ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
'அலிசியா' கப்பல் தமிழ் அகதிகள் பயங்கரவாதிகளாம்: அவர்களை நியூஸிலாந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதெனவும் சிறிலங்கா தரப்பு தெரிவிப்பு [Tuesday, 2011-07-12 16:18:54] நியூஸிலாந்துக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட புகலிடம் கோருவோர் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. 85 இலங்கையர்கள் கப்பல் ஒன்றின் மூலம் நியூஸிலாந்துக்கு பயணித்த வேளையில் கடந்த சனிக்கிழமையன்று இந்தோனிசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டனர். இந்தக்கப்பலில் 6 பெண்களும் 5 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர் குறித்த கப்பலுடன் அவர்கள் தற்போது, இந்தோனேசிய பின்டான் தீவுக்கடலி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த புகலிடம் கோருவோரை நியூஸிலாந்து ஏற்றுக்…
-
- 1 reply
- 520 views
-
-
தமிழ் கூட்டமைப்பின் முறைப்பாட்டினை அடுத்து பிரதித் தேர்தல் ஆணையாளர் யாழ். விஜயம் Posted by கபிலன் on 12/07/2011 in செய்தி யாழ். குடாநாட்டில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் நாளை யாழ். தேர்தல் அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறார். யாழ். குடாநாட்டில் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்கள் மீதான தாக்குதல்கள், கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள் மீது மேற்கொள்ளப்படும் அடாவடித் தனங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக கூட்டமைப்பு நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் எழுத்து மூலம் தேர்தல் வன்முறைகளைப் பட்டியலிட்டு முறைப்பாடு செய்தது. இதை அடுத்து து…
-
- 1 reply
- 530 views
-
-
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான வன்முறைகள் வடபகுதியில் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் மஹிந்த அரசு மட்டும் வடபகுதியில் அவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என மறுத்துள்ளது. . ஆனால் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே எனப்படும் அமைப்பு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் உண்மைதான் என நிரூபித்துள்ளது. அவர்கள் இது தொடர்பில் கூறியுள்ளதாவது. . எமது அமைப்பின் பிரதிநிதிகளுடன் நானும் நேரடியாகச் சென்று கண்காணிப்பு நடவடிக்கை களை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் இல்லாத ஒரு மூலை முடுக்குக் கூட இல்லை. அதே போன்று பொலிஸாரும் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவற்றிற்கெல்லாம் மேலாக ஜனாதிபதியின் சகோதரர், பலம்மிக்க அமைச…
-
- 2 replies
- 391 views
-
-
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் சனல்4 தொலைக்காட்சியினார் வெளியிடப்பட்ட காணொளி ஆதாரத்தினை மையமாக வைத்து தமிழ் நாட்டில் நடந்த ஹெட்லைன் ருடே நேரடி கலந்துரையாடல் இந்த பகுதியில்.. இந்த பகுதியில் நடிகர் சரத்குமார், மற்றும் செயற்பாட்டாளரின் கேல்விகள் இலங்கை இனப்படுகொலை தொடர்பில் சனல்4 தொலைக்காட்சியினார் வெளியிடப்பட்ட காணொளி ஆதாரத்தினை மையமாக வைத்து தமிழ் நாட்டில் நடந்த ஹெட்லைன் ருடே நேரடி கலந்துரையாடல் இந்த பகுதியில்.. இந்த பகுதியில் பொதுமக்களின் கேள்வியும் சிங்களத்தின் பதிலும் அறிக்கைகள் வந்துவிட்டதே அடுத்தது என்ன என்ற கேள்விக்கு டேவிட் மில்லிபான் பதில் அளிக்கின்றார். அ. இ.அ.தி.மு.க உறுப்பினரின் கருத்து.. இலங்கையினை தண்டிக்…
-
- 1 reply
- 784 views
-
-
மன்னார் சிறு நாவற்குளம் கிராம மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி Tuesday, July 12, 2011, 17:17சிறீலங்கா மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள சிறு நாவற்குளம் கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது குறித்த கிராமத்தில் மீண்டும் மீள் குடியமர்ந்தப்பட்;ட போதும் அம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக குறித்த கிராம்தினைச் சேர்ந்த பெரிய சாமி(வயது-60) எனும் வயோதிபர் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்துத்தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யு…
-
- 1 reply
- 327 views
-
-
