Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மொழியை பேச முடியாமைக்கு வெட்கப்படுகின்றேன் என ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி, ஹந்தானை சிவானந்தா தமிழ் வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர். தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் பேச முடியுமாயின் எமது பிரச்சினைகளில் அதிகம் தீர்ந்து விடும். எனக்கு தமிழ் மொழியில் ஐந்து சொற்கள் பேச முடியுமாயின் இந்நாட்டு குடி மக்களது பெருமை மிகு தந்தைகளில் ஒருவனாக நான் திகழ்வேன். கடந்த 30 வருடமாக நாம் இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தில் இருந்தோம். தற்போது ஒளி மயமான ஒரு கால கட்டத்தின்…

  2. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் படையினர் சோதனையில் ஈடுபட்டார்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இலங்கைப் படையினர் இன்று அதிகாலை; சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். வீதியால் நடந்து சென்றவர்கள் வழிமறிக்கப்பட்டு விசாரரிக்கப்பட்டார்கள். அவர்களது தேசிய அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டன. விமானப்படையினரும் இராணுவத்தினரும், இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறினார்கள். அவசரகால சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சோதனை நடவடிக்கைகளை படையினர் மேற்கொள்ள முடியாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார். http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10…

    • 0 replies
    • 864 views
  3. பொதுப்படுகடன் சுமை 81 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு அண்மைய வரவு செலவுத்திட்டத்தில் ரூபாவின் பெறுமதி மதிப்பிறக்கம் செய்யப்பட்டமையால் நாட்டின் பொதுப்படுகடன் 81 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொதுப்படுகடன் 5,200 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கடன் தொகையில் 52 சதவீதமானது வெளிநாட்டுக் கடனாக உள்ளமை பாரதூரமான விடயமாகுமெனவும் அவர் கூறினார். ரூபாவின் பெறுமதி 3 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதால்; வெளிநாட்டுப் படுகடன் 81 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்;. இது மோசமான நிலைமை என அவர் கூறினார். சர்வதேச நாணய நிதிய…

    • 3 replies
    • 1.3k views
  4. மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம் பெற்று வரும் முறைக்கேடான முறையிலான அரச நியமங்களுக்கு எதிராக எதிர் வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நடாத்தவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பிலும், இப்பேரணி நடாத்துவது தொடர்பிலும்,இப்பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கும் அவசரக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள மன்னார் …

  5. 'வீரவேங்கைக்கு வணக்கம்' என பதாகை வெளியிட்டமைக்கு விசனம் சுன்னாகம் பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்த இளைஞனின் மரணம் தொடர்பாக வீரவேங்கைக்கு வணக்கமெனக் கூறி பதாகையொன்று வெளிவந்தமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரெனக் கூறி கைதுசெய்யப்பட்ட மனநோயாளியான சுமனன் (வயது 28) என்பவரே பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்து அவருடைய சடலம் மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரனையும் இடம் பெற்றது. இந்நிலையில் இத்தகைய பதாகையை வெளியிட்டு மரணமடைந்தவரை புலிகளெனக் கூறி பிழையான வழியில் வழக்கை திசை திருப்பும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டுள்ளதாக இளைஞருடன் தொடர்புடைய…

    • 1 reply
    • 1.4k views
  6. இருவர் வெள்ளை வேனில் கடத்தல் வரக்காபொல பகுதியில் நேவிருவன் என அழைக்கப்படும் ருவன் சந்திமால் டெப் என்பவரும் அவருடைய நண்பரான தம்மிக்கவும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நேவி ருவனின் மனைவி முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.alaikal.com/news/?p=89964

    • 1 reply
    • 1.2k views
  7. இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளில் தற்போது ஏற்பட்டுள்ள தடங்கல் பின்னடைவு நிலைமை தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை விவரமாக தெளிவாக விளக்கு வதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது. தீர்வுப் பேச்சில் திடீரென ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்த தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்காக கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசு கூட்டமைப்பின் பேச்சின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது என்றும் அதேசமயம் தற்போதைய …

    • 2 replies
    • 735 views
  8. 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ஆற்றிய சேவைகளை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ராதிகா குமாரசுவாமிக்கு தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான விசேட பிரதிநிதியாக ராதிகா குமாரசுவாமி கடமையாற்றி வருகின்றார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் ராதிகா குமாரசுவாமி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனியபாரதி எனப்படும் புஷ்ப குமார என்பவருக்கு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விருது வழங்கப்பட்டதாக சண்டே லீடர் பத்திரி…

