ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
“பாதுகாப்பு வலயம் தாக்கப்படுவதை உலகம் அறிந்திருந்தது” – விக்கிலீக்ஸ் Monday, September 5, 2011, 0:27 இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக்கொண்டன என்று பிபிசிக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, ”தான்” இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம…
-
- 1 reply
- 530 views
-
-
ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்கு மீண்டும் வாய்ப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடை நிறுத்தப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது என நம் பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அமெரிக்க வர்த்தக நடவடிக்கை திணைக்களத்தின் சர்வதேச வர்த்தக கொள்கை தொடர்பிலான பொருளாதார நிபுணர் மயிக்கல் ஓ டொனவன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய் திருந்தபோதே இதைத் தெரிவித்தார். அவர் தனது இலங்கை விஜயத்தின்போது தொழில்துறை அதிகாரிகள், முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில், குறித்த அமெரிக்கப் பிரதிநிதி, வரிச்சலுகை கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன எனத் தெரிவித்தார் என்று சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள்…
-
- 1 reply
- 760 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 09:20 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் செய்யும் விமர்சனங்களால் சிறிலங்கா, சீனாவை நோக்கித் தள்ளப்பட்டு விடும் என்று இந்திய கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குப் பரிமாற்றப்பட்ட இரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பு ஒன்றிலேயே, இந்தியாவின் கவலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரே அமெரிக்க இராஜதந்திரிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
கனரக ஆயுதம் பாவிக்கப்பட்தை பசில் ஒத்துக்கொண்டுள்ளார்: ரொபேர்ட் ஓ பிளேக் Monday, September 5, 2011, 0:45 போரின் போது பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களை சிறிலங்காப்படைகள் பாவித்துள்ளமையினையும் அதனால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதனையும் பசில் இராஜ பக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார் என ரொபேர்ட் ஓ பிளேக் கூரியுள்ளார். இது தொடர்பிலான விக்கிலீக்ஸ் செய்திகள். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, ”தான்” இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார். பொ…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த ரொபேர்ட் ஓ பிளேக் முடிவு! - கவலையில் சிறிலங்கா!! இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி செல்லும் அமெரிக்காவின் ஆசிய மற்றும் தென் மத்திய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவுள்ளார். இலங்கைக்கு கடந்த 29ஆம் திகதி விஜயம் செய்யவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியால் தனது பயணத்தை இறுதி நேரத்தில் பிற்போட்டிருந்தார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றம் அல்ல என குற்றவாளிகள் நினைத்ததாக முன் நாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். இவர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர். . இவர் ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்பதற்கான காரணத்தைக்கூறுவதுதான் விநோதமானது; ரகோத்தமன் கூறுகின்றார்; . நாங்கள் குற்றவாளிகளின் இடங்களை சோதனையிட்டபோது ஆயிரக்கணக்கான சான்றுகளையும் சத்தியக்கடதாசிகளையும் கண்டு பிடித்தோம். அவை அனைத்தும் இந்திய இராணுவம் தமிழீழத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூளியங்களை காட்டின. கற்பளிப்பு, கொலை, கொள்ளை ஆகியவற்றை செய்த இந்திய அமைதிப்படையினரின் குற்றங்களை நிரூபிப்பதற்க…
-
- 6 replies
- 5.6k views
-
-
இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமயத் துறவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த 2 வாரகாலமாக நிலவிவரும் பதற்ற சூழ்நிலை தொடர;பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. மர்ம மனிதர்கள் என்று அழைக்கப்படும் அநாமதேய நபர்களின் நடமாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தொடர் விளைவாக பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களை துரத்தி பிடிப்பதில் ஈடுபட்ட பொதுமக்கள் மோசமாக தாக்கப்பட்டு குடாநாடு முழுவதும் பயப்பிராந்தியின் பிடியில் சிக்கி இருப்பது பற்றி…
-
- 3 replies
- 952 views
-
-
பதில் சொல்ல வக்கில்லாமல், பயந்து ஓடி ஒளிந்த சூனா சாமியும், சுளுக்கெடுத்த சுப.வீ.யின் கேள்விகளும்…. அவசியம் பாருங்கள்! http://youtu.be/iFJszxwu4NE http://www.tamilthai.com/?p=25687
-
- 19 replies
- 2.7k views
-
-
