Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திரியாய் கிராமம் சிங்கள மயமாகிறது! திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திரியாய் என்ற தமிழ்க்கிராமத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு புனித நகராக்கும் திட்டம் என்ற பெயரில் 3000 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மொத்தமாக 3069 ஏக்கர் 2 றூட் 15 பெர்ச்சஸ் காணி இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளது. திரியாயில் புனித பிரதேசம் என்ற பெயரில் இவ்வளவு காணியை ஒதுக்குவதை நிறுத்தும்படி திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் எழுதியுள்ளார். திரியாயில் உள்ள பௌத்த விகாரையின் பெயர் கிரிஹந்துசேயா ஆகும். இவ்விகாரைக்கு தெற்கு பகுதியிலிருந்து பௌத்தர்கள் யாத்திரை வந்து விட்டு திரும்பிச் செல்வது வழக்கமா…

  2. குட்டிமணி தங்கத்துரை போன்றொருக்கு நேர்ந்தகதியே என்றுகூறி-சிறைச்சாலையில் 7 தமிழ் கைதிகள் மீது சித்திரவதை! Thursday, August 4, 2011, 22:52சிறீலங்கா, தமிழீழம் கண்டி போகம்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 தமிழ் கைதிகள் ஜூன் மாதம் 14ம் திகதி பலமுறை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுறை ஆகியோருக்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் நேரிடும் என குறித்த 7 தமிழ் கைதிகளும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சித்திரவதைக்கு உள்ளான 7 தமிழ் கைதிகளுடம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள…

  3. சென்னையில் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாம் தமிழர் இயக்க உறுப்பினர் மூவர் கைது! சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா சென்று சேர்ந்தனர். ஓகஸ்ட் 5ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கியிருந்தனர். அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி…

  4. தமிழர்கள் எம்மை ஏமாற்றுகின்றார்கள் ஆதலால் அவர்களுக்கு இப்போதைக்கு தீர்வு கொடுக்க முடியாது என தம்மிடம் மஹிந்த கூறியதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் வடமாகாணத்தில் எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தும் அவை அனைத்தினையும் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளே இதனை வெளிக்காட்டியுள்ளன. இதன் காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதனை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி மஹி…

    • 1 reply
    • 631 views
  5. அரசியல் தீர்வு தொடர்பில் கொழும்புக்கு மீண்டும் அழுத்தம்! - மக்களவையில் கிருஷ்ணா உரை!! இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற  சிறுபான்மை இன மக்களுக்கு இறுதியான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 'இலங்கையின் தற்போதைய நிலை' என்ற தலைப்பில் மக்களவையில் இன்று (04.08.11) சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறும், இவ்வாறதன தீர்வொன்றை வழங்குவது இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் உடனடித் தேவையாக உள்ளதா…

    • 1 reply
    • 959 views
  6. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுத்த வைகோ உள்ளிட்ட சிலர் சதி முயற்சி: அரசாங்கம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதான முயற்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இருப்பினும், இலங்கைக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலேயே உறவு நீடிப்பதால் தமிழகத்தின் கருத்துக்களை நாம் ஒருபோதும் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்த…

  7. இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே? அழகாக வார்த்தைகளைக் கோர்த்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, உண்மையையும் குழி தோண்டிப் புதைத்து, மக்களையும் ஏமாற்றி, பிரச்சனையையும் திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் நமது பாரத நாட்டின் பிரமதராக வாய்த்துள்ள மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் ஆனாலும், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த மெகா ஊழல் ஆனாலும், அதில் தான் நேரடியாக சம்மந்தப்படவில்லை என்பதையும், அதற்கு அந்தத் துறை அமைச்சர் மட்டுமே பொறுப்பானவர் என்பதையும் நிரூபித்ததில் அவருடைய இந்த வார்த்தை சாமர்த்தியம் அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அபாரமாக குழப்பியது. அதிலிருந்து தெளிந்து அவர்கள் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவ…

    • 0 replies
    • 1.7k views
  8. தலைமைத்துவப் பயிற்சிக்கு சென்ற மாணவி உயிரிழப்பு சிறிலங்கா அரசினால் பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற தலைமைத்துவ பயிற்சியில் தியத்தலாவை இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் கடந்த 29ம் திகதி உயிரிழந்துள்ளார். இவர் குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது - 24 ) என்பவராவார். இவர் மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்தமையால் அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கி…

    • 1 reply
    • 554 views
  9. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த ஐ.நா.வை வலியுறுத்துக! - கனேடிய புதிய ஜனநாயக கட்சி கோரிக்கை இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என புதிய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் க…

    • 0 replies
    • 456 views
  10. யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளி.அறிவியல் நகருக்கு மாற்ற அங்கீகாரம் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதேவேளை இதேஇடத்தில் பொறியியல் பீடத்தையும் தற்காலிகமாக இயங்கவைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரி பத்திரம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாயபீடத்தை இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள அறிவியல்நகர் பகுதி 168 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.va…

    • 0 replies
    • 400 views
  11. யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் இளம்பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளவாலை கிழக்கைச் சேர்ந்த மயில்வாகனம் தர்ஷினி வயது 26 என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டவராவர். ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இவரின் சடலம் மீட்கப்பட்டது. இவரது சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். My link

    • 1 reply
    • 770 views
  12. போர் குறித்து இலங்கை அரசு வெளியிட்ட ஆய்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் போரின் இறுதிக் கட்டம் குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை, சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படியாக இருக்கக்கூடுமென தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார். வன்னிப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாமென முதன் முதலாக உத்தியோகபூர்வமாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, இலங்கை அரசு அதன் நிலைப்பாட்டை இறுக்கமாக்குமா, அல்லது, அதே திசையில் தொடர்ந்து கலந்துரையாட விரும்புமா என்பதைப் பொறுத்துத்தான் இலங்கை அரசின் நிலைப்பாடு வரவேற்கப்படலாமென ஜெஹா…

