ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அவர்களை நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கு புலம்பெயர் …
-
- 0 replies
- 559 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் அவர்களது 5 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சாவகச்சேரியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அந் நிகழ்வை நடத்தவிடாமல் இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஐா ரவிராஐ் அவா்களது 5 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சாவகச்சேரியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இது பற்றி தகவல் அறிந்த இராணுவத்தினா் நிகழ்வுக்கான மண்டபம் வழங்கியவா்களது வீட்டுக்குச் சென்று …
-
- 0 replies
- 604 views
-
-
இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைக்காக குரல் கொடுப்போரை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டம், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, தேசிய மனித உரிமைப் பாதுகாப்பு திட்டம் போன்றன வரவேற்கப்பட வேண்டியவை என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், சட்டவிரோதமான முறையில் இரகசியமாக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தும நடைமுறை இல்லாதொழிக்…
-
- 0 replies
- 566 views
-
-
தமிழீழ மண்ணில் சிங்களப்பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை புலம்பெயர் நாடுகளில் மீள நிறுவும் பணி,தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வழியில், யேர்மனியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் செயற்பாட்டினால் நிறுவப்படவிருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று பிற்பகல் 14:00 மணியளவில்SüdwestFriedhof,FulerumerStr.15b,Essen மாநகரத்தில் இடம்பெற்றது. விளக்கவுரையினைதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப்பொறுப்பாளர் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, பொது ஈகைச்சுடரினை, வீரவேங்கை தோமஸ் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, கப்டன் சதீஸ் அவர்களின் சகோதரி அடிக்கல்லினை நிறுவினார். அதனைத்தொடர்ந்து அங்கு…
-
- 6 replies
- 1k views
-
-
20 வருடத்தின் பின் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை சென்றடைந்தார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 26 நவம்பர் 2011 சுமார் இருபது வருட இடைவெளியின் பின்னர் புத்தபகவான் மீண்டும் யாழ்.கோட்டையை நேற்று சென்றடைந்துள்ளார். யாழ். கோட்டை மீதான புலிகளது முற்றுகைப் போரையடுத்து 1990 ம் ஆண்டுடன் புத்தபகவான் சிலைகளும் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு இடித்தழிக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்கு மாற்றீடாகவே நேற்று மீண்டும் படையினரால் யாழ்.கோட்டையினுள் புதிய புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட புத்தர் சிலைகளுக்கு தொடர்ந்தும் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஓல்லாந்தரினால் கட்டப்பட்ட யாழ்.கோட்டை பின்னர் பிரிட்டிஸ்காரர் வசம் வந…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிறந்தநாள் கொண்டாட்டம்; தடுப்பதற்காக யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் …
-
- 3 replies
- 830 views
-
-
தேசிய தலைவர் அவர்களுக்கு, இன்றைய விஞ்ஞான உலகத்தில் எங்களின் உணர்வு எப்படியும் சேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் தலைமையில் தமிழ் ஈழத்திற்காக தங்களை உயிராயுதமாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக வீரவணக்கம். உயுராயுதம் இது சாதாரண வார்த்தை அல்ல. போனால் வராத உயிரை நொடிப் பொழுதில் தன் இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், தன் தலைவனின் கட்டளைக்காகவும் அர்ப்பணித்த உள்ளங்களை வாழ்த்தவும், வர்ணிக்கவும், தமிழில் வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு முன் நிகழ்ந்த வீர வரலாறுகளும் சரி, அதன் பிறகு நடந்த போராட்டங்களையும் ஒப்பிட்டு…
-
- 5 replies
- 1.4k views
-
-
வெள்ளை வேன் ஆட்கடத்தலில் பின்னணியில் கோத்தபாய? Thursday, November 24, 2011, 14:21 இலங்கையில் வெள்ளைவான்கள் மூலம் ஆட்களை கடத்திச் செல்லும் குழுவினரை பாதுதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவே முழுமையான அறிவுறுத்தல்களுக்கு அமைய வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருவதாகவும் வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இவ் ராணுவ அதிகாரி ஒரு காலை இழந்தவர். அங்கவீனம் காரணமாக சேவையில் இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில் இருந்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார…
-
- 5 replies
- 1.4k views
-
-
Here are the full details of the group of white Van criminal abductors (Lanka-e-News -23.Nov.2011, 11.55P.M.) Lanka e News is in receipt of reliable information on the groups involved in the abductions of civilians in the notorious white Van. This whole operation is carried out on the orders of defense Secretary Gotabaya Rajapakse by a former Sergeant Major of the Special Force's (SF's) LRRP unit. His name is Maddumage Wasantha who lost a leg during the Mamaduwa in Vavuniya District army operations. He left the Army because of his disabled condition on medical grounds. Although he is supposed to have left the Arm…
-
- 4 replies
- 1.7k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு என்ன நடந்தது ?- சிறீதரன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களுக்கும் ஆயர் ஒருவரின் உதவியுடன் சரணடைந்த 100க்கு மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது என்ற தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். அத்துடன் அப்பா வருவார் என்று கண்ணீருடனும், ஏக்கத்துடனும் பல பிள்ளைகள் காத்திருக்கும் நிலைமையே வன்னியில் ஏற்பட்டுள்ளதா…