சம்பந்தன், அமிர்தலிங்கம்,மாவை போன்றவர்கள் தமது பிள்ளைகளை ஆயுத போராட்டத்திற்கு அனுப்பவில்லை. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவே அனுப்பினார்கள் வடக்கு, கிழக்கை இணைக்கக் கோருவது தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது [Tuesday, 2011-07-12 08:22:45] வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது தமிbழக் கோரிக்கைக்கு ஒப்பானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்தகாலத்தில் தமிழ்த் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே தமிழ் மக்களின் கணிசமானவர்கள் அழிவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ் சேனையில் 25 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப் படவுள்ள பொதுச் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பிரதம அதிதி…
-
- 5 replies
- 756 views
-
-
மட்டக்களப்பு, வனப் பகுதியில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட 16 வயதுச் சிறுவனின் சடலம் [Tuesday, 2011-07-12 15:55:56] மட்டக்களப்பு,வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேனி காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். கதிரவெளி புச்சாக்கேணியைச் சேர்ந்த பவானந்தன் சதிஸ்காந்தன் என்ற 16 வயது சிறுவனின் சடலமே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றவர்கள் வழங்கிய தகவலிகன் அடிப்படையிலேயே மேற்படி சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசால…
-
- 1 reply
- 538 views
-
-
டக்ளஸ் 200 பேருடன் நேற்று சைக்கிளில் சென்று பிரசாரம் உள்ளூராட்சித் தேர்தலையொட்டி ஆளும் கட்சியின் சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சைக்கிள் மூலமான தேர்தல் பிரசாரம் தென்மராட்சி பிரதேசத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது. இந்தப் பிரசாரம் நேற்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை நீடித்தது.அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ், சாவகச்சேரி நகர, பிரதேசசபை ஆகியவற்றின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களுமாக 200 க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இந்தப்பிரசாரப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கைதடியில் ஆரம்பித்து கைதடிநுணாவ…
-
- 1 reply
- 490 views
-
-
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ : கருத்து வெளியிட மறுக்கிறார் நிருபமா - ‘இந்தியா ருடே‘ குற்றச்சாட்டு [ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 00:45 GMT ] [ கார்வண்ணன் ] ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இந்தியத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்ட பின்னரும், இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்திய ஊடகமான ‘இந்தியா ருடே‘ தகவல் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்த சாட்சியங்களை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்டன. ஆனாலும் இந்தியா தொடர்ந்து இதுபற்றி மௌனம் சாதித்து வருவதாகவும் ‘இந்தியா ருடே‘ குற்றம்சாட்டியுள்ளது. …
-
- 4 replies
- 868 views
-
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும், கிழக்கு மாகாண சிவில் சமூகமும் ஒன்றிணைந்து நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்'' எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு நாளை புதன்கிழமை நடை பெறவுள்ளது. இந்த நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில் நடை பெறவுள்ளது.முஸ்லிம்களின் எழுச்சி அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடும் தரப்புக்களுக்கான அழுத்தங்களாக மாற்றப்பட வேண்டும், அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புபடும் எந்த விடயத்திலும், முஸ்லிம்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் செயற்பட்டு முஸ்லிம் தலைமைகள் வென்றெடுக்கவேண்டும்,…
-
- 6 replies
- 595 views
-
-
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனக்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த மறுத்து வருவதால் ஸ்ராண்டட் சாட்டட் வங்கி இலண்டனில் வழக்கு தொடர்ந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனான சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தத்திற்கு அமையவே பிரித்தானிய வணிக நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்ட சாட்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கு அடுத்த வருடம் மார்ச் 28 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தன. ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பான வர்த்தகச் செயற்பாடுகளை மீறியமைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மீது மேற்படி வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் 5 வங்கிகளு…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்று தபால் மூல வாக்களிப்பு- ஈ.பி.டி.பியினர் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்! Tuesday, July 12, 2011, 16:35சிறீலங்கா எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற இருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் பணியாற்ற இருக்கும் ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் உட்பட ஒத்திவைக்கப்பட்ட 65 உள்ளுராட்சி சபைக்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது.ஊழியர்கள் பணியாற்றும் அந்தந்த அலுவலகங்களில் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் வாக்களிப்புக்கள் நடைபெறுகிறது. இன்று காலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள அரச செயலகங்களுக்கு சென்ற ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினரும், இராணுவத்தினரும், ஊழியர்க…
-
- 0 replies
- 358 views
-
-
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை கிராமம் கிராமமாக ஒளிபரப்புவோம்: திருமா இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள…
-
- 6 replies
- 909 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய போராட்ட வழிறைக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையிலும் பெருந் தொகையினராகவும் இருந்தனர். இவர்கள் புலிகளின் போராட்டத்துக்கு செய்த உதவிகள் இரண்டு பிரதான வகையில் அமைந்தன. அல்லது அப்படிப் பயன்படுத்தப்பட்டது. 1.ஆயுதங்கள் வாங்குவதற்கான உதவிகள் மற்றும் இயக்கத்தின் தேவைகளுக்கான உதவிகள். 2.புலிகள் மேற்கொண்ட மக்களுக்கான பணிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள், பொது மக்கள், பாதிக்கப்பட்டோருக்கான உத…
-
- 0 replies
- 806 views
-
-
கடன் வழங்கும் நாடுகள் சிறீலங்காவை சுரண்ட தயார் நிலையில் Posted by கபிலன் on 12/07/2011 in செய்தி இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் வளச் சுரண்டலில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு சில நாடுகள் பாரியளவில் கடன்களை வழங்கி வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற போதிலும் அதன் பின்னணியில் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறிப்பாக சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்துமே கடன் என்னும் வகையீட்டுக்குள் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுத…
-
- 1 reply
- 1.6k views
-
-
அகதிஅந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியிலில்இருந்து சிறீலங்கா அகற்றப்பட்டுள்ளது சிறீலங்காவில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலை காரணமாக ஜக்கியநாடுகளில் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் அந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்கா நீக்கப்பட்டுள்ளது இனி சீறீலங்காவினை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமானமுறையில் பயணம் மேற்கொண்டு அகதிகள் உரிமைகோரமுடியாது. இன்னிலையில்கடந்த சனிக்கிழமை 85மக்கள் நியூசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்தோனேசியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.தங்களை நியூசிலாந்திற்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஆனால் நியூசிலாந்து இந்த அகதிகளை ஏற்ற…
-
- 2 replies
- 1k views
-
-
தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர் _ வீரகேசரி இணையம் 7/12/2011 11:24:03 AM Share இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார். "இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப்…
-
- 3 replies
- 432 views
-
-
Sri Lanka guilty of war crimes Centre Stage Headlines Today
-
- 2 replies
- 808 views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கு வேட்டையில் பசில்:- 12 ஜூலை 2011 யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள அமைச்சர் பசில் ராஜபக்ச ஒவ்வொரு பிரதச செயலக ரீதியக திறப்பு விழாக்களை நடத்ததுவதற்கு அங்கேயே முகாம் அமைத்து நிற்கின்றார். தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சபட்டுகின்ற போதிலும் அவை எவை பற்றியுமே அவர் கண்டுகொள்ளாது தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். ஏற்கனவே நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் படையினரால் மூடப்பட்டிருந்த தொண்டைமானாறு அச்சுவேலி வீதியை பசில் ராஜபக்ச திறந்து வைத்திருந்தார் அதே போன்று எழுதுமட்டுவாள் பகுதியிலேயும் மீள் குடியேற்ற நடவடிக்கையையும் அவர் நடத்தியிருந்தார். எழுதுமட்டுவாள் பகுதி படை நடவடிக்கைகளால் வெள…