    • 0 replies
    • 572 views
  13. வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:17 GMT உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்கா அரசுடன் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளது. சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பத்தாவது சுற்றுப்பேச்சுக்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெறும். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்றை தாம் சிறிலங்கா அரசிடம் கையளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக சிறிலங்கா அரசின் எழுத்து மூலமான அதிகாரபூர்வ பதிலை தாம் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசதரப்பில் பேச்சுக்களில் பங்கேற்கும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்றைய சந்திப…

    • 1 reply
    • 532 views
  14. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி. . இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்; . ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் …

    • 6 replies
    • 1k views
  15. சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' விவரணத் தொகுப்பு, ஶ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தகளத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதாக பல்வேறு தரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் உள்ள பிரபலமான தொலைக்காட்சிகள் இந்த விவரணத்தை மறு ஒளிபரப்புச் செய்துள்ளன. விரைவில் தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சியும் இந்த விவரணத்தை ஒளிபரப்பவுள்ளது என ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில், இன்று 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளில் ஒன்றான, SF 1 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும்…

  16. 8/4/2011 10:32:02 AM மத்திய அரசாங்கத்தின் சரிபாதி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரும் சர்வகட்சி குழுக்களின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார். நல்லாட்சியையும் அரசியல் தீர்வையும் உறுதிப்படுத்தாமல் இலங்கையால் ஒரு போதும் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது. எனவே தேசிய இலக்குகளில் சிறுபான்மை இன மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமாயின் அவர்களின் சுயகௌரவம் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த உள்ளூராட்சி ம…

    • 2 replies
    • 645 views
  17. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சுயாட்சியை வழங்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தாலும், ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சுயாட்சியை வழங்க முடியும். . தற்போதுள்ள அரசியல் அமைப்பு விதிகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயகார குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த அரசியல் அமைப்பானது மாகாணங்களின் அதிகாரத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் அமைச்சர் செய்தி தாள் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். . இந்த நிலையில், ஜனாதிபதியை பொறுத்தவரையில் இனப்பரச்சினை தீர்வுக்கு பேச்சுவார்தை மூலம், பொறுப்பை மற்றுமொருவருக்கு கையளிக்கவே விரும்புகி…

    • 0 replies
    • 877 views
  18. இது தொடர்பாக பிபிசியில் வந்த செய்தி தொகுப்பு (தமிழில்)

  19. இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்துக்கு வரவேற்பு: திமுக ஆட்சியில் பல நன்மைகள்: கலைஞர் தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை,…

  20. கீர்த்தி தென்னகோனுக்கு எதிராக களனி பல்கலைக்கழகம் ஒழுக்காற்று விசாரணை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோனுக்கு எதிராக களனி பல்கலைக்ககழகம் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் தென்னகோன் வகிக்கும் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அவரின் சிவில் சமூக செயற்பாடுகளை அச்சுறுத்தவும் இவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் சட்ட விவகார பணிப்பாளர் ஹரிந்திர பானகல தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கில் நடைபெற்ற தேர்தல்களில் ஊழல் நடந்ததாக தென்னகோன் தெரிவித்த பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பானகல கூறியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து …

    • 3 replies
    • 652 views
  21. மூதூர் உதவிப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை நடவடிக்கை எடுக்காததை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்தது. அக்சன் ஃபம் (Action Faim) பணியாளர்கள் 17 பேரின் படுகொலைக்குப் பொறுப்பானவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தாதமை, இலங்கை அரசு உண்மைக்குப் பயப்படுவதைக் காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜேம்ஸ் றொஸ் தெரிவித்தார். மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற பிரான்ஸ் உதவி அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டது. அந்தப்படுகொலை உட்பட, 16 முக்கி…

    • 2 replies
    • 530 views
  22. அமெரிக்காவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த இராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது. . ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது. . ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன் நாள் சட்ட மா அதிபர் புரூஸ்பெயின் தெரிவித்துள்ளார். . அத்துடன் அச்ச…

    • 2 replies
    • 1k views
  23. சிறிலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசத்தில் தற்போதும் நிலவும் வெறுப்புத் தன்மையானது தொடர்ந்தால் தென்சூடானுக்கு அடுத்ததான 194 ஆவது நாடு இலங்கையிலிருந்தே உருவாகும். இதனை எந்த வகையிலும் தடுக்க முடியாது போய்விடும் என பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். . ‘நீண்ட கால சமூக ஒற்றுமையை நோக்கிய எதிர்கால பயணம்’ என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் நந்ததாச கொதாகொடவின் 14 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், . இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல சர்வ…

    • 1 reply
    • 992 views
  24. திருமண வயதை 15ஆக குறைக்க இலங்கை அரசு திட்டம் திருமண வயதை 15ஆகக் குறைக்க இலங்கை அரசு ஆலோசித்து வருகிறது என்று பொதுநிர்வாக அமைச்சர் ஜான் செனவிரட்னே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது திருமண வயது 18ஆக உள்ளது. ஆனால் இதை 15ஆக குறைப்பது குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து அந்நாட்டு பொது நிர்வாகத் துறை அமைச்சர் ஜான் கூறியதாவது, திருமண வயதை 18ல் இருந்து 15ஆக குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சிறுவர், சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டு தான் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இருப்பினும், இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார். http://thatstamil.oneindia.in/news/2011/08/03/lanka…

  25. ‘யாழ் மக்கள் மத்தியில் உளவியல் பாதிப்பு’ இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீஎஸ்டி (PTSD) எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப…

    • 0 replies
    • 645 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.