    • 1 reply
    • 1.8k views
  9. சில வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேர்ந்த கதி எனக்கும் நடக்கும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது வெறும் பகல் கனவே என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அம்பலாங்கொடை, பட்டபொல சிறி சுபத்ராராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார். "அற்ப அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த பயணத்தை நிறுத்தி விட முடியாது. அதிபர் பதவியை விட நான் மேலே செல்வதற்கு உச்சமானது வேறில்லை. அரசியலில் நன்கு அனுபவப்பட்ட நான் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் கலங்கமாட்டேன். விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க முடியாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. அதனால் விமர்சன…

  10. பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரித்துள்ளதுடன், அதனை வரவேற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் இந்த ஆதரவினைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவிக்குழு தொட்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஆதரித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலையை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரிக்கின்றது வரவேற்கின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தமிழ்த் …

  11. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்க தூதரக அதிகாரி நடத்திய சந் திப்பின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார். எனினும் மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பு சரத்பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக அல்ல எனக் குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும் அவை தொட…

  12. மாதகல் கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்களால் பேரணியும் மகஜர் கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முற்பகல் சண்டிலிப்பாய் அந்தோனியார் தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதேச சபைச் செயலகத்தினைச் சென்றடைந்து பிரதேசசபைச் செயலரிடம் மனுக்கையளிப்பும் இடம்பெற்றுள்ளன. மாதகல் கிராமத்தினைச் சேர்ந் மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இன்று பேரணி இடம்பெறுவதை அறிந்து கொண்ட இராணுவத்தினரும் பொலிசாரும் குறித்த பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.saritham.com/?p=42919

  13. இலங்கையுடனான பொருளாதார நட்புறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. வலய மட்டத்தில் சமாதானம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்த இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உருதுணையாக அமையும் என பாகிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். இலங்கையின் விமானப்படை அதிகாரி சீப் மார்ஷல் W.D.R.M.J.கூனேதிலகவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் பாகிஸ்தான் ஜனாதிபதி திருப்தி வெளியிட்டுள்ளார். http://www.saritham.com/?p=42911

  14. 08.12.11 மற்றவை ‘இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்’ என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ‘‘தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல’’ என கொந் தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் ‘நல்லிணக்கமும், போருக்குப் பின்னரான நிலையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ‘‘அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆக…

  15. அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'தமிழ்ப் பெண்புலி' என்ற நூலின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்த நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா யாழ்ப்பாணத்தின் பிரபல ஆண்கள் பாடசாலையான சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழான சண்டே லீடரில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. “'தமிழ்ப் பெண் புலி' [Tamil Tigress] என்ற நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா தொடர்பான செய்திகள் கடந்த வாரம் இப்பக்கங்களில் அதிகம் காணப்பட்டன. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில், தான் மூத்த தமிழ்ப் பெண் உறுப்பினர்களில…

  16. அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு (International Crisis Group) - பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழுவிற்கு இடையிலான தகவல் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழுவின் இலங்கை விவகாரம் தொடர்பான முக்கிய பிரதிநிதிகள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பிரித்தானிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லீ ஸ்கொட், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானிய தமிழர் பேரவையின் அங்கத்தவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலின்போது, சமகால அர…

  17. தமிழர்கள் ஒற்றுமையின்மையின் சின்னமா? என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த 60 வருட கால தமிழர் அரசியலில் எமது தோல்விக்கு இது தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. பேராசிரியர் க.சிற்றம்பலம் கடந்த வியாழன் (1.12.2011) இரவு தொலைபேசியில் உரையாடிய பொழுது ஒரு கருத்தினை முன்வைத்தார். இந்த முறையும் கொழும்பு தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றி விடுமா? என்ற கேள்வியை முன்வைத்தார். கொழும்பு தலைமைகள் பற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தந்தை செல்வா இருந்த காலத்தில் வன்னியசிங்கம் அவர்களே தமிழர் விவகாரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தார். பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியன மறைந்த வன்னிய…

  18. லக்பிம நியூஸ் பத்திரிகையின் ஆசிரியரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான ராஜ்பால் அபேநாயக்க மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜ்பால் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் வருடாந்தம் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரத் என் சில்வா பிரதம நீதியரசராக கடயைமாற்றிய காலத்தில் அவருக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்த சட்டத்தரணிகள் த…