-
- 1 reply
- 1.3k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 09:14 GMT ] [ நித்தியபாரதி ] "எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார். இவ்வாறு AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிவருகின்றனர். சிறிலங்காவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள காடுகளில் 2009 ஏப்ரல், மே மாதங்களில் …
-
- 0 replies
- 565 views
-
-
சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சனிப்பெயர்ச்சியால் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்ளில் சிறிலங்கா அதிபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். வரவுசெலவுத் திட்ட விவாதங்கள் முடிந்த பின்னர், டிசம்பர் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்குமாறு சோதிடர்கள் சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சமல் ராஜபக்ச பிரதமராகவும், நிமால் சிறிபால டி சில்வா சபாநாயகராக…
-
- 3 replies
- 1.9k views
-
-
அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களினால் நாட்டின் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் n;சயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதியிறக்கம் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல…
-
- 5 replies
- 1.1k views
-
-
மாவீரர் வாரத்தில் மாவீர்கள் சென்ற வழியில் சென்று தங்கள் வாழ்வை இன்று சிறைகளில் கழிக்கிற முன்னாள் போராளிகள் முகவர்கள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமற்ற மிகவும் அவலப்படுகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கியுதவுங்கள். தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வ…
-
- 21 replies
- 2.3k views
-
-
அமைச்சர் சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர்- கொல்ல நினைத்ததாக ஆவேசப் பேச்சு!வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011, 14:24 [iST] A A A NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்டெல்லி: மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அடித்து, உ…
-
- 5 replies
- 1.8k views
-
-
அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். ஆனால், தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களைக் கூட்டமைப்பு உடனடியாக நியமி…
-
- 1 reply
- 840 views
-
-
சில நாடுகள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் உலக நாடுகள், ஈழக் கோட்பாட்டாளர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார். வெளிச் சக்திகளின் அழுத்தங்கள் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சர்வதேச…
-
- 2 replies
- 1.1k views
-
-
அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் ‘பிறிட்ஜிங் விஸா’ வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ‘பிறிட்ஜிங் விஸா’ கப்பல் மூலம் வந்தவர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்த் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை முதன்முறையாகப் போரின்போது இறந்த பொதுமக்களின் தொகையைக் கணக்கிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் முதன்முறையாகப் போர்வீரர்கள் குறிப்பிடப்படாத குற்றங்களைச் செய்திருக்கலாமெனக் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். போர்வீரர்களின் பக்கமுள்ள அரசின் ஒரு நபர் இவ்வாறு குறிப்பிட்டதானது பாரியதொரு மாற்றமென த ஹிந்து பத்திரிகை குறிப்பிடுகின்றது. அண்மைக்காலம்வரை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படவில்லை என்றும் இவ்வாறான பொதுமக்களின் இழப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் அரசினால் மறுக்கப்பட்டுவந்தது. ஓகஸ்ற்றில், பொதுமக…
-
- 0 replies
- 962 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை எனக் கண்டால் சுயாதீனமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க செனற்றர்கள் மூவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளாரி கிளிங்டனை எழுத்துமூலம் கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு வலயம், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியமை நீதிப்புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். http://www.saritham.com/?p=41841
-
- 0 replies
- 767 views
-
-
'அவுஸ்திரேலியாவில் படகு அகதிகளும் விமான அகதிகள் போன்று நடத்தப்படுவர்' அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் 'பிறிட்ஜிங் விஸா' வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்…
-
- 0 replies
- 669 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் – படைப் புலனாய்வாளர்கள் அடாவடித்தனம் (Photo in) Friday, November 25, 2011, 10:23 2 ஆம் இணைப்பு – யாழ் பல்கழலக்கழக வளாகத்தினுள் இன்று (24-11-2011) பல இடங்களில் எழுச்சிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாணவர்கள் புத்தெழுச்சியுடன் காணப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகை வளாகத்தின் முக்கியமான பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர் பொது மண்டபம் மற்றும் ஈருறுளி தரிப்பிடம் போன்ற பகுதிகளில் இவை காணப்பட்டன. தமிழீழத் தேசியத் தலைவரின் 57வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று மாலை சில இடங்களில் எழுச்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் பல சுவரொட்டிகள் மாவீரர் நாளை முன்னிட்டு ஒட்டப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது. கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது. அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்…
-
- 3 replies
- 940 views
-
-
வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு க…
-
- 2 replies
- 705 views
-