-
- 0 replies
- 568 views
-
-
தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் கைது Tuesday, July 12, 2011, 14:05சிறீலங்கா 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதுவரையில் 44 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்கானிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 50% முறைப்பாடுகள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்றதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவிக்கின்றார். மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக்…
-
- 0 replies
- 331 views
-
-
இராணுவப் பேச்சாளர் மீது பாதுகாப்பு செயலர் பாய்ச்சல் Tuesday, July 12, 2011, 14:03சிறீலங்கா இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் கடந்த மூன்று தினங்களாக ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டதின் மூலம் இந்நிகழ்ச்சி பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ள இவரை அனுமதித்தமை மிகப்பெரிய தவறு என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல …
-
- 0 replies
- 536 views
-
-
நெடுமாறன் அவர்களே! உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம் ஆனால் நீங்கள் சொன்னது எப்படி உண்மையாகலாம்? July 11th, 2011 admin உலகம் உருண்டையானது என்று உங்களுக்கு யாராவது விளக்க முயன்றால் அது முட்டாள்த்தனம் என நான் கருதுவேன். அதுபோல், உங்களுக்கு தமிழரின் அரசியலை, குறிப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றை எவராவது எடுத்தியம்ப முனைந்தால் அவர்களுக்கு அறிவே இல்லையென நான் இடித்துக் கூறுவேன். அப்படி உங்களை மதித்து நடந்த எம்மை, உங்கள் வார்த்தைகளால், வேதனைப்பட வைத்துவிட்டீர்களே. ஒரு பொய்யாவது சொல்லி நொந்துபோய் இருக்கும் எங்களுக்கு நின்மதியைத் தாருங்கள்ய்யா. நீங்கள் ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com) என்பவை தேசிய ஊடகங்கள் எனறு கூறிய வார்த்தைகள் உங்கள் உதட்டில் இருந்…
-
- 2 replies
- 923 views
-
-
இலங்கையின் வடக்கில் நடப்பது இராணுவ சர்வாதிகாரமே:- 12 ஜூலை 2011 கூறுகிறார்கள் வடக்கின் சமூகப் பிரதிநிதிகள்:- மாணிக்கசோதி - சமூக ஆர்வலர் http://youtu.be/JoArOGLO03Q வன்னிவாழ் பொதுமகன்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.be/Jr0pQfbnJ-E கிளிநொச்சி இளைஞன்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.be/w6oOGxSlh-E ஓய்வுபெற்ற ஆசிரியர் - பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.be/qe0N5uf88tE மீனவசங்கப் பிரதிநிதி- பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.be/w1vtQ4hbVQ8 ஊடகவியலாளர்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.be/KTxtTB0xivM கிளிநொச்சி இளைஞன்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை http://youtu.…
-
- 0 replies
- 655 views
-
-
பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார். Posted by சோபிதா on 12/07/2011 in செய்தி சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் இதயத்தை பிழியும் அதிர்ச்சியான ஆவணப் படம் என பிரித்தானிய இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களின் ஆதாரமாகவும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் குற்றங்களை இழைத்தோரைக் கொண்டுவருவதற்கான வலுவான விடயமாகவும் இது இருப்பதாக இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்த ஜோன் ஸ்னோ விபரித்திருக்கிறார் என்று பிரிட்டனின் த இன்டிபென்டன்ட் பத்திரிகையில் ஜோடிமக்லின் டயர் எழுதியுள்ளார். தமிழர்களின் துன்பங்கள் பற்றி நாம் ஏன் கவனம் செலுத்த வேண்ட…
-
- 0 replies
- 618 views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை [Tuesday, 2011-07-12 10:44:38] உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசியகூட்டமைப்பு வேட்பாளர்கள் படையினராலும் ஆயுதக்குழுக்களினாலும் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த முறைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணையாளர் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் …
-
- 1 reply
- 513 views
-