Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த தீபாவளி தினத்தை கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெற்றதும் அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. ஆனால் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தீபாவளி நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை என்ற செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதனை சில தமிழ் இணையங்களும் பிரதிபலித்தன. தமிழர்கள் செறிந்து வாழும் லண்டனில் அவ்வாறு ஒரு நிகழ்வை இலங்கை அரசால் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கைத் தூதரகமானது பிற இடங்களில் மண்டபத்தை எடுத்து தீபாவளி நிகழ்வை நடத்தியது போல இல்லாமல், லண்டனில் அது தனது தூதுவராலயத…

    • 58 replies
    • 6.8k views
  2. தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவே ஜெயானந்தமூர்த்தி தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார். ஜெயானந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் சிங்களவர்கள் விரும்புத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அதை அரை நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருக்க முடியும். …

  3. பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கலாம்: திஸ்ஸ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும் என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. ஆகவே இரு தரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுக…

  4. இன்று காலை 10.30 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தால் யாழ் பஸ் நிலையப்பகுதி பெரும் களோபரம் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. பொலிஸ் , இராணுவத் தடைகளைத் தாண்டி பஸ்நிலையப் பகுதியில் குவிந்த காணமல் போனோரின் உறவினர்களை பொலிசார் துரத்த முற்பட்டனர். இந் நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அனுமதி பெறாது ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிசாரை முற்றுகையிட்ட உறவுகள் 'எங்களின் அனுமதியைக் கேட்டா அவர்களைப் பிடித்தீர்கள் ' என ஆவேசமாக கத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் எச்சரித்தபோது அந்த இடத்திற்கு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிசாருக்கு அவ…

  5. யாழ் சென்ற மக்கள் போராட்ட இயக்க ஏற்பாட்டாளரை காணவில்லை ஜேவிபி கட்சியைச் சேர்ந்த அதி்ருப்தியாளர்கள் குழுவின் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் இன்னொருவரும் காணாமல் போயுள்ளதாக அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தமது ஏற்பாட்டளாரான லலித்குமார வீரராஜ் என்பவர் வவுனியாவில் இருந்து சென்று யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு குகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் அவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பொலிசிலும் பாதுகாப்பு தரப்பிடமும் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்ப…

    • 0 replies
    • 721 views
  6. இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழிச் செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏலனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தாக் கொண்டது? இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும…

  7. இன்று இரவு 7 மணியிலிருந்து 9 மணிவரையான நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தெரிந்த பூரண சந்திர கிரகணம் thx http://newjaffna.com/index.php

  8. "நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?" நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வெள்ளை நிற ரீசேர்ட்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அந்த ரீசேர்ட்டுகளில் பெயர்களும், அடையாளங்களும் இடப்பட்டிருந்தன. பெண் போராளிகளுக்கு அவ…

  9. உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழ். பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமற் போனோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

  10. சீனாவின் வளர்ச்சியை அச்சுறுத்தலாக கருத முடியாது என இலங்கையின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த ஆதிக்கம் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு ஆபத்தாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் வளர்ச்சி ஆபத்தாக அமையக் கூடும் என்ற கருத்து பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜகத் ஜயசூரிய, நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராணுவ உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில்…

  11. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பயன்பாடற்ற காணியொன்றினுள் இருந்து இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே எலும்புக்கூட்டு தொகுதிகளை கண்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டபின்னர் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டவர்களது எலும்புக்கூடுகளாக இவை இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. மரமொன்றினை அண்மித்ததாக மண்ணினுள் மேலெழுந்தவாரியாக இச்சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. பழுதடைந்து கிழிந்த நிலையில் காணப்பட்ட இவ்வுரப்பைகளுள் முதலில் இரண்டு மண்டையோடுகளே காணப்பட்டதாக குறித்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தகவலறிந்து அங்கு வந்த சிலர் உரப்பைகளை பிரித்தறிந்து பார்த்த வேளையில் எலும்புக்கூடுகளையும…

  12. http://youtu.be/Ko_nwhZCd38 தமிழர்கள் மீதான போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவின் அரச, இராணுவ தலைவர்களை சர்வதேச விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. டிசம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளில், இதனை மீளவும் வெளிபடுத்திக் கொள்வதோடு நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய திடசங்கற்பம் பூண்டுகொள்வோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. 63வது அனைத்துலக மனித உரிமைகள் நாளாகிய (10-12-2011) இன்று உலகம் முழுவதும் பல்வேறு விடயங்கள் நாடுகளினாலும், அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நாளை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியைக் கோரி, நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள்…

  13. பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்கள் யுத்தம் இடம்பெற்ற சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஹோவர்ட் தெரிவித்துள்ளார். எனினும், ரிச்சர்ட் ஹோவார்ட்டின் கருத்து தவாறானது என ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால், சில பகுதிகளுக்கு எவரையும் அனுமதிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் இதுவரையில் நிலக்கண்ணி வெடிகளினால் எவரும் உயிரிழக்கவில்லை எனவும், யுத்த வயலத்தில் மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதி செய்வது …

  14. கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமெனவும் அவ்வாறில்லாவிடின் மாபெரும் மக்கள் சக்திப் போராட்டம் ஜனநாயக ரீதியில் வெடிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்ப் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் யாழ். பஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்கிக் கதறியழுதனர். அவ்விடத்திற்கு சென்றபோதே நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்படி தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிர…

  15. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையும், …

  16. தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம், நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது. இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தொய்வு நிலையிலிருந்து மீண்டெழுந்து, தமது சமூக அரசியல் விடுதலைக்கான இருப்பை உலக வெளியில் நிலைநிறுத்தவும் தமிழீழத் தனியரசு என்னும் இலட்சியத்தை அடையவும் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் நலன்கள் சார்ந்து பயணிப்பது என்ற பரிமாணத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச அரசியல் சூழலைக் கையாளுவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதொன்றே. அங்கீகாரத்தைப் பெறுவதற்கான…

