ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143329 topics in this forum
-
Sep 7, 2011 / பகுதி: செய்தி / பாலியல் பலாத்காரத்தின் போது கூச்சலிட்டாலும் குற்றமாம் - கோதாபயவின் புதிய சட்டம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 175, 180 ஆகிய சரத்துக்களை அமுல்படுத்தி அவற்றில் புதிய விடயங்களைச் சேர்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய திருத்தத்தின் கீழ் திட்டமிட்ட வகையில் நபர்களுக்கிடையில் குழப்பதை ஏற்படுத்துவது சட்டவிரோதமானதும் தண்டனைப் பெறக்கூடிய குற்றமுமாகும். இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தைத் தொகையை அதிகரிப்பது குறித்துதும் ஆராய்ந்து பார்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு விதிக்கப…
-
- 2 replies
- 578 views
-
-
ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான அரச படையினரின் தாக்குதல்கள் தவிர்ந்த; இராணுவக் கட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியமை இணைத்தலைமை நாடுகள் அறிந்திருந்தன- விக்கிலீக்ஸ். வன்னியில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மீதான தாக்குதல் குறித்த விவகாரத்தை ஜனாதிபதியின் அப்போதைய ஆலோசகரான பசில் ராஜபக்ஷவிடம் கேட்டதாக கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளேக், 2009ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி நடந்த சந்திப்பொன்றில் இலங்கைக்கு உத…
-
- 1 reply
- 1.3k views
-
-
Published on September 5, 2011-5:19 am No Comments லண்டனில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிதரன் மற்றும் மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஹரோ நகரப்பகுதியில் அமைத்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக் கூட்டம் தாயக மக்களின் மறுவாழ்வு தொடர்பான கலந்துரையாடல் கூட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாயக மக்களின் அவல நிலைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரனும் மாவை சேனாதிராஜாவும் உரையாற்றி இருந்தனர் தாயக மக்களின் அவல நிலைகள், இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள், மற்றும் தொடரும் இன அழிப்புக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். இக் கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும…
-
- 7 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆயத்த நிலையிலிருந்த போது சிறிலங்கா குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக நபரான ரோஹன குமார என்பவர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.இவரை அமெரிக்காவுக்கு வரவழைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவே மேற்கொண்டிருந்தார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. பல படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ரோஹன குமாரவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாகவே வாழ்ந்து வந்திருந்த நிலையில் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வீஸாவைப் பெற்றுக் கொள்வதற்காகக் கடந்த வாரம் வ…
-
- 1 reply
- 875 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றி குறித்த சிறிலங்கா அரசின் விசாரணைகள் குறைபாடுகளைக் கொண்டது- அத்துடன் அது அனைத்துலக போர்க்குற்றவிசாரணைகளுக்குப் பதிலீடாக அமையாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விமர்சித்து அனைத்துலக மன்னிப்புச்சபை 69 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இறுதிக்கட்டப் போரின் போது குறைந்தது 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கான நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உதவிப் பணியாளர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குடிசனச் செறிவு மிக்க இடங்கள் மீது சிறிலங்கா இராணுவம் எறிகணைத் …
-
- 2 replies
- 989 views
-
-
2011 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனை குறைக்கப்படுமானால் அது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவேன் என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். . ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு முன் புலன் விசாரணை மேற்கொண்ட புகழ்பெற்ற காவல் துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஹெய்ட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தல்! - சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு!! ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரிந்த நூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படைத்தரப்பினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையின் சார்பில் ஹெய்ட்டியில் பணிபுரியும் பல்வேறு நாடுகளின் படைத்தரப்பினர் மீது இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது. வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து 6.9.2011 (செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் அறிவித்திருந்தார். அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100…
-
- 1 reply
- 1.3k views
-
-
விஸா இல்லாமல் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜையொருவர், தான் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளதாக நீதிமன்றில் இன்று அறிவித்தார்.சீனாவின் சோங்கிங் பிராந்தியத்தைச் சேர்ந்த பான் ஜுன் எனும் இந்நபர் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்திலும் தன்னை பதிவுசெய்துள்ளார். இவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இவரின் புகலிடக் கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவான் நாடினார். எனினும் சந்தேக நபரை செப்டெம்பர் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி சீனப் பிரஜை கொழும்பு -2 கங்காராம விகாரைக்கு அருகில் திரிந்தபோது , குடிவரவு, குடியல்வு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் க…
-
- 4 replies
- 765 views
-
-
[sunday, 2011-09-04 09:18:16] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி, விரைவுபடுத்தும் நோக்குடன் பிரதமர் அலுவலகச் செயலணி (Prime Minister Office Task Force) உருவாக்கப்பட்டுள்ளதென நா.த.அரசாங்க பிரதமர் செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரனால் அறிவிக்கப்பட்டுள்ள இச்செயலணியில் திரு. ஜெயக்குமார் திலீபன் (University of Wisconsin), திரு. செல்வராஜா செல்வத்துரை (ஐக்கிய இராச்சிய உறுப்பினர்); திருமதி. ஜெயமதி சிவசோதி (கனடிய உறுப்பினர்); வைத்திய கலாநிதி மாலதி வரதர் ஆகியோர்; தற்போது இடம் பெறுகின்றுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்…
-
- 2 replies
- 476 views
-
-