உணவு மட்டுமல்ல... தமிழ் உணர்வும்தான்! thanks-vikatan.com
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை மீது மேற்குலக நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டள்ளது. குறிப்பாக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களை இந்தியா மிகவும் கவனமாக கண்காணித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை, சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டு விடுமோ என இந்தியா அதிக கரிசனை கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கை மீது சர்வதேச நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் சீன மற்றும் ஈரான் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் வழிகோலும் என இந்தியா கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
கும்பகோணம்: ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அதாவது சாகும் வரை சிறைத் தண்டன விதிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார். இதுகுறித்து கும்பகோணத்தில், நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. அதிற்குப் பதிலாக இந்த மூவர் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாக சிறையிலேயே மரணம் அ…
-
- 0 replies
- 662 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் சாத்தியம்! - சண்டே லீடர் தகவல் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் கூட்டத் தொடரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் சாத்தியங்கள் தென்படுவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியான லுலியா கோஸ்டா இவ்வூடகத்திற்கு கூறியுள்ளார்…
-
- 1 reply
- 616 views
-
-
புலம்பெயர்ந்தோரின் காணிகளை உறுதிப்படுத்த புதிய விண்ணப்பப் படிவம்: ஜனக்க _ 9/4/2011 10:44:33 பங்கு AM வடக்கு கிழக்கில் காணி உரித்துடைய புலம்பெயர்ந்தவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த விண்ணப்பப் படிவம் இன்று அல்லது நாளை வெளியிடப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதி களில் காணிகள் அளக்கப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. "மஹிந்த சிந்தனை 'திட்டத்தின் கீழ் காணி உரிமைப்படுத்தவும் நாட்டிற்கான …
-
- 1 reply
- 683 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 4, 2011 பிரித்தானியாவிற்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கலாநிதி கிறிஸ் நொயிஸ் என்பவரே புதிதாக நியமிக்கப்பட்டவராவர். இவர் பிரித்தானியாவில் மருத்துவ பட்டப்படிப்பினை முடித்ததோடு அங்கேயே பல வருடங்கள் பணி புரிந்தும் உள்ளார். பிரித்தானியாவில் பல்வேறு உயர் பதவிகளில் நீண்டகாலம் இவர் பணி புரிந்ததனால் அங்கு உள்ள அனைத்து தரப்பினருடன் சுமுகமாக பழகவும் கூடவே தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலண்டன் தமிழர்களையும் வளைத்துப்போட முடியும் என மஹிந்த கருதுகின்றார். இதனாலேயே குறித்த மருத்துவரை தூதுவராக நியமனம் செய்துள்லார் மஹிந்த. . புதிய தூதுவரான மருத்துவர் கிறிஸ் நொயிஸ் இராஜ தந்திர பணியில் இதுவரை பணி புரியவில்லை என்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவிற்கு உதவா விட்டால் சீனா முழுமையாக சிறிலங்காவினை ஆக்கிரமித்துவிடும் என்றும் அதனாலேயே இந்தியா சிறிலங்காவை காப்பாற்றுகின்றது என்றும் இந்திய அரசாங்கம் தமிழர்களையும் ஏன் உலகையும் ஏமாற்றப்பார்க்கின்றது. . இது எவ்வளவு பொய்யான, கீழ்த்தரமான ஓர் கொள்கை அல்லது புனையப்பட்ட, சித்தரிக்கப்பட்ட பொய் என்பது தமிழர்களுக்கு புரியும். அந்தளவு தமிழ் நாட்டுத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் முட்டாள்கள் அல்லர். . உண்மை என்னவென்றால் அதாவது சிறிலங்காவிற்கு இந்தியா முண்டு கொடுப்பதற்கு காரணம் தமிழர்களைப்பொறுத்தவரை இந்தியாவினதும் சிறிலங்காவினதும் கொள்கை ஒன்றே. இதனை சில தமிழர்கள் மறுக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. . அதாவது சிறிலங்காவின் நோக்கம் தமிழர்களை இல்லாது ஒழிக்கவேண்டும். இந்திய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பதிந்தவர்: ADMIN ஞாயிறு, 4 செப்டெம்ப்ர், 2011 புதுச்சேரியில் நேற்று (03.09.2011) இரவு மறியட்டும் மரண தண்டனை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பலர் பங்கேற்றனர். சீமான் பேசும்போது, ‘’தங்கத்தாரகை முதல்வர் அம்மா அவர்கட்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஈழத்தமிழருக்கு இதுவரைக்கும் இவரைப்போல் வேறு யாரும் உதவிகளை செய்ததில்லை. மூன்று உயிர்களை எங்களுக்கு காப்பாற்றித்தந்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரிகிளிண்டன் தமிழகம் வந்திருந்தபோது ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதில் 45 நிமிடங்கள் ஈழத்தமிழர்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஈழ …
-
- 1 reply
