ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
யாழ்.குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் முழுமையாக நீக்கப்படவில்லை: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் குற்றச்சாட்டு [Thursday, 2011-07-14 11:00:38] வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவது அரசு கூட்டமைப்பு இடையே நடக்கும் பேச்சுகள் வெற்றிபெற உந்து சக்தியாக அமையும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கில் இன்று சில பகுதிகளில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் யாழ். குடாநாட்டில் அச்சுறுத்தப்படுகின்றனர். சில இடங்களில் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.சிவில் நிர்வாகம் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.எதிர்…
-
- 0 replies
- 287 views
-
-
சனல் - 4 தொலைக்காட்சிக்கு யுத்தக் குற்றங்கள் காணொளிகளை வழங்கினார் என குற்றம் சாட்டப்பட்ட தமிழருக்குத் தொடர்ந்து தடுப்புக்காவல் [Thursday, 2011-07-14 11:13:55] சனல் 4 தொலைக்காட்சிக்கு யுத்தகுற்றங்கள் எனக்கூறப்படும் காணொளிகளை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் 71 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவரை ஓகஸ்ட் 2 ம் திகதி வரை தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் பொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நந்தவனம் ஜெகதீஸ்வரம் என்ற நபரே சனல் 4 சேவைக்கு அடிப்படை காணொளிகளை வழங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்ட போது அவரி…
-
- 0 replies
- 316 views
-
-
அமைச்சர்களின் சொத்துக்களை விற்று ஹெட்ஜின் அபராதம் செலுத்தப்பட வேண்டும் - ஜே.வி.பி. 14 ஜூலை 2011 அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுனரின் சொத்துக்களை விற்பனை செய்து ஹெட்ஜின் அபராதப் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி அறிவித்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய நபர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு, நட்டம் ஈடு செய்யப்பட வேண்டுமென கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல் மோசடிகளில் ஈடுபட்டமைக்காக லண்டன் நீதிமன்றம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 162 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை அமைச்சர்களினால் இந்த ஹெட்ஜின் கொடுக்…
-
- 0 replies
- 282 views
-
-
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் ஜோன் எம்.டிஸ்ரார் நேற்று நேரில் வந்து ஆராய்ந்தார். . யாழ்.மாவட்டத்துக்கு நேற்று வந்த அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.யாழ்.செயலகத்துக்கு நேற்றுக் காலை விஜயம் செய்த அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், உதவித்தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். . இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் எந்தளவில் மேற்கொள்ளப்பட் டுள்ளன வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதா? எத்தனைபேர் வா…
-
- 0 replies
- 270 views
-
-
[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 03:31.52 AM GMT ] யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவ லர் ஜோன் எம்.டிஸ்ரார் நேற்று நேரில் வந்து ஆராய்ந்தார்.யாழ்.மாவட்டத்துக்கு நேற்று வந்த அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார். யாழ்.செயலகத்துக்கு நேற்றுக் காலை விஜயம் செய்த அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் எந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன? வாக்காளர் இடாப…
-
- 0 replies
- 332 views
-
-
[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 02:59.25 AM GMT ] கிழக்கு ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை ஒவ்வொரு இடங்களில் கைவிட்டுச் செல்வதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் இவ்வாறு ஆயுதங்களை இடத்திற்கு இடம் கைவிட்டுச் செல்ல ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இராணுவத்தினரிடம் தப்பிக்கும் நோக்கில் இவ்வாறு ஆயுதங்கள் இடத்திற்கு இடம் கைவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை கைவிட்டுச் செல்லும் குழுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் விசேட இராணுவ குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, மட்டக்களப்பைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் சிரேஸ்ட பிரதிநிதி ஒருவர் சட்டவிரோத ஆயுதங்களை எவ்வாறு…