  17. 63 வது ஆண்டின் மனித உரிமை நாளையொட்டி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையாகிய நாம் ஏனைய நாட்டு மக்கள் படும் அவல நிலையை போல் இலங்கையில் ஈழத்தமிழர் மக்களின் அவலை நிலையை எடுத்துக் கூற விரும்புகிறோம் . இரண்டாம் உலகபோரின் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 10.12.1948 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட " மனித உரிமைகள் பிரகடனம்" 300 க்கும் மேலான பாசைகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக நாடுகளில் மனிதஉரிமையின் அத்திவாரமாக திகழ்கின்றது. இருந்தும் இன்றைய காலத்திலும் நம் முன்னே மிக கொடூரமான மனிதஉரிமை மீறல்களை அனைத்து கோணங்களிலும் நாம் காண்கின்றோம். உலகளாவியரீதியில் பட்டினி, அரசியல் அடக்குமுறை, பொருளாதார நெருக்கடி, சூழல் அழிவு தற்போதும் அன்றாடதாக உள்ளது . …

  18. இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்துக்குள் ஊருடுவி இணையதளத்தை முடக்கி அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் சுயவிவரப் பக்கத்தை நீக்கிவிட்டு அதில் ஆபாசத் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் சோனியாவின் 65-வது பிறந்தநாளான இன்று நடந்துள்ளது. வலைதளங்களில் மத சம்மந்தப்பட்ட உணர்வுகளைத் தூண்டும் கருத்துகளை போட வேண்டாம் என்று கூகுள், யாகூ, பேஸ்புக் உள்ளிட்ட இணையதள ஜாம்பவான்களுக்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்துக்குள்ளேயே சிலர் ஊடுருவி இருக்கிறார்கள்.இதையடுத்து உடனடியாக அந்த இணையதளத்தை காங்கிரஸ் கட்சி மூடிவிட்டது. இந்த ஊடுருவலை நடத்தியவர்கள் ஹேக்கர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilthai...newsite/?p…

  19. பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட படைச் சிப்பாய் மாணவியிடம் கல்லெறிபட்டு அவமானப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. நேற்று (09-12-2011) பாடசாலை விடுமுறை தினமான நேற்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவியை அளவெட்டி முகாமில் நிர்வாணமாக நின்று கூப்பிட்ட சிப்பாய் மீது ஆத்திரமுற்ற மாணவி கற்களை வீசி தாக்கமுற்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொது மக்கள் கூடிய போது, ஏனைய படையினர் தலையிட்டு பொது மக்களையும் கலைந்து செல்லச்செய்து நிலமையை கட்டுப்படுத்தியுள்ளார்கள். தெல்லிப்பளையில் இருந்து அளவெட்டிக்குச் செல்லும் எட்டாம் கட்டை வீதியில் அளவெட்டியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் கொண்டுள்ள படையினர் அந்தப் பகுதியால் பாடசாலை செல்லும் மாணவிகள், பெண்கள் மீ…

  20. இராணுவத்தினரிடம் பொதுமக்கள் மட்டுமன்றி பாதிரியாருடன் அரசியல்துறையைசார்ந்த போராளிகளும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.அத்துடன், கைது செய்யப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோர் தொடர்பிலான விபரங்கள் உறவினர்களுக்கு இன்னுமே தெரிவிக்கப்படவில்லை. இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான கு…

    • 3 replies
    • 1.2k views
  21. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை எமிரேட்ஸ் மற்றும் சிறிலங்கன் விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டதுடன், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.10 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் ஒன்று கட்டார் நாட்டுக்கு புறப்பட்டது. விமானத்தள ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பிக் கொண்டிருந்த அதேநேரம், கொழும்பில் இருந்து வந்த எயர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரையிறங்கியது. சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று…

  22. யுத்த வலயத்தில் பெருமளவிலான பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஹோவிட் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உடல்கள் அதிகளவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். யுத்த வலயங்களில் எவ்வித கட்டுப்பாடுமின்றி பயணம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நிலக்கண்ணி அகற்றப்படாமையினால் சில பகுதிகளுக்கு செல்ல அரசாங்கம் அனுமதிப்பதில்லை. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் …

  23. யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் வட மாகாண ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. யான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் ஒரு ஜனநாயகமும் ஏனைய பகுதிகளில் வேறு ஜனநாயகமும் நிலவுகின்றதா என்றும் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். சுரேஷ் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 1958 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. அதற்கான ஒழுங்கு விதிகள் 1966 இல் கொண்டு வரப்பட்டன. இதன்படி வடக்கு கிழக்கின் சகல அரச நடவடிக்கைகள் பொது நடவ…

  24. இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் காட்டும் அசமந்தப் போக்கினால் நாடு துண்டாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதை கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உத்தேசிப்பதையாவது வழங்க வேண்டும் என்று ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவும் மேற்குலக நாடுகளும் தேசியப் பிரச்சினையில் நேரடியாக தலையிட ஆரம்பித்துள்ளன. இதற்கு அரசின் முட்டாள்தனமான செயற்பாடுகளே காரணமாகும். இந்தநிலை தொடரும் போது தேசிய பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்திருப்பதாவது: யுத்தத்தின் பின்னர் தமிழ் …

  25. இலங்கையின் இறைமையை பாதுகாக்க, இந்தோனேசியா முழு ஆதரவையும் வழங்கும் என அந்த நாட்டின் ஜனாதிபதி சுசிலோ யுதோயானோதெரிவித்துள்ளார். இலங்கையின் இறைமை மற்றும் தனித்தன்மையை தாம் பெரிதும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.