Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் - கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்க…

  2. [ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 00:22 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் ஐந்து பேருக்கும் நீண்டகால சிறைத்தண்டனை வழங்குமாறு அரச சட்டவாளர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தில் வசிக்கும் தமிழர்களிடம் சட்டவிரோதமாக நிதி சேகரித்தது, சீட்டிழுப்புகளை நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் ஐந்து தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் நடத்திய போருக்காகவே இவர்கள் நிதி திரட்டியதாகவும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் இவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை என்றும் அரச சட்டவாளர்கள் சுட்டிக்காட்…

  3. [ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்ற வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியும், சீதாராம் சிவம் என்பவரும் நியுயோர்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், …

  4. போதைப் பொருள் வியாபாரி மேர்வின் சில்வா: விக்கிலீக்ஸ் தகவல் 27 செப்டம்பர் 2011 சிறிலங்கா அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் இவர்களில் பிரதான நபராக பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்வின் சில்வா விளங்குகிறார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அமெரிக்கத் து{துவர் பற்றீஸியா புற்றினிஸ் A leaked US embassy cable reviled “drug kingpins in SriLanka have political patrons in the government”. என்ற தலைப்பில் அனுப்பியிருந்த இராஜதந்திர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் விக்கி லீக்ஸை ஆதாரம் காட்டி கொழும்பு டெலிகிராப் செய்த…

  5. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 27, 2011 Gotabaya wanted to use Shavendra as the guinea pig சவேந்திரசில்வாவின் வழக்கை அவரே எதிர்கொள்ள வேண்டும் என கோத்தா கூறியுள்ளார். சுவிற்சலாந்தில் மேஜர் ஜெனெரல் டயஸ் அவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தடையாக இருக்கும் என கூறி வரவழைத்த அரசாங்கம் ஏன் சவேந்திரசில்வாவை அழைக்கவில்லை என அவரது குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.. அடுத்ததாக சவேந்திர சில்வா மீதான வழக்கு தொடர்பில் அவர் தானாகவே அதனை எதிர்கொள்ளப்போவதாக கூறினாரே தவிர சவேந்திர சில்வாவிற்காக அரச ஊடகங்களோ அமைச்சர்களோ ஏன் கோத்தபாய இராஜபக்‌ஷவோ இதுவரை குரல் கொடுக்காதது ஏன் எனவும் தென் இலங்கை ஊடகங்கள் கேள்வி எழுப்பியு…

  6. ‘யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறாக பெண்கள் மீது பாலியல் ரீதியல் துன்புறுத்தும் நபர்கள் குறித்த விபரங்களை எதிர்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடவுள்ளேன்’ என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பாடசாலைகளிலும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இவை தொடர்பில் இத…

  7. ஜே.வி.பி. உடைவு றோவின் சதி!கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்புக் குற்றச்சாட்டு ஜனத்தா விமுக்திப் பெரமுனவில் (ஜே.வி.பி.) ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் உளவுத்துறையான றோ (Research and Analysis Wing) பிரதான காரணம் என்று பரபரப்புக் குற்றஞ்சாட்டு ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் அந்தக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். ஜே.வி.பி. கட்சியின் கொள்கைப் போக்கில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிருப்தியாளர்கள் குழு ஒன்று தோன்றி உள்ளது. அவர்கள் கட்சித் தலைமையைக் கைப்பற்ற முயன்று வருகிறார்கள். அது சாத்தியப்படாத பட்சத்தில் பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை உருவாக்கவும் முயற்சிசெய்து வருகிறார்கள். இது குறித்துத் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த ந…

  8. Published By பெரியார்தளம் On Tuesday, September 27th 2011. Under மே பதினேழு இயக்கம் அறுபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு எந்த ஒரு இனமும் விடுதலை போராட்ட்த்தை விட்டு பின்வாங்கியதாக சரித்திரம் இல்லை நாமும் அவ்வாறே என்பதை உலகம் உணரட்டும். நம் விடுதலையை அறிவித்து விட்டு இந்தச் சர்வதேசச் சமூகம் தனது களங்கத்தை துடைக்கட்டும் என தமிழகத்தின் மே-17 இயக்கம் தனது பொங்குதமிழ் முழக்கத்தில் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியூ யோர்க்கில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு அனுப்பிய பொங்குதமிழ் முழக்கத்திலேயே இதனைத் தெரிவித்திருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம் குறித்தான விழிப்பையும் உறுதுணையையும் அறிவுசார் தளத்தில் முன்னகர்த்திச் செல்கின்ற தமிழக அமைப…

