ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது. தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம…
-
- 3 replies
- 1.5k views
-
-
போருக்கு தயாராகும் தமிழீழ விடுதலைப் புலிகள் – பிரெஞ்சு Saturday, July 16, 2011, 18:08உலகம், சிறீலங்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம். இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :- …
-
- 6 replies
- 1.6k views
-
-
[ சனிக்கிழமை, 16 யூலை 2011, 00:13 GMT ] [ கார்வண்ணன் ] போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் புதுடெல்லியில் நேற்று இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும்- சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் கடந்தவாரம் இந்தியாவின் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. இதையடுத்து ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி இதுபற்றிய இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது. அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் இத…
-
- 3 replies
- 729 views
-
-
இலங்கையின் நெருக்கத்தை இறுக்கமாக்க வேண்டுமென்கிறது பாகிஸ்தான்: இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் தானாம் [saturday, 2011-07-16 17:40:41] நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மேலும் நற்புறவு வலுப்பெறவேண்டும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் இலங்கையுடன் நெருங்கிய கலாசார தொடர்புகளை கொண்டுள்ளதாகவும, இரு நாடுகளும் தற்போது ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இரு நாடுகளும் பொருளாதாரம் உள்ளிட்ட விடையங்களில் தமக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் …
-
- 4 replies
- 741 views
-
-
மனிதத்தின் மிகவும் இழிவான கொடூரங்களை சிங்கள அரசு செய்திருக்கிறது - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அண்மையில் அமெரிக்க செனட் சபையில் ஒளிபரப்பப்பட்ட சன்ல் 4 காணொளியை சுமார் 450 உறுப்பினர்கள், வேறு நாட்டு ராச தந்திரிகள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்திருக்கின்றனர். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த, அமெரிக்க சனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவரும், மசாசிசுசெட்ஸ் மாகானத்தைச் சேர்ந்தவருமான காங்கிரஸ் உறுப்பினர் மக்கோவன் அவர்கள், " இவை மிகவும் அதிர்ச்சிகரமான கொலைக்கலங்கள் என்பதோடு இவை முற்றான நீதி விசாரணைக்கும் உட்படுத்தப்பட வேன்டும்" என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் வாசிக்க.... US Congressman: "Gruesome example of Humans at their worst" [TamilNet, Saturday, 16 July…
-
- 1 reply
- 679 views
-
-
பலாலி காங்கேசன்துறை ரயில் பாதை நிர்மாணம் இந்தியாவிடம் ஒப்படைப்பு _ வீரகேசரி நாளேடு 7/16/2011 12:20:41 PM வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய கம்பனியிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவிற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ரயில் தற்போது ஓமந்தை வரைக்கும் பயணிக்கின்றது. இந்நிலையிலேயே பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை …
-
- 7 replies
- 900 views
-
-
வடமராட்சியில் துப்பாக்கிகள் சகிதம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட படையினர் 16 ஜூலை 2011 என நம்பப்படுகின்றவர்கள் மீது மக்கள் தாக்குதல் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையி…
-
- 0 replies
- 555 views
-
-
12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் 16 ஜூலை 2011 வல்வெட்டித்துறை நகரசபை பணியாளர் விடுதலை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த வல்வெட்டித்துறை நகரசபை பணியாளர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததையடுத்தே அவர் விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் 48 வயதுடைய ஆறுமுகம் கனகரத்தினம். நகரசபையின் காவலாளியான இவர் 5 பிள்ளைகளின் தந்தையுமாவார். இ…
-
- 0 replies
- 426 views
-
-
பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஆகவே இது இலங்கையின் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என கொழும்பு செய்திகள் கூறுகின்றன. . கடந்த 13 ஆம் திகதி பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா சர்வதேச குற்றவியல் நீதின்றின் தலைமை வழக்கறிஞர் சன் சுவாங் கோன் என்பவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். . இந்த ஒப்பந்தத்தில் பொது நலவாய நாடுகளில் குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஈடுபடுபவர்கள் மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுமதியினை வழங்கியுள்ளது. இது இலங்கைக்கு பீதியினை ஏற்படுத்தியுள்ளது. . இலங்கை பொது நலவாய நாட்டின் …
-
- 1 reply
- 742 views
-
-
