Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா [அண்மையில் திருகோணமலை ஷாஹிரா கல்லூரியில் அ.வ.முஹ்சீனின் ‘ஜனநாயகம் - வெள்ளை - கிறிஸ்தவ சமூகங்களின் அரசியல் முறைமை’ என்னும் நூல் வெளியீட்டின் போது, அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான யதீந்திரா ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.] இந்த நூல் அடிப்படையில், அமெரிக்கா தலைமையில் அணிசேர்ந்திருக்கும் மேற்குலகத்திற்கு எதிரானதொரு நூலாகும். அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக அரசியல் முறைமையை இந்த நூல் வன்மையாக எதிர்க்கிறது. மேற்கால் முதன்மைப்…

  2. அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்றடைந்தவாகளுள் 95 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ள 107 பேரை ஏற்றிய படகு நேற்று 30ம் திகதி புதன்கிழமை கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வந்தவர்களில் 95 பேர் இலங்கையர்களும் இரண்டு இந்தோனேசிய படகோட்டிகள் உள்ளடங்களாக 8 ஈராக்கியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் வருகையால் அவுஸ்திரேலியா பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் பொவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அதிகமான இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகுகள…

  3. எல்.ரி.ரி.ஈ. தொடர்பான நிகழ்ச்சிகள், வைபவங்களுக்கு இலங்கை அரசு தடை தமிழீழ விடுதலைப் புலிகளள் தொடர்பான பிரசாரங்கள், வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கூறினார். இதை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டுமென ராஜதந்திர மார்க்கங்களூடாக அரசாங்கம் கோரும் எனவும் அவர் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்தவாரம் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், இரகசியமான அறிக்கையொன்றின்படி, சிறையிலுள்ள எல்.ரி.ரி.ஈ. கைதிகள் மாவீரர் தினத்தை கொண்டாட முற்பட்டபோது சிறைச்சாலை அத்தியட்சகர் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டிருந்தால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும். ஏனெனில் சிங்கள சிறைக்கைதிகள் அவர்களை தாக்க தி…

  4. கனடா நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்று கனடா நாடாளுமன்றில், மனித உரிமை கண்காணிப்பகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை இலங்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் மனித உரிமை கண்காணிப்பகம் கனடாவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் எலியன் பியர்சன் என்பவரே இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு எதிராக பல போலிக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எ…

  5. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நாளை மிக முக்கியமான பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள பேச்சு மிகவும் முக்கியமானதாக இருக்குமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார். எந்த அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதென்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும், அதன் அடிப்படையில் பேச்சுக்கள் தொடருமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று இடம்பெற்ற பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை அரச இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 852 views
  6. இலங்கை அரசுக்கு இந்தியா உதவ முடியாமல் போகும்! சென்னையிலிருந்து எச்சரிக்கை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக் காவிட்டால், சர்வதேச அரங்கில் புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும். இதன்போது இந்தியா உதவி புரியமுடியாத நிலை தோன்றும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக் காவிட்டால்,அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விட யத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும். இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் ஆங்கில சஞ்சிகையில் அதன் கட்டுரையாளர் ஆர்.கே. இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்…

    • 0 replies
    • 913 views
  7. சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நடந்தேறின! - புதிய ஆதாரங்கள்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொள்வதற்கான கட்டளை சிறிலங்கா அரசாங்கத்தினால் படையினருக்கு வழங்கப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சாட்சியளித்துள்ளதாக The International எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடகத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்ட புலனாய்வுக் கட்டுரை ஒன்றிற்காக மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால்; இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பல கொடூரங்கள் மேற்கொள்ளப்பட்டதை நேரடியாகக் கண்ட ஒருவரும் சாட்சி இந்…

    • 0 replies
    • 1.5k views
  8. கொடிய மிருகங்கள் சிங்கள ஆயுதப்படைகளின் வடிவில் அல்ல தமிழ் ஆசிரியர்கள் வடிவிலும் உலாவுகின்றது. தனது பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் ஆசிரியர் ஒருவர். . போரில் தனது தந்தையை இழந்த இந்த மாணவ சிறுமி தன் தாயாருடன் வசித்து வந்த்தாகவும் இவர் சங்கீதம் படிக்கும் ஆசிரியரே இவரை தகாத முறையில் உறவுகொள்ள முயற்சித்தார் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஆசிரியர் உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சிப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற குறிப்பிட்ட மாணவியின் தாயார் தற்போது மன ரீதியிலான பாதிப்புக்கு உட்பட்டுள்ளார் எனச் செய்த…