  9. இளம் பெண் ஊழியரின் மார்பைப் பிடித்து நசித்த டக்ளஸின் நண்பர்! [ Tuesday, 27-09-2011 12:48 ] யாழ் மாநகரசபை இளம் பெண் ஊழியர் ஒருவரின் மார்பகங்களைப் பிடித்து நசித்த மாநகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனைத் தட்டிக்கேட்க முயன்ற யாழ் மாநகரசபைப் பிரதம பொறியிலாளரையும் தாக்கி காயப்படுத்தியத்திய சம்பவம் ஒன்று இன்று திங்கள் கிழமை 11 மணிக்கு யாழ்.மாநகர சபையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனின் யாழ்.மாநகர மேயரின் அறைக்குள் மேயர் இல்லாத நேரம் பார்த்து இளம் பெண் (கிளாக்)கின் மார்பகங்களை கைகளினால் பிடித்து நசித்துள்ளார். அந்த இளம் பெண் இவரின் அந்த அநாகரிய செயல்…

  10. நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் ஆற்றல் ஜனாதிபதியிடம் இல்லையென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகை யிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை மஹிந்த பெற்றுக் கொடுக்காததன் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். அதனை மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினர் மீது ஆளுங்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இலங்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் இன்னும் உரிய வகையிலான தீர்வினைப் பெற்றுக் கொட…

  11. மஹிந்த அவசரமாக நாடு திரும்பினார்!! பின்னணி?! Published on September 27, 2011-9:57 am ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மன…

    • 7 replies
    • 2.2k views
  12. வன்னி மீதான இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர், பொதுமக்கள் யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது தொடர்பாக சிறிலங்காவில் உள்ள திருச்சபையானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாது அமைதி காத்ததைக் கண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அரசாங்கப் படைகளின் யுத்த மூலோபாயம் தொடர்பாக சில மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தமது அதிருப்தியை வெளியிட்ட போதிலும் கூட சிறிலங்காவிலிருந்த திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளைக் கண்டித்து எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப…

  13. வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது, காலநிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் இருந்து அப்பேதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இதுபற்றி வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12ம் நாள் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவ்ல வெளியிட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த…

  14. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நம்பத்தகுந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமைக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4மணிக்கு கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றினார். அமைச்சர் ஜோன் பெயார்ட் தனது உரையில் இலங்கையில் இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பிக்கைக்குரிய ஆதராங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஐக்கிய நாடுகள் அமைப்…

  15. வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய ஆயுதக்கிடங்கிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். படையினர் தங்கியிருந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, ஆயுதக்கிடங்கு அமைந்திருந்ததால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அ…

  16. அண்மையில் சனல் 4 தொலைக்காட்சில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை கனேடியப் பாராளுமன்ற வளாகத்தில் திரையிட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் இதன்படி நாளை புதன்கிழமை 28ஆம் திகதி கனேடிய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்காணொளியை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் மாத்திரமே காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/

  17. ”நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்” இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். . இந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக்கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எ\ழுதிய கடிதமே அவரது இறுதிக்கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது. . அவரது கடிதத்தில் ; இந்த வாரம் வரை 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் 4000 பேர்வரையில் காயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்ட…

    • 3 replies
    • 1.4k views
  18. [Monday, 2011-09-26 09:34:43] அடுத்த வருடம் ஆரம்பப் பகுதியில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், 80 களில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப் பெருமாளை ஆளுந்தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி காரியம் சாதிக்க சிறிலங்கா அரசு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இறுதியாக இலங்கை வந்திருந்த போது ஆளுந்தரப்பைச் சேர்ந்த சில சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் அவரைச் சந்தித்து வளிக்குக்கொண்டுவருவதற்காக கலந்துரையாடினர் எனவும் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாள் விரைவில் இலங்கை வரவுள்ளார் என்றும் மீண்டும் அவருடன் அரச தரப்பு பேசவுள்ளதாகவு…

