ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
போர்க்குற்ற ஆதாரங்களை அல்ஜசீரா மற்றும் உலக ஊடக வலையமைப்புக்களுக்கு பெரும் தொகை பணத்திற்கு விற்றவர்கள் வேறு யாரும் அல்லர் அரச ஊடகமான ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகளே என செய்திகள் கசிந்துள்ளது. . வன்னி போரின் இறுதியில் சிங்களப்படைகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த குறித்த அதிகாரிகள் இருவர் தமது ஒளிப்படப்பிடிப்பாளர் ஊடாக பெறும் பல காட்சிகளை அல்ஜசீரா மற்றும் வெளி ஊடகங்களுக்கு சண்டைக்களத்தில் இருந்தே விசேட தொலைத்தொடர்பு கருவிகளை வைத்து வழங்கி வந்துள்லனர். இதற்காக பல மில்லியன் டொலர்கள் பெற்றும் வந்துள்ளனர். . இவர்கள் குறித்த ரூபவாகினி மற்றும் ஐ.ரி.என். தொலைக்காட்சிக்காக செய்திகளை சேகரித்தாலும் பிரத்தியேகமாக சிறிய வீடியோ கமெராக்களையும் வைத்திருந்துள்ளனர். இதன் மூல…
-
- 1 reply
- 935 views
- 1 follower
-
-
மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்? Thursday, June 23, 2011, 22:15 கட்டுரைகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல். 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் – அவரே, இந்த உண்மையை ஒப…
-
- 24 replies
- 2.3k views
-
-
இத்தாலியில் விடுதலைப்புகளுக்கு உதவினார்கள் என கைது செய்யப்பட்ட 30 தமிழர்களை குற்றமற்றவர்கள் எனக்கூறி அந்த நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. . கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் குறித்த 30 இலங்கையர்களும் இத்தாலியில் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. . கைது செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டதை அடுத்து ஏனையவர்களும் விடுதலை செய்யப்படுவர் என நம்பிக்கை கொண்டுள்ளனர். My link
-
- 0 replies
- 455 views
-
-
தமிழக மீனவர்கள் 2 நாள்களில் விடுதலை: இலங்கை உறுதி First Published : 25 Jun 2011 04:56:33 AM IST சென்னை, ஜூன் 24: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இரண்டு நாள்களில் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்ட தகவல்: தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 20-ம் தேதி பிற்பகல் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதனால், 5 மீன்பிடி படகுகளைக் கைப்பற்றி, 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த மீனவர்கள் தலைமன்னார் காவல் நிலைய…
-
- 0 replies
- 348 views
-
-
போர்க்குற்ற காணொளிகள் இராணுவத்தினர் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து கோத்தாபய அதிர்ச்சி Friday, June 24, 2011, 17:28 சிறீலங்கா இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விலைபேசி விற்க முற்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டமை, விடுமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நோ்ந்துள்ள கதி, யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட…
-
- 1 reply
- 426 views
-
-
பிரசுரித்தவர்: Sukkran June 24, 2011 நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் நற்பெயரை பாதுகாக்க வேண்டுமாயின் வெளி உலகில் என்ன நேர்கின்றது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே நாட்டை பாதுகாப்பது குறித்து அனைத்து மக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://mykathira…
-
- 2 replies
- 896 views
-
-
கடாபிக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரத்தை விட மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை - The Age விடுதலைப் புலிகளை அழித்தொழித்த 2009 ம் ஆண்டுக் காலப் பகுதியில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என கொழும்பு மறுத்து வருவதில் எவ்வித உண்மைகளும் இல்லை என 'The Age' எனும் அவுஸ்ரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்டு ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் புறக்கணிக்க முடியாதவை. உண்மையில் கடாபிக்கு எதிரான வழக்கில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ள ஆதாரங்களிலும் பார்க்க சிறிலங்காவிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை என அந்த இதழில் Eric Ellis எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பளி…
-
- 3 replies
- 880 views
-
-
Friday, June 24, 2011, 23:23இந்தியா, உலகம் 2ஆம் இணைப்பு. இன்று (24.6.2011-வெள்ளிக்கிழமை) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலேசிய செனட் சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கோரிக்கை மனு ஒன்றை இலங்கை தூதரிடம் சமர்ப்பித்தனர்.ஜுன் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை இலங்கைக்கு ஆய்வு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகரன் மாரிமுத்து, ஜோகாரி அப்துல் மற்றும் செனட்டர் இராமகிருஷ்ணன் தங்களது நேரடி அனுபவங்களின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த மனு தாயாரிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்கள். இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திடமும், மலேசியர்களிடையே கூறிவந்த கருத்துக்களில் பலத்த முரண்பாடுகள் உள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 1 reply
- 899 views
-
-
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 21:11 | கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாங்குளம் காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் சிலாபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இனந்தெரியாத நபர்களால் தம்புள்ளையில் வைத்துக் கடத்தப்பட்டு சிலாபம் கடற்கரையோரமாக கை, கால் கட்டப்பட்ட நிலையில் வீசியெறியப்பட்ட நிலையில் கைவிடப்பட்டேன் என அவர் சிலாபம் காவற்துறையினரிடம் முறைப்பாட்டை செய்துள்ளார். கடமைக்குச் சமூகமளிக்காமல் போனதை மறைத்துக் கொள்வதற்காக இந்த காவற்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டதாக நாடகமாடுகின்றாரா என்று சந்தேகமேற்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com…
