Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 12:15 PM அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரண்டாவது நாளாக ஆரம்பமான "கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்" கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பக் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி கிரிந…

  2. மயிலத்தமடுவின் குரூரமான சிங்களக் குடியேற்ற வரலாறு

    • 1 reply
    • 632 views
  3. Published By: RAJEEBAN 27 DEC, 2023 | 04:44 PM வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்த இந்தியாவின் கரிசனைகளை இலங்கை செவிமடுக்கவேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் எம்ஜே அக்பர் தெரிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் உண்மையில் இன்னமும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன, எல்லைதகராறு தீர்க்கப்படாததால் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே நாங்கள் விசேட கரிசனைகளை கொண்டுள்ளோம் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். உங்களிற்கு தெரியும் இவை சுற்றுலா ஆடம்பர கப்பல்கள் இல்லை. இவை சீன கப்பல்கள் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் மின்னணு சாதனங்களிற்கு…

  4. பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிக இரைச்சல் காரணமாக வானொலி ஒலிபரப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்புவதால் பயணிகள் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, பேருந்துகளால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து எதிர்காலத்தில் ஒழுங்குமுறை திட்டத்தை தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். சட்ட நடவடிக்கை அதிக சத்தம் கொண்ட பேரூந்துகளில் உள்ள வானொலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திறன் போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்…

  5. Published By: VISHNU 27 DEC, 2023 | 09:15 PM தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்காமல், அதனைப் பகிஷ்கரிப்பதொன்றே தமிழ்மக்களுக்கு இருக்கின்ற தெரிவு எனவும், அதனையே தாம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அ…

  6. பராமரிப்பில்லாத ஆரியகுளம்! இனியபாரதி) யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார். தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கலந்துரையாடல் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை யாழ் மாநகர சபை சிறப்பாக பராமரித்தால் இன்னமும் பல குளங்களை புனரமைக்க தயாராக உள்ளேன். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பார்க்கும்போது சிறப்பாக பராமரிப்பா…

  7. Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:31 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். …

  8. 10 DEC, 2023 | 11:03 AM நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1713…

  9. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி! மணி யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்…

    • 2 replies
    • 342 views
  10. சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் மீது தாக்குதல் அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் நேற்று 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கிய பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய மாணவி ஒருவரை நெடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் காதலித்து, திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோர்கள் இளைஞனை தாக்கிய நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த இளைஞர் சிறுமியை குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறித்த இளைஞரையும் சிறுமியையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்…

  11. வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட சரிகமபா லிட்டடில் சாம்ப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய கில்மிசா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்ட…

  12. 27 DEC, 2023 | 03:23 PM டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மூளை சாவடைந்திருந்தார். தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளார். அதே வேளை யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலு…

  13. Published By: VISHNU 25 DEC, 2023 | 06:47 PM (எம்.மனோசித்ரா) உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதான நள்ளிரவு ஆராதனை கட்டான - ஹல்பே புனித பிரான்ஸிஸ் சேவியர் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராயர், இலங்கையில் ஒருவே…

  14. Published By: VISHNU 27 DEC, 2023 | 11:19 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற 19 ஆவது தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அனர்த்தங்களை நினைவுகூர்ந்து உயிரிழந்தவர்களை அஞ்சலிக்கின்ற ஆழிப்பேரலை போன்ற நினைவு தினங்கள் வருகின்ற போதெல்லாம் கண்கள் கலங்கும். அனர்த்தங்களால் பல்வேறு தரப்பினரு…

  15. வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர் மன்னாரைச் சேர்ந்த 2 பேர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது. களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை …

  16. மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம்! தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விமான சேவைகள் இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இரண்டு எயார்பஸ் A 330 விமானங்கள் பல நாட்கள் சேவையில் ஈடுபடாமையால் குறித்த விமான சேவை நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது. உலகளாவிய விநியோக பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்டவை சவால்களாக அமைந்தன. இந்தநிலையில், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. https:…

    • 1 reply
    • 448 views
  17. Published By: DIGITAL DESK 3 26 DEC, 2023 | 03:02 PM இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன் இந்த மகத்தான நிகழ்வை நடத்தி, மலையக தமிழ் மக்களின் வரலாற்று, நிகழ்கால அவலங்களை, உரை, கலை வடிவங்களில் இந்த மேடையில் கூற வைத்து விட்டார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் எனக்கு ஒரு கடப்பாடு இருக்கிறது. வரலாறு, நிகழ்கால அவலங்களுக்கு அப்பால் நாம் இன்று எங்கே, எப்படி நிற்கிறோம், எங்கே, எப்படி போக வேண்டும் என்ற எதிர்காலம் கூற வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது என தமிழ் முற்போக்கு கூ…

  18. கிறிஸ்தவ மக்களுக்கு மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் : இரா.சாணக்கியன் ! kugenDecember 26, 2023 கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நத்தார் திருப்பலி …

    • 2 replies
    • 364 views
  19. Published By: VISHNU 26 DEC, 2023 | 07:29 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களின் வரி குறைப்பு கொள்கையை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள், கோட்டபய ராஜபக்ஷ மூர்க்கத்தனமான முறையில் சீனிக்கான வரியை குறைத்ததால் 1600 கோடி ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது. பிணைமுறி மோசடியை காட்டிலும் சீனி வரிக்குறைப்பு மோசடி பாரதூரமானது. ஆகவே வரி விவகாரம் தொடர்பில் அறிக்கை விடுவதை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாவல பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் …

  20. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் (23.12.2023) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடத்தக்கது. https:/…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சுனாமி பேரனர்த்தம் தாக்கி, இன்றுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பெலிஅத்த - பெரலிய பகுதியில் பயணிகளுடன் ரயிலொன்று முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், கொழும்பு - மருதானை ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 6.25க்கு விசேட ரயிலொன்று புறப்பட்டது. …

  22. Published By: VISHNU 26 DEC, 2023 | 01:12 PM தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை (25) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள், பட்டிமன்றம் உள்ளிட்ட தெய்வீக நிகழ்வுகள் இடம்பெற்றன. …

  23. யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்…

  24. வெளிநாட்டு வேலை வாய்ப்பு : போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் ! வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரம் இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மியான்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்ற…

  25. 26 DEC, 2023 | 08:13 AM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்றே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது. குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.