- 1.6k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள் அம்பலப்படுத்தப்படும் - AI 04 செப்டம்பர் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் குறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள், எப்போது இவர்களுக்கு நியாயம் கிட்டும்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேள…
-
- 1 reply
- 619 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஆர்.பிரேமதாச ஆகியோருக்கு உளவு பார்த்த காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக அமிர்தலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளனர். அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கிட்டு எனப்படு…
-
- 2 replies
- 2.7k views
-
-
[sunday, 2011-09-04 08:18:22] உடுவில் ஆலடிப் பகுதியில் மர்ம மனிதனது நடமாட்டத்தினால் வீதிக்கு வந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிடி மற்றும் கொட்டன்களால் தாக்கப்பட்டதில் மோசமான காயங்களுக்கு உள்ளான மூவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றுமாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சந்தேகப்படும்படியாக நடமாடிய நபர்களைத் துரத்திச் சென்றபோதே இராணுவத்தினர் திடீரென வந்து தங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்று அந்தப் பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் தெரிவித்தனர். நேற்றுப் பகல் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அந்த மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார். இ…
-
- 1 reply
- 529 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு கொழும்பில் இரவு விருந்து கொடுத்து வளைத்துப் போட முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா சார்பில் பங்கேற்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவே இந்த இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா அரசின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிஸ் ஆகியோரும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தனர். காலிமுகத்திடல் விடுதியில் நடந்த இந்த இரவு விருந்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அ…
-
- 1 reply
- 975 views
-
-
-
- 0 replies
- 993 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 00:56 GMT ] [ கார்வண்ணன் ] சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் அவசரமாகத் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படை விமானம் சீனாவில் இருந்து ஆயுத தளபாடங்களை ஏற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த விமானம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏழு பேருடன் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கொண்டிருந்த போதே அவசரமாகத் தரையிறக்கப்பட்டதா…
-
- 1 reply
- 826 views
-
-
[sunday, 2011-09-04 09:40:19] கிரீஸ் மனிதன் என்பது ஒரு வதந்தியே அதனை நம்பி கலகங்களை ஏற்படுத்த வேண்டாம் என யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் , அவர் கருத்து தெரிவிக்கையில்: சமாதானத்தை விரும்பதாவர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிகக்கும் வகையில் கிரீஸ் மனிதன் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை, கலகங்கம் ஏற்படும் போதும் அதனை தடுத்து நிறுத்த வேண்டியதும் பொலிஸாரின் கடமை. ஆனால் அதனை பொலிஸார் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துதுள்ளது. பொல…
-
- 2 replies
- 617 views
-
-
சிறிலங்காவினைக்காப்பாற்ற இந்தியா ஏன் முயற்சி செய்கின்றது என்பதனை விக்கிலீக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மூத்த இராயதந்திரியும் வெளியக அமைச்சின் கூட்டு செயலரான திரு திருமூர்த்தி அவர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு இது பற்றி கூறியுள்ளார். . சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் பிரயோகித்த அழுத்தங்களின் போது இலங்கை சீனாவினை நோக்கி நகர்ந்தமையால் இந்தியா அதனை அதிக கவனத்தில் கொண்டிருந்ததாகவும் சிறிலங்காவினை காப்பாற்றியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. . யுத்தத்தின் பின் இலங்கையில் ஈரான் மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததை அடுத்து இந்தியா தனது விசேட கவகத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. .…
-
- 1 reply
- 743 views
-
-
Published on September 3, 2011-8:48 am No Comments கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? இதைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நேற்றுக் கேள்வியெழுப்பியிருக்கின்றது. கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது. தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற …
-
- 5 replies
- 715 views
-