-
- 0 replies
- 383 views
-
-
[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 03:08.17 AM GMT ] பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 115,000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போரட்டத்தை முன்…
-
- 0 replies
- 399 views
-
-
[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 03:27.01 AM GMT ] தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது இராணுவத்தினருக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிப்பதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டுகின்றார். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இராணுவத்தினர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்கின்றனர் என அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களின் பதில் என்ன? எனக் கேட்டபோதே யாழ். இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தலைமைகள் பிரிவினைவாதம் பற்றிப் பேசியே அரசியல் நடத்திவந்தன. அவர்களால் அக்காலப் பகுதிக்கு…
-
- 0 replies
- 365 views
-
-
வீரகேசரி இணையம் 7/12/2011 2:26:26 PM மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள சிறு நாவற்குளம் கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது குறித்த கிராமத்தில் மீண்டும் மீள் குடியமர்ந்தப்பட்;ட போதும் அம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக குறித்த கிராம்தினைச் சேர்ந்த பெரிய சாமி(வயது-60) எனும் வயோதிபர் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்துத்தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா…
-
- 0 replies
- 380 views
-
-
தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவுப்பகுதிக்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது – மாவை! Published on July 14, 2011-4:59 am தீவகப்பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது. இதேவேளை தீவகத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் யாழ் நகரிற்கு வரமுடியாததாக இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முகமட் தலைமையில் யாழ் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்தார். மேலும் தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள வேட்பாளர்களுக்கும் இவ்வாற…
-
- 0 replies
- 196 views
-
-
7/14/2011 11:17:31 AM யாழ். தீவகப் பகுதிக்கு உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிக்கு தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாது இருப்பதுடன் தீவகத்திலுள்ள தமது வேட்பாளர்களும் யாழ். நகருக்கு வரமுடியாது இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட், யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.வி. கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே இவ்விடயம் எடுத்துக் கூறப்பட்டது. இது தொடர்பாக மாவை எம்.பி. மேலும் தெரிவிக்கையில், நீதியானதும் நி…
-
- 0 replies
- 413 views
-
-
பாவம் அவை விட்டுவிடுங்கள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வைரவநாதர்:- வரலாறு ரீதியாகவும், மத ரீதியாகவும் தமிழர்களுக்கும் நாய்களுக்கும் ஆயிரமாயிரம் வருடங்களாக தொடர்புகளுள்ளதாக மூத்தவர்கள் கூறுகின்றனர். மகா பாரதத்தில்; கூட தருமர் தனது இறுதிப்பயணத்தில் பின் தொடர்ந்து வந்த நாயை தன் கூட மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல உரிமைக்குரல் கொடுத்ததாக வரலாறு உண்டு. இந்துக்கள் வைரவரை வாகனமாக்கி, கோவில் கட்டி வழிபடுவது, நாய்களை கௌரவிக்கும் பாரம்பரியமொன்றே, வீதிகள், சந்திகளெங்கும் வைரவர் நாய்கள் சகிதம் வரம் பாலித்துக்கொண்டே தான் இப்போதும் இருக்கின்றார். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கு இப்போது கஸ்டகாலம் தொடங்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் …
-
- 3 replies
- 749 views
-
-
