
-
- 1 reply
- 2.4k views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொல…
-
- 1 reply
- 2.1k views
-
-
Dear friends, Two journalists in grave danger and Amnesty International are running a campaign to support them. Please help if you can. From Amnesty: URGENT ACTION FEARS FOR MISSING SRI LANKAN ACTIVISTS Sri Lankan political activist s Lalith Kumara Weeraraju and Kugan Muruganandan have been missing since 9 December . They were arranging a press conference for the following day to publicize a protest . Lalith Kumara Weeraraju ’s family received a phone call saying that he hadbeen killed. Lalith Kumara Weeraraju and Kugan Muruganandan were last seen leaving Kugan Muruganandan’s residence in Avarangal, Jaffna, northern Sri Lanka, on 9 December. There wer…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக என்று சிறலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு றொக் ஹவுசில் நேற்று சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப் பிரிவின் 56வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா இராணுவம் பதில் அளிக்கவுள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியின் கிழக்கில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் பற்றிய தவறான தகவல்களை ஐ.…
-
- 0 replies
- 2k views
-
-
-
கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் இருந்த சிங்கள காடையர்கள் எட்டியாந்தோட்டை, தோட்டப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்று முன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர். போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள காடையர் அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்…
-
- 4 replies
- 1k views
-
-
கிழக்கு மீதான அமெரிக்காவின் கவனயீர்ப்பு அலையானது ஒக்ரோபரில், "உலகின் கேந்திர மற்றும் பொருளாதார ஈர்ப்பு மையமானது கிழக்கு நோக்கி நகர்கின்றது" என அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் பிரகடனப்படுத்தியதிலிருந்து வெளிப்படையாகியுள்ளது. இவ்வாறு livemint.com இணையத்தளத்தில் Yamini Lohia எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, தற்போது காற்று வீசிக்கொண்டிருக்கிறது, இதன் திசை தற்போது மாறிக்கொண்டிருக்கலாம். ஆசியா மீதான சீனாவின் செல்வாக்கானது முன்னர் நம்பியது போன்று சவாலற்ற விடயமாக இருக்கமாட்டாது என்பதையே அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில நகர்வுகள் சுட்டிக்காட்டுகின…
-
- 0 replies
- 2.2k views
-
-
திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு. கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்பதை அரசு உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என்று காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் கூறியவை வருமாறு: திருகோணமலை கடற்படை முகாம்…
-
- 0 replies
- 2.1k views
-