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு பிறகு எம் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்துள்ளனர் மற்றும்,மிச்சம் இருக்கும் மக்களையாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உந்துதலில் தாயக தமிழ்நாட்டில் இனத்திற்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.ஆளும் அம்மாவின் அ.தி.மு.க.அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை உள்வாங்கி செயல்ப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க முத்தான மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி உலகத்தமிழர்களின் தாயகமாம் தமிழ்நாட்டின் பெருமையினை தக்கவைத்துள்ளது.முதல் இரண்டுதீர்மானங்கள், ஸ்ரீலங்கா அரசின் மீதுள்ள போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு சர்வதேசத்தை வலியுறுத்துமாறு,டில்லி அரசை வலியுறுத்தியது.இரண்டாவது தீர்மானம்,ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத்தடையை விதிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. டில்…
-
- 0 replies
- 893 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையை கொள்வனவு செய்ய மகிந்த முயற்சி! - லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக தன்னுடன் மிக நெருக்கமாகவுள்ள பிரபல வர்த்தகரான அசங்க செனிவிரத்னவை சிறிலங்கா அரசாங்கம் அணுகியுள்ளதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் 75 சதவீதமான பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக 375 மில்லியன் ரூபா அரச வங்கி ஊடாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியில் மேலும் தெரி…
-
- 1 reply
- 454 views
-
-
http://www.yarl.com/files/110906_colombo_report.mp3
-
- 0 replies
- 898 views
-
-
http://www.yarl.com/files/110906_iyankaranesan.mp3
-
- 0 replies
- 633 views
-
-
http://www.yarl.com/files/110906_shan_thavarajah.mp3
-
- 0 replies
- 484 views
-
-
http://www.yarl.com/files/110906_thiruchi_veluchami.mp3
-
- 0 replies
- 824 views
-
-
http://www.yarl.com/files/110906_vvt_chairmans_report.mp3
-
- 0 replies
- 921 views
-
-
பெண்களுடன் சேட்டை புரிய முனைந்த இராணுவத்தினரைக் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது :நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள இளம் பெண்களிடம் 4 இராணுவத்தினர் சேட்டை விட முயன்றுள்ளனர். உடனடியாக அப் பெண்கள் 3 இராணுவத்தினரை தமது வீட்டுனுள் அடைது வைத்துள்ளதுடன் அவர்கள் பயனித்த துவிச்சக்கரவண்டியையும் பறிமுதல் செய்தனர். மற்றைய இராணுவத்தினரை அனுப்பி உங்கள் இராணுவ பொறுப்பாளரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த இராணுவ பொறுப்பாளரை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர். http://www.tamilthai.com/?p=26098
-
- 1 reply
- 1.2k views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கல்முனையில் உண்ணாவிரதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது வழமையாகும். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரேனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறி இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது. மாநகர சபையின் கடந்த ஆட்சியின் போது இஸ்லாமாபாத் பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜம…
-
- 0 replies
- 446 views
-
-
யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாண மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாள் தோறும் யாழ்ப்பாண மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பேய் பிரச்சினை பூதாகாரமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பேய் பிரச்சினை நாளுக்குள் நாள் அதிகரித்துச் செல்லும் ஓர் நிலையிலும் அரசாங்கம் எவ்…
-
- 0 replies
- 437 views
-
-
பெண்கள் தங்களின் அவயங்களைப் பாதுகாப்பதற்காக இரவில் கண்விழித்து இருக்கிறார்கள் இது உலகில் எங்கும் நடக்காத விசித்திரமான புதுமைகளில் ஒன்று.எங்களின் பாதுகாப்பிற்கு இருப்பவர்களே எம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இதை யாரிடம் நாம் கூறுவது என கலங்கினர் யாழ்.பெண்கள். கிறீஸ் மனிதனின் நடமாட்டம் தொடர்பாக இன்று செவ்வாய்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாநாட்டின் போது இந்தக் கருத்துக்களை பெண்கள் கூட்டாக விடுத்திருந்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த பெண்கள், எங்களின் இந்த மானப் பிரச்சனைகயை இந்த அரசு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாங்கள் வீடுகளுக்குள் முடக்கும் அந்…
-
- 0 replies
- 616 views
-
-
கடனைத் திருப்பிச் செலுத்த கடன் வாங்கும் ஒரே நாடு இலங்கையே என ஜே.வி.பி தெரிவித்துள்ளது கடனைச் செலுத்த கடன் வாங்கும் ஒரே ஒரு அரசு இலங்கையில் மாத்திரமே பதவியில் இருக்கிறது என ஜே.பி.பி பொதுச் செயலானர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் 410.7 பில்லியன் ரூபாவை அரசு சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளது. இதில் 231.3 பில்லியன் ரூபாவை ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடனை செலுத்த கடன் வாங்கும் ஒரே அரசு இலங்கையில் மாத்திரமே பதவியிலுள்ளது என பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டில்வின் சில்வா குறிப்பிட்டார். பொருளாதார அ…
-
- 0 replies
- 535 views
-
-
கிளி நொச்சி மாவட்டத்தில் மாணவன் ஒருவரை கானவில்லை. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன சிறுவன் 14 நாட்கள் கழிந்தும் வீடு திரும்பவில்லை எனச் சிறுவனின் தாயார் முறையிட்டுள்ளார். கிளிநொச்சி பொன்னகர் மத்தியில் வசிக்கும் 15 வயதுடைய கணேசன் பிரதீபன் என்ற சிறுவனே காணாமல் போனவராவார். இது தொடர்பாக கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சிறுவனைக் கண்டுபிடிப்பது தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். h…
-
- 0 replies
- 518 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை ரத்து செய்யக்கோரியும், தூக்கை ஆயுளாக குறைக்கக்கோரும் அரசு தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்தும் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் வரை 5 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முடிவெடுத்தார். அதன்படி இன்று அவர் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சீமான் நடைபயணத்தை துவங்கினார். அனுமதி இன்றி நடை பயணம் செல்வதாக கூறி சத்துவாச்சாரியில் சீமான் கைது செய்யப்பட்டார். அவருடன் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமணம் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=60885
-
- 5 replies
- 1.7k views
-