Jul 14, 2011 / பகுதி: செய்தி / ராசபக்ச கும்பல் தேர்தல் பிரச்சாரத்திற்காக வடபகுதியில் முகாமிட்டுள்ளது. யானை வரும் பின்னே மணியோசை கேட்கும் முன்னே என்ற வாக்கியத்திற்கு உதாரணமாக யாழ் குடா நாட்டில் வழமையிலும் கூடிய இராணுவக் கெடுபிடி காணப்படுகிறது. மேலதிகப் படையினரும் காவல்துறையும் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து துருப்புக் காவிகளில் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடற்படையினர் தீவிர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடலில் இறங்குவதற்கு யாழ் மீனவர்கள் பகலில் மாத்திரம் அனுமதிக்கப்படுகின்றனர். பருத்தித்துறைக் கடல் வடமராட்சிக் கிழக்குக் கடல் பகுதிகளுக்குள் கடற்படையினர் அனுமதியுடன் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இரவு பகலாக மீன் பிடிக்கின்றனர். யாழ் – கிளி தேர்தல் தொகு…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கையின் வருமானம் குறைந்த மாகாணமாக வடமாகாணம் news இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மிகக் குறைந்த அளவான உற்பத்தி பங்களிப்பினை வடமாகாணமே வழங்கியுள்ளது. இதனால் இலங்கையில் ஆகக் குறைந்த தலா வருமானம் பெறும் மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதனை மத்திய வங்கியின் புள்ளிவிபர தினைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து தெரியவருகின்றது. மாகாண அடிப்படையில், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 45.8 சதவீத பங்கினை மேல் மாகாணம் வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் தென் மாகாணம் (10.7%), மத்திய மாகாணம் (10%), வடமேல் மாகாணம் (9.4%) ஆகியன காணப்படுவதுடன் இறுதி நிலையில் வடமாகாணம் (3.4%) காணப்படுகின்றது. இதனால் மாகாணங்கள் கடந்த ஆண்டு பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு முதலீடுகள் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும் - பெசில் ராஜபக்ஷ : 14 ஜூலை 2011 கட்டம் கட்டமாக அரசாங்கக் காணிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு.. வெளிநாட்டு முதலீடுகள் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும் - பெசில் ராஜபக்ஷ : வெளிநாட்டு முதலீடுகள் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை எவரும் தொடுவதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவை கிரமமான முறையில் திறைசேரி கணக்குகளில் வைப்புச் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். காலி முகத் திடலில் அமைக்கப்பட உள்ள சங்கரி லா என்னும் ஏழு நட்சத்திர ஹோட்டலுக்காக முதலீடு செய்யப்பட்ட 125 மில்லியன் அமெரிக்க டொலர…
-
- 0 replies
- 213 views
-
-
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் பாகிஸ்தான் விஜயம் 14 ஜூலை 2011 வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் பாகிஸ்தான் செல்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி அசீப் அல் சர்தாரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய இராஜதந்திரிகளுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இந்த விஜியம் அமைவதாகவும் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதயிhன பொருட்களை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, இலங்கையிலிருந்து 50 மில்…
-
- 0 replies
- 295 views
-
-
இதுவரை 102 பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதில் 79 வீதமானோர் இல்லை என்றும் 21 வீதமானோர் ஆம் என்றும் வாக்களித்திருக்கிறார்கள். மெல்பேரினில் சிங்களவர்கள் அதிகம் , அவர்களும் வாக்களிப்பார்கள் என்பதினால் நீங்களும் உடனடியாக உங்களின் வாக்குகளைத் தெரிவுயுங்கள். poll - Should the Australian cricket team tour Sri Lanka? http://www.theage.com.au/sport/cricket/sport-cannot-turn-a-blind-eye-20110706-1h2d6.html Sport cannot turn a blind eye Cry for help: Wounded Tamils in a makeshift hospital in Vanni in 2009. There have been calls for Australia to cancel its tour of Sri Lanka. Photo: Reuters IF THIS column has contributed anything to the game it has been to pus…
-
- 12 replies
- 774 views
-
-
மொரவக்க பிரதேசத்தில் தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு : 14 ஜூலை 2011 ஹென்போர்ட் தோட்டத்தை சேர்ந்த 46 வயதான சொலமன்.. மொரவக்க பிரதேசத்தில் தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு : உணவகம் ஒன்றில் பணியாற்றிய தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் மொரவக்க பிரதேசத்தில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மொரவக்க பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த மாத்தறை தெனியாய ஹென்போர்ட் தோட்டத்தை சேர்ந்த 46 வயதான சொலமன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிறில் விதானபத்திரன, சடலத்தை பிரேதப் பரி…
-
- 0 replies