-
- 0 replies
- 1k views
-
-
24 ஜூன் 2011 உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நிதி உதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் சிலர் அந்தப் பொறியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய ச…
-
- 4 replies
- 892 views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 11:32.16 AM GMT ] உயிர்வாழ்வதற்கான உரிமையை விட பெரிதாக வேறென்ன மனித உரிமை இருக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினாத் தொடுத்துள்ளார்.அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு வினாவொன்றைத் தொடுத்துள்ளார். ஒரு காலத்தில் வீ்ட்டை விட்டு வெளியே செல்லும்போது உயிருடன் திரும்பி வரமுடியுமா என்ற அச்சத்துடனேயே மக்கள் காணப்பட்டனர். ஆயினும் இன்று எமது அரசாங்கத்தின் கீழ் அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. தென்னிலங்கையில் வாழும் மக்களுக்கு மட்டுமன்றி வடக்கில் வாழும் மக்களுக்கும் அச்சமின்றி உயிர்வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனை விட வேறென்ன மனித உரிமை பெரிதாக இருக்கப்…
-
- 3 replies
- 601 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 07:53 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் சிலஅடிப்படைக் கட்டுமானத் திட்டங்களைமேற்கொள்வதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கசீனா உடன்பட்டுள்ளது என சிறிலங்காஅரசாங்கம் வியாழன் அன்று அறிவித்துள்ளது. "வீதிகள், பாலங்கள், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்றவற்றின் கட்டுமானப் பணிக்காக சீனாஅபிவிருத்திவங்கியானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனுதவிக்கான கால எல்லைகள் தொடர்பான விபரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. போருக்குப் பின்னான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன், புதிய…
-
- 2 replies
- 783 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை தீர்வுத்திட்டம் எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்படும்! கூட்டமைப்பிடம் அரசாங்கம் உறுதி இனப்பிரச்சினைக்கான தீர்வு அடிப்படையை எழுத்து மூலம் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்று அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவ் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அரச தரப்பு பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான 7ஆம் கட்டச் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது இவ் உறுதி மொழி வழங்கப்பட்டது. இச்சந்திப்புக் குறித்து மாவை சேனாதிராஜா எம்.பி கூறியதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என கூட்டமைப்பினால் முன்னர் நடைபெற்ற சந்…
-
- 0 replies
- 595 views
-
-
[Friday, 2011-06-24 11:22:55] சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பாலித கொஹண ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி சர்வதேச மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்ட விடயம் குறித்துப் பிரஸ்தாபித்துள்ளார். இலங்கையின் கொலைக்களம் காணொளி திரையிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காணொளியைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கொஹண ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததார். இலங்கையின்…
-
- 3 replies
- 1.9k views
-
-
சேனல் 4 ஆவணப் படம் மேலும் 3 வாரத்துக்கு நீட்டிப்பு லண்டன், ஜூன் 24,2011 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான சேனல் 4 வெளியிட்ட ஆவணப் படம், பொதுமக்கள் பார்வைக்காக மேலும் 3 வாரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது, 'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம். சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம், உலக மக்களின் பார்வைக்காக கடந்த 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு வெளியிடப்பட்டது. போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 24, 2011 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் டெலோ அமைப்பு கொழும்பில் ஒரு மாநாட்டை நடாத்த திட்டமிடுவதாக கதிரவன் இணையத்தளத்தின் சிறப்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அண்மையில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த டெலோ அமைப்பின் மட்டக்களப்பு அமைப்பாளர் ஜனா என்றழைக்கப்படும் கோ.கருணாகரன் தலைமையில் சிவாஜிலிங்கம்,டெலோ அமைப்பின் முதல்வர் ஸ்ரீகாந்தா,மட்டக்களப்பின் டெலோ பொறுப்பாளர் பிரசன்னா ஆகியோர் நேற்றைய தினம் கொழும்பில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் இக் கூட்டத்தில் டெலோ அமைப்புச் சார்பாக கொழும்பில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஆலோசிக்கப் பட்டுள்ளதாகவும் தெரி…
-
- 0 replies
- 1.2k views
-
-
24 ஜூன் 2011 இலங்கை கடந்த 20 தேதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 23 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ள இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் திடீரென இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு இலங்கை நிபந்தனைகளை விதித்துள்ளது தமிழகச் சிறைகளில் உள்ள 71 இலங்கை மீனவர்களை விடுவித்தால் மட்டுமே தமிழக மீனவர்களை விடுவிக்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளாதாகத் தெரிகிறது. இலங்கை அரசு தனது இந்திய தூதர் மூலமாக தெரிவித்துள்ள இக்கர…
-
- 0 replies
- 523 views
-
-
