ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சீனாவிடம் இருந்து இரண்டு எம் 60 ரக இராணுவ விமான போக்குவரத்து விமானங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் இரணைமடு. முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் இராணுவத்தினரின் போக்குவரத்திற்கும் மற்றும் சிவில் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுமாம். ஏற்கனவே அம்பாரை, திருமலை போன்ற மாவட்டங்களுக்கு இராணுவம் விமானப்போக்குவரத்தினை ஆரம்பித்துள்ளது. மூலம்
-
- 0 replies
- 598 views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடிய அரசு பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்திலில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் நேற்றையதினம் கூறியுள்ளார். கனேடிய நாடாளுமன்ற பொதுச்சபையில் உரையாற்றும் போ…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக யாழ். இந்துக் கல்லூரி மணவர்கள் ஆர்பாட்டம் யாழ். குறிகட்டுவான் பிரதேசத்தில் மாணவன் பஸ்ஸில் ஏறும்போது தவறி வீழ்ந்து பலியான சம்பவதில் யாழ். இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தினரின் கவனயீனமான செயற்பாடே காரணம் என தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் சைக்கிள் ரயர்களைப் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 44 பேர் பணயிக்க கூடிய பஸ்சில் 90இற்கும் அதிகமான மாணவர்களை அனுமதித்தமை, ஒழுங்கற்ற நிர்வாக முறைகாரணமாகவும், அந்த மாணவர்களோடு பெறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் கூடத் செல்லவில்லை எனவும் குற்றம் சுமத்தினர். மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்…
-
- 1 reply
- 735 views
-
-
நீதித்துறையில் பல்லினத்தன்மையை அரசு மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் பேணிவருகின்றது. அதற்கு எவ்வித தடங்களும் ஏற்படாமல் அதற்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதம நீதியரசருடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பல்லினத் தன்மையைப் பேணுவதற்கு நீதித்துறையில் தமிழ்பேசும் நீதிபதிகள் அவர்களுக்கான சரியான விகிதாசாரத்துடன் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் பிரதம நீதியரசர் தெளிவாக இருக்கின்றார் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் …
-
- 0 replies
- 681 views
-
-
யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் டர்ந்தும் நீடித்து வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்திய தரப்பினர் தொடர்ந்தும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெற்ற அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிரான முனைப்புக்கள் முறியடிக்கப்பட்ட போதிலும், அச்சுறுத்தல்கள் முடிவடைந்து விட்டதாகக் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்…
-
- 0 replies
- 705 views
-
-
[Friday, 2011-09-30 21:51:57] வீடுகளை உடைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தேர்தல் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர அது முற்றாக கைவிடப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காணிகளையும் வீடுகளையும் பாதுகாப்பதா அல்லது சாதாரண மக்களை நசுக்கி அவர்களின் காணிகளை வெள்ளைக்காரர்களுக்கு விற்கும் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார். பிட்டகோட்டே ஒபேசேகரபுரவில் புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில…
-
- 0 replies
- 660 views
-
-
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 04:16 GMT ] [ கனடா செய்தியாளர் ] சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக கனடா குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பொதுச்சபையில் நேற்று முன்தினம் உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா மீது நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்த போதும், ஐ.நா நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா தனது வாக்குறுதியை செயலில் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றவுள்ளது குறித்து கனேடியப் பிரதமரின் கவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். …
-
- 16 replies
- 953 views
-
-
உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனின் நிலமை பற்றி மகசீன் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தருகிற விபரங்கள்…. ஒலிப்பதிவைக் கேட்க மேலுள்ள இணைப்பில் அழுத்திக் கேளுங்கள். முக்கியகுறிப்பு :- ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம். பேபால் - nesakkaram@gmail.com வங்கிவிபரம் :- Bank information Germany: NESAKKARAM e.V. 55743 Idar-Oberstein Konto-Nr. 0404446706 BLZ 60010070 Postbank Stuttgart Other countries: NESAKKARAM E.V A/C 0404446706 Bank code – 60010070 IBAN DE31 6001 0070 0404 4467 06 Swift code – PBNKDEFF Postbank Stuttgart Germany
-
- 0 replies
- 818 views
-
-
இலங்கைக்கான அடுத்த பொறி மார்ச்சில்...? ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் அமர்வுகள், தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், குறித்த அமர்வுகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கைக்கு பெரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. இருந்த போதிலும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இதே கூட்டத்தொடரில் பாரியளவிலான நெருக்குதல்களை இலங்கை சந்திக்க நேரலாம் என அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கருத்து தெரிவித்தார். http://www.tamilmirr...0-14-46-42.html சர்வதேசப் போருக்கு இன்று பதில் கிடைக்கும் போர்க் குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி சர்வதேச சமூகத்துடன் இடம்பெற்று…
-
- 1 reply
- 1.7k views
-
-
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து- சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளில் குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இம்மாதம் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கையை கொமன்வெல்த் நாடுகள் முன்னெடுப்பதை தடுக்கும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளத…
-
- 0 replies
- 807 views
-
-
எமது இனத்தின் போராட்டம் என்பது வரையறுக்கப்பட்டதல்ல. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் கல்விக்கான உமைப்போராட்டமாக ஆரம்பித்து இறுதியில் ஒட்டுமொத்த தேசத்தினை மீட்கும் போராக பரிணாமம் பெற்றதை எவரும் மறுதலிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெவித்ததார். மன்னார் நகரசபை மண்டபத்தில் நடை பெற்ற என்.எல்.எச்.கல்வி நிலையத்தின் ஓராண்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்விற்கு மேற்படி கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் இராஜ்மோகன் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோக ராதலிங்கம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தி…
-
- 0 replies
- 853 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. பேச்சின்போது எந்தவகையான அரசியல் தீர்வு என்பது தொடர்பான தமது இறுதி நிலைப்பாட்டை இலங்கை அரசு அறிவிக்குமென எதிர்ப்பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா எமது செய்தியாளரிடம் இன்று முற்பகல் தெரிவித்தார். அதேவேளை கூட்டமைப்புடனான பேச்சின்போது முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்படுமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்ததாக கொழும்பில் வெளியான லக்பிம என்ற சிங்கள நாளேட்டில் குற…
-
- 0 replies
- 841 views
-
-
யாழ் கோப்பாய் உணவுக்களஞ்சியத்தில் தீவிபத்து! Published on September 30, 2011-12:46 pm · யாழ் கோப்பாய் இராச வீதியில் அமைந்துள்ள உலக உணவுத் திட்டத்துக்குச் சொந்தமான உணவுக் களஞ்சியத்தில் நேற்றுப் பிற்பகல் பெரும் தீவிபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த சில உணவுப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். உலக உணவுத் திட்டத்தினால் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் களஞ்சியப் படுத்துவதற்காக இந்தக் களஞ்சியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுப் பிற்பகலில் இந்தக் களஞ்சியத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்ததாகவும், அதனை அணைக்க அங்கு நின்ற மக்க…
-
- 0 replies
- 583 views
-
-
சரணடைவதாக விடுத்த அறிவித்தல் களமுனைக்கு தாமதமாகவே கிடைத்தது: அதனால் கொல்லப்பட்டனர் – மகிந்தர் தரப்பு அறிக்கை Friday, September 30, 2011, 17:38 விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் களமுனைக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்படக் காரணமாக அமைந்து விட்டதாக சிறீலங்கா அரசாங்கத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தாருஸ்மன் அறிக்கை மற்றும் சனல்4 காணொளி என்பவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தயாரிக்கும் இரண்டு அறிக்கைகளில் ஒன்றிலேயே பிரஸ்தாப விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் திகதி நண்பகலே அன்றைய காலக…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாவிட்டபுரத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உலர் உணவு சம்பந்தமாக படங்கள் விலாசங்கள் சரியான முகவரி முக்கியமாக ஐ நா சபையின் பொதிகளில் காணப்படும் இலச்சனைகள் போன்ற ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.கிடைப்பவற்றை கள அங்கத்தவர்கள் பதிலுக்காக ஒதுக்கபட்ட பகுதியில் இணைத்தால் பெற்றுகொள்வேன். நீலப்பறவை
-
- 0 replies
- 986 views
-
-
இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்…
-
- 1 reply
- 1.4k views
-
-
[காணொளி] தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் “தேன் கூடு” விரைவில் உலகமெங்கும் வெளியாகிறது.. இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான “1999″ நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதை நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குநர் இகோர் இதன் முன்னர் கலாபக்காதலன், திக் திக் என்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் உணர்வுடன் வழங்குகிறார். [/center] <iframe width="425" height="349" src="h…
-
- 1 reply
- 908 views
-
-