- 324 views
-
-
சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது : 14 ஜூலை 2011 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு பொதுமன்னிப்போ, தண்டனை சலுகைகளோ வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, எதிர்வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார். பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய பிரிவுகளின் கீழ் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்றம் தண்டனை விதிப…
-
- 0 replies
- 380 views
-
-
: இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…
-
- 6 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால்தான் ஓரணியாகத் திரண்டு நிற்கின்றோம் என்பதை தமிழ் மக்கள் உலகுக்கு மீண்டும் எடுத்துக்காட்ட வேண்டும்! இரா.சம்பந்தன் [Wednesday, 2011-07-13 21:50:07] தமிழ் மக்கள் தங்களின் பின்னால் நிற்கின்றார்கள் என்று உண்மைக்குப் புறம்பாக அரசாங்கம் கூறிவருகின்றது. அரசாங்கம் ஒருபோதும் உண்மை பேசுவது இல்லை என்பது சர்வதேச சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகும். நடந்து முடிந்த தேர்தல்களில் காட்டியது போன்று எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால்தான் ஓரணியாகத் திரண்டு நிற்கின்றோம் என்பதை தமிழ் மக்கள் உலகுக்கு மீண்டும் எடுத்துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 3 replies
- 474 views
-
-
ஜகத் டயஸ் போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை! Wednesday, July 13, 2011, 19:19 உலகம், சிறீலங்கா தற்போது ஜேர்மனியிலும் சுவிட்சர்லந்திலும் ஸ்ரீலங்காவின் பிரதித்தூதுவராக கடமையாற்றும் ஜகத் டயஸ் என்பவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்காவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட 57 ஆவது பிரிவின் கட்டளைத்தளபதியாக பணியாற்றியவர். இவர் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு சுவிஸ் நாட்டு தன்னார்வ நிறுவனமான (‘PALMYRAH’)’ பல்மேறா’ என்ற அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. ‘ வட இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்…
-
- 1 reply
- 590 views
-
-
இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது – இந்தோனேசிய ரகசிய போலீசார் Wednesday, July 13, 2011, 21:56உலகம் இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.ஏ.எலிஸ் எனப்படும் ஒரு கப்பலில் புறப்பட்டனர்.செல்லும் வழியில் அக்கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்தனர். அதிலிருந்து இலங்கை தமிழர்களை இந்தோனேசியாவில் இறங்கும்படி வலியுறுத்தினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். நியூசிலாந்துக்கு தான் செல்வோம் என கூறிவிட்டனர். இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய ரகசிய போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த பயணத்துக்கு நார்வேயில் வாழும…
-
- 5 replies
- 816 views
-
-
'Yahoo' கருத்துக் கணிப்பு: ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்து மேலோங்கிய நிலையில்.. [Wednesday, 2011-07-13 10:39:33] இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின் தற்போதைய நிலவரப்படி அனைத்துத் தமிழ் அகதிகளையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது. கருத்து கணிப்பு கேள்வி: நியூசிலாந்து 88 இலங்கை அகதிகள் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் கருத்து எவ்வாறானதாக அமையும். 1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country) 2. அவுஸ்திரேலியா, கனடா போ…
-
- 2 replies
- 815 views
-
-
பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்-ஐ.நா. ஐ.நா.: கலவரங்கள், போர்கள், வன்முறைச் சம்பவங்களின்போது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் குழந்தைகளுக்கான புகலிடமாக கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில், இந்த இடங்களை யாரும் தாக்கக் கூடாது. மீறி தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் பள்ளி, மருத்துவமனைகளைக் குறி வைத்து கொத்து எறிகுண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக சின்னஞ் சிறார்களையும், வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும் சிங்களப் படையினர் கொடூரமாகக் கொன்று குவித்தபோது இந்த விதிமுறைகளையும், எச்சரிக்கையையும் பிறப்பிக்காத ஐ.நா. பாதுகாப்…
-
- 1 reply
- 529 views
-