24 ஜூன் 2011 கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் ஒலித்தவை http://youtu.be/-Mi8-s-MkTQ தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அளவெட்டியில் வைத்து இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து இடது சாரி கட்சிகளினாலும், ஜனநாயக விரும்பிகளாலும் இன்று நண்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 559 views
-
-
24 ஜூன் 2011 சிங்கள இணையத்தளம் வெளியிட்ட செய்தி பொய்யானது என்கிறார் மேஜர் ஜெனரல் உபய மெதவல:- சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பாக ஒளிப்பரப்பிய நிகழ்ச்சி மூலம் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவர் பீ.எம்.அம்ஸா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பீ.பீ.சி தொலைக்காட்சியின் ஆசிய பிரிவின் ஒளிப்பரப்பிய நேரடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அம்ஸா இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். இந்த நிகழச்சியில் செனல் 4 தொலைக்காட்சியின் நிகழச்சி தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே, தமிழர் நலன்புரி அமைப்பின் வென்ஜிஸ் ஜனரஞ்சன், பிரித்தானிய சிங்கள அமைப்பின் சத்துர ஜயதிஸ்ஸ ஆகியோரும் கலந்துக்கொண்டனர். இலங்கைக்கு …
-
- 0 replies
- 747 views
-
-
Posted by சோபிதா on 24/06/2011 in செய்தி மட்டக்களப்பபில் உள்ள மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கடலில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் அதே ஊரைச் சேர்ந்து புண்ணியமூர்த்தி வினோதராஜ் (14 வயது) மற்றும் தங்கத்துரை டிசாந்தன் (14 வயது) என்பவர்களே நீரில் மூழ்கி மரணமாகி உள்ளனர். ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் மற்றவரின் சடலத்தை பிரதேச வாசிகள் தேடி வருகின்றனா். இன்று வெள்ளிக்கிழமை காலையில் மற்றைய மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.eelampress.com/2011/06/27814/
-
- 0 replies
- 442 views
-
-
சனல் 4 ஆவணப்படம் தொடர்பான தமது கருத்துக்களை கூற சாதாரண தமிழ் மக்கள் ஆவலாக உள்ள போதிலும், தமது உணர்வுகளை வெளிப்படையாகக் கூற அச்சமடைகிறார்கள் என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சிங்கள சட்டவாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஏ.எப்.பி. செய்திசேவை நிறுவனம் தனது செய்தி ஆய்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்த பின்னர் தற்போது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான பல யுத்தக் குற்றங்கள் தொடர்பான காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியது. 'இலங்கையின் கொலைக்களங்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படமானது, இலங்கைப் படைகள…
-
- 0 replies
- 511 views
-
-
[Friday, 2011-06-24 20:15:34] பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற ஏப்பாடாகியுள்ள ஒலிம்பிக் நிகழ்வின் ஆரம்பநிகழ்வான ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க உலக தமிழ் மக்களே விரைந்து உங்கள் வாக்கை இவருக்கு அளியுங்கள். இவருக்கு வாக்களிப்பதற்கு (https://torchbearernominations.london2012.com/Nomination/Create) எனும் பகுதியை அழுத்தி அப்பகுதியில் காணப்படும் விண்ணப்பப்படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புவதனூடாக உங்களின் வாக்கு அவருக்கு கிடைக்கும். இவர் இறுதிக் கட்ட நேரம் வரை மக்களோடு மக்களாக இருந்து சகல தேவைகளையும் செய்து கொடுத்து கொடிய போருக்குள்ளும் தன்னலமற்று மக்களின் பாதுகாப்பிலும் நலனிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதோடு, அங்கு நடைபெற்ற கொ…
-
- 0 replies
- 515 views
-
-
பான் கி மூன் செயல்பட வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன். ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத கௌரவம் இது ” இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பான்கிமூன் தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்த ஐநா செயலாளர் பதவி குறித்து சொன்ன வார்த்தைகள்தான் இவை. 67 -வது வயதில் அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். ஆனால் உலகெங்கிலும் போருக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் போருக்கு முகம் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கோ இனியாவது நிம்மதி கிடைக்குமா? என்கிற கேள்விக்குத்தான் பதில் தெரியாமல் திணற வேண்டியிருக்கிறது. போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவருக்கு போட்டியே இல்லை என்பதல்ல, ஒன்றில் …
-
- 2 replies
- 573 views
-
-
Friday, June 24, 2011, 13:43சிறீலங்கா உயிரைப் பணயம் வைத்து நாட்டை மீட்டெடுத்த இராணுவ ஜெனரல்களை வீட்டுக்கு அனுப்பிய அரசு, புலிகளிடம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதற்குப் பொறுப்பு கூறவேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றினுள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு: தொப்பிகலை உட்பட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உ…
-
- 2 replies
- 661 views
-
-
வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 06:41.44 AM GMT ] இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் வெளியேறியமை தொடர்பில், இன்னர் சிற்றி பிரஸ் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. சனல் 4 காணொளி தொடர்பில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி பிரதிநதி சவேந்திர சில்வா நேற்று முன்தினம் விளக்கமளித்திருந்தார். இந்த காணொளிகள் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் யுத்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையற்றதாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெர…
-
- 0 replies
- 484 views
-