இறுதிப் போர் தொடர்பில் இலங்கை ஆழமாக ஆராய வேண்டும் – இந்தியா தெரிவிப்பு! Published on July 16, 2011-9:48 am வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் நடந்தவை என்ன என்பது குறித்துத் தெளிவில்லாத நிலை இருப்பதால் அது குறித்து இலங்கை அரசு ஆழமாக ஆராய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. அதேசமயம் போர் முடிவடைந்துள்ள சூழலைப் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு உண்மையான பொருத்தமான தீர்வு காணவும் புதுடில்லி வலியுறுத்தி உள்ளது.இறுதிப் போரின் போது போர்க் குற் றங்கள் இடம்பெற்றதாக நிரூபிக்கும் சனல்4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படம் கடந்த வார இறுதியில் இந்தியாவில் ஒளிபரப்பாகியது. ஹெட் லைன்ஸ் ருடே என்ற தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பியது. அதன் பின்னரும் இலங்கையின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்களை புறம் தள்ளிவிட்டு இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திவிடமுடியாது, இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கான நியாயப்பாடுகளை புறந்தள்ளிக்கொண்டிருப்பது நிச்சயமாக இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப்பாதிக்கும் என கேனல் ஹரிகரன் கூறியுள்ளார். . இலங்கைக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. சனல்4 காணொளி பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள…
-
- 2 replies
- 814 views
-
-
இலங்கையில் அமைதியான தீர்வு உருவாவதை அப்போதே எதிர்த்தது இந்தியா Saturday, July 16, 2011, 18:01சிறீலங்கா இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது. எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார். தான் ஏற்பாட்ட…
-
- 7 replies
- 623 views
-
-
நடிகர் சரத்குமாருக்கு ஓர் அன்பு மடல் அன்புக்குரிய சரத்குமாருக்கு வணக்கம். தங்கள் பிறந்த நாள் கடந்த 14 ந் திகதி என்று பத்திரிகை வாயிலாக அறிந்தோம். ஈழத்தமிழர்களின் அவல நிலைகண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவதாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையை வாசித்தபோது எம் இதயம் நெக்குருகியது. உலகறிந்த நடிகராக, தமிழக சட்டசபையின் உறுப்பினராக,நடிகர்சங்கத் தலைவராக இருக்கும் தாங்கள் ஈழத் தமிழர்கள் அவலப்படும் போது எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாமென்று நீங்கள் அறிவித்தபோது - கைக்குட்டையால் எங்கள் முகங்களை மூடி விம்மி அழுதோம். எங்கள் அழுகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நீங்கள் எங்கள் மீது கொண்ட அளவுகடந்த பாசம். மற்றையது, எங்கள் இனத்தின் போக்கு.…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையா கருணா? சனல்-4 காணொளி சர்வதேச 'சதி' என்கிறார் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் [saturday, 2011-07-16 18:06:56] சனல் 4 காணொளி தொகுப்பானது, இலங்கையின் அபிவிருத்தியை சகித்துக்கொள்ள முடியாத சிலரின் சூழ்ச்சியாகும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டில் வட பகுதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற நிலையில் இடம்பெற்று வருவதுடன், மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் �நியுஸ் பெஸ்ட்� இணையத்தனத்துக்குத் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழல் உருவாகின்ற நிலையில் சில தீய சக்திகள் இங்கே பிரச்சினைகளை உருவாக்க முற்…
-
- 1 reply
- 485 views
-
-
கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையில் கல்விகற்கும் பெற்றோரை இழந்த 12மாணவர்களுக்கும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கற்கும் 5மாணவர்களுக்குமான மாதாந்தக் கொடுப்பனவு 13.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு மாணவருக்கு 3000ரூபா வீதம் மொத்தம் 51000ரூபா வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான உதவியை கட்டார் நாட்டிலிருந்து முகிலன் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வழங்கி வந்தார். தொடர்ந்து இம்மாணவர்களுக்கு மீண்டும் உதவ முன்வந்து மேலும் 2மாதங்களுக்கான மாணவர்களுக்கான கொடுப்பனவினை முகிலன் அவர்கள் வழங்கியுள்ளார். மேற்படி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கான தொடர்ந்த உதவிகளை வழங்குவதோடு மேலும் பல உதவிகளை முகிலன் …
-
- 0 replies
- 573 views
-
-
குறைந்த பட்சமாகவேனும் தீர்வுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய இன முரண்பாடு மேலும் விரிவாக்கப்படும் அபத்தம் Saturday, 16 July 2011 05:29 அண்மைய மாதங்களாக ஊடகங்களில் இரண்டு விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. ஒன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை. இரண்டாவது லண்டன் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்னும் விவரணப்படம். இரண்டும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டவையாக இருந்தபோதிலும் அவை இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீதான போர்க் குற்றங்களை வெளிப்படுத்துபவையாகவே அமைந்துள்ளன. இவ்விரு விடயங்களும் சர்வதேச அளவிலும் இலங்கையிலும் பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளன. இதனையிட்டு இலங்கையின் தமிழ்,சிங்கள, ஆங்கில ஊடக…
-
- 0 replies
- 606 views
-
-