  9. யாழ்.மாவட்டத்தினை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரச பதவிகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்.நகரின் பெருமாள் கோவில் முன்றலில் ஆரம்பமான இவ்வூர்வலம் ஸ்ரான்லி வீதி மற்றும் கோவில் வீதியூடாக சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினை சென்றடைந்திருந்தது.சுமார் நானூறு முதல் ஜநூறு வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் இவ்வார்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.ஆர்ப்பாட்ட முடிவினில் தமது ஜந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றினை அவர்கள் கையளித்திருந்தனர். மகஜரை பெற்றுக்கொண்டு ஆர்ப்பாட்டகாரரிடையே உரையாற்றிய ஆளுநரது செயலாளர் எல்.இளங்கோவன் பட்டதாரிகள் வெறுமனே அரச பதவிகளை மட்டும் நம்பிக்கொண்டிருப்பது பொருத்தமற்றதென தெரிவித்தார். எனினும் தம்மிடம் கையளி…

  10. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசு நடைமுறைப்படுத்துவதுடன் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். எனினும் வெளியிலிருந்து வரும் எந்த அழுத்தங்களுக்கும் அரசு அடிபணியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்படுமா? என்பதுடன் அறிக்கையின் படி குற்றவாளியாக காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரேயே ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். சுதந்திரமும் இறைமையும் உள…

  11. இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கடந்த ஜுன் மாதம் இந்தியா சென்றிருந்த போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அங்கு தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட…

  12. By (கோசலன்) முப்பது வருடம் வெற்றிகளையும் தோல்விகளையும் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்த ஒரு தேசிய இனத்தின் எச்ச சொச்சங்கள் என்றால் எத்தனை அறிவு பூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான நகர்வுகளைக் கண்டிருக்க முடியும்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சமூகம் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் இலகுவில் உணர்ந்து கொள்வார்கள். முள்ளிவாய்க்காள் இழப்புக்கள் வரைக்கும் இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் அறுவடை செய்திருக்கிறோம். அத்தனை நண்பர்களையும் எதிரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தனை எதிரிகளையும் நண்பர்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். மூன்று கால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் நியாயமான போராட்டம் தடையங்கள் கூட …

  13. இலங்கையின் மூன்றாவது எண்ணெய் கிணறும் மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் அகழ்வுப் பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், இதிலிருந்து முதலில் காஸ் பெறப்படும் எனவும் கூறப்படுகிறது. மன்னார் கடற்படுகையில் 30 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மூன்றாவது எண்ணெய்க் கிணற்றின் அகழ்வுப் பணிகள் இடம் பெறுவதாகவும் முதலாவது கிணற்றிற்கு சமீபமாக இந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இதன் அகழ்வுப் பணிகளை இந்திய கெயார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அக்கம்பனி எண்ணெய் உள்ளதாக ஆய்வுகள் மூலம் இனங்காணப்பட்ட இடங்களில் இந்த அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இனங்கண்ட முதலாவது மற்றும் இரண்டாவது எண்ணெய் கிணறுகளின் அகழ்வுப் பணிகள் வெற்…

  14. இலங்கையில் இனங்களுக்கு இடையே நல்லுறவு நிரந்தரமாக நீடிக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜப்பான் அரசு எதிர்பார்க்கின்றது. இவ்வாறு இலங்கை வந்துள்ள ஜப்பானிய முன்னாள் சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அத்துடன், பொறுப்பு கூறல் தொடர்பில் உள்நாட்டு செயன்முறை தேவை. எனினும் அது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தேவை கருதி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஜப்பானிய அரசு எதிர்பார்க்கின்றத…

  15. பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும். செவி ல றூ விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் மாலை விழா ஒன்று அண்மையில் செவி ல றூவில் இடம்பெற்றபோதே இந்த இளைஞர் கௌரவிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி பிரான்சின் பிராந்தியங்களுக்கிடையிலான மரதன் (Cross Country) ஓட்டப்போட்டி பரிஸ் புறநகர் பகுதியான பொந்தோ கொம்போவில் ( Pontault-Combault ) நடைபெற்றது. இதில் வெற்றியீட்டிய கெவினுக்கு 2010- 2011ம் ஆண்டுக்கான விருதும், 2011ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த இளம் சாதனையா…