  19. Started by Nellaiyan,

    Outside the TMVP office in Tirukkovil - White van with newspaper in place of number plate and Jeevendran and Inayapaarathi – Picture taken from inside our van through the windscreen - Picture by Uvindu Kurukulasuriya , TMVP child soldiers - Athula Vithanage pretends to take notes Picture by Uvindu Kurukulasuriya, From Left - Inayapaarathi, Jeevendran, an armed cadre, Sukumar Muralidharan, David Dadge and Uvindu Kurukulasuriya – Picture by Athula Vithanage and TMVP Tirukkovil van has no number plate Picture by Athula Vithanage In November 2005, in recognition of her service to the country and the world, then-President of Sri Lanka Chandrika Kumaratunga conferred on Ra…

  20. தேசத்துரோகி கருணாவின் முக்கிய சகாவும், இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவாட்ட அமைப்பாளர் என சொல்லப்படுபவருமான இனியபாரதி என்ற போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நபர் பிரான்சிற்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் குறித்த மேலதிக தகவல்கள் ஆதாரங்களுடன் கொழும்பு ரெலிகிராப் இணையத்தில் வெளியாகியுள்ளது(http://colombotelegraph.com/2011/12/03/exclusive-photographic-evidence-of-sl-government-whitevanning-child-soldier-recruitments-and-deshamanya-iniyapaarathi/). ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் சிறுவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொண்டமைக்காக இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல கொலைகளுக…

  21. இலங்கையிலுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார். காலியிலிருந்து கொழும்புக்கு வந்த கார் ஒன்றே 30ஆவது கிலோ மீற்றர் கம்பமொன்றில் மோதுண்டு விபத்துக்குள் ளாகியுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் இருவரும் ஆண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை தெற்கு அதிவேக வீதி ஒழுங்குகளை மீறிய மூவருக்கெதிராக நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனதிபதி மஹிந்தவினால் கடந்த மாதம் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட அதிவேக வீதியில் ஏழு நாட்களுக்குள் எட்டு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவி…

  22. உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் "பாலை' திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்கொண்டும் நர மாமிசம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்…

    • 0 replies
    • 816 views
  23. 200€விஜயகுமாரின் குடும்பத்தை வாழ வைக்கும். நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விஜயகுமார் என்ற உறவு தனக்கான தனது குடும்பத்துக்கான வாழ்வாதார உதவியை வேண்டி நிற்கிறார். கோழி வளர்ப்புக்கு தேவையான உதவி 30ஆயிரம் ரூபா (அண்ணளவாக 200.00€) உதவ விரும்புவோர் நேரடியாகவே உதவியை வழங்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும். விஜயகுமார் எழுதிய கடிதம் வருமாறு:- உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Vereinsregister: AZ- VR 20302 Amtsgericht 55543 Bad Kreuznach Finanzamt Idar-Oberstein,Steuer-Nr.…

    • 0 replies
    • 625 views
  24. கே.பி.யை இன்டர்போலிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ், சட்டமா அதிபரிடம் கோருவேன்: ஜயலத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுத கொள்வனவாளரான குமரன் பத்மநாதனை (கே.பி.) இன்டர்போலிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடமும் சட்ட மா அதிபரிடமும் தான் கோரவுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். கே.பியை கைது செய்வதற்கு இன்டர்போலுக்கு சென்னை நீதிமன்றமொன்று பிடியாணை பிறப்பித்ததாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 'இவ்விவகாரத்தை நான் எழுப்பியபின் அதிக எண்ணிக்கையானோர் என்னுடன் தொடர்புகொண்டனர். புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் என்னுடன் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டனர். கே.பி.யை இன்டர்போலிடம் ஒ…

    • 0 replies
    • 544 views
  25. பேரினவாத அரசின் தெரிவுக்குழு நாடகம் தமிழரை முடக்குவதற்கே: தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதற்கு தெரிவுக்குழுவே சிறந்ததான ஆயுதம் எனக் கருதியிருக்கின்ற அரசாங்கம் தமிழர் மீது அக்கறை காட்டுவதாக சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றி பலத்தை வீனப்படிப்பதாக தமிழ்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. தெரிவுக்குழு என்ற பாணியில் தமிழர் பிரதிநிதிகளை பேரினவாத வட்டத்துக்குள் முடக்கி விடுவதற்கே அரசாங்கம் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி புளொட் அமைப்பின் தலைவர் சி. சித்தார்தன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வீரகேசரிக்குத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.