வவுனியா தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் வலுக்கிறது: மேலும் நாற்பது பேர் உண்ணாவிரதத்தில் இணைவு [saturday, 2011-07-16 16:50:21] வவுனியா சிறைச்சாலையில் தங்களை விடுவிக்ககோரி மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 40 சிறைக்கைதிகள் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு தங்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரி அரசியல் கைதிகள் தொடராக உண்ணாவிரத போராத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 40பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 447 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வைக் குழப்பியடித்தது இந்தியாவே: தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பு குற்றச்சாட்டு [saturday, 2011-07-16 16:44:48] இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது. எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாய…
-
- 0 replies
- 736 views
-
-
சிறிலங்காவில் சீறியடித்த சூறாவளி: சினங்கொண்டு நிற்கும் காலநிலை [saturday, 2011-07-16 16:36:21] மத்திய மாகாணத்தில் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இக்காலநிலை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மேல் பருவக் காற்று மற்றும் பசுபிக் சமுத்திரத்தில் பரவலாக காணப்படும் சூறாவளியின் காரணமாக தென் மேல் பகுதியில் கடும் காற்று காணப்படலாம் எனவும், பிரதானமாக மேற்கு பகுதியிலிருந்து மத்திய மாகாண பகுதிக்கு காலநிலை மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக என வளிமண்டல திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார். மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்…
-
- 0 replies
- 951 views
-
-
US lawmakers and rights advocates on Friday stepped up calls for an international probe into Sri Lanka's civil war as they screened a British documentary that purports to show war crimes. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… Amnesty International helped arrange the US screening of the documentary. Adotei Akwei, the rights group's US managing director of government relations, said the event was meant to "counter an effort to describe the end of the war as neat and precise by the Sri Lankan government." "I think that there has been either a reluctance or an unwillingness by the administration to be a champion on this. This d…
-
- 0 replies
- 608 views
-
-
மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை. Saturday, July 16, 2011, 11:25கட்டுரைகள், தமிழீழம் தொடர்ச்சியான திட்டமிடலுடன் இலங்கை சில நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 23ம் திகதி கறுப்பு ஜூலை தினத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒன்று கூடுவார்கள் என்பது இலங்கை அரசிற்கு தெரியும். எனவே அதற்கு முதல் நாட்களிலோ அல்லது முடிந்த பின்னரோ தமிழ் மக்களை இலங்கை அரசிற்கெதிராக ஒன்று திரட்டுவது கடினம் என நினைத்தது இலங்கை அரசு. எனவே தான் இவ்வாறான நாட்களில் தனது நிகழ்ச்சி நிரலை தொகுத்துள்ளது. 17ம் திகதி சனல் 4க்கு எதிரான போராட்டம், 18ம் திகதி ரணிலும் சமல் ராஜபக்சவும் பிரித்தானியா வருதல். 24ம் திகதி பொதுநலவாய நாடுகளின் சந்திப்பு. இவ்வாறாக நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சிய…
-
- 0 replies
- 821 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுடன் இணைந்தது பொதுநலவாய அமைப்பு [ சனிக்கிழமை, 16 யூலை 2011, 07:46 GMT ] [ நித்தியபாரதி ] அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் பொதுநலவாய அமைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையில்- ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதியரசர் சாங்-கியூன் சொங் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமை…
-
- 0 replies
- 764 views
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்- அனைத்துலக விசாரணைக் கோரிக்கைக்கு அமெரிக்காவில் ஆதரவு அதிகரிப்பு [ சனிக்கிழமை, 16 யூலை 2011, 02:21 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம் நேற்று வொசிங்டனில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிரல் வளாகத்தின் உள்ளே நேற்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரசின் ம…
-
- 0 replies
- 580 views
-
-
கோத்தாபயவைக் கொல்ல முயன்றவர்கள் இந்தியாவுக்குத் தப்பிவிட்டனராம் [ சனிக்கிழமை, 16 யூலை 2011, 00:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீதான கொலை முயற்சியில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன. கெயார் சிறிலங்கா என்ற உதவி நிறுவனத்தில் பணியாற்றியுள்ள இந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் உள்ள அந்த நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாறியவர் என்றும் சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன. இவர்கள் கெயர் சிறிலங்கா நிறுவனத்தின் வாகனத்தில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று கொழும்…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்! அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தமிழகத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு சில பரிந்துரைகள் முன்வைத்துள்ளது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னைக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் முதல்தடவையாக காலடி எடுத்துவைக்கவுள்ளார். இந்த வாய்ப்பை…
-
- 0 replies
- 387 views
-