Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச…

  2. வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை… October 22, 2025 முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில்…

  3. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சொகுசு பேருந்து வேகக் கட்ட…

  4. தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன் adminOctober 21, 2025 யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்…

  5. கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிப்புகளின் விவரங்கள் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப…

  6. Published By: Digital Desk 1 21 Oct, 2025 | 04:01 PM பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பி…

  7. Published By: Vishnu 21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228328

  8. Simrith / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0 - 24 தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். "இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவத…

  9. 21 Oct, 2025 | 12:02 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பர…

  10. 21 Oct, 2025 | 03:16 PM இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்…

  11. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 21 Oct, 2025 | 03:31 PM இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜ…

  12. பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவி…

  13. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவே…

  14. மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார். கார் ஒன்றை ஜே.சி.பி சமன…

  15. Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 02:26 PM இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்றிரவு (20) தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/228215

  16. தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்! தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர். மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450775

  17. Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 09:36 AM போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்த…

  18. நிமலராஜன் நினைவேந்தல்! adminOctober 19, 2025 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி…

  19. தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி! அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த வாழ்த்து செய்தியில், உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பி…

  20. தையிட்டி விகாரை தேவதம்பிய தீசன் காலத்தானாம் written by admin October 19, 2025 யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள்…

  21. Published By: Digital Desk 1 19 Oct, 2025 | 02:56 PM இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், ஜனநாயக நாட்டிற்கு எதி…

  22. Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 01:46 PM வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன. தற்போது குமரிக் கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது. அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய மாதிரிக் கணிப்புக்கள…

  23. திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து! written by admin October 19, 2025 மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது. இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில…

  24. முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்! முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளில…

  25. 18 Oct, 2025 | 04:11 PM "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228077

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.