  16. அமெரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் விரும்பினர்– விக்கிலீக்ஸ்:-தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்து கொள்ள புலிகள் விரும்பியதாகவும், 2002 சமாதான முனை…

    • 0 replies
    • 1.1k views
  17. இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புநிராகரித்திருக்கிறது. இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், அரசு, கூட்டமைப்புடன் வியாழனன்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்த யோசனையை முன்வைத்ததாகவும், ஆனால், இரு தரப்புகளுக்கும் இடையே தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தைகளின் முடிவில் காணப்படும் இணக்கப்பாடை, இந்த தெரிவிக்குழுவின் முன்னர் வைத்து, அதன் பின்னர் அந்தக் குழுவில் அதைப் பரிசீலிக்கும்போது அதில் பங்குபெறுவது குறித்து யோசிக்கலாம் என்று தாங்கள் கூறியதாகக் கூறினார். அரசு தரப்பில் இரு தரப…

  18. அனுராதபுரம் சிறைச்சாலையில், நடந்ததாக கூறப்படும் சம்பவமானது அரசாங்கத்தின் தளர்வு போக்கால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் என ஊடக மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் புலம்பெயர் தமிழர்களுடன் நீண்டகாலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துளளதாகவும் மேற்படி சம்பவம் தொடர்பான அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் தளர்வான போக்கு காரணமாகவே, நிலைமை உக்கிரமடைந்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளில் புலிகளின் இலச்சினையும் இருந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட …

  19. வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்? நாங்கள் நெடுகலும் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் குறை சொல்லுறம் எண்டு நீங்கள் புறுபுறுக்கிறது எங்களுக்கும் கேக்குது கண்டியளோ? இண்டைக்குப் பாருங்கோ எங்கட சனாதிபதி ஐயா எங்கட பிரதிநிதியளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார் எண்டதப் பற்றிச் சொல்லப் போறம் பாருங்கோ! வடக்கிலயும் கிழக்கிலயும் போரால பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலை கீழா நிண்டு எண்டாலும் உதவி செய்ய வேணும் எண்டு நினைக்கிற அந்த மனிசன் சனாதிபதி இருக்கிறார் தானே? அவர் பாருங்கோ தமிழ் மக்களின்ர பிரச்சினையளை மட்டும் பாக்கேல்ல பாருங்கோ, தமிழ் மக்களின்ர பிரதிநிதியளுக்கும் பிரச்சினை எண்டால் உடன பதறியடிச்சு உதவி செய்யிறாராம் எண்டால் பாருங்கோவன். உங்களுக்கு என்ன, தலை சுத்துதே? சுத்தாமல் பி…

  20. Started by akootha,

    ஈழம் இன்று! ஈழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்! இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி! இன்னமும் முறியாத முள் வேலி! 'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத…

    • 0 replies
    • 933 views
  21. காதலில் ஏற்பட்ட தோல்வி, விரக்தி காரணமாக இளம் பெண் இராணுவ வீராங்கனை ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (01) காலை மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற 24 வயதான பெண் இராணுவ வீராங்கனை யே ரி-54 ரா துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்கொலை தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.saritham.com/?p=42523

  22. போர்க்குற்றங்களுடன் சிங்கள அரசு நேரடி தொடர்பு - புதிய ஆதாரங்கள் !! The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period…

  23. எம்.வி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை கைப்பற்றி தடுத்துவைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலான பயணிகள் கப்பல்சேவையில் ஈடுபட்ட இந்தியாவின் எம்.வி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை கைப்பற்றி தடுத்து வைக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டமைக்கான கொடுப்பனவுகளை இக்கப்பல் நிறுவனம் செலுத்தத் தவறியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக மார்ஷலுக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். இக்கப்பலுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை எம்.ஏ.ரஸாக் அன்ட் கம்பனி மே…

    • 0 replies
    • 869 views
  24. யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு2009 வரை விடை கிடைக்கவில்லை.நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாத…

  25. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு' என்பதாகும். மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.