தென்பகுதியில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் அலிவத்தைபகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அலிவத்தை பிரதேசத்தில் நேந்றிரவு 10 - 11 மணி அளவில் இருகுழுவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றியதை அடுத்து அங்கு குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மூலம்
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களின் தீவிரவாத செயல்கள் காணப்பட்டு அது தொடர்பில் தமக்கு நிரூபிக்கும்படியான தகவல்கள் வெளியிடப்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பொது மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ´உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள்´ நிகழ்ச்சியின் கீழ் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்த்தானிகர் ஜோன் ரன்கின் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் செயற்பாடுகள் பிரித்தானியாவில் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டால் பொலிஸ் மற்றும் நீதி அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Showஎனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்வரும் ஒக்ரோபர் 16-17 ஆகிய இருநாட்களுக்கு Mississaugaவில் உள்ள Living Arts Center416இல் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. கண்காட்சி இடம்பெறும் இருநாட்களும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' ஒன்று நா.த.அரசாங்கத்தின் கனடா-மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரிதிநிதிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழர்கள்…
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதற்கு பதிலாக உள் நாட்டு உள்ளக பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவர மஹிந்த அரசு திட்டமிட்டு வருகின்றது. இது மோதகமும் கொழுக்கட்டை போன்றும் உருவ மாற்றமே தவிரவேறு விடயம் ஒன்றும் இல்லை என மனித உரிமை வாதிகள் கூறுகின்றன. அவ்வாறாயின் ஏன் இந்த பெயர் மாற்றம்? 2012 மார்ச் மாதம் மனித உரிமை சபையில் வரப்போகின்ற சவால்களை சமாளிக்க மஹிந்த அரசு இப்போதே தயாராகிவிட்டது. இந்த அமர்விற்கு முன்பே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அமுலில் உள்ள உள்ளக ஆயுத கலாச்சார தடுப்பு சட்டம் என்ற பெயரில் அதே பயங்கரவாத தடுப்பு சரத்துக்களைக்கொண்ட சட்டத்தினை கொண்டுவர முடிவெடுத்துள்ளது. ஈழ நாதம…
-
- 0 replies
- 587 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகால சட்டடம் நீக்கப்பட்டதனைத்தொடர்ந்து அதற்குப்பதிலாக பயங்கரவாதத்தில் சில புதிய சரத்துக்களை சேர்ந்த்தது. இந்த புதிய சரத்துக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா. கைதிகளைத்தடுத்துவைத்தல், சரண்டைந்தவர்களை நீண்டகாலம் வைத்து புனர்வாழ்வளித்தல் என்ற பேரில் தடுத்து வைத்தல், ஆகிய புதிய சரத்துக்கள் ஆகியன அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற செயல் எனவும் அதனால் நீண்டகாலம் கைதிகளை நீதிமன்ற விசாரணை இன்றி வைத்திருக்க முடியும் எனவும் ஆகையால் அவற்றை நீக்கவேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஈழநாதம்
-
- 0 replies
- 600 views
-
-
இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எனவே போர்க் குற்றங்கள் அடங்கலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு உடனடியாக இந்த வருடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இல்லையேல் சர்வதேசத்தின் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.அவர் தனது அலுவலகத்தில் நேற்று தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அங்கு அவர் கூறியதாவது: தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாகத் தமிழ்த் தேசியக…
-
- 1 reply
- 585 views
-
-
ஸ்ரீலங்கா எயார்லைன் விமானம் பாரிஸில் தடுத்துவைப்பு! Published on September 29, 2011-8:44 pm ஸ்ரீலங்கா எயார்லைன் (UL 564) விமானமானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன்பிருந்தே பாரிஸிலுள்ள டி கோல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் எயார்லைன் அறிக்கையொன்றில் கூறியுள்ளது. இவ்விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகளுக்கு வேறு விமானங்களில் பயணம் செய்யும் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி லண்டன் – கொழும்பு விமானம் பாரிஸுடன் பறந்து அங்கிருந்து இலங்கை வரவிருந்த பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு வந்ததென அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.8k views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் அவர்கள் ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதை இங்கு கள உறவு ஒருவரால் இணைக்கப்பட்ட விடயத்தில் இருந்தும் இன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் மூலமும் அறிய முடிகின்றது. மிகவும் வருந்தத்தக்க ஒரு முடிவினை அவர் எடுத்திருந்தாலும் அவ்வாறான ஒரு முடிவினை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றே அறிய முடிகின்றது. திரு.ரகுராம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என யாழ் இணையம் வேண்டிக் கொள்வதோடு இந்த முடிவினை எடுக்கத் தூண்டியவர்கள் மீது கண்டணத்தினையும் இத்தால் பதிவு செய்து கொள்கின்றோம். திரு.ரகுராம் தனது முடிவினை அறிவித்தபின்னர் வானொலிக்கு வழங்கப்பட்ட செவ்விகள் திரு.ரகுராமினை ஊடக…
-
- 4 replies
- 1.4k views
-