  19. Published By பெரியார்தளம் On Tuesday, September 27th 2011. Under பெரியார் முழக்கம் மூன்று தமிழர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்ற வழக்கில் மத்திய அரசு என்ன பதில் கூறப் போகிறது என்று சென்னை கழகக் கூட்டத்தில் வைகோ கேட்டார். மரண தண்டனைக்கு எதிராகவும், மூன்று தமிழர் உயிர் காக்கவும் தமிழகம் முழுதும் மக்களைச் சந்திக்கும் பயணத்தின் தொடக்க விழா சென்னை இராயப்பேட்டை பத்ரிநாராயணன் நினைவு பெரியார் படிப்பகம் அருகே 20.9.2011 அன்று செங்கொடி நினைவரங்கில் எழுச்சியுடன் நடந்தது. கழகத் தோழர் அருள்தாசு, புத்தர் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் பொதுக் கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் அன்பு தனசேகர் வரவேற்புரை யாற்ற, கழகப் பொதுச்செ…

  20. Published By பெரியார்தளம் On Tuesday, September 27th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் டக்லஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி. என்ற அமைப்பின் தலைவர் ராஜபக்சே அமைச்சரவையில் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர், விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பாக இந்திய உளவு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறவர். 1986 இல் இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது உள்ளூர் மக்களிடம் தகராறு செய்து திருநாவுக்கரசு என்ற தலித் சிறுவனை சுட்டுக் கொன்றுவிட்டார். அப்போது, இவர் மீதும் இவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 1988 இல் சென்னையில் 10 வயது சிறுவனை ரூ.7 லட்சம் பணம் கேட்டு கடத்தியதாக மற்றொரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. …

  21. கனடியப் பாராளுமன்றத்தில் சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் [ Monday, 26-09-2011 10:25 ] சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணத் திரைப்படத்தைக் கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களிற்குள் திரையிட மனிதவுரிமை கண்காணிப்பகம் நேரடியாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. மனிதவுரிமை கண்காணிப்பகம் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஒரு மனித அமைப்பாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக கனடாவில் விடுதலைப் புலிகளையும் உலகத் தமிழர் இயக்கத்தையும் தடை செய்வதற்காக நேரடியாக அது முழு மூச்சாக ஈடுபட்டது. மேற்படி விடுதலைப்புலிகளின் தடை தொடர்பான ஆவணத்திலும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்ப…

  22. பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை, தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தைப் பலப்படுத்தவும்: குணதாச _ வீரகேசரி நாளேடு 9/27/2011 10:34:28 AM ‘பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எனவே, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தைப் பலப்படுத்த வேவண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. குறிப்பாக, வடக்குகிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. எனவே, சர்வதேசமோ தமிழ் அரசியல் கட்சிகளோ கூறுவது போன்று, இராணுவ முகாம்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்…

  23. ஐ.நா. செயலர் – மஹிந்த சந்திப்பில் இரு தரப்பும் காரசாரமான விவாதம் Tuesday, September 27, 2011, 8:25 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சந்திப்பின்போது பரஸ்பரக் குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.ஓராண்டுக்கு முன்னர் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தவில்லை என்பதை பான் கீமூன் அந்தச் சந்திப்பில் நினைவுபடுத்தினார். பதிலுக்கு இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஐ.நா. செயலருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது என்று கூறப்பட்டபோதும், அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக ஜ…

  24. உண்மையை நிலைநாட்டவே மகிந்த மீது வழக்கு – உருத்திரகுமாரன்!(காணொளி) Published on September 27, 2011-2:53 am 2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின் போது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம், கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூ யோர்க்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய இடத்தை வகிக்குமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச படைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றவர்களில, கேணஸ் ரமேசும் ஒருவர் என்ற நிலையில், சர்வதேசத்தின் தொடர்புடைய இந்த ‘வெள்ளைக்கொடி